Thursday, July 19, 2007

கோடு போட்டா ரோடு போடு!!

10 comments:
 
என் இனிய தமிழ் மக்களே,

போன பகுதியில சொல்லிக்கொடுத்த மேட்டர வெச்சு ஏதாவது படம் எடுத்து பாத்தீங்களா?? இல்லனா எடுத்த படத்துலையே இந்த முப்பகுதி கோட்பாட்டிற்கு ஏற்றால் போல் வெட்டி (Crop) விட்டு ஏதாவது முயற்சி பண்ணீங்களா?? உங்க முயற்சி அனுபவங்கள் எல்லாம் பின்னூட்டத்துல சொல்லுங்க!!

இன்னைக்கு நாம பாக்க போற தலைப்பு "வழிநடத்தும் கோடுகள்". ஆங்கிலத்துல இதை "Leading lines" அப்படின்னு சொல்வாங்க!!

அப்படின்னா??

அதாவது ஒரு படத்துல ஏதாவது கோடு இருந்துச்சுனா,நம்ம கண்ணு அந்த கோட்டை பின்பற்றியே தான் செல்லுமாம்!! அதாவது நம் படத்தில் இருக்கும் கோடு நம் படத்தின் கருப்பொருள் (Subject)-ஐ சென்று சேருகிறார் போல் பார்த்துக்கொண்டால் நம் படம் பார்ப்பதற்கு அழகாக தெரியுமாம். அதே போல் நம் படத்தில் இருக்கும் கோடுகள் நம் படத்தின் கருப்பொருளை நீங்கி செல்வது போலவோ அல்லது படத்தை விட்டு வெளியே செல்வது போலவோ இருந்தால் படம் பார்ப்பதற்கு ஒரு மாதிரி இருக்குமாம்.



நல்லா இருக்கு!! இதுக்காக நான் எங்கே இருந்து கோடுகளை தேடி போவது??? நானே படங்களுக்கு ஸ்கேல் வெச்சுகிட்டு கோடு வரையணுமா?? அப்படின்னு எல்லாம் டென்ஷன் ஆகாதீங்க!!!

கோடுகள் என்றால் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டிடங்கள்,ரோடுகள்,வேலிகள், வானம்,கடல்,நிலப்பரப்பு என எதுவாக இருந்தாலும் கோடுகளாகத்தானே தெரிகிறது. அந்த கோடுகளை எல்லாம் நமக்கு சாதகமாக உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டியது தான்!! :-))



ஹ்ம்ம்!! புரியறாப்போல இருக்கு ஆனா புரியலை!! இருக்கு ஆனா இல்லை அப்படின்னு சொல்றீங்களா???

சரி இருங்க!! ஒரு சில படங்கள் கீழே இருக்கு!! அதை பாருங்க!! உங்களுக்கே தெளிவாத்தெரியும்!! :-)









என்ன துரு துரு கண்கள், குறும்பும் அப்பவித்தனமும் நிறைந்த அழகிய முகம். குழந்தைகள் என்றாலே அழகுதான்!! ஆனால் இந்த அழகிய முகத்தை நோக்கி போகும் கோடுகளை கவனித்தீர்களா?? ஜன்னல் கம்பிகள் எப்படி இந்த அழகிய முகத்தை நோக்கி செல்கின்றன பார்த்தீர்களா?? இந்த கோடுகளை பின்பற்றி போய் தான் நம் பார்வை இந்த குழந்தையின் அழகு முகத்தில் போய் முடிகிறது.





நீங்க இங்க பார்த்துக்கொண்டிருப்பது ந்யூயார்க்கின் ப்ரூக்களின பாலம். இந்த படத்தில் பாலத்தின் கோடுகளை எவ்வளவு அழகாக பயன்படுத்தி நம் பார்வையை ந்யூயார்க் நகரினுள் எடுத்து செல்கிறார் பாருங்கள் புகைபடக்காரர். இதைப்போல் நாம் எந்த புகைப்படம் எடுத்தாலும் காட்சியில் இருக்கும் கோடுகளை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு காட்சி யை அமைத்துக்கொள்ளலாம்.

இந்த படம் முப்பகுதி கோட்பாட்டிற்கும் ஒரு அற்புதமான உதாரணமாக விளங்குவதை காணலாம்









படத்தில் அமையும் கோடுகள் நேர்கோடுகளாக இருக்க வேண்டும் என்று கூட கட்டாயம் இல்லை என்பதை காட்டுவதற்காகத்தான் இந்த உதாரணம். அதுமில்லாமல் படத்தில் கருப்பொருள் ஒன்றும் இல்லாவிட்டால் "எங்கே செல்லும் இந்த பாதை" என்பதை போல கோடுகள் எங்கேயாவது உள்நோக்கி சென்றுகொண்டிருந்தால் அதுவும் படத்திற்கு அழகாக இருக்கும். எப்படி இருந்தாலும் கோடுகள் படத்தை விட்டு வெளிநோக்கி செல்லக்கூடாது, அதுதான் முக்கியம்.



மனிதர்களாகிய நாம் வழக்கமா இடது பக்கத்துல இருந்து பார்க்க ஆரம்பிச்சு வலது பக்கமா முடிப்போம். அதே மாதிரி கீழிருந்து ஆரம்பித்து பார்வை மேலே போய் முடியும்!! அதனால உங்க வழிநடத்தும் கோடுகளின் தொடக்கமும் முடிவும் இதை அடிப்படையா வெச்சு தான் இருக்கும்!! :-)
நான் முன்பே சொன்னது போல் இந்த நுணுக்கங்கள் எல்லாமே ஒரு வழிகாட்டுதலுக்கு மட்டும் தானே தவிர இவை எல்லாம் பயன் படுத்தியே ஆக வேண்டும் கட்டயம் இல்லை. இந்த நுணுக்கங்களை சாராத படங்கள் கூட நமக்கு அழகாக தெரியலாம்,அது அவரவர் ரசனையை பொருத்தது.இந்த "வழிநடத்தும் கோடுகள்" கோட்பாட்டை சாராத படங்களை இணையத்தில் தேடி பார்த்தால் ஒன்றும் கிடைக்கவில்லை. எல்லோரும் தான் எடுத்த நல்ல படங்களை தான் வெளியிட விரும்பிவார்களே தவிர,நன்றாக இல்லாத படங்களை வெளியிட மாட்டார்கள். இதனால் நான் எடுத்த படங்களில் ஒன்றை எடுத்து வழிநடத்தும் கோடுகள் சாராத ஒரு படத்திற்கான உதாரணமாக கீழே கொடுத்துள்ளேன்.


இப்போ நீங்க மேலே பாத்துக்கிட்டு இருக்கற படம் ஆன் அர்பர்ல குளிர்காலத்துல எடுத்தது. ஒரு நாள் அலுவலகத்துல இருந்து வெளியே வந்தபோது இப்படி எல்லாமே உறைந்திருப்பதை கண்டு அதிசயித்து சும்மா என் கேமரா போனில் சுட்டது.
படத்தை பார்த்தீர்கள் என்றால் கிளைகள் வடிவில் இருக்கும் கோடுகள் படத்தை விட்டு நம் பார்வை இட்டு செல்வதாக அமைந்திருக்கின்றன. இதனால் உறைந்திருக்கும் பழங்களின் நம் ஒட்டுமொத்த கவனம் செல்லாமல்,படம் அவ்வளவாக சுவாரஸ்யம் இல்லாமல் போய் விடுகிறது.
இதனால் தான் படத்திற்கு வெளியே இட்டு செல்வது போலவோ ,அல்லது கருப்பொருளை விட்டு செல்வது போல் கோடுகள் அமையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள்.
என்ன மக்களே?? "வழிநடத்தும் கோடுகள்" மேட்டர் என்னன்னு புரிங்சுதா??

புரிஞ்சதோ புரியலையோ ,பின்னூட்டத்துல சொன்னீங்கன்னா தொடரை வழிநடத்திச்செல்ல உதவியா இருக்கும். அடுத்த முறை அடுத்த புகைப்படக்கலை சம்பந்தமான விஷயத்தோட உங்களை சந்திக்கிறேன்!!



வரட்டா?? ;-)
படங்கள்:

http://www.cnn.com/interactive/travel/0507/gallery.vacation.photos/02.super.leadinglines.jpg http://photoinf.com/General/Gao_Mu/slide0004_image016.jpg

http://www.tipsfromthetopfloor.com/library/lib/exe/fetch.php/image_composition:road_leadingline.jpg
பி.கு : இது முன்பே என் பதிவில் நான் இட்ட ஒரு இடுகையின் மீள்பதிவு

10 comments:

  1. I am keralite and coud read a bit of tamil.as reffered by my bf i visited this blog. i could not recall any other parellel to your efforts in our country/blogging circle. oneday this blog will be mentioned even in Tamil photography books as an online reference source. all the best. valara nanni.

    With regards and best wishes
    Geetha, Forte Cochin now in Paris

    ReplyDelete
  2. @அனானி கீதா
    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கீதா!!! :-)

    ReplyDelete
  3. Excellent piece of informations. As geetha mentioned, I wish this blog goes to the next stage. I dont see any other blog as this kind of collective effort. All the best. will try submitting my photo soon

    ReplyDelete
  4. கடைசி படம்.."how not to use the lines" க்கு ஒரு சூப்பர் உதாரணம்....

    ReplyDelete
  5. அண்ணாச்சி .. கலக்கறீரு.. கோடுகள் இல்லா நிழற்படம் இல்லைங்கறதுக்கு சூப்பரா சொல்லிருக்கீரு..


    எங்க இருந்துப்பா இந்த மாதிரி போட்டோஸ் புடிக்கிறீங்க

    ReplyDelete
  6. @போட்டோ பழனி
    உங்கள் வாழ்த்துக்களே எங்கள் முயற்சிக்கு ஊக்கமருந்து!! :-)
    வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி!! :-)

    @தீபா
    என் பதிவில் இதை போட்ட போது நண்பர் ஒருவர் போட்ட பின்னூட்டத்தினால் அந்த பகுதியை சேர்த்தேன்.
    வாழ்த்துக்களுக்கு நன்றி தீபா.

    @நிழற்படம்
    வாங்க தல!!
    //எங்க இருந்துப்பா இந்த மாதிரி போட்டோஸ் புடிக்கிறீங்க/
    அதான் போட்டோவ எடுத்த இடங்களை கடைசியில் போட்டிருகேனே!!
    என்ன!!
    Google Image search ல கொஞ்ச நேரம் மணடைய ஒடைச்சு தேடி பார்த்து தேர்ந்தெடுக்கனும்!! :-)

    வாழ்த்துக்களுக்கு நன்றி!! :-)

    ReplyDelete
  7. very good job,please continue by balaji

    ReplyDelete
  8. Hi,
    I have taken on photo(https://docs.google.com/file/d/0B3YI373PgQCvUWZ4SXFJXzB0OXM/edit?usp=sharing)
    Can you please check whether i followed the leading lines concept properly or not?
    This I have taken before read this page

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff