Sunday, April 11, 2010

ஓடுகிற தண்ணியில....!

23 comments:
 
புகைப்படம் பிடிப்பதிலே கொஞ்சம் அதிகம் டென்ஷன் தரக்கூடியது எதுன்னு பாத்தீங்கன்னா தண்ணீரைப் பிடிப்பது தான். தண்ணீர் அல்லது பிரதிபலிக்கும் எதையுமே எடுக்கறது கொஞ்சம் சிரமமானது. அதுலையும் நீர்வீழ்ச்சி, ஆறு போன்றவைன்னா... பார்க்கும் போது அற்புதமா தெரியும் காட்சி படம் எடுத்த பின்னால அட இதென்னன்னு டென்ஷன் கிளப்பும். எனவே தண்ணிய சுட சில டிப்ஸ்.. அதுவும் குறிப்பா நீர்வீழ்ச்சி அல்லது ஓடும் தண்ணீர். இந்த போட்டி நேரத்துல இது கொஞ்சமாவது உதவும்னு நினைக்கிறேன்.
  • சாதாரணமா நீங்க எடுக்கற போட்டோஸ்க்கும் தண்ணி போட்டோக்கும் என்ன வித்தியாசம்னா... தண்ணிய பிடிக்கும் போது ஒண்ணு பிரதிபலிப்பு இருக்கும் இல்லாட்டி, தண்ணீருக்கு உள்ள இருக்கிறது புகைப்படத்துல தெரியும். ஆகவே அதற்கேத்த மாதிரி உங்களோட செட்டிங்ஸ் பார்த்துக்கோங்க.
  • என் உச்சி மண்டைல சுர்ருங்குதுங்கற நல்ல வெயில் நேரத்துல புகைப்படம் எடுக்காதீங்க. புத்தம்புது காலை பொன்னிறவேளைன்னோ அல்லது இது ஒரு பொன் மாலைப் பொழுதுன்னு இல்லாட்டி ஒரு மாலை இளவெயில் நேரம்னு பாடிட்டே எடுங்க. புகைப்படமும் அருமையா வரும். ( பாடுன பாட்டு அதுல ரெக்கார்டு ஆகுமான்னு கேட்டீங்க... டென்ஷனாய்டுவேன் )
  • நீர்வீழ்ச்சி மிகவும் அருமையான சப்கஜெக்ட். ஆனா ரொம்பவே ட்ரிக்கி தண்ணிக்காக மீட்டரிங்க் போட்டீங்கன்னா மத்தது இருட்டடிச்சுடும். அதே நேரம் மத்த சீனரிக்காக மீட்டரிங்க் போட்டீங்கன்னா தண்ணீர் ரொம்ப வெளுத்துடும்.
  • பெரும்பாலான நல்ல நீர்வீழ்ச்சி புகைப்படம் பார்த்தா அதுல நீரோட்டம் பாலருவி மாதிரி ரொம்ப அழகா ரொம்ப வெண்மையா அதே நேரம் ஸ்மூத் லைன் இருக்கும். அதுவே நாம எடுத்தோம்னா தண்ணீர் அங்க இங்க தெரிச்சுட்டு இருக்கும். விஜயாலயனின் படம் ஒரு உதாரணம். இது ஒரு அழகான படம். இதுவே இன்னமும் ஸ்ட்ரீமிங்க் எஃப்பெக்டோட மூனாவது படம்போல இருந்தா எப்படி இருக்கும் ? அதே போல நாமும் எடுக்க ஆசை இருக்குமில்லையா உங்களுக்கும், அப்ப ஷட்டர் ஸ்பீடை குறைச்சு அபெர்சர் குறைச்சு வச்சு எடுத்து பாருங்க கண்டிப்பா வித்தியாசம் தெரியும்.
  • எஸ்.எல்.ஆர் கேமரா கூட குடும்பம் நடத்துறவங்க சர்குலர் போலரைசர் வச்சு எடுங்க. அப்போ தேவையற்ற பிரதிபலிப்பு தடுத்து காண்ட்ராஸ்ட் கூட்டி எடுக்கலாம். நான் சாதா கேமராவோட குடும்பம் நடத்திட்டு இருக்கேன்னு சொல்றவங்க உங்க கிட்ட கூலிங்க் கிளாஸ் இருக்குமில்லையா அதை லென்ஸ் முன்னாடி வச்சுக்கோங்க. போலரைசர் ஃபில்டர் எஃபக்ட் கிடைக்கும்.
  • ஐ.எஸ்.ஓ செட்டிங் முடிஞ்ச அளவுக்கு குறைஞ்ச பட்சமாக இருத்தல் நலம். குறைஞ்ச ஷட்டர்/குறைஞ்ச அபெர்சர் போட்டு எடுக்கும் போது வரும் வெளிச்சப் புள்ளிகள் குறையும்.
  • ப்ராக்கெட்டிங்க் ஆப்ஷன் இருந்தா அது வச்சு வேற வேற எக்ஸ்போஷர்ல மூனு ஷாட் எடுத்து, எச்.டி.ஆர் போட்டோவா போடுங்க. நீர்வீழ்ச்சி போன்ற படங்களுக்கு எச்.டி.ஆர் நல்ல பயனளிக்கும்
  • ஆறுகளில் பாறைகளின் மேல் தவழ்ந்து செல்லும் நதியலைகளை ஸ்லோ ஷட்டர்ல ஒருமுறையும், அதி வேக ஷட்டர்லயும் எடுத்து பாருங்க. ரெண்டுமே நல்ல திருப்தி அளிக்கும்.
உதாரணத்திற்கு படம் தந்த விஜயாலயனுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் கேள்வி - தண்ணீரில் இருந்து கேமராவை பாதுகாப்பது எப்படி : இது போன்ற இடங்களில் சாரல் மூலம் கேமரா மேல் நீர் படிய வாய்ப்பிருக்கிறது. அதில் இருந்து தப்ப எளிதான வழி - ஷவர் கேப் சிலது கைவசம் வைத்துக் கொள்ளுங்கள். லென்ஸ் பகுதி விட்டு மற்றவற்றை ஷவர் கேப் கொண்டு மூடிவிடலாம். சட்டென்று மழை வருவது போல் இருந்தால் ஷவர் கேப் முன்னும் பின்னுமாய் போட்டுவிட்டால், கேமரா நீரினால் பாழாவது தடுக்கலாம். இதையும் தவிர்த்து தேங்கிய நீர், குளம், ஏரி,கடல் தண்ணீரைப் பிடிக்கறது, தண்ணீர் துளிகளைப் பிடிப்பது என பல உள்ளன. நேரமிருப்பின் பின் அவைகளைப் பற்றியும் பார்ப்போம். அடடே முக்கியமான ஒண்ணு சொல்ல மறந்துட்டேனே... " மாத்தி யோசிங்க "

23 comments:

  1. சொல்லியிருக்கிற விசயமெல்லாம் படு இண்ட்ரஸ்டிங்காத்தான் பாஸ் இருக்கு பட் இடமும் சூழலும் டெஸ்ட் பண்ணி பாக்க முடியாதபடியால்ல இருக்கு !

    பட் மைண்ட்ல வைச்சுக்கிடறேன் யூசு ஆகும் :) & வளர நன்னி :)

    ReplyDelete
  2. நல்ல பதிவு. நன்றி

    ReplyDelete
  3. நல்லா இருக்கு பாஸ்

    ReplyDelete
  4. ஆற்புதம், அருமை

    ReplyDelete
  5. ஜீப்பரு ஜீவ்ஜி

    ReplyDelete
  6. பாஸ்... கேமராவைக் கையில் பிடித்தாலே கை நடுங்குது.. எங்க ஆசான் ஆயில்கிட்ட திட்டு வாங்க வேண்டி இருக்கு.. ஐடியா எல்லாம் சொல்லி இருக்கீங்க.. டிரை பண்ணலாம்.

    ReplyDelete
  7. எங்க என்னோட கமெண்டு

    ReplyDelete
  8. ho!vendru peyium neer veezhiyai paarkaiyil manathilum oru santhosham

    nandri

    tips patri athigam theriyathu - rasikka mattume theriyum.

    ReplyDelete
  9. எனக்கு பயணுள்ள பதிவு. நன்றி.

    ReplyDelete
  10. அருமை ஜீ

    பெரிய விசயமெல்லாம் சொல்லி இருக்கீங்க
    வாழ்த்துகள் உங்க குழுவுக்கு

    உங்க படங்களைப் பார்த்தவுடன் எனக்குள் தோன்றிய அருவி ஒன்று :))

    ’மலையில் வழிந்தோடும் தண்ணீர் விழுது
    வழியில் அசைந்தாடும் ஆலம் விழுது
    இலைகள் கவிழும் அழுது - அதுவோர்
    மழைநின்ற மாலைப் பொழுது’

    சும்மா இருப்பவருக்குத் தூண்டிலிட்டுத் தூண்டிவிடுவது ஒரு கலை .
    அது உங்களுக்குக் கைவந்த கலை :)))

    ReplyDelete
  11. எவ்வளவு தெளிவா இருந்தாலும் தண்ணி கவுத்திடும் போல, நல்ல பதிவு, புதிய விசியங்கள் தெரிந்து கொண்டேன் ஜீவ்ஸ்-நன்றி.

    ReplyDelete
  12. //ஆயில்கிட்ட திட்டு வாங்க வேண்டி இருக்கு.. ஐடியா எல்லாம் சொல்லி இருக்கீங்க.. டிரை பண்ணலாம்.//

    ஒரு ##### போட்டோ எடுத்துகொடுய்யான்னு சொன்னா கையெல்லாம் நடுங்குது இங்க வந்து என்னய்யா என்னைய பத்தி புகார் சொல்லிக்கிட்டி திரியறீரு!!!

    ReplyDelete
  13. என்னென்னமோ சொல்றீக.. ம்ம்.. நோட் பண்ணிகிடுதேன்.. ப்யூச்சர்ல யூஸ் ஆகுமான்னு பாக்கலாம்

    ReplyDelete
  14. அற்புதமான படங்களுடன் அருமையான ஆலோசனைகள் நன்றி.

    ReplyDelete
  15. HDR பற்றி தனியாக ஒரு பதிவு இடவும்...

    ReplyDelete
  16. Karthik,

    http://photography-in-tamil.blogspot.com/2007/12/hdr.html

    http://photography-in-tamil.blogspot.com/2008/09/exposure-blending.html

    ReplyDelete
  17. அண்ணே,
    நல்ல யோசனைகள். ம்ம்ம் என்கிட்டயும் ஒரு கேமரா தூங்கிக்கிட்டு இருக்கு. சீக்கிரம் அத எழுப்பனும்.

    ReplyDelete
  18. ஆஹா..ஆயுசு நூறு! எனக்கா தண்ணிக்கானு கேக்காதீங்க!! ரொம்பவே எதிர்பார்த்த பதிவு! மிக்க நன்றி :)

    ReplyDelete
  19. ஜீவ்ஸ் அண்ணாச்சி வழக்கம் போல டிப்ஸ் சூப்பரு.. மைண்ட்ல வெச்சிகிறேன் எப்பவாச்சும் வீட்டை விட்டு வெளிய போனா யூஸ் ஆவும் :)..

    ReplyDelete
  20. நல்ல தகவல்கள் ஜீவ்ஸ்!
    கொசுறாக ஒரு பின்னூட்டம்...
    காடுகளுக்குள் உள்ள நீர்வீழ்ச்சிகளை படமெடுக்கும்போது வெளிச்சம் குறைவாக இருப்பதால் தெளிவான படத்திற்கு "ஷட்டர்" வேகத்தினை குறைத்து (கம்மியாக) வைத்திருக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. இதற்கு "ட்ரைபாட்" மிகவும் உதவியாகவிருக்கும். மேலும் "ட்ரைபாட்" பயன்படுத்தும்போது "பிராக்கெட்டிங்"உம் நல்ல பலனைக்கொடுக்கும்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff