Tuesday, April 13, 2010

இலவச Photoshop CS5

19 comments:
 
Photo$hop CS5 யில் பெரிதாய் எதிர்பார்க்கபடும் ஒரு புதிய விஷயம் content Aware Fill. இதைப் பற்றிய விவரம் இங்கே இருக்கு. சுருக்கமாய் சொல்ல வேண்டுமெனில் படத்தில் உங்களுத் தேவையில்லாத பகுதிகளை clone tool இல்லாமல் மிக எளிதாய் நீக்கி விடலாம். ஆனால் கிம்பில் இதே போனற வசதி பல நாட்களாகவே ( வருடங்களாகவே ) இருக்கு. காசே செலவில்லாமல் கிம்பில் இதை உபயோகிப்பது பற்றி இங்கே. முதலில் இங்கே இருந்து resynthesizer-for-Windows-0.13b plugin தரவிறக்கிக் கொள்ளுங்கள். இந்த zip கோப்பில் இருக்கும் resynthesizer.exe இங்கே c:\Program Files\GIMP-2.0\lib\gimp\2.0\plug-ins நகர்த்திக் கொள்ளுங்கள். அடுத்து இங்கே இருந்து smart-remove.scm தரவிறக்கி , அதை இங்கே C:\Program Files\GIMP-2.0\share\gimp\2.0\scripts நகர்த்திக் கொள்ளுங்கள். அடுத்த முறை கிம்ப் திறக்கும் போது, Filters-> Enhance-> heal selection தெரிய வேண்டும். தேவையான படத்தை கிம்பில் திறவுங்கள். உதாரணதிற்கு இந்த படத்தில் இருந்து இந்தப் பகுதிகளை நீக்க முயற்சிக்கலாம். Lasso Tool தெரிவு செய்து நீக்க வேண்டிய பகுதிகளை தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். selection குத்துமதிப்பாய் இருந்தாலே போதும். அடுத்து Filters-> enhance-> heal selection தெரிவு செய்து, Radius 100 என்று மாற்றுங்கள். அவ்வளவுதான். மாயமாய் மறைந்து போயிருக்கும். இதில் Radius தெரிவு செய்வதுதான் முக்கியமான வேலை. கொஞ்சம் விளையாடி பார்க்க வேண்டும். நீக்க வேண்டிய ப்குதி பெரியதாக ஆக ஆக Radius அள்வும் பெரியதாகும். இந்த படத்தில் கற்கள், மற்றும் பிற தேவையில்லா பொருட்களை நீக்கி இருக்கிறேன். மொத்த நேரம், இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாகத்தான் ஆகி இருக்கும். படம் - மதன் ( பொம்மை போட்டிக்கு வந்த ஒருப் படம்) விளையாடிப் பாருங்கள். கிம்ப் இருக்க போட்டாஷாப் கவர்ந்தற்று :)

19 comments:

  1. ஜூபரு, இததான் தேடிகிட்டு இருக்கேன். மிக்க நன்றி An&!

    ReplyDelete
  2. nice. in the doll head pic, the sharpness in the sand is missing after the massaging.

    ReplyDelete
  3. survey
    that doll pic 640 * 400 pic. what else do you expect ?

    தானமா கிடைக்கிற மாட்டுக்கு பல்ல பிடிச்சி பார்க்காதீரும்.:)

    $1000 க்கும் $0 க்கும் வித்தியாசம் இருக்கத்தான் செய்யும்.நமது 99.99 % தேவைகளுக்கு இதுவே போதுமாய் இருக்கும்.

    ReplyDelete
  4. பகிர்விற்கு நன்றி!
    கொஞ்சம் பரிசோதனை செய்து பார்த்தேன். ஆனால் சரியான பலன் கிடைக்கவில்லை.
    சுட்டி: http://vjs-tests.blogspot.com/2010/04/gimp-resynthesizer-test.html
    Resynthesizer எப்படி, எங்கிருந்து, எந்த திசையில் நிறத்தை எடுக்கிறது என்பது தெரிந்தால் நல்லது.
    இதேமாதிரியான தேவைகளுக்கு நான் "க்ளோனிங்" கருவியை பயன்படுத்தி நிரப்புவேன்.
    ~ விஜயாலயன்

    ReplyDelete
  5. பாஸ் ஜுப்பரு

    டெஸ்டிங்க் டன் கலக்கல்

    [ ஒரு ஸந்தேகம் டவுன்லோடு செஞ்சு அந்த பர்டிகுலர் .exe பைல் மட்டும்தான் கொண்டு போய் காப்பி செஞ்சு போட்டேன் ஒர்க் ஆகுது ஆனா பிற்பாடு எதாச்சும் சிக்கல் வருமா? ]

    ReplyDelete
  6. ஆயில்யன்
    .exe அது போதும். அந்த கூட இருக்கற Scripts வேலை செய்யலை. அதுக்காதான் வேற ஒரு புது script கொடுத்திருக்கிறேன்.
    எந்த பிரச்சனையும் இருக்க கூடாது

    ReplyDelete
  7. vijay

    http://www.logarithmic.net/pfh/resynthesizer

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. Vijay
    My try..
    I tried with smaller selections , all at radius 50.
    I think this one is reasonable.

    http://my-retouch.blogspot.com/2010/04/vijay-resyn.html

    I missed some part of the tree.. But you get the idea..

    ReplyDelete
  10. மிகவும் நன்றி!
    சிறிய பரப்புகளை எடுத்துப் பண்ணலாம் என்று யோசித்தேன். ஆனால் அப்படி எடுக்கும்போது ஏதோ ஒரு பக்கத்தில் மீதமிருக்கும் மரத்தின் சாயல் தெரிந்தெடுக்கப்பட்ட பகுதிக்குள்ளும் வந்துவிடுமோ என்பது குழப்பமாக இருக்கிறது. அதனால் தான் கேட்டேன் எந்தப் பக்கத்திலிருந்து (direction ) நிரப்புவதற்கான நிறம் (fill) எடுக்கப்படும்?
    அதிகம் யோசிப்பதால் ஏற்படும் குழப்பங்கள் இவை :-(

    ReplyDelete
  11. PIT படம் தொடுவது விட்டுப் போச்சு.மறுபடியும் வந்து ஒட்டிக்க யோசிக்கிறேன்.

    ReplyDelete
  12. நீங்கள் விளையாடி இருப்பதை போட்டோ கண் கொண்டு பார்த்தால் தெரிந்துவிடுகிறதே!! (கடைசி படத்தில்)
    தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  13. Really useful post!
    Thanks :)

    ReplyDelete
  14. வடுவூர் குமார்,
    நான் கொடுத்து இருப்பதெல்லாமொரு எடுத்துக்காட்டுக்காதான். இதில் குறைகள் இருக்கத்தான் செய்யும். முழு நேரம் எடுத்து , குறைகள் இல்லா படம் கொடுப்பது இந்த இடுகையின் நோக்கம் இல்லை.
    எவ்வளவு எளிதாக செய்ய முடியும் என்பதுதான் நோக்கம்.

    அனைவருக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  15. சவரா,
    நன்றி..

    ReplyDelete
  16. ரொம்ப நல்லா பண்ணியிருக்கிறீங்க. பழைய புதிய தகவல்களை எனக்கு அறியத்தருவீர்களா? நன்றி.
    maradi@livew.ca

    ReplyDelete
  17. SuvAasaththin
    We have archives and search options. Please use them

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff