Saturday, July 21, 2007

நன்றி நன்றி நன்றி - மெகா புகைப்படப் போட்டியில் 50 பதிவர்கள்!!

7 comments:
 


நாங்கள் இந்த போட்டி அறிவிக்கும் போது இது இந்த அளவு ஆர்வத்தை நம் பதிவர்களிடம் தூண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. அதே சமயம் படங்களின் தரமும் மி்க நன்றாக உள்ளது. பல படங்கள் .. இதை நாங்க நெட்ல பார்த்தோம் சில பேர் சொல்லும்படி இருக்கு. அப்படி இருக்காது என்று நம்புகிறோம். இந்த மாதிரி எந்த கள்ளத்தனங்களும் இருக்கக் கூடாது என்று தான் நாங்கள் இதை "பரிசுக்காக இல்லை.. கௌரவப் போட்டி" என்று முடிவு செய்தோம். இதில் உங்களது சொந்த படைப்பாக்கங்களே பங்கு பெறட்டும். இந்தப் போட்டியின் நோக்கமே... நல்ல படைப்புகளை பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான். எங்களுக்கு சந்தோசமாக இருக்கிறது. நிறைய அருமையான படைப்புகள் வந்துள்ளன.

இன்னும் சொல்லப்போனால் தமிழ் வலைப்பதிவர்கள் மொக்கைபதிவுகள் போடுவார்கள் ஜாலிக்கு.. ஆனால் அவர்களது ப்டங்கள் மொக்கையாகவோ சப்பையாகவொ இருக்கக் கூடாது என்று தான் வலைப்பூ வகுப்பு ஆரம்பித்திருக்கிறோம். சிலர் கலந்துகொள்ள முடியாமல் போயிருக்கலாம். அவர்கள் எல்லாம் அடுத்த மாதம் 15-20 நடக்க இருக்கும் போட்டியில் கலந்துகொள்ளலாம். தலைப்பு 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு விடும். அடுத்த போட்டியின் நடுவர்களில் ஒருவர் ஒரு பாப்புலர் எழுத்தாளர் !

கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களைக்கூறி விடபெறுவது உங்கள் அன்பறிவிப்பாளன் ஓசை செல்லா... Over to Surveysan and CVR!

போட்டிப் படங்களின் அணிவரிசை இங்கே!

பிகு: இந்த போட்டிக்கு PRO ஆக இருந்து தனது மொக்கைகளால் பரபரப்பை ஏற்படுத்திய செந்தழல் ரவிக்கு ஒரு போனஸ் மார்க் கொடுக்குமாறு நடுவர்களை நான் தாழ்மையோடு கேட்டுக்கொள்ளவில்லை என்பதை நான் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கவில்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியாத நிலையில் நான் இருப்பதாக நீங்கள் கருத வேண்டாம்!! #@#$@($$%!

7 comments:

  1. சும்மா படமெடுத்துட்டு இருந்தவங்களை ஒரு இலக்கு நோக்கி வர வெச்சு இருக்கிறதே பெரிய சாதனைதான். வாழ்த்துக்கள் செல்லா! பதிவர்களின் திறமைகளை வெளிக்கொணர இருக்கும் இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ரவிக்கு ஆறுதலோ, தேறுதல் பிரைஸோ கிடச்சதுன்னா சிபி அவர்கள் அதனை எதிர்த்து 'தீ' குளிப்பார்கள் என அமுக சார்பாக எச்சரித்து எங்கள் முடிவை எல்லார் முன்னிலையிலும் சொல்லாமல் சொல்லி எங்கள் தீர்வினை அறுதியிட்டு கூறி..%$%%$&**(!#(**&!@###(*&&*^!@*& , சோடா குடுங்கப்பா

    அமுக,
    இளைய உறுப்பினர்

    ReplyDelete
  3. I enjoyed viewing all photos. Each one had a message inits own way and very beautiful. Thanks Chella for creating such an interest.

    ReplyDelete
  4. செல்லா,
    இந்த அருமையான ஒரு பொழுதுபோக்குப் போட்டியை நடாத்தும் உங்களுக்கும் உங்களுடன் இணைந்து பணியாற்றும் சர்வேசன், CVR ஆகியோருக்கும் தான் தமிழ் பதிவுலகம் நன்றி சொல்ல வேணும்.

    புகைப்படக் கலையில் இலைமறை காயாக இருந்த பல பதிவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது உங்கள் முயற்சி.

    மேலே பத்மா அரவிந்த் அவர்கள் சொன்னது போல் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதை சொல்கிறது. கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    செல்லா, இந்த முயற்சியைத் தொடருங்கள்.

    ReplyDelete
  5. என்னா கூட்டம்.. என்னா கூட்டம். அத்தனை படத்தையும் பார்க்கிறதுக்குள்ள... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா... செல்லா உங்களுக்கு ஒரு ஷொட்டு. நான் லேட்டா வந்துட்டேன். இல்லன்னா அத்தனை பரிசும் என்க்கு தான் கிடைத்திருக்கும். ரவி... சண்டைக்கு வரவேண்டாம். எனக்கு மட்டும் தான். ஏதோ போனாப் போகுதுன்னு லேட்டா வந்துடேன்... ஹீ ஹீ ஹீ.

    ReplyDelete
  6. இந்தப் போட்டியில் நால்வர் பங்களித்திருக்கிறோம்! நான்,சர்வேசன்,சீவிஆர் உடன் பின்னரங்க டைரக்டர் .... ஜீவ்ஸ் மில்கா சிங் சாரி ஜீவ்ஸ் நிக்கானோ சிங்!

    ReplyDelete
  7. இந்த அளவுக்கு பரபரப்பு ஏற்ப்பட நான் போட்ட இரண்டு படங்கள் மட்டுமே காரணம் என்று ஏற்றுக்கொண்டுவிட்டால் ஆறுதலுக்காகவோ, தேறுதலுகாகவோ ஒரு பரிசு கிடைக்காமலா போகும் ?

    இளைய உறுப்பினர் இளா கொலைவெறியோடு சொன்னது போல @#$@#$ கோஷ்...எங்களுக்கு பரிசு இல்லைன்னாலும் எங்களது மொக்கைக்கு ஆதரவாக இருந்த நடுவர் குழுவுக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன்...

    பதிவில் போட்டு, பாலுக்கும் ஆசை மீசைக்கும் தோழன் எனது போல ( அதெல்லாம் இமெயில் ஐடி கொடுக்கமுடியாது :)) )

    கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்....!!!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff