Friday, April 30, 2010

சூர்யோதயம் / அஸ்தமனம் - மே மாதத்திற்கான போட்டி

36 comments:
 
வணக்கம் மக்கா.
இந்த மாசம் எல்லாராலும் கொஞ்சம் எளிதாக எடுக்க முடியக் கூடிய ஒரு தலைப்போட வந்திருக்கேன். இது இல்லைன்னா வெளிச்சம் இல்லைங்க. அதான் சூரியன். ஆனா அதை நீங்க காலையிலோ அல்லது மாலையிலோ தான் எடுக்கனும். புரிஞ்சுதுங்களா.. சூர்யோதயம் / அஸ்தமனம் தான் நீங்க இந்த மாசம் எடுக்க வேண்டியது.

பொதுவாகவே உதயம் அஸ்தமனம் என்றால் ஏறக்குறைய ஒரே மாதிரி தான் புகைப்படம் இருக்கும் என்ற கருத்து உங்களுக்கு இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள். சூரியனின் ஜாலங்கள் எத்தனை வருடங்கள் ஆனாலும் ஒரே மாதிரியான தோற்றம் உங்களுக்குக் கிடைக்காது. பத்து படங்கள் பத்து தினங்களில் எடுத்தால் பத்தும் பத்து விதமாக இருக்கும்.

சூரியனை பாரதி எப்படி சொல்லிருக்காரு பாருங்க.
பார் சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில்
எத்தனை தீப்பட்டு எரிவன! ஓகோ!
என்னடீ இந்த வன்னத்து இயல்புகள்!
எத்தனை வடிவம்! எத்தனை கலவை!
தீயின் குழம்புகள்! செழும்பொன் காய்ச்சி
விட்ட ஓடைகள்! வெம்மை தோன்றாமே
எரிந்திடும் தங்கத் தீவுகள்! பாரடீ
நீலப் பொய்கைகள்! அடடா நீல
வன்னம் ஒன்றில் எத்தனை வகையடீ!
எத்தனை செம்மை! பசுமையும் கருமையும்
எத்தனை! கரிய பெரும்பெரும் பூதம்!
நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத்
தோணிகள், சுடரொளிப் பொற்கரை யிட்ட
கரும் சிகரங்கள்! காணடி ஆங்கு
தங்கத் திமிங்கிலந்தாம் பல மிதக்கும்
இருட்கடல்! ஆஹா! எங்கு நோக்கிடினும்
ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்!
என்ன அருமையான பாடல் இல்லைங்களா ? பாஞ்சாலி சபதம் நேரம் கிடைக்கும் போது படிங்க.


அப்புறம் தினம் தினம் உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளியான சூரியனை மே மாதம் புகைப்படம் எடுப்பது என்பது சரியானது தான் இல்லையா ?

மற்ற நேரத்தில் முக்கியமாக மதிய நேர சூரியனை எடுப்பதென்றால் உங்கள் கண்ணிற்கும், நிழற்படக் கருவிக்கும் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் கொம்பெனி பொறுப்பேற்காது.


போட்டித் தலைப்பு: சூர்யோதயம்/அஸ்தமனம் சூரியன். (Sunrise / Sunset )

போட்டிக்கான விதிமுறைகள்: இங்கே
போட்டிக்கான கடைசி நாள் : 15 மே 2010
சில குறிப்புகள் :
ஏற்கனவே எடுத்தப் படத்தை மெருகேற்ற - இங்கே மற்றும் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது
சில அடிப்படைகள் - மீள்நினைவூட்டல் - இங்கே

சில எடுத்துக்காட்டுப் படங்கள்


ஜீவ்ஸ்
ஜீவ்ஸ் : ( இந்தப் படம் பாயிண்ட் & ஷூட் கேமராவில் எடுக்கப் பட்டது)


ஜீவ்ஸ் :
ஆனந்தின் படம் :ஜீவ்ஸ் :
சீவீயாரின் படம்முன்னூறு பதிவுகளுக்கும் மேலாய் ( இது முன்னூற்றி இரண்டாம் பதிவு ) தொடர்வதற்க்கு நீங்கள் தரும் உற்சாகத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி

விடைபெறுகிறேன், மீண்டும் சந்திக்கும் வரை.....

36 comments:

 1. அருமையான தலைப்பு

  அமர்க்களமாய் ஆரம்பிக்க தோன்றும்

  அனைவரும் ஆர்வத்துடன்

  அற்புதமான கரு... கலக்கல் நன்றிகள் பல உங்களுக்கு...

  அதிலும் பாரதியின் கவிதையோடு படைத்திருப்பது சிறப்பு...

  ReplyDelete
 2. எடுத்துகாட்டு படங்கள் எல்லாமே சூப்பர் ஜீவ்ஸ், கேமராவை ஊர்ல வச்சிட்டு வந்துட்டேன் இல்லைன்னா நானும் கிளிக்கியிருப்பேன் :-). கலந்து கொள்பவர்களுக்கேல்லாம் வாழ்த்துகள் !!

  ReplyDelete
 3. ஆகா, மிக நல்ல தலைப்பு.

  மேலிருப்பவற்றைப் போல இன்னும் பல அழகழகான படங்கள் பார்வைக்குக் கிடைக்கப் போவது நிச்சயம்:)!

  ReplyDelete
 4. அனைத்துமே அருமை

  ReplyDelete
 5. தண்ணீரில் கலந்துகொள்ள முடியாமப் போய்டுச்சு, இந்த முறை ஆட்டத்துக்கு வர்றேன்

  ReplyDelete
 6. தண்ணியில் மூழ்கிட்டேன். ஆனா இந்த முறை தவறவிடக்கூடாதுன்னு இருக்கேன். ஆதவா காப்பாத்துப்பா.

  ReplyDelete
 7. வெளியிட்டிருக்கும் அத்தனை படங்களும் சூப்பர். படப்பாளிகளுக்கு வாழ்த்துகள். எப்போது இப்படியெல்லாம் நானும் படமெடுக்கப் போகிறேனோ!!

  இந்த ஊரில கடற்கரையும் சூரியனும் அருமையாவே இருக்கும். பார்க்கலாம் முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 8. படம் அனுப்பி விட்டேன்.நன்றி.

  ReplyDelete
 9. I sent my Picture... Gowtham.jpg

  ReplyDelete
 10. போட்டிக்கான எனது படத்தையும் (Gnanasekar.jpg) அனுப்பி இருக்கிறேன்.

  நன்றி.

  - ஞானசேகர்

  ReplyDelete
 11. Picture sent ..... Thank you ! - Hema.jpg

  ReplyDelete
 12. எனக்கு மிக பிடித்தவைகளில் இவையும் அடங்கும்.
  போட்டிக்கான படத்தை அனுப்பிவிட்டேன்.
  Ram.jpg

  Ram

  ReplyDelete
 13. என்னுடைய படத்திற்கு கீழே malar .jpg என்று குறிப்பிடவில்லை.

  ReplyDelete
 14. போட்டிக்கான எனது படத்தை அனுப்பி இருக்கிறேன்.

  ViNo.jpg

  _ ViNo

  ReplyDelete
 15. இந்த படம்தான் போட்டிக்கு

  ReplyDelete
 16. நான் போட்டிக்கு ஒரு படம் அனுப்பிட்டேன்.
  (thamizhiniyan.jpg)
  -தமிழினியன்

  ReplyDelete
 17. இதுவரை வந்த புகைப்படங்கள் http://picasaweb.google.com/pitcontests/May2010SunsetSunrise# இங்கே சரிபார்க்கவும். தமிழினி உங்களோட புகைப்படம் இல்லை என்று நினைக்கிறேன். மறுபடி அனுப்பவும்

  ReplyDelete
 18. Jeeves,

  என்னுடைய படம் email-ல் வரவில்லையா?? அப்படினா வேற படம் அனுப்புகிறேன்:-)

  ReplyDelete
 19. என் படம் அங்கே இல்லை தோழா.

  திரும்பவும் அனுப்பியிருக்கேன்.
  -தமிழினியன்

  ReplyDelete
 20. இந்த முறையும் போட்டிக்கு ஒரு படம் அனுப்பிட்டேன்.
  -Ramesh
  (how can i type the tamil word in comment box. this comment using copy & paste)

  ReplyDelete
 21. மக்களே,

  எதோ தொழில்நுட்பப் பிரச்சினைக் காரணமாக உங்கள் புகைப்படங்கள் ட்ராப் பாக்ஸில் கிடைக்கவில்லை. photos.in.tamil@gmail க்கு அனுப்பிய படங்களை எடுத்து வலையேற்றுகிறேன். ( படத்தின் அளவில் ஏதேனும் பிரச்சினையா தெரியவில்லை. ) .. கொஞ்சம் பொறுத்துக்கொள்ளவும்
  \


  ரமேஷ்,அமல்,ராமலக்ஷ்மி,நந்தா,தமிழினியன், நடராஜ் பிரேம்,விஜயாலயன்,ஜேம்ஸ் ராஜ்,பாஸ்கர் ஜெயராமன்,வினோ,ராம் - உங்கள் படம் கிடைத்திருக்கிறது. வலையேற்றியதும் இங்கே அப்டேட் செய்யறேன்

  ReplyDelete
 22. நானும் ஒன்று அனுப்புகிறேன்.மார்க் போடுங்க சார்.

  ReplyDelete
 23. இதுவரைக்கும் வந்த படங்கள் வலையேற்றப் பட்டன. யாருடைய படமாவது அனுப்பிய பின் ஆல்பத்தில் இல்லையென்றால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்

  ReplyDelete
 24. என் படம் சேர்க்கப் பட்டு விட்டது. நன்றி.

  இது பதிவு:

  உதய கீதங்களும் அந்தி ராகங்களும்-May PiT போட்டிக்கு..
  :)!

  ReplyDelete
 25. என் படம் அனுப்பிவிட்டேன்..

  தெரியாம ஃபைல் நேம் karki.jpg.jpg ஆகிவிட்டது... :)

  ReplyDelete
 26. நானும் ஒரு படம் அனுப்பியிருக்கிறேன் (Nimal.jpg)

  ReplyDelete
 27. நானும் அனுப்பியிருக்கிறேன்

  ReplyDelete
 28. நானும் ஒரு படம் அனுப்பியிருக்கேன்.

  (amaithicchaaral.jpg)

  ReplyDelete
 29. நேற்று காலை படம் அனுப்பினேன். இது வரை பிகாஸாலே காணோம்! திவா.

  ReplyDelete
 30. அனுப்பின படமும் காணோம் போட்ட கமென்டும் காணோம்! :-(

  ReplyDelete
 31. அனுப்பிய படம் இன்னும் வலையேற்றம் செய்யப்படவில்லை !

  ReplyDelete
 32. ப்ரேம், திவா மற்றும் புகைப்படம் அனுப்பிய மற்றும் அனைவருக்கும் - இரண்டு நாள் அவசர வேலையாக ஊருக்குச் சென்றுவிட்டதால் புகைப்படம் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதற்கு மன்னிக்கவும். அனைவரின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. சரி பார்க்கவும்.

  நன்றி

  ReplyDelete
 33. கடைசி நாள் என்கிறதால் கொஞ்சம் யோசனை! வேறு பிரச்சினை இல்லை!

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff