வணக்கம். காலச் சக்கரம் சுத்தர வேகத்த பாத்தா முழி பிதுங்குது.
திங்கக்கெழம சோம்பலா கொட்டாவி விட்டுக்கிட்டே தொடங்கனா, கண்ண மூடி கண்ண தொறக்கரதுக்குள்ள ஜாலியா வெள்ளி வந்துடுது.
ஆர அமர வீக் எண்ட கழிக்கலாம்னா, சனியும் ஞாயிறும் வரதும் தெரீல போறதும் புரீல.
வயசாவுதுங்க க்ளிக்கர்ஸ்.
வயசாவரதுல இருக்கர ஒரே சௌகர்யம், நமக்கு வயசாவர விஷயம் நமக்குத் தெரியாது. நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமுமாக நம் உடம்பில் இருக்கும் ஒவ்வொரு செல்லுக்கும் வயசாவுது. ஆனா, அது நமக்குத் தெரியாது. நம்ம கூடவே இருக்கரவங்களுக்கும் தெரியாது.
ஆனா, வருஷத்துக்கு ஒரு தடவ நம்மள பாக்கர நண்பர்கள்/அன்பர்கள் கண்ணுக்கு மட்டும்தான் பளிச்னு தெரியும்.
"இன்னாடா மச்சி, கிரவுண்ட் வாஙகுது"?
"அடப்பாவி, வெள்ள முடியா அது"?
"ஃபேஸ் முத்திப் போச்சுடா"
அது இதுன்னு வெந்த புண்ணுல கண்டதையும் ஊத்தர கிராதகப் பயலுவ தொல்லை, எல்லாருக்கும் 30+ ஆச்சுன்னா வர ஆரம்பிச்சிடும்.
ஊர்ல இருக்கர நோய் நொடியெல்லாம் பாத்தா, 30+ வந்தாச்சுன்னா, பாதி கிணறு தாண்டிய மாதிரி.
லைஃப் இஸ் டூ ஷார்ட்.
ஸோ, ஒவ்வொரு கணமும் சந்தோஷமா அடுத்தவனுக்கு டார்ச்சர் கொடுக்காம வாழப் பழகிக்கோங்க.
கண்ண மூடி கண்ண தொறக்கரதுக்குள்ள, கடைசி ஸ்டேஷன் வந்துடும்.
ஹலோ, ஹோல்ட்-ஆன்.
இன்னாடா, PiT க்கு வரலாம்னு க்ளிக்கினா, பதிவு மாறி வேற எங்கையாச்சும் போயிட்டோமான்னு பாக்கறீங்களா?
இல்ல இல்ல. சரியாதான் வந்திருக்கீங்க.
நான் தான், கொஞ்சம், போட்டித் தலைப்பு தந்த மயக்கத்துல வார்த்தைகளை அள்ளித் தெளிச்சுட்டேன்.
இனி போட்டிக்கு போகலாம்.
அதாவது, ஜூன் 2009க்கு PiT புகைப்படப் போட்டியின் தலைப்பு: "முதுமை".
முதுமைன்னவுடன், உங்க வீட்ல இருக்கர தாத்தா பாட்டியின், வெள்ளை முடியையோ சுருக்கமான தோலையா தேடி அவங்கள ரொம்ப துன்புறுத்தாதீங்க.
முதுமை, மனுஷங்களுக்கு மட்டுமில்லை, மிருகங்களுக்கும் வரும். (வயசான நாய் கிட்ட உஷாரா போங்க. கடிச்சு வச்சிடும், ஜாக்கிரதை. மருந்து மாத்திரைக்கு கொம்பேனியார் பொறுப்பு கெடையாது).
மரங்களுக்கும் வயதாகும்.
உயிருள்ளது எல்லாத்துக்கும் முதுமை வரும்.
உயிரில்லாத கட்டடங்கள், கார், பஸ்ஸுக்கும் முதுமை வரும்.
ஸோ, முதுமையை ப்ரதிபலிக்கும் எந்த விஷயமானாலும், பளிச்னு க்ளிக்கி, போட்டிக்கு அனுப்புங்க.
படத்த பாத்ததும் முதுமை தெரியணும். அலசி ஆராஞ்சு பிரிச்சு மேஞ்சாதான் முதுமை தெரியுங்கர மாதிரி உள்குத்து/நுண்ணரசியல் எல்லாம் வச்சு, வயசான காலத்துல சுத்த விட்றாதீங்கப்பு :)
போட்டியில் கலந்து கொள்ளும் விதம், மற்றும் விதிமுறைகள் இங்கே.
க்ளிக்குங்க! அசத்துங்க!
இந்த மாச நாட்டாமை நான் தான்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்வி, "வெற்றிப் படங்களை எந்த அடிப்படைல தேர்வு செய்யறீங்க?" என்பது.
என்னைப் பொறுத்தவரை, போட்டிப் படம், பார்வையாளனாகிய என்னை, எந்த அளவுக்கு, 'இழுக்குதோ', அந்த அளவுக்கு பட்டியலில் முன்னேறும்.
நல்ல புகைப்படத்துக்கு அடிப்படையில் அழகு சேர்ப்பவை,
*சரியான காட்சியை, நேர்த்தியான விதத்தில் கட்டம் கட்டுதல்
*காட்ட வரும் காட்சியை, துல்லியமாய் காட்டும் விதம், படத்தில் போதிய வெளிச்சம் இருத்தல்
*வழ வழா கொழ கொழான்னு, அவுட்-ஆஃப்-ஃபோக்கஸ் இல்லாமல், 'நச்'னு எடுத்தல்.
* இதில் ஏதாவது கூடியோ குறைந்தோ வந்திருந்தால், பிற்சேர்க்கையின் மூலம், படத்தை மெருகேற்றல்
அடிப்படை விஷயங்களில் கவனம் வைத்து எடுத்தாலே, பாதிக் கிணறு தாண்டிய மாதிரிதான்.
சாம்பிள்ஸ் பாக்கரதுக்கு முன்னாடி, போட்டியில் கலந்து கொள்ளும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
கைவசம் இருக்கும் ஏதோ ஒரு படத்தை போட்டிக்கு அனுப்பாமல், தலைப்புக்கு பொருந்தும் வகயில், இதுவரை கற்ற/கேட்ட/கண்ட பாடங்கள்/படங்கள் எல்லாவற்றையும் மனத்தில் கொண்டு, கொஞ்சம் அலைந்து திருந்து, புதிய சப்ஜெக்ட்டை தேடிப் பிடித்து, க்ளிக்கி, மெருகேற்றி, போட்டிக்கு அனுப்பினால், அனைவருக்கும் நன்மை உண்டாகும் :)
இனி கொஞ்சம் முதுமை'ஸ் பாப்போம்.
source: http://www.abc.net.au/news/stories/2009/04/30/2557450.htm
என்னை வெகுவாய் கவர்ந்த முதுமை. இங்கே க்ளிக்கி பார்க்கவும்.
source: Surveysan
source: an&
source: cvr
source: http://www.flickr.com/photos/bigdeb/2622526292/
source: Looth
source: iyappan's photo http://www.flickr.com/photos/iyappan/2762881360
ஜமாய்ங்க!
Subscribe to:
Post Comments (Atom)
//கைவசம் இருக்கும் ஏதோ ஒரு படத்தை போட்டிக்கு அனுப்பாமல், தலைப்புக்கு பொருந்தும் வகயில், இதுவரை கற்ற/கேட்ட/கண்ட பாடங்கள்/படங்கள் எல்லாவற்றையும் மனத்தில் கொண்டு, கொஞ்சம் அலைந்து திருந்து, புதிய சப்ஜெக்ட்டை தேடிப் பிடித்து, க்ளிக்கி, மெருகேற்றி, போட்டிக்கு அனுப்பினால், அனைவருக்கும் நன்மை உண்டாகும் :)///
ReplyDeleteரைட்டு :)
அட்டகாசம் கலக்க வாழ்த்துக்கள் :)
ReplyDeleteஸ்டார்ட் மீசிக்...
ReplyDelete:)
சுருங்கிய விரல்களைக் கோர்க்கும் ஆரோக்கியமான விரல்கள். என்ன் ஒரு ஆதரவு. வெகு இயல்பான காட்சி. நல்ல தலைப்பு சர்வேஸ்..
ReplyDeleteஅனுப்பியாச்சு சாரே... பின்னூட்டத்துல தெரிவியுங்கன்னு இந்த பதிவுல தானே சொல்ல சொன்னீங்க?
ReplyDelete//மீண்டும் ஒருமுறை கேட்கிறேன்.. புதிதாக ஒரு எஸ்.எல்.ஆர் கேமிரா வாங்குவது பற்றி எந்த பதிவரிடம் கேட்பது?//
வெங்கிராஜா,
ReplyDeleteஇங்கையே கேக்கலாம்.
budget?
purpose of the cam? hobby? pro?
i own a canon rebel xti.
most of our fellow clickers own nikon d80.
i wouldnt recomment XTI to you for various reasons. two main problems i have is its auto-focusing feature while in 'auto' mode. it uses the flash to autofocus on the subject, which is very disturbing when shooting people.
also, i notice sometimes it locks-up saying 'busy' inbetween shots. very irritating sometimes.
i have used a friends D80. awesome camera, IMHO.
I've send my pic for the contest.
ReplyDeletei ve sent my entry...
ReplyDeleteSurveysan sir,
ReplyDeleteI'm not a pro. I'm a beginner.
I'm looking for a camera which comes with a decent kitlens and has features that fit the bill. I have a subject in my curriculum as well, So it just isn't for passion (Note: I will have to print the pictures).
I want to use it quite roughly and understand the nuances behind professional photography. I might upgrade it in the years to come. Most imprortantly I can afford 35k at the maximum right now.
Very kind of you, to help me out Sir.
venkiraja :
ReplyDeleteWe have discussed about it in few posts. Here is my "Suggestion"
Canon - you can opt for 450D which can fit to your budget.
Nikon - d60 is the one might fit to your budget and my personal favorite one aswel.
Comparatively Canon/Nikon Lenses and equipments are really good. it is just personal choice.
so it is upto you to choose between these 2 recommendation. or other brands like Olympus ( e600 ) Sony ( err.. i really dont recommend this ) - panasonic ( Costlier ) and leica ( my dream camera - but i need to sell all my asset to buy :)) )
Here I end it with saying if you ask me i would suggest Nikon D60 with kit lens ( 18-55 VR lens ) to start with. rest on your choice /decision.
Related post :
http://photography-in-tamil.blogspot.com/2007/07/1_12.html
http://photography-in-tamil.blogspot.com/2007/10/blog-post_23.html
http://photography-in-tamil.blogspot.com/2007/11/dslr-vs-point-and-shoot.html
If you still need further information, please mail to photos.in.tamil@gmail.com, lets discuss further.
thanks
Jeeves
Jeeves, any idea about Sony DSC H50??
ReplyDeleteதயவு செய்து போட்டி அறிவிப்பு பதிவில் கேமராக்கள் பற்றிய விவாதம் வேண்டாமே!!
ReplyDeleteஉங்களுக்கு கேமராவை பற்றிய ஏதேனும் சந்தேகம் இருந்தால் photos.in.tamil@gmail.com என்ற முகவரிக்கோ அல்லது தனிப்பட்ட பதிவரின் முகவரிக்கோ மடலிட்டு விவாதித்துக்கொள்ளலாம்.
கேமரா தேர்வு பற்றிய இடுகைகள் தனியாக இந்தப்பதொவில் உள்ளன அந்த பதிவில் சென்று பின்னூட்டமிடலாம்.
நன்றி
This comment has been removed by the author.
ReplyDeleteமுதுமை தலைப்பை பார்த்தவுடன் தாத்தா,பாட்டிகளை எங்க போய் புடிக்கிறதுன்னு முழிச்சிகிட்டு இருந்தேன்.படங்கள் முழிக்காதே என்றது.நன்றி.
ReplyDeleteGuys - lets continue the discussion in diff place
ReplyDeletehttp://sites.google.com/sites/nizarpadam/Home/which-camera-to-by
i have updated conversation on camera in this page there.
Further discussion http://nizarpadam.freeforums.org/member/nizarpadam/ - create own id and start a thread . lest discuss anything about camera / doubts... what not ?
thnx
jeeves
I've sent my picture for the contest!
ReplyDeleteஎன் படம் அனுப்பீட்டேன்....
ReplyDeleteபடம் அனுப்பியாயிற்று.
ReplyDeleteஎன் பதிவு இங்கே.
போட்டாச்சு போட்டாச்சு ... எத்தனே ..
ReplyDeletemy photo is not yet added. can anyone please tell me if i'm missing anything in the rule?
ReplyDeleteவணக்கம், போட்டிக்கான எனது புகைப்படத்தையும் அனுப்பியுள்ளேன்...
ReplyDelete-முகிலரசிதமிழரசன்
வணக்கம்.
ReplyDeleteஇது தான் நான் முதல் முறையாக இதில் பங்கேற்கிறேன். என்னுடைய புகைப்படம் இங்கும் இருக்கிறது. உங்கள் கருத்துக்களை தெரியப் படுத்தவும்.
I've sent my photo boss.. Pls add it to the list..
ReplyDeleteஅண்ணே.. படம் அனுப்பியாச்சு.. பாத்து சொல்லுங்க..
ReplyDeleteவணக்கம்,
ReplyDeleteபோட்டிக்கான எனது புகைப்படத்தை அனுப்பியுள்ளேன்
http://rainbow-attitudes.blogspot.com/
Thank u
Tjay
எனது படத்தை அனுப்பிவிட்டேன். எனது படம் இங்கும் உள்ளது
ReplyDeleteஎன் படத்தையும் அனுப்பி இருக்கிறேன்.
ReplyDeleteபாதி முதுமைதான் அந்தப் படத்துக்கு.:)
sorry for thanglish.
ReplyDeleteI have posted this picture in my blog too.
http://naachiyaar.blogspot.com
thank you,.
சொப்னசுந்தரியோட காரைத் தள்ளிட்டுவர இவ்வளவு நாளாயிடுச்சு....
ReplyDeleteபோட்டிக்கு தயார்
படம் இங்கே
ReplyDeletehttp://haasya-rasam.blogspot.com/2008/08/blog-post_01.html
கடைசி வண்டிக்கு மணி 11.39PMக்கு வந்து உட்கார்ந்துகிட்டேன்.தபால் அனுப்பினேன்,கிடைச்சதா?
ReplyDeleteஎன்னோட சீட்டு http://www.parvaiyil.blogspot.com
நன்றி.
ராஜ நடராஜன்.
Aattam close.
ReplyDeletewill come back with top 'X' results, soon.
danks:)
pls check picasaweb and ensure your name is properly tagged in the album.
ReplyDeleteஅடக்கொடுமையே!!..முன்பு எடுத்த ஒரு பழைய படத்தை அனுப்பலாமே என்று நினைத்துக்கொண்டிருந்தேன்..ஆனால் தேதி மறந்தே போச்சு:-(..
ReplyDeleteAmal,
ReplyDelete////ஆனால் தேதி மறந்தே போச்சு:-(///
oops. :)
அப்ப, பிக்காஸாவில் இருக்கர மத்தவங்க படத்த ஆராஞ்சு, கருத்ஸ் சொல்லுங்க.
ஆனால் தேதி மறந்தே போச்சு:-(..//
ReplyDeleteஆகா... வந்துரும் நினைச்சிக்கிட்டுல இருந்தேன்...
clickers...
ReplyDeleteif you are interested to see my photos real version
visit
http://ananthclicks.blogspot.com/2009/06/blog-post_15.html
The photo in the link (
ReplyDeletehttp://picasaweb.google.com/pitcontests/June2009#5346951078821876722 ) belongs to me and not Kiran G .
//
ReplyDeleteஅப்ப, பிக்காஸாவில் இருக்கர மத்தவங்க படத்த ஆராஞ்சு, கருத்ஸ் சொல்லுங்க.
//
ஆணையிட்ட பணியை சிரமேற்கொண்டு நிறைவேற்றியாகிவிட்டது, நாட்ஸ்:-)