உங்களில் பல பேர் கவனிச்சிருப்பீங்க... மலர்கள் & செடி-கொடி, சாலைகள், பொருள்கள், கட்டிடங்கள் etc etc எல்லாம் படம் எடுப்பது ஸ்லேட்டிலே பல்பம் வச்சு வரையரா மாதிரி. சரியா வரலைன்னா.. அழிச்சுட்டு இன்னும் பல முறை அதையே திரும்ப திரும்ப ( ஒரே மாதிரி ) செய்தால் ஒரு கட்டத்தில் பர்பெக்ட்டா வரும். இதுக்கு காரணம் என்ன தெரியுமா, சித்திரமும் கைப்பழக்கம்-செந்தமிழும் நாப்பழக்கம் மட்டும் இல்லை, மேலே சொன்ன எதுவுமே சலிக்காம போஸ் குடுகுக்கும். நீங்க எவ்வளவு தான் இடம், நேரம், அமைப்பு மாற்றி மாற்றி எடுத்தாலும், முறைக்காது, முகம் சுளிக்காது, மறுத்து ஒரு வார்த்தை பேசாது.
ஆனால், ஒரு ஆளை கூப்பிட்டு " உன்னை போட்டோ எடுக்கப் போறேன், கேஷுவலா இருங்க" ன்னு சொல்லிப்பருங்க.. அப்படியே ஸ்டிப்பா கஷ்டப்பட்டு போஸ் குடுப்பாரு. " இப்படி நில்லுங்க – இப்படி பாருங்க – இங்க உட்காருங்க" ன்னு அரை மணி நேரம் சொல்லிப்பாருங்க.. மூஞ்சி எல்லாம் ரோஸ்பவுடர் இல்லாமலே ஜிவ்வுன்னு சிகப்பாய், மனுஷன் கடுப்பாய் போட்டொவும் வேணாம், ஒண்ணும் வேணான்னு கிளம்பிடுவார்.
இதிலே முதலில் சொன்னவை எல்லாம் நம்ம கிட்டே முறைச்சுக்காது, இருந்த இடத்தை விட்டு நகராது. ரெண்டாவது சொன்னதிலே நாசூக்காகவோ – கோபமாகவோ நாலு வார்த்தையிலே திட்டி தீர்த்துடா ஒருமாதிரி பிரச்சனை இல்லாம உடல் - பொருள் சேதாரமில்லாம தப்பிச்சுக்கலாம்.
ஆனால், விலங்குகளை படம் புடிக்கும்போது, கதையே வேறே! விலங்கின் தன்மைக்கேற்ப்ப ( பறவைகளும் தான்), இருந்த இடத்தை விட்டு கிளம்பிப்போகிரது மட்டும் இல்லை, கொஞ்சம் அசால்டா இருந்தாலோ, ரொமப்வே நொய்-நொய்ன்னு தொந்ததரவு பண்ணினாலோ நம்ம மேலே பாய வாய்ப்பிருக்கு. உடலுக்கும், பொருளுக்கும் சேதாரம் ஏற்படும் வாய்பு மிக மிக அதிகம்.
அதனாலே விலங்குகளை படம் எடுக்கரதுக்கு முன்னே சில விஷயங்களை நினைவில் வச்சுகிட்டா.. ஒரு அற்புதமான படம் மட்டும் இல்லை, சில ரம்யமான தருணங்களும் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கு
PiT போட்டில் சேர தகுதியுள்ள விலங்குகளின் பட்டியலை பார்ப்போமா

- எந்த காரணத்துக்காகவும் விலங்குகளை துன்புறுத்தக்கூடாது. ( குச்சியால குத்தறது – குர்ர்ன்னு சவுண்ட் விடரது – சாக்லேட் கவரிலே கல்லை சுத்தி குடுக்கிரது)
- ஜூ அல்லது safari போகும்போது, சொல்லப்பட்டிருக்கும் விதிமுறைகளை மீறக்கூடாது ( பாப்க்காண் , பழம் குடுப்பது, உறக்க கத்தி பேசறது, பிளாஸ்டிக் கவரிலே பலூண் பண்ணி டமார்ன்னு உடைக்கிறது)
- மூக்கை துளைக்கிரா மாதிரி ஸெண்ட் போடறதை தவிர்க்கவும்.
- விலங்குகள் கிட்டே இருக்கும்போது 15 நிமிஷமாவது சும்மா இருங்க ( Let them get used to your presence). இதை முயர்ச்சி பண்ண சூப்பர் இடம் உங்க / நண்பர் வீட்டு நாய் , பூனை கிட்டே போய் எதுவும் செய்யாம சும்மா இருக்கிரது.
- கண்டிப்பா பிளாஷை வீட்டிலே வச்சுட்டு போங்க. ( ரொமப் கிட்டே இருந்து எடுக்கும்போது பிளாஷ் வெளிச்சத்தால் startle ஆகும், ரொம்ப தொலைவில் இருந்தால் பிளாஷ் பிரயோஜனப்படாது).
- கேமேராலே க்ளிக் பண்ணும்போதோ – ஜூம் பண்ணும்போது " க்ளிக் – ஜூஊஉ" ன்னு sound settings இருந்தால், மறக்காம எல்லா சவுண்லையும் கேன்சல் பண்ணுங்க. விலங்குகளுக்கு நம்மை விட கேட்க்கும் திறன் அதிகம்.
- Viewfinder வழியா கவனமா பார்த்துகிட்டே இருங்க..முடிஞ்ச வரைக்கும் விலங்கின் கண்கள் மீது focus பண்ணுங்க... மற்ற details எல்லாம் தானா அமையும்.
- விலங்கின் eye-level ஐ கவனத்தில் கொண்டு, அதே லெவெலில் படம் எடுத்தா அட்டகாசமா இருக்கும். It will give a dramatic feeling.
- Memmory card லே கஞ்சத்தனம் பண்ணாம க்ளிக் பண்ணுங்க.. கண்டிப்பா 10 படமாவது அருமையா இருக்கும்.
- Never be afraid to try, Never frighten the animals.
PiT போட்டில் சேர தகுதியுள்ள விலங்குகளின் பட்டியலை பார்ப்போமா
விலங்குகள் | |||
Amphibian - ஈரூடக வாழிகள் ஷோகான பார்டி, நீர் நிலம் ரெண்டிலேயும் ஜாலியா காலம் தள்ளும். | Molluscs - நத்தை, சிப்பி இனத்தை சேர்ந்தவை. இவங்களுக்கு உடல் ரெம்பவே மிருதுவாக இருக்கும் அதை பாதுகாக்கத்தான் இந்த ஸ்ட்ராங்கா கூடு | ||
Birds - பறவைகள் | Worms - புழு நெளிஞ்சு நூடூல்ஸ் மாதிரி இருக்குமே.. அதே தான் | ||
Reptiles - ஊர்வன பாம்பு- பல்லி எல்லாம் இந்த பேமலிதான் | Arthropods- பூச்சி கரப்பான்பூச்சி, பட்டாம்பூச்சி, எட்டுகால்பூச்சி, etc etc | ||
Fish - மீன்கள் Fish-fry படம் எல்லாம் அனுப்பக்கூடாது. விலங்கு விழுங்கும்படி ஆச்சுன்னா அது போட்டிக்கு இல்லை (திமிங்கலம் - டால்பின் எல்லாம் மீன்கள் அல்ல) | Echinoderms - இதுகளுக்கு உடல்வாக்கு Scale / Compass வச்சு படைச்சா மாதிருக்கும் star fish, Brittle Star, Sea cucumber etc | ||
Mammals - பாலூட்டிகள் அணில்,மாடு, நாய்,திமிங்கலம், டால்பின், குரங்கு மனுஷனும் உண்டு.. ஆனால் போட்டியில் சேர்க்கப்படமாட்டாது | Coelenterates (Cnidaria and Ctenophora)- ரொமப்வே மிருதுவான உடல்வாகு - translucent body jellyfish வகைய்யை சார்ந்தது |
நல்ல உபயோகமான தகவல்கள்.
ReplyDeleteரொமப்வே நொய்-நொய்ன்னு தொந்ததரவு பண்ணினாலோ நம்ம மேலே பாய வாய்ப்பிருக்கு.//
ஆமா சில நேரம் தொந்தரவு பண்ணலனாலும் பாய்ஞ்சுருவாங்கிய. கிலி இருக்கத்தான் செய்யுது.
:)
//ஆமா சில நேரம் தொந்தரவு பண்ணலனாலும் பாய்ஞ்சுருவாங்கிய//
ReplyDeleteஆமா...உங்க வீட்டுக்கு அழையாவிருந்தாளியா வந்து.. உங்க கிட்டயே லந்து பண்ணினா சும்மா இருப்பீங்களா... அதே மாதிரி தான்.. you are the intruder in their habitat
உபயோகமான தகவல்கள் ... நன்றி ...
ReplyDeleteகடைசியில இருந்த தகவல்களை பாத்ததும் ...அப்படியே விலங்கியல் புஸ்தகத்தை பாத்த பீலிங்...! :)
:) டீச்சர் சும்மா சூப்ப்ரா க்ளாஸ் எடுத்திருக்கீங்க..
ReplyDeletenalla vishayangal :)
ReplyDeleteஇன்னொரு முக்கியமான விஷயம் பறவைகளை படம் பிடிக்கும்போது எந்த காரணத்தை கொண்டும் கூட்டுக்குள் இருக்கும் பறவைகளை படம் பிடிக்க கூடாது.
ReplyDeleteபொதுவாகவே அப்படிப்பட்ட படங்கள் பறவைப்பட வல்லுனர்கள் இடையே எரிச்சலை ஏற்படுத்தும்!!
ஏனென்றால் கூட்டுக்குள் இருக்கும் பறவையை படம் பிடிப்பது என்றால் கண்டிப்பாக பறவைக்கு இடைஞ்சல் ஏற்படும் என்பதாலும்,படம் எடுப்பதால் பறவையின் கூடு சேதமடையக்கூடும் என்பதாலும் இப்படி எண்ணப்படுகிறது.
ஆடு மாடு எல்லாம் எப்படி wild animals ஆகும் ? ஏதோ மிஸ்ஸிங்க் ! )
ReplyDelete- வாசி
Hi.. I am new to your site. could you please tell me how and where to send fotos? size?and any processing restriction..
ReplyDeleteI would like to send my Photos too.
Thanks
வாசி ..
ReplyDeleteஉண்மை தான், ஆடு மாடு எல்லாம் wild animals ஆகாது.. ஆனால், animal photography யோ, Domestic animal photography ன்னோ terminology இல்லையே..
விலங்குகளை படம் எடுக்கிரதுக்கு பொதுவா எல்லாரும் சொல்லரது wild life photography
.. இன்னும் துல்லியமா இதுக்கு ஆங்கிலத்தில் நிறைய வார்த்தைகள் இருக்கு, Avian photography ( birds), Reptilian photography, Insect photograhy etc etc..
அதிலை,
ReplyDeleteவணக்கம்,
உங்களை மாதிரி முதல் முறை பிட்க்கு வரவங்களுக்கு தோதா.. வலைப்பூவின் தலைப்புக்கு கீழே " எப்படி போட்டியில் சேருவது! " ன்னு ஒரு சுட்டிய்யை சேர்த்திருக்கோம்.
நிதானமா பதிவுகளை படிச்சு உங்க கருத்தை மறக்காம சொல்லுங்க. இந்த மாத போட்டிக்கான கடைசீ நாள் முடிஞ்சிட்டதால அடுத்த மாத போட்டியில் உங்கள் படத்தை எதிர்பார்க்கிறோம்
THANKS AND USEFULL POINTS EXTRODINARY EXPLAIN THANKS TO PIT SITE
ReplyDelete