Thursday, July 5, 2007

ஒளியிலே தெரிவது தேவதையா - படங்காட்ட பத்து சூட்சமங்கள்!

17 comments:
 
அழகான படங்கள் எடுக்க, ஜீவ்ஸ் ஒரு பத்து சூட்சமங்கள் ஈ.மடலாக அனுப்பி வைத்தார். அதில் சில டச்-அப் செய்து, உங்க முன்னாடி வைக்கரேன்.

நல்ல நேர்த்தியான புகைப்படங்கள் பிடிக்க, உங்களுக்குத் தெரிஞ்ச சூட்சமங்களையும் பகிருங்கள்.
உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள்/கேள்விகளை கேட்கவும் பின்னூடுங்கள்.

சூ 1 - முடிந்த வரையில் இயற்கை ஒளியில் படம் எடுக்க முயலுங்கள். செயற்கைத் தனமற்ற நல்லதொரு புகைப்படம் கிடைக்கும். Be more creative. Strive to find the best option for a good shot than just trying to snap a shot. எதையும் சற்று நுணுக்கமாக பார்க்க பழகுங்கள். Viewfinderல பாக்கும்போதே ஒரு 5 விநாடிகள் "இந்த படம் ப்ரிண்ட் போட்டு ஆல்பத்துல வெச்சா, ஒரு attractiveஆ இருக்குமா?" என்று சிந்திக்கவும். ஆரம்ப காலங்களில், 10 எடுத்தா 1 படம் தான் சரியா வரும். As you build your experience in framing, your ratio of good hits will increase.
(framing, viewfinder, இதுக்கெல்லாம் தமிழ்ல என்னங்க சொல்லணும்?).

சூ 2- ஒவ்வொரு படம் எடுக்கும் முன்னும், உங்கள் கேமராவில் இருக்கும் modeஐ சரியாக உபயோகிக்கலாம். க்ளோஸப்பில் பூக்கள் எடுக்க, தூரத்தில் இருக்கும் பொருள் எடுக்க, இரவில் படம் பிடிக்க என்று வரிசையாக இருக்கும் பொத்தான்களை உபயோகிக்கலாம். ஷட்டர் வேகம், aperture இவற்றின் நுணுக்கங்கள் புலப்படும் வரை, கேமராவில் உள்ள இந்த வசதிகள் கைகொடுக்கும்.

Flower modeல (நண்பனின்) Nikon D80 கேமரால எடுத்தது. Adobe Photoshop வச்சு கொஞ்சமா டச்சிங் பண்ணிருக்கேன். Flower Mode உபயோகித்ததால், பூக்கள் அழகா focus ஆகி, பின்னால் இருக்கும், இலைகள் out of focusல் தெரிவதை கவனியுங்கள். போடோக்கு ஒரு அழக கொடுக்குது இல்லியா? (என்னது? இல்லையா?:))


சூ 3- வாய்ப்புகள் உங்களுக்காக காத்திருக்காது. கிடைக்கும் வாய்ப்பை உடனடியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த பாயிண்ட், சூ1 க்கு சற்று முரணானது மாதிரி தெரியும். இருந்தாலும், இங்க என்ன சொல்றோம்னா, சில படங்கள் பிடிக்கும்போது, advancedஆ திங்க் பண்ணனும், படம் க்ளிக்க வேண்டிய நேரத்தில், க்ளிக்க மட்டும்தான் செய்யணும். உ.ம், பட்டாம்பூச்சி, தும்பியெல்லாம் படம் புடிக்க முயற்ச்சி பண்ணினா, 10 விநாடிகளில், 10 படம் க்ளிக்கணும். அப்பதான் நீங்க நெனச்ச ஒண்ணாவது ஒழுங்கா வரும். குழந்ததகளை படம் பிடிக்கும்போதும், இது பொறுந்தும்.
க்ளிக்கரை, முழுதுமாக அமுக்காமல், பாதி அமுக்கிய நிலையில் (half-press) நீங்கள் எடுக்க நினைக்கும் frameஐ, focus செய்து கொள்ள முடியும். நீங்கள் நினைத்த காட்சி தெரிந்ததும், மீதிப் பாதியையும் அமர்த்தி, படத்தை க்ளிக்கலாம்.
குழந்தையை படம் எடுக்கும்போது, அது சிரிக்கும் வரை காத்திராமல், viewfinderல், குழந்தையின் முகத்தை frame செய்து, பொத்தானை half-press செய்து, focus lock செய்ய முடியும். குழந்தை சிரிக்கும்போது, மீதிப்பாதியை அமர்த்தி படத்தை எடுக்கலாம்.

சூ 4- ஃபிளாஷ் உபயோகிக்கும் போது ஃபிலிம் ரோல் வாங்கிய வெள்ளை டப்பா வை கத்தரித்து ஃபிளாஷ் மேல் வத்து படம் எடுத்தால் மென்மையா ஒளியில் எடுத்த எஃபெக்ட் கிடைக்கும்.
இந்த டெக்னிக், க்ளோஸப்பில் முகங்கள் எடுக்கும்போது நல்லா கைகொடுக்கும். மிகக் கிட்டத்தில் இருக்கும் பொருளை, ஃபிளாஷ் போட்டு எடுத்தா, வெளிரிப்போய் வரும். இந்த மாதிரி நேரத்தில் மேலே சொன்ன சூட்சமம் கைகொடுக்கும்.

சூ 5. புகைப்படம் எடுக்க காலை மற்றும் மாலை வெயில் நேரம் மிகச் சிறந்ததாக இருக்கும்.

சூ 6. நல்ல வெயில் நேரங்களில் மனிதர்களை புகைப்படம் எடுக்கும் போது ஃபிளாஷ் உபயோகித்தல் நலம். இல்லாவிட்டால் நிழல் படிந்த இடங்கள் ( முக்கியமாய் மூக்கு மற்றும் கண்களுக்கு அடியில்) கருப்பாகவும் மற்ற இடங்கள் நல்ல வெளிச்சத்துடன் இருக்கும். ஃபிளாஷ் வேண்டாம் என்று கரும் பட்சத்தில் மூக்கின் கீழும் கண்களின் கீழும் நிழல் விழாமல் இருக்கும் வகையில் பார்த்து எடுக்க வேண்டும்.

சூ 7. ஒளிவிழும் கோணமும் மிக முக்கியமான ஒன்று. ஒளி விழும் கோணம் தவறாக இருந்தால் வெகு அழகாக வரவேண்டிய புகைப்படம். மிக அசிங்கமாக வரக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம்.

சூ 8. புகைப்படத்தை மெருகேற்றும் என்று நீங்கள் நினைத்தால் ஒழிய முடிந்த வரையில் நிழல்களை தவிர்க்க பாருங்கள்.

சூ 9. எச்சரிக்கை: ஒரு பொழுதும் உச்சிவெயில் நேரத்தில் அல்லது அதிக சூரியவெளிச்சம் உள்ள நேரத்தில் நேரடியாக சூரியனை புகைப்படம் எடுக்க முயலாதீர்கள். அது கேமராவிற்கும் உங்களுக்கும் தீதாக அமையலாம்.

சூ 10. அதிகவெளிச்சம் சில சமயம் glare effect உருவாக்க கூடும். முக்கியமாக மனிதர்களை எடுக்கும்போது நெற்றி மற்றும் கன்னங்கள் புகைப்படத்தில் அதிக வெளுப்புடன் வந்து புகைப்படத்தையே கெடுத்துவிடும்.

யாராவது ஒருத்தர், இந்த பத்து பாயிண்ட வச்சு படம் புடிச்சு, தப்பா செஞ்சா எப்படி வரும், ரைட்டா செஞ்சா எப்படி வரும்னு விலாவாரியா பதியுங்களேன்? நானும் முயற்ச்சி பண்றேன்.

படங்காட்டுங்க!

17 comments:

 1. நல்ல வெளிச்சத்திலும் பிளாஸ் போட்டு எடுக்கனுமா? இந்த மாதிரி இதுவரை முயற்சித்ததில்லை.
  அந்த படத்தில் உள்ள பூ பெரிதாக இருந்தால் அவுட் ஆப் போகஸ் நன்றாக வந்திருக்கும்..இதில் அவ்வளவாக எடுபடவில்லை என்பதை என் கண் மூலம் பார்த்து மூளை சொல்கிறது. :-))

  ReplyDelete
 2. குமார்,

  //நல்ல வெளிச்சத்திலும் பிளாஸ் போட்டு எடுக்கனுமா? இந்த மாதிரி இதுவரை முயற்சித்ததில்லை//

  நானும் முயற்சித்ததில்லை. ஜீவ்ஸோட டெக்னிக் அது. எடுத்துப் பாத்து சேம்பிள் போடரேன். அவரு சொல்ர மாதிரி, மூக்கு நிழல், கண்ணுக்கு கீழே எல்லாம், கருப்பா வராம இருக்க உதவும்.

  //அந்த படத்தில் உள்ள பூ பெரிதாக இருந்தால் அவுட் ஆப் போகஸ் நன்றாக வந்திருக்கும்..இதில் அவ்வளவாக எடுபடவில்லை என்பதை என் கண் மூலம் பார்த்து மூளை சொல்கிறது//

  உண்மைதான். பெரிய ரோஜாப் பூக்கு இந்த எபெக்ட் இன்னும் பளிச்னு அழகு சேர்க்கும்.

  இதுல இருக்கர மாதிரி - http://flickr.com/photos/surveysan/681154304/

  ReplyDelete
 3. அந்த FlickR படம் அருமை.
  FlickR மூடப்போவதாக கேள்விப்பட்டேனே! சீக்கிரம் படத்தை வேறெங்கும் மாற்றிவிடுங்க.

  ReplyDelete
 4. அளப்பவரே... அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஒவ்வொன்றும் தனிப்பதிவாகப் போடவேண்டிய விசயங்கள்! விக்கியில் இதே மாதிரி சரி தவறு சுட்டிக்காட்டும் படங்கள் உள்ளது என்று நினைக்கிறேன். வரும் பதிவுகளில் பார்க்களாம்.

  kalaayppu: ஆமாம் நிழல்கள் மீது அப்படி என்ன கோபம் உங்களுக்கு!lol!
  பாரதிராஜாவுக்கும் உங்களுக்கும் எதாவது தகறாரா?lol!

  ReplyDelete
 5. பதிவுக்கு நன்றி. எனக்கு மிகவும் பயனுள்ள பதிவு.

  ReplyDelete
 6. யாஹூகாரன்July 5, 2007 at 9:36 AM

  //அந்த FlickR படம் அருமை.
  FlickR மூடப்போவதாக கேள்விப்பட்டேனே! சீக்கிரம் படத்தை வேறெங்கும் மாற்றிவிடுங்க. //

  அய்யா..

  ஃப்ளிக்கர் மூடப்படாது. போட்டோஸ். டாட் யாஹூ டாட் காம் தான் மூடப்போறாங்க. டூப்ளிகேட் சர்வீசஸ் அவாய்ட் பண்ண.

  ReplyDelete
 7. குமார், சர்வேசன்,

  அதுக்கு Fill In Flash எனப் பெயர். நல்ல வெளிச்சத்தில் எடுக்கும் பொழுது நம் நெற்றியின் கீழ், மூக்கின் கீழ் என நிழல் விழுகிறது அல்லவா? அதனை நீக்க இது பயன் படுகிறது. பொதுவாக ப்ளாஷ் வெளிச்சம் 4 -5 அடிகளுக்குத்தான் பயன் படும். அதை விடத் தள்ளி இருக்கும் பட்சத்தில் ப்ளாஷ் எடுபடாது.

  ReplyDelete
 8. //kalaayppu: ஆமாம் நிழல்கள் மீது அப்படி என்ன கோபம் உங்களுக்கு!lol!
  பாரதிராஜாவுக்கும் உங்களுக்கும் எதாவது தகறாரா?lol!//

  :) Jeevesக்குதான் ஏனோ நிழல் புடிக்கல. 10 சூட்சமங்களும் அவருதுதான்.

  ReplyDelete
 9. கொத்ஸ்,

  //அதுக்கு Fill In Flash எனப் பெயர். நல்ல வெளிச்சத்தில் எடுக்கும் பொழுது நம் நெற்றியின் கீழ், மூக்கின் கீழ் என நிழல் விழுகிறது அல்லவா? அதனை நீக்க இது பயன் படுகிறது. பொதுவாக ப்ளாஷ் வெளிச்சம் 4 -5 அடிகளுக்குத்தான் பயன் படும். அதை விடத் தள்ளி இருக்கும் பட்சத்தில் ப்ளாஷ் எடுபடாது//

  விளக்கத்துக்கு நன்னி. என்னக் கேட்டா, portrait மாதிரி எடுக்கும்போது, ஒரு படத்த ஃபிளாஷ் போட்டும், போடாமயும் எடுக்கலாம். எது நல்லாருக்கோ அத வச்சுக்கலாம் :)

  ReplyDelete
 10. //அந்த FlickR படம் அருமை.
  FlickR மூடப்போவதாக கேள்விப்பட்டேனே! சீக்கிரம் படத்தை வேறெங்கும் மாற்றிவிடுங்க//

  நன்றி. யாஹூக்காரர் சொல்வதைப் போல், flickr will stay.

  ReplyDelete
 11. அதிக வெளிச்சத்தில் மாத்திரமில்லாது இரவு நேர அறை வெளிச்சத்தைக் கூட முழு இருளாக்கி விளக்கடித்தால்(Flash)படம் சாம்பல் நிறம் தவிர்த்து அழகுபடும் என்று எப்பவோ படித்தது.

  ReplyDelete
 12. நிழற்படம்July 9, 2007 at 10:45 AM

  //இலவசக்கொத்தனார் said...

  குமார், சர்வேசன்,

  அதுக்கு Fill In Flash எனப் பெயர். நல்ல வெளிச்சத்தில் எடுக்கும் பொழுது நம் நெற்றியின் கீழ், மூக்கின் கீழ் என நிழல் விழுகிறது அல்லவா? அதனை நீக்க இது பயன் படுகிறது. பொதுவாக ப்ளாஷ் வெளிச்சம் 4 -5 அடிகளுக்குத்தான் பயன் படும். அதை விடத் தள்ளி இருக்கும் பட்சத்தில் ப்ளாஷ் எடுபடாது. //

  fill in flash பற்றி சொன்னதுக்கு நன்றி கொத்தனார். சில ஃப்ளாஷ்கள் பல அடிகளைத் தாண்டியும் பயன் தரும். எந்த மாதிரி ஃப்ளாஷ் வாங்குகிறோம் என்பதை பொறுத்தது. பெரும்பாலும் கேமராவுடன் வரும் ஃப்ளாஷ்கள் நீங்கள் சொன்னது போலத்தான்.

  ReplyDelete
 13. பூக்களை படம் எடுப்பதை குறித்து நீங்கள் சொல்லியிருப்பது ரொம்பவும் அருமை...
  நான் என் canon A70 ல் Macro mode உபயோகித்து சில பூக்களை க்ளிக்கியுள்ளேன்.. என்னுடைய இந்த பட்ங்கள் தரமானவையான்னு கொஞ்சம் பார்த்து சொல்லறீங்களா ? ? ?

  Flower photos at blogspot

  Dew drop in a leaf

  நான் எல்லா படத்தையும் photoblog ல் முதலில் upload செய்துவிடுவேன்.. அப்புறம் எதுக்கெல்லாம் title-description எழுத ஐடியா வருமோ அதை என் பிளாக்ர் பதிவுலே சேர்த்துகொள்வேன்
  http://www.photoblog.com/deepa7476

  ReplyDelete
 14. when using dedicated flash, the "fill in flash" logic will change according to the guide number of particular flash. to avoid shadows, when taking photos in outdoor, see that the object is facing direct light.

  some one please tell me how to use tamil fonts to post comments ?

  salaijayaraman

  ReplyDelete
 15. @சாலை ஜயராமன்
  கருத்துக்கு மிக்க நன்றி

  தமிழில் தட்டச்சு செய்ய வேண்டிய வழிமுறைகள் இந்த இணையப்பக்கத்தில் காணலாம்!! :-)

  சீக்கிரமே அழகிய தமிழில் உங்கள் எழுத்துக்களை காண வாழ்த்துக்கள்! :-)

  ReplyDelete
 16. You are right but shadow will give you dramatic effect for the picture, particularly creative photos. Fill in flash also will help to avoid shadows.even you can avoid shadows without flash. Just change the position of the subject. Thats all. I too use the technique.

  ReplyDelete
 17. பயனுள்ள கட்டுரை பலவற்றை அறிய முடிந்தது

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff