Friday, July 13, 2007

எந்த கேமரா வாங்கறது ? - பகுதி -1

17 comments:
 


முன் குறிப்பு :

இதைப் படித்த பிறகும் நீங்களே பலமுறை யோசியுங்கள். http://dpreview.com என்ற தளத்தில் எல்லா விதமான கேமராவிற்கும் மதிப்பீடு செய்திருக்கிறார்கள். நீங்கள் தேர்வு செய்யும் கேமராவை, அதுபோன்ற வேறு நிறுவனக் கேமராவுடன் ஒப்பீடு செய்து பாருங்கள்.


மூன்று வகையாக டிஜிடல் கேமராக்களை பிரிக்கலாம். point and shoot, semi SLR and SLR. உங்களுக்கு எது தேவை என்பதை முதலில் தேர்வு செய்யுங்கள்.

point and shoot கேமராக்களும் பலவகையில் வருகிறது. பாக்கெட்டில் போட்டு எடுத்துச் செல்லும் அளவிற்கு மிகச்சிறியதில்( அதிகம் features இருக்காது) இருந்து சற்றே தரமான பல features நிறைந்த கேமரா வரை. இந்த வகைக் கேமராக்கள் தாம் பலரிடம் பெரும்பாலும் உபயோகத்தில் இருப்பது. எனக்கு இந்த இடத்துக்கு போய் வந்தோம் என்று நினைவில் வைத்துக் கொள்ள ஒரு புகைப்படம் போதும். இன்னாருடன் இருந்தேன் என்று பெயரளவிற்கு ஆரம்பித்து சற்று உயர் தரமான புகைப்படம் வரையில் எடுக்க முடியும்.

இந்தவகை கேமராக்களில் Canon அல்லது Nikon கம்பெனி கேமராக்கள் என்னுடைய முதல் தேர்வு. செமி SLR வகைக் கேமராக்களும் உண்மையில் point and shoot கேமராக்களே. என்ன வித்தியாசம் என்றால் இதில் சற்று அதிக option கொடுத்திருப்பார்கள். கூடவே இமேஜிங் ப்ராஸஸர் நல்ல தரத்தில் வைத்திருப்பார்கள்.

இந்த வகைக் கேமராக்களை வாங்கும் போது முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டியவை :


Zoom Capacity :

ஆரம்ப நிலைக் கேமராக்கள் பெரும்பாலும் 3x அளவில் தான் இருக்கும். 15x வரையிலும் கேமராக்கள் இருக்கின்றன. ஜூம் அதிகமாக இருப்பது நல்லது. இந்த வகையில் canon, panasonic மற்றும் சோனி நிறுவனத்தினர் அதிக அளவு ஜூம் உள்ள கேமராக்களை உற்பத்தி செய்கின்றார்கள்.

அதிக ஜூம் கொண்ட கேமராக்களுக்கான எடுத்துக் காட்டு - Canon S3-IS(12x Zoom), Canon S5-IS(12x Zoom), Sony DSC-h7(15x Zoom) Panasonic - FZ50 (12X Zoom )

நிக்கான் நிறுவனமும் ஜூம் கொண்ட கேமராக்களைத் தயாரிக்கிறார்கள். ஆனால் இதுவரை அவை 10x உட்பட்டே இருந்திருக்கிறது.

எங்களுடைய தேர்வு - Canon S5-IS(12x Zoom) அல்லது Panasonic - FZ50 (12X Zoom ).

அடுத்து லென்ஸ் .. விரைவில்

அன்புடன்
ஜீவ்ஸ் & செல்லா
மேலே ஓட்டுப் பெட்டி உள்ளது.. தங்களிடம் என்ன மாதிரியான காமிரா உள்ளதுஎன்று ஓட்டளித்துச் செல்லவும்!

17 comments:

  1. நல்ல பதிவு. வேறொரு இடத்தில் செல்லா ரிபெல் என்று ஒரு காமிராவைப்பற்றிய சொன்னார் என் நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. Olympus SP-550 UZ Digital Camera : 18X optical Zoom.

    ReplyDelete
  3. ரெண்டு வாரம் நண்பனின், NikonD80 with 18-135mm கையில் இருந்தது.
    அடிச்சு தள்ளியாச்சு.
    அருமையான காமெரா.

    D40x வெலை கம்மி கிட்டத்தட்ட அதே தரத்துடன் கிடைக்கும்.

    நான் Nikon ரசிகன்.

    ReplyDelete
  4. Canon PwerShot A70 3X optical Zoom , 3.2X digital Zoom

    ReplyDelete
  5. ரிபெல் கேமரா - எஸ்.எல்.ஆர் வகையைச் சேர்ந்தது. இப்போது பாயிண்ட் அண்ட் ஷூட் கேமரா பற்றிய அலசல். எஸ் எல். ஆர் பற்றி வரும்போது கண்டிப்பாக அதைப் பற்றி விவாதிக்கலாம் :)

    ReplyDelete
  6. சர்வேசா.. லெய்கா விற்கு அடுத்து ( ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப வெலையான கேமரா ) நிக்கான் தரம் வெகுவாக போற்றப்படுகிறது. அருமையான புகைப்படக் கருவிகளை தரும் நிறுவனம். ( Lets discuss about the diff between d80 and d40x .. almost all the features are same but why the price is lower in d40x ? .. will discuss this in a new Posting )

    ReplyDelete
  7. //Deepa said...

    Canon PwerShot A70 3X optical Zoom , 3.2X digital Zoom //

    ஆரம்ப நிலையில் உபயோகிக்க தரமான கேமரா தான். நீங்கள் எடுத்த புகைப்படங்களும் அருமையாக இருக்கின்றன. வாழ்த்துகள்

    ReplyDelete
  8. // Anonymous said...

    Olympus SP-550 UZ Digital Camera : 18X optical Zoom. ///



    அனானி,

    இந்தக் கேமராவை பட்டியலில் சேர்க்காதற்கு காரணம் உண்டு. இப்போது ஜூம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்.. இன்னும் பல விஷயங்களை சேர்த்து பின்பு அதில் மிகையான நன்மைகள் கொண்ட கேமராவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


    Olympus SP-550 UZ Digital Camera : 18X optical Zoom. - இந்தக் கேமரா அதிகம் மக்களிடையே செல்வாக்கு பெறாததற்கு பல காரணங்கள் உண்டு. அடுத்து வரும் பதிவுகளில் விவாதிக்கலாம்.

    ReplyDelete
  9. இவ்வளவு விசயம் தெரிந்த குழு தமிழ் வலையுலகில் சேர்ந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது மிகவும் தரமான அதே சமயம் துறைசார்ந்த அதே சமயம் கூட்டு முயற்சியாக உர்வாகிய வலைப்பூ உங்களுடையது. ஒரே கல்லில் இரண்டு மன்னிக்கவும், மூன்று மாங்காய்!

    தொடர்ந்து படிப்பேன். நன்றி அனைவருக்கும்

    ஒரு வாசகி

    ReplyDelete
  10. I have Nikon D-50.

    பதிவுகள் பயனுள்ளதாக உள்ளது. வாழ்த்துக்கள்.

    முடிந்தால் நீங்கள் சென்னைப்பதிவர் பட்டறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்ச்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யலாமே.

    ReplyDelete
  11. நான் பயிற்சி வகுப்பு எடுப்பதாக நிகழ்ச்சி நிரலில் உள்ளது நண்பரே. ஆனால் அது AV எனப்படும் audio video சம்பத்தப்பட்டதாக இருக்கும்!

    ReplyDelete
  12. என்னிடம் இருப்பது Konica Minolta Dimage Z6
    semi SLR வகையை சார்ந்தது!!
    Basically a point and shoot with better zoom என்றுதான் சொல்ல முடியும்!! :-)
    12X Optical Zoom
    6MP

    Canon வாங்கலாம் என்று யோசித்தேன் ,ஆனால் அதைவிட என் கேமரா கையாளுவதற்கு இலகுவானது, அதுவுமில்லாமல் Brand name இல்லாததால் விலை குறைந்து வேறு கிடைத்தது.

    @செல்லா
    Semi SLR என்ற ஒரு பிரிவே வாக்குச்சீட்டில் இல்லையே தலைவா??
    :-)

    ReplyDelete
  13. canon S5 is very new to the market and high priced, I think. Instead I would go for cheapest SLR at the same price. We may need to wait few months to S5 price come down. I am very happy with canon S3 neat performance as semi SLR (or high end point and shoot).

    ReplyDelete
  14. Hasselblad 503CWD.

    ReplyDelete
  15. ஆகா, அல்வாசிட்டிகிட்டயும் S3 IS இருக்கா. ஏகப்பட்ட featuresஓட காசுக்கும் அறிவுக்கும் ஏத்த மாதிரி இருக்கற கேமரா இதுதான்(அதிகமில்லை 300 டாலர் தான ;-)) .ஏகப்பட்டத அலசி ஆராய்ந்த பிறகு எடுத்த முடிவு இது. நிகான் தான் மேல் பட்டதுன்னு கேள்விப்பட்டு இருக்கேன். இருந்தாலும் இப்போதைக்கு S3 ISக்கு தான் என ஓட்டு.

    ReplyDelete
  16. அண்ணைமாருக்கு வணக்கம்
    Fuji FinePix S2 Pro என்ற ஒரு கமெராவை ஒருவர் என்னால் வாங்க கூடிய விலையில் தள்ளுபடிக்குத் தருவதாக சொல்லியிருக்கிறார். எனக்கு கமெரா பத்தி எதுவும் தெரியாது.

    விற்பனைக்காகவோ எதற்கோ கமரா பற்றி நிறைய நல்ல விசயங்களை அவர் சொன்னார். இணையத்தில் தேடிய அளவில் சில இங்கு உள்ளன.

    http://www.elcovision.com/e_kamera_FujiS2.html

    ஒருதடவை பார்த்து சொல்ல முடியுமா.. பாவித்த கமெராதான். பழைய மொடல் (மாடல்) என்றும் நேர்மையாகச் சொல்லியிருக்கிறார்.

    கிட்டத்தட்ட என்ன விலை போகும் என்பதையும் தோராயமாகச் சொன்னால் வசதியாக இருக்கும்.

    நன்றி

    ReplyDelete
  17. very good info.. today i want to buy a new camera that by i cm tour blog by google search its usfl to me, ok please tell me about pixel qualitys pls if u tell soon i can select
    bye

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff