இணையத்திலும் சரி பல புத்தகங்களிலும் சரி, சில புகைப்படங்கள் நமது கவனத்தை ரொம்பவே ஈர்க்கும்.
சாதாரணமாய் நாம் எடுக்கும் புகைப்படங்களிலிருந்து இவையின் தரம் ரொம்பவே அதிகமாய் இருப்பது ஒரு காரணம்.
ஒரு கவித்துவமான காட்சி அமைப்பும், ஒவ்வொரு 'பிக்ஸலின்' ஜொலிப்பும் இந்த படங்களின் ப்ரத்யேகதைகள்.
உதாரணத்துக்கு, இணையத்திலிருந்து சில படங்களைப் பாருங்கள். பிறகு விஷயத்துக்கு வருகிறேன்.
என்னங்க படம் வித்யாசமா இருக்குல்ல? ஜிவ்வ்வ்வுனு இழுக்குதுல்ல?
சாதாரணமா ஒரு படத்த எடுக்கும்போது, அந்த காட்சியில் இருக்கும் வெளிச்சத்தின் தன்மை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அளவில் இருக்கும். உதாரணத்துக்கு, ஒரு மலையும், அதன் பின்னணியில் இருக்கும் வானத்தையும் சேத்து படம் பிடிக்கணும்னு முயற்சி பண்ணீங்கன்னா, வானம் ரொம்ப பளிச்னு இருக்கும், மலை இருட்டா இருக்கும். இது ரெண்டுத்தையும், அதன் தன்மை பிசகாமல் படத்தில் கொண்டு வருவது ரொம்ப கடினம்.
வானம் எடுக்க exposure கம்மியா வைக்கணும், சற்றே இருண்ட மலையை எடுக்க அதிக exposure வைக்கணும். குத்து மதிப்பா வெச்சு எடுத்தீங்கன்னா, ரெண்டுல ஒண்ணு, கொஞ்சம் அழுத்தம் கம்மியா தான் படத்தில் பதியும்.
என்ன மாதிரி கத்துக் குட்டிகளுக்கு, இது ஒரு பெரிய விஷயம் இல்ல. வந்த வரைக்கும் போதும்னு க்ளிக்கிட்டு வந்துருவோம்.
ஆனா, இதே தொழிலா செய்றவங்களும், அதீக ஆர்வம் உள்ளவங்களும், ஒரு படி மேல போய் முயற்சி பண்ணுவாங்க.
இவங்க, வானத்தை தனியா ஒரு படம் பிடிப்பாங்க, அதுக்கு தேவையான exposure வச்சு. அடுத்து, மலைய தனியா அதுக்கு தேவையான exposure வச்சு படம் புடிப்பாங்க.
அப்பரம் ரெண்டையும் ஒட்டி ஒரு படம் ஆக்குவாங்க. exposure-blending எனப்படும், இந்த யுக்தி அருமையான படங்களைத் தரும்.
இதே வரிசையில், டிஜிட்டல் உலகில் உபயோகப்படுத்தும் இன்னொரு யுக்திக்கு HDR என்று பெயர். High Dynamic Range என்பதன் சுருக்கமே HDR. மேலே நான் கொடுத்துள்ள படங்கள் HDR நுட்பம் உபயோகித்து 'செய்யப்பட்டவை'யே.
HDR நுட்பம், 1997 வருடத்திலிருந்து இருந்தாலும், டிஜிட்டல் ப்ரபலம் அடைந்த பின்னர், இதன் உபயோகம் அதிகரித்துள்ளதாம்.
ஒரு காட்சியை, பல விதமான exposureல் எடுத்துவிட்டு, எல்லா படத்தையும் சேர்த்து கலந்து, 'நச்'னு ஒரு படம் உருவாக்கும் முறையே HDR.
கார் ஓட்டக் கத்துக்கும் போது, காரோட engine எப்படி வேலை செய்துன்னெல்லாம் தெரிஞ்சுக்கணும்னு அவசியம் இல்ல. எத எங்க மெதிச்சு, எப்படி சுத்தினா வண்டி நகுரும்னு தெரிஞ்ஜா போதும். அதே போல், HDRன் technical விளக்கங்கள் எல்லாம் பார்ப்பதைவிட, அது எப்படி practicalஆ உபயோகிப்பது என்பதை தொபுக்கடீர் என்று குதித்துப் பார்ப்போம் (technical விளக்கங்கள் எல்லாம் எனக்கும் ரொம்ப தெரியாது, என்பதை நாசூக்கா சொன்னா புரிஞ்சுக்கங்கப்பா :) )
சரி, இனி HDR உபயோகித்து, 'ஜிவ்வ்வ்வ்வுனு' இழுக்கும் படங்கள் எடுப்பது எப்படீன்னு பாக்கலாம்.
இதுக்கு கைவசம் என்னென்ன தேவை?
1) DSLR camera (மற்ற டிஜிட்டல் கேமராவில் AEB வசதி இருந்தால் அதையும் உபயோகிக்கலாம்).
2) Tripod - முக்காலி
3) PhotoMatix மாதிரி ஒரு மென்பொறுள்
இனி எப்படி படம் எடுப்பதுன்னு பாப்போம்.
எடுக்க நினைக்கும் காட்சிக்கு ஏற்றார் போல் முக்காலியை வைத்து, அதற்கு மேல் கேமராவை வைக்கவும்.
கேமராவில், AEB modeஐ தேர்ந்தெடுத்து, exposure -2, 0, +2 என்று வைத்துக் கொள்ளவும். (Program modeல், menu வுக்கு போனால், AEB தென்படும்).
இப்படி பண்ணா என்னாகும்னா, ஒரு காட்சிய முதல் முறை க்ளிக்கும்போது, அந்த காட்சிக்கு கம்மியான exposure கொடுத்து பிடித்துக் கொள்ளும். அடுத்த முறை க்ளிக்கும் போது, 'சாதாரண' exposureல் பிடித்துக் கொள்ளும். அதற்க்கு அடுத்த முறை, ஜாஸ்தியான exposure வைத்து எடுத்துக் கொள்ளும்.
வெச்சாச்சா? இன்னும் என்ன தாமதம்? இனி, உங்க காட்சிய, மூணு தடவ படம் புடிங்க.
முதல் படம் இருட்டாவும், ரெண்டாவது சுமாராவும், மூணாவது வெளிச்சமாவும் வரும். இந்த மாதிரி.
இதுவரை புரிஞ்சுதா?
கம்மியான exposureல் எடுக்கும்போது, படத்தில் அதீக வெளிச்சமான 'பல்பு' வெளிச்சம், நல்ல படியா படத்தில் பதியும்;
அதே மாதிரி, ஸோஃபாவின் பின் புறம், இருண்டிருப்பதால், அதீக exposure வைத்து எடுக்கும்போது, ஸோஃபாவின் முழு விவரமும் படத்தில் பதியும்.
சரி, இப்ப மூணு படத்த வச்சுக்கிட்டு என்ன பண்றது?
அதுக்குத் தான் PhotoMatix செஞ்சு வச்சிருக்காங்க.
PhotoMatixஐ தொறங்க.
Menuல் 'HDR - Generate' க்ளிக்கி, உங்கள் மூன்று படங்களையும் தெரிவு செய்து, OK கொடுங்கள்.
கொடுத்தாச்சா?
PhotoMatix இந்த மூணு படத்தையும், ஆராஞ்சு, ஒவ்வொரு பிக்ஸலிலும் (pixel) 'சிறந்த' pixelஐ தேர்ந்தெடுத்து, எல்லா விவரங்களும் பளிச்சென தெரியும் விதத்தில், ஒரு படத்தை உருவாக்கித் தரும்.
இப்படி வரும் படத்தை, PhotoMatixல் உள்ள Tone-Mapping என்ற option உபயோகித்து, மேலும் மெருகேற்றி, ஒரு நல்ல படத்தை உருவாக்கலாம்.
மேலே உள்ள மூணு படமும், கலந்து கலக்கி, மசாலா போட்டு, Tone Mapping பண்ணா இப்படி கிடைச்சுது.
ஒரே காட்சியை மூன்று முறை எடுத்துக் கலப்பதால்,இந்த நுட்பம், அசையும் பொருளுக்கு உபயோகித்தல் கடினமானது.
மத்தபடி, ப்ரொஃபஷனலா ஒரு படத்த மாத்தணும்னா, இந்த யுக்தி கை கொடுக்கும்.
நானும் கத்துக் குட்டி, அதனால, என் படத்துல பெரிய 'பன்ச்' இருக்குதான்னு தெரியல.
ஜாம்பவான்களின், மேலும் சில படங்கள் கீழ போட்டு, நிறைவு செய்கிறேன்.
குறை நிறை சொல்லுங்க.
நீங்களும் இந்த நுட்பத்தை முயன்று, படத்தை அரங்கேற்றுங்கள்!
வாழ்க HDR!
மேல் விவரங்களுக்கு, இங்கே செல்லவும்!
கேள்விகள் இருந்தால் கேளுங்க. சரியா புரியலன்னாலும் சொல்லுங்க!
;)

சர்வே
ReplyDeleteநல்ல பதிவு.
இது photography இல்லை, computer graphics என்றும் சொல்லலாமா :-)
நன்றி An&,
ReplyDelete//இது photography இல்லை, computer graphics என்றும் சொல்லலாமா :-)//
டிஜிட்டல்னு ஆனப்பரம், எதுவுமே வெறும் photographyயோட நிக்கரது இல்லையே.
டச்-அப்னு ஆரம்பிச்சாச்சு. ஜான் போனா என்ன, மொழம் போனா என்ன?
படத்திலே ஒரிஜினலா இல்லாத எதையும், எக்ஸ்ட்ராவா எதுவும், சேக்காத வரை, எதுவும் தப்பில்லை ;)
பல மாதங்களாக இந்த HDR ஐ பயன்படுத்த முயற்சித்து வருகிறேன். HDR பற்றிய என்னோட பதிவு, (உங்களை மாதிரி விளக்கமாக எழுதவில்லை), சில மாதிரிகள் உண்டு.
ReplyDeletehttp://halwacity.com/blogs/?p=255
இந்த படமும் HDR தான்...
http://www.flickr.com/photos/njvijay/527272465/
இது ஒரே RAW-விலிருந்து தயாரிக்கப்பட்ட pseudo HDR வகையை சேர்ந்தது.
http://www.flickr.com/photos/njvijay/1632937111/
இன்னும் பலவற்றை கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்..
உபயோகமுள்ள பதிவுக்கு நன்றி.
விஜய், உங்க படங்கள் அருமை. (கடைசி லிங்க் வேலை செய்யல).
ReplyDeletepseudo-HDRல் அசையும் பொருளை படம் எடுக்கலாம் என்பதை கூற மறந்துட்டேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! :)
இப்போ பாருங்க
ReplyDeletehttp://www.flickr.com/photos/njvijay/1632937111/
சூப்பரு அண்ணாச்சி!!
ReplyDeleteநானே இந்த HDR பத்தி கத்துக்கனும்னு ரொம்ப நாளா நெனைச்சிட்டு இருந்தேன்!!
நல்ல எளிய நடையில் விளக்கமா பதிவிட்டிருக்கிறீர்கள்!!
மிக்க நன்றி!!
எப்போவாச்சும் முயற்சி செஞ்சு பாக்கனும்!!
வாழ்த்துக்கள்!! :-)
My another try
ReplyDeletehttp://www.flickr.com/photos/njvijay/1335456813/
(watch handing leaves.. which had movement)
CVR, நன்றி. ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.
ReplyDeleteவிஜய், அந்த படமும் அருமை. அதுவும் pseudo-hdrஆ? கலக்கல்.
exif details romba mukkiyam. if dont have proper exif details, padam kanna pinnannu kettu poydum.
ReplyDeleteGot to learn something new today.
ReplyDeleteNice post.. Thanks..
notes appurama eduthukkaren... ithu verum oru... running-reading ;)
1. இதுவரைக்கும் HDD ன்னே கேட்டுப்போன காதுக்கு HDR ஒலி இனிமை.
ReplyDelete2. முந்தைய பதிவுக்கான வீட்டு வேலையே இன்னும் முடிஞ்ச பாடில்லை.டிசம்பர் போட்டி தேதி வேற பக்கத்துல வருது.அந்தப் பரிட்சை முடிஞ்சதும் அடுத்து உங்க பாடம்தான்.
அருமையான பதிவு.கொஞ்சம் தேத்திகிட்டு களத்துல குதிக்க வேண்டியதுதான்.புதுவருச துவக்கமாகக் கூட இந்தப் பாடத்தை அறிவிக்கலாம்.நன்றி.
சூப்பர் பதிவு.
ReplyDelete//நாசூக்கா சொன்னா புரிஞ்சுக்கங்கப்பா :)//
விளங்குது விளங்குது
கொஞ்சம் நேரம் கிடைத்ததும் மறுபடியும் வந்து பார்த்து அப்படி என்னதான் சொல்லியிருக்கீங்கன்னு தலைகீழாப் பார்த்தா என்னமோ ABE ன்னு ஏதோ சொல்றீங்க.நீங்க கெனான் பட்டாளமா?என்கிட்ட K10D பெண்டக்ஸ்.(பேரக் கேட்டா சும்மா அதிராது...பெரும்பாலோருக்கு காதே கேட்காது அப்படியொரு பேர் தெரியாத கேமிரா)அதுல ABE கிடையாது.பதிலுக்கு மல்டி எக்ஸ்போஸர்ன்னு ஏதோ இருக்குது.இதுதானா நீங்க சொல்ற ABE.விளக்கம் சொன்னால் நலமாயிருக்கும்.
ReplyDeleteThanks Everyone!
ReplyDeleteNattu, I will try to post some more details on AEB. (auto exposure bracketing).
sorry for the english :)
if you have a camera, where you can set the exposure manually, you are OK. you dont necesssarily need AEB.
//if you have a camera, where you can set the exposure manually, you are OK. you dont necesssarily need AEB//
ReplyDeleteGot you sir. I will dig my head into the multi exposure setup.Othewise I will try your option.Thanks for the info.
சர்வேசா
ReplyDeleteHDR-ல் பயன்படுத்திய சில மாதிரி படங்கள் இங்கே... (நீங்கள் கேட்டிருந்தது)
http://halwacity.com/blogs/?p=255#comment-7080
விஜய்,
ReplyDeleteநன்றி. நல்லாவே மெருகேத்தியிருக்கீங்க!
;)
விளக்கங்கள் ரொம்ப எளிமையா இருக்கு.. என்னோட கல்லூரி இறுதித் தேர்வு ப்ரொஜெக்ட், இந்த படங்களை கம்ப்ரஸ் செய்றதுதான். இந்த வகை படங்கள பாக்கறதுக்கு தனியா மானிட்டர் வேணும். சாதாரண திரையில இவை முழு அளவில தெரியாது.
ReplyDeleteVeeraSundar,
ReplyDeleteNandri.
//இந்த வகை படங்கள பாக்கறதுக்கு தனியா மானிட்டர் வேணும். சாதாரண திரையில இவை முழு அளவில தெரியாது.//
appadiyaa? i wasnt aware of that.
indha kaalathu monitor nalla resolution support pannudhe.
@Surveysan
ReplyDeleteResolution is not the problem. there is something called color gamut - normal monitors dont have color gamuts for the HDR images. If you see a HDR image in normal monitor, actually what you are seeing is a converted version. ie. the image colors are adjusted to the monitor settings.
Chekc this page : http://www.bit-tech.net/hardware/2005/10/03/brightside_hdr_edr/1
//appadiyaa? i wasnt aware of that.
indha kaalathu monitor nalla resolution support pannudhe.//
அருமையான பதிவு சர்வேசன்... நன்றி!
ReplyDeleteநல்ல பதிவு நன்றி!
ReplyDeletehttp://www.flickr.com/photos/csubash/sets/72157594431703919/show/
ReplyDeleteHDR process seyyapatta enadhu photokkal.. Flickr Photoset
:)
@சுபாஷ்!!
ReplyDeleteஉங்கள் HDR படங்கள் அனைத்தும் அபாரம்!!
இதை செய்ய எந்த மென்பொருளை உபயோகித்தீர்கள்??
photomatrix-a? aஅல்லது photoshop-a??
சமீபத்தில் இதை செய்ய tufuse எனும் மென்பொருள் ஒன்றை பார்த்தேன்!!
அதை உபயோகித்திருக்கிறீர்களா??
அல்லது வேறேதும் இலவச மென்பொருள் பற்றி தகவல் உண்டா?? ;)
eppati alaka puriya vachinga?
ReplyDeletevery good article. tamillil type seithu eppati ithi uptate seivathu?
appan.pks,
erode.tamilnadu.
+91 9360 777007.
videograper in erode.
@அப்பன்,ஈரோடு
ReplyDeleteதமிழில் தட்டச்சு செய்வது பற்றி இங்கு பாருங்கள்..
:)
http://www.thozhi.com/tamiltyping.htm
CVR, just saw your comment :)
ReplyDeleteyes. i use photomatix, the trial version.
ஒரே கடுப்பு, இதன் விலை 99$.
trial versionல அவனோட watermark போடுவான். பரவால்ல. அதனாலென்னன்ன அதையே தொடர்ந்து யூஸ் பண்றேன் :)
சமீபத்திய HDRs
http://flickr.com/search/?q=surveysan%20hdr&w=all
இது என்னோட முயற்சி!
ReplyDeletehttp://tinyurl.com/586dom
surveysan...
ReplyDeleteபோன வருஷம் போட்டது இன்னும் hotஆ தான் இருக்கு எனக்கு.. beautiful.. i will give a try..
போடோஷோப் இல் ட்ரை பண்ணலாமா ? இது போன்ற படங்கள் போட்டிக்கு செரியாகுமா
ReplyDeleteGOT A CHANCE ONCE AGAIN TO COME TO THIS POST, AND WAS SURPRISED TO SEE THE FIRST COMMENT, AND TO KNOW THAT IT IS FROM AN&. 8^)
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteNice posting. You have given example of 3 photos took in the same place with different exposure. Shall we take 5 or 2 photos?
ReplyDeleteThen, what is the minimum and maximum number of photos to be taken for HDR. Please let me know...