ஜூலை மாதப் போட்டியின் 'இயற்கை' என்ற தலைப்புக்கு, இது வரை வந்து சேர்ந்த படங்களின் அணிவகுப்பு கீகீகீகீகீகீழே உள்ளது...
பார்த்து ரசியுங்கள்.
ஒவ்வொரு படத்த பத்தியும் உங்க கருத்த சொல்லிட்டுப் போங்க.
என் கிட்டயும், CVR கிட்டயும், 'ஜூலைப் படத்தை' தேர்ந்தெடுக்கும் பொறுப்பக் கொடுத்துட்டு, செல்லா கிட்டார் கத்துக்கரேன்னு கெளம்பிட்டாரு.
நான் ஏற்கனவே சொல்லியிருக்கர மாதிரி, எனக்கு புகைப்படம் எடுப்பது பற்றி பெரிய ஞானம் கெடையாது. ட்ரையல் & எரர்ல எடுத்து ஏதோ கொஞ்சம் தேத்துவேன்.
so, போட்டியில் இருக்கும் படங்களுக்கு, பாத்தவுடன் 'நச்சுனு' எது இருக்கோ, அதன் அடிப்படையில் என் மார்க்கு இருக்கும். (CVR, உங்க அளவுகோல் எப்படி? :) )
கட்டம் கட்டி இத போடரதுக்கே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குது. IImsaiயின் முதல் படம் இருக்கும் இடத்துக்கு போய் ஹாயா ரெஸ்ட் எடுத்துட்டு வந்தா நல்லா இருக்கும்.
அப்படியே செந்தழல் ரவியின் 'கொசுரு' படம் இருக்கும் ஊருக்கும் போயிட்டு வந்தா இன்னும் பேஷா இருக்கும் :)
சரி சரி, அடிக்க வராதீங்க... வெளையாட்டெல்லாம் என் பதிவுல வச்சுக்கரேன்.
இங்க, சீரியஸ் மேட்டர்ஸ் மட்டும் பாப்போம் :)
இனி கீழே இருக்கும் படங்களை பார்த்து ரசியுங்க.
அனுப்பாதவங்க அனுப்புங்க.
மார்க் போட்டு 'ஜூலைப் படம்' விரைவில் அறிவிக்கப்படும்.
ஒவ்வொரு படத்துக்கும், உங்க பாணியில் ஒரு விமர்சனமோ, கவுஜயோ சொல்லிட்டுப் போங்க.
இங்க சொல்லியிருக்கர மாதிரி படத்துல ஏதாவது ஒரு geometry தெரிஞ்சாலே படம் ஒரு அழகா இருப்பதை கவனிங்க.
உங்க கண்ணுக்குத் தெரியும் அழகையும், நெருடலையும் சொல்லுங்க.
வர்டா, கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் நன்றீஸ்!
கலக்கிப்புட்டீங்க!
-சர்வேசன்
படங்கள் கீகீகீகீகீகீகீழே...... தவறுகள், விடுபட்டவை ஏதாவது இருந்தா சொல்லுங்க!
-- த எண்ட் --
பார்த்து ரசியுங்கள்.
ஒவ்வொரு படத்த பத்தியும் உங்க கருத்த சொல்லிட்டுப் போங்க.
என் கிட்டயும், CVR கிட்டயும், 'ஜூலைப் படத்தை' தேர்ந்தெடுக்கும் பொறுப்பக் கொடுத்துட்டு, செல்லா கிட்டார் கத்துக்கரேன்னு கெளம்பிட்டாரு.
நான் ஏற்கனவே சொல்லியிருக்கர மாதிரி, எனக்கு புகைப்படம் எடுப்பது பற்றி பெரிய ஞானம் கெடையாது. ட்ரையல் & எரர்ல எடுத்து ஏதோ கொஞ்சம் தேத்துவேன்.
so, போட்டியில் இருக்கும் படங்களுக்கு, பாத்தவுடன் 'நச்சுனு' எது இருக்கோ, அதன் அடிப்படையில் என் மார்க்கு இருக்கும். (CVR, உங்க அளவுகோல் எப்படி? :) )
கட்டம் கட்டி இத போடரதுக்கே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குது. IImsaiயின் முதல் படம் இருக்கும் இடத்துக்கு போய் ஹாயா ரெஸ்ட் எடுத்துட்டு வந்தா நல்லா இருக்கும்.
அப்படியே செந்தழல் ரவியின் 'கொசுரு' படம் இருக்கும் ஊருக்கும் போயிட்டு வந்தா இன்னும் பேஷா இருக்கும் :)
சரி சரி, அடிக்க வராதீங்க... வெளையாட்டெல்லாம் என் பதிவுல வச்சுக்கரேன்.
இங்க, சீரியஸ் மேட்டர்ஸ் மட்டும் பாப்போம் :)
இனி கீழே இருக்கும் படங்களை பார்த்து ரசியுங்க.
அனுப்பாதவங்க அனுப்புங்க.
மார்க் போட்டு 'ஜூலைப் படம்' விரைவில் அறிவிக்கப்படும்.
ஒவ்வொரு படத்துக்கும், உங்க பாணியில் ஒரு விமர்சனமோ, கவுஜயோ சொல்லிட்டுப் போங்க.
இங்க சொல்லியிருக்கர மாதிரி படத்துல ஏதாவது ஒரு geometry தெரிஞ்சாலே படம் ஒரு அழகா இருப்பதை கவனிங்க.
உங்க கண்ணுக்குத் தெரியும் அழகையும், நெருடலையும் சொல்லுங்க.
வர்டா, கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் நன்றீஸ்!
கலக்கிப்புட்டீங்க!
-சர்வேசன்
படங்கள் கீகீகீகீகீகீகீழே...... தவறுகள், விடுபட்டவை ஏதாவது இருந்தா சொல்லுங்க!
1.இம்சை |
2. Deepa |
3, சுரியாள் |
4. Chalam |
5. முத்துலெட்சுமி |
6. Veyilan |
7. Sathanga |
8. சிறில் அலெக்ஸ் |
9. An& |
10. Jayakanthan |
11. ஒப்பாரி |
12. Sathia |
13. அல்வாசிட்டி விஜய் |
14. Ilavanji |
15. Yathirigan |
16. துளசி கோபால் |
17. மின்னுது மின்னல் |
18. ஜி.ராகவன் |
19. கிவியன் |
20. இளா |
21. ஜீவா |
22. விருபா |
23. அனுசுயா |
24. கானா பிரபா |
25. பிருந்தன் |
26. Aruna Srinivasan |
27. லொடுக்கு |
28. அமிழ்து |
29. Maya |
30. grprakash/Pranni |
31. மதி கந்தசாமி |
32. Sen |
33. Vaasi |
34. Vasanth |
35. சிவகுமார் |
36. வி.ஜெ.சந்திரன் |
37. Mayan |
38. சந்தோஷ் |
39. சாரலில் |
40. Anitha |
41. வெற்றி |
42. சிவபாலன் |
43. செந்தழல் ரவி(due to popular demand) |
44. நாடோடி |
45. வல்லிசிம்ஹன் |
46. கைப்புள்ள |
47. Vanthian |
48. Boston Bala |
49. கண்மணி |
50. நாட்டு நடப்பு |
51. முகவை மைந்தன் |
52. Johan-Paris |
-- த எண்ட் --
இது என்ன அநியாயம் ? என்னுடைய படங்கள் ஆட்டையில் இல்லையா ? கிழவி கிழவனை எல்லாம் எடுத்தா போடுறீங்க ? ஆனால் ஒரு நல்ல பிகரை எடுத்தால் போடமாட்டீங்களா ?
ReplyDeleteஇது வரலாற்று பிழை...இதனை எதிர்த்து மவுண்ட் ரோடு க்ளாஸிக் பார் அருகில் காலவரையற்ற தர்ணா போராட்டம் அடுத்த மாதம் நடைபெறும்...
இந்த மாதம் சியோல் - கஸாந் தாங் எல்ஜி ஹுவே ஸா ஜிங்ஜாங் சங்ஸோகி கோ கி அருகில் வருகின்ற சனிக்கிழமை நடைபெறும்....
வலைப்பதிவர்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்....
பாறை+ மேகம் படம் அழகு...
மின்னுது மின்னலின் முதல் படம் பட்டாசு...
முத்துலட்சுமி படம் ஒன்று அருமை...
இவங்க எல்லாருக்கும் ஆறுதல் பரிசு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...:))))
:)
ReplyDeleteஒருத்தருக்கு ரெண்டு படம்தாங்க allowed,
முதல் ரெண்டு படம் பச்ச பசேல்னு நல்லா இருக்கே. மாத்திடவா? எந்த ரெண்டு படம்னு சொல்லுங்க :)
நீங்க சொல்றதும் ரைட்டு, தாத்தா பாட்டி இருக்கும்போது, 'கொசுரு' சேர்ப்பதில் தவறே இல்லை :)
சர்வேசன்,
ReplyDeleteநல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
அனைத்துப் படங்களும் நன்றாக உள்ளது. ஆர்வத்துடன் பங்குபற்றிய அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.
எத்தனையோ வேலைப் பளுக்களுக்கு மத்தியிலும் இப்படியான ஒரு சுவாரசியமான பொழுதுபோக்குப் போட்டியை ஒழுங்கு செய்யும் அன்பர்களுக்கும் என் நன்றிகள்.
செந்தழல் ரவியின் 'கொசுறு' added due to popular demand.
ReplyDeleteதர்ணா கிர்ணான்னு வேர பயம்புடுத்திட்டாரு.
போராளிகள் அனைவரும் அமைதியாக கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
:)
என்னோடது மிஸ் ஆயிடுத்து.
ReplyDeleteவேண்டும் என்றால் முதல் இரண்டை கணக்கில் கொள்ளவும்.
;)))))))))))
தீபா மற்றும் சூரியாள் படங்கள் அழகு...இளவஞ்சி அருமையாக எடுத்திருக்கிறார்...
ReplyDeleteலொடுக்கின் ரெண்டாவது படம் சூப்பர்...
ஜீரா ஏதோ வித்தியாசமா ட்ரை செய்திருக்கார்...
அருணா சீனிவாசன் படம் அருமையாக வந்துள்ளது...!!!!
யாருப்பா அந்த ரெண்டு ஐ. இம்சை ? இம்சைக்கே இம்சையா ?
வெற்றியின் முதல் படம் அருமையாக வந்துள்ளது...
ReplyDeleteஅனிதாவின் தீம் சூப்பர்...சப்ஜெக்ட் நல்லாருக்கு...
நாடோடியின் படத்தில் ஓரத்தில் மேகத்தின் மங்கல்...அருமையாக வந்துள்ளது...!!!!1
மேலே சொன்ன எல்லாருக்கும் ஆறுதல் பரிசு கட்டாயம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...
ReplyDeleteவேற ஒன்னும் சொல்றதாயில்ல :)))))
http://naachiyaar.blogspot.com/2007/07/blog-post_19.html
ReplyDeleteஇந்தச் சுட்டியில படப்பதிவு போட்டு இருக்கேன் சர்வேசன்.
ஏற்கனவே ஒண்ணு அனுப்பினேன். வந்திச்சோ வரலியோ.
வயசானவங்களுக்குத் தனி பரிசு உண்டுனு மண்டபத்தில சொன்னாங்க:)))
எப்படியும் நடுவர்கள் குழம்ப போறீங்க...பேசாம சர்வேசன் பதிவில் இரு ஓட்டெடுப்பும் வெச்சுட்டு...
ReplyDeleteமக்கள் ஓட்டு + நடுவர்கள் ஓட்டு = வெற்றியாளர்கள் என்று வெச்சா என்ன ?
என்ன தான் படங்கள் சுமார்னாலும் ஆட்டையிலேயே சேக்காம டீல்ல விட்டுட்டீங்களே?
ReplyDelete:(
http://kaipullai.blogspot.com/2007/07/2007.html
வல்லிசிம்ஹன், கைப்புள்ள,
ReplyDeleteபடங்கள் சேத்தாச்சு, எப்படியோ விட்டுப் போச்சு. சாரி.
பின்னூட்டத்த பாத்துதான் உரல் எல்லாம் எடுத்தேன்.
செ.ரவி, ஐடியா நல்லா இருக்கே. நேயர்கள் விருப்பம் என்னன்னு நானு சர்வே கமிட்டி வச்சு தனியா பாக்கரேன். ஆனா, PiT (photography-in-tamil) பொறுத்தவரைக்கும், நடுவர் முடிவு மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும் :)
அளப்பீஸ்வரறே ( சர்வேசனின் முழுத்தமிழாக்கம்!:-) } தனக்கு ஆடரவாக கும்மி கோஸ்டிக்கு கள்ள ஓட்டு போடுவதுஎப்படி என்று தழலாரின் கொலவெறிப்படை ஸ்பெஸல் க்ளாஸ்எடுப்பதாக கரும்பூனையாரின் க(ழ)லகக் கண்மணிகள் சொல்லுராங்கோ! ஜாக்கிரதை. அப்புறம் மார்க் போடுறபோது (மெயினா செந்தழல் போட்டோவுக்கு) ஆஞ்சனேயர் ஸ்தோத்திரம் சொல்லிக்கிட்டே போடுங்க! அப்பத்தான் நாங்க நம்புவோம்! இல்லேன்னா வலையுலகத் தொல்லைத் தாரகை இம்சை அரசி தலைமையில் பெங்களூர் ஏரபோர்ட்டில் இறங்க வரும் கொரிய விமானங்கள் மீது மொக்கை ச்சே மொட்டை மாடியிலிருந்து கல்லெறியும் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்!
ReplyDeleteஅன்புடன்
ஓசை செல்லா
http://vanthian.blogspot.com/ விட்டுப் போயிருக்கிறது!
ReplyDeleteதல பாஸ்டன் பாலாவை விட்டுடீங்க! http://snapjudge.wordpress.com/2007/07/18/today-tomorrow/
ReplyDeleteஅவரும் கலந்துக்கறார்!
யாருப்பா அந்த ரெண்டு ஐ. இம்சை ? இம்சைக்கே இம்சையா ?
ReplyDeleteNaan thanga antha ரெண்டு ஐ. இம்சை ,
செல்லா,சர்வேசன் போட்டினு எல்லாரையும் சந்தோஷப்படுத்தினதற்கூ மிக மிக நன்றி.
ReplyDeleteபாராட்டுக்களும் வாழ்த்துக்களும். சிரமப்பட்டு ஃபோகஸ் செய்து எடுத்துப் போட்டு இருக்காங்க. நல்லா இருக்கு.
செல்லா,
ReplyDeleteஇங்கே இருக்கும் சில படங்களை நான் ஏற்கனவே மின்னஞ்சலில் பார்த்திருக்கிறேன். சிலர் அதையும் சேர்த்து போட்டிருக்கிறார்களா? தெரியவில்லை. ஆனால் எல்லாமே ஒவ்வொரு விதமாக நன்றாக உள்ளது..
@Surveysan
ReplyDeleteHATS OFF
நீங்கள் செய்தது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்று எனக்கு தெரியும்!!
நானும் இது போல செய்யலாமா என்று யோசித்து விட்டு,அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.
எல்லா படங்களும் ஒரே இடத்தில் இருப்பதால் அலைச்சல் கம்மி.
நன்றிகள் பல!! :-)
மக்களே, இங்க இருக்கற என்னோட படங்கள் கொஞ்சம் தெளிவா இல்ல. இங்க கொஞ்சம் தெளிவா பார்க்கலாம்:
ReplyDeletehttp://picasaweb.google.com/grprakash/XaKyCH
முழு படமும் வேணும்னா:
http://lh4.google.com/grprakash/Rp5IK8jOEJI/AAAAAAAAAho/0OH_r9jowt4/k001-032.jpg
http://lh4.google.com/grprakash/Rp5IQ8jOEKI/AAAAAAAAAhw/gOYt1aRo6VQ/k001-026.jpg
விட்டுப்போனவையை கூடிய விரைவில் சேர்க்கிறேன்.
ReplyDeleteசாரி!
மக்கள்ஸ், விடுபட்டவைகளை சேத்தாச்சு.
ReplyDeleteஇன்னும் ஒண்ணு வந்தா 50 ஆயிடும் :)
சிவகுமார்,
//செல்லா,
இங்கே இருக்கும் சில படங்களை நான் ஏற்கனவே மின்னஞ்சலில் பார்த்திருக்கிறேன். சிலர் அதையும் சேர்த்து போட்டிருக்கிறார்களா? தெரியவில்லை. ஆனால் எல்லாமே ஒவ்வொரு விதமாக நன்றாக உள்ளது.//
எந்த படங்க? சொல்லுங்க, விசாரிச்சுடுவோம்.
நம்ம மக்கள்ஸ் அப்படியெல்லாம் செய்ய மாட்டாங்கன்னே நெனைக்கறேன்.
சர்வேசன்,
ReplyDelete/* உங்க கண்ணுக்குத் தெரியும் அழகையும், நெருடலையும் சொல்லுங்க. */
அனைவரின் படங்களும் மிக நன்றாக இருப்பினும், பார்த்ததும் என் மனதைத் தொட்ட படம் வாசியின் [Vaasi --> 33] இரண்டாவது படம். இயற்கையோடு கலந்து தமது வாழ்க்கையை நாடாத்தும் ஒரு எளிய கிராமிய மணம் வீசும் படம். கிராமிய வாழ்வின் யதார்த்தத்தைச் சொல்லுகிறது அப்படம். நானும் இப்படி வயல்/கடல் சூழ்ந்த கிராமத்தில் இருந்து வந்தவன் என்பதாலும், அந்த கிராம வாழ்க்கை என்னிடம் இருந்து சூறையாடப்பட்டதாலும், மீண்டும் அந்த வாழ்க்கையை வாழ்த் துடிப்பதாலும் வாசியின் இரண்டாவது படம் என் மனதில் ஒரு பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையல்ல.
ஒரு இயற்கையோடு ஒத்து வாழும் கிராமிய மண்ணின் படத்தைத் தந்த வாசிக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
http://nattunadappu.blogspot.com/2007/07/blog-post_20.html யும்
ReplyDeletehttp://mugavairam.blogspot.com/2007/07/blog-post_20.html யும் நீங்கள் சேர்த்த கடைசி பதிவர்க்கு முன்பே பேர் கொடுத்திட்டாங்க. சொ இப்போ 51 பேர்! hereafter No entry Board maattiyaachu!
போட்டாச்சு.
ReplyDelete51.
த எண்ட்!
எப்ப முடிவுகள் அறிவிக்கப்படும்?
ReplyDeleteநடுவர்களுக்கு அவகாசம் வேண்டாமா. இரண்டு பேரும் 1.தலைப்புப் பொருத்தம் 2. காட்சி அழகு Aesthetic Sense 3.டெக்னிகள் கரெக்ட்னஸ் 4.Difficulty Level 5. Creativity போன்ற பல்வேறு அளவுகோள்களில் படங்களை தேர்ந்தெடுப்பார்கள். அவசரப்படுத்தவேண்டாம். கடினமான பணி. அவர்களே அதை முடிவு செய்வார்கள்.. I mean என்று என்று!
ReplyDeleteஆம், நினவிருக்கிறது.எங்கோ குழறுபடி..
ReplyDeleteநடுவர்கள் கவனத்திற்கு.. நான் இந்த வண்டு படத்தை பட்டியலில் சில நாள் முன்பு பார்த்தேன் திடீரென சுட்டி காணவில்லை!. யோகனின் படம் இங்கே... http://johan-paris.blogspot.com/2007/07/blog-post.html
அவரது படைப்பு 19 ஆம் தேதியே சமர்ப்பிக்கப்பட்ட ஒன்று.
ஆவண செய்ய வேண்டுகிறேன்.
அன்புடன்
ஓசை செல்லா
Johan-Paris,
ReplyDeleteI just added your photos to the list.
I picked the pictures based on the comments. I may have missed yours. sorry about that.
me and CVR will brainstorm and come up with the 'July Picture' :)
results will be announced soon.
கலக்கல் புகைப்படங்கள். சில படங்களின் தரம் மிகவும் வியப்பளிக்கிறது.
ReplyDeleteகுலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்தால் கூட முடிவு சரியானதாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். (செந்தழலின் 'இயற்கை எனும் இளைய 'கன்னி'யை தவிர்த்து :)))))
கோவிச்சுக்காதீங்க ரவி.. கலாய்ச்சல்தான்.