நான் சொன்னேன் இவரது படங்களால் கவரப்பட்டேன் என்று.. ஆனால் எந்தப்படம் என்று சொல்லாததால் அனைவரும் அந்த பாராசூட் என்று நினைத்துவிட்டார்கள். உண்மையில் என் கலர் தாகமுள்ள கண்களுக்கு அந்த சருகு மற்றும் இலைகளின் நிறங்கள் ஒரு ஓவியம் போல் பட்டது. எனது குரு அடிக்கடி சொல்வார்... "சாதாரண மனிதர்களின் கண்ணுக்கு மிக மிக சாதாரணமாகத் தெரியும் ஒன்று ... ஒரு கலைஞனின் கண்ணுக்கு மிக மிக அழகாகத் தெரியும்... காரணம் ஒரு கலைஞனின் கண்கள் ஒரு பொருளில் உள்மறை அழகை ( லடென்ட் பியூட்டி) பார்க்கும் படி பழக்கப்பட்டிருக்கும்!" என்று. எவ்வளவு தீர்க்கமான வரிகள். நல்ல ரசிகனே நல்ல படைப்பாளியாக பரிணமிக்க முதல்படி!
பாண்டி ஆரோவில்லில் ஒரு Earthiness இருக்கும். நம்மூர் காஃபி டேயில் இல்லாத ஒரு அழகு அங்குள்ள கணேஷ் பேக்கரியில் இருக்கும். அது மாதிரி இந்த புகைப்படத்தின் வார்ம் கலர்களின் கலவையில் என் மனதைப் பறிகொடுத்தேன். அனைவரும் பச்சையிலும் நீலத்திலும் மனம் லயித்தபோது இந்த படம் எனக்கு ஒரு ஒளி ஓவியமாகப் பட்டது.
என்னடா ரீல் ... என்று சொல்லாதீர்கள். கீழே என் கண்ணில் பட்டதை இம்ப்ரொவைஸ் செய்திருக்கிறேன்.. க்ளிக் செய்து பெரிதாகப் பார்த்துவிட்டு சொல்லுங்கள் அது ஒரு ஒளி ஓவியமா இல்லையா என்று !
அன்புடன்
ஓசை செல்லா

நல்லாத்தான் இருக்கு. அப்படியே எங்கள் வீட்டு ஹாலில் மாட்டிவைக்கலாம் போல் தோன்றுகிறது. ஆமாம் அது எப்படி செல்லா உங்கள் கை பட்டவுடன் படங்கள் அழகாகி விடுகிறது? சொல்லிக்கொடுப்பீங்க தானே? இல்லை ஏதாவது தொழில் ரகசியம் னு எஸ்கேப் ஆகிடுவீங்களா?
ReplyDeleteஒரு ரசிகை
paaraatukku nandri. post production paadangkaL Aanand maRRum CVR aal athiviraivil thodangkappadum! Thodarnthu padiththu vaarungkaL.
ReplyDeleteanbudan
osai chella
//அது எப்படி செல்லா உங்கள் கை பட்டவுடன் படங்கள் அழகாகி விடுகிறது?//
ReplyDeleteதொழில் நுட்பரீதியாக பார்த்தால் யார் செய்தாலும் வரும். ஆனால் செல்லா மாதிரி கலைக் கண்ணோட்டம் இருந்தால் தான் இம்மாதிரி செய்யும் ரசனை வரும். அது தான் கலைஞனுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு.
நன்றி ஓசை செல்லா.
ReplyDelete