Monday, December 3, 2007

Macro ன்னா என்ன ?... அப்படி என்ன செப்படிவித்தை இருக்கு இதிலே ?

16 comments:
 
இந்த மாத போட்டி தலைப்பு போட்டு 3 நாள் கூட ஆகலை.. அதுக்குள்ளேயே பதிவெல்லாம் கம-கமன்னு மணக்குது.. நறுமணம் மட்டும் இருந்தா போதுமா.. பூக்காரம்மா. பூ தொடுக்கும்போது பார்த்திருக்கீங்களா ? ?... கையிலே கிடைச்ச அரும்பை அப்படியே தொடுக்கவே மாட்டாங்க... ஒவ்வொரு அரும்பையும் நல்லா (க்ளோசப்லே) பார்த்து பார்த்து தான் தொடுப்பாங்க... தொடுக்கும்போது அவங்க பார்க்கிர கண்ணோட்டம் தான் படம் எடுக்கும் போதும் நமக்கு வேணும்.. ஏன்னா... மலரின் எந்த குணம் உங்களை படம் எடுக்க தூண்டிச்சோ.. அதே குணத்தை படத்தை பார்க்கும் போதும் பார்வையாளர்க்கு நீங்க காண்பிக்கணும். அதுக்காக தான் கேமேறா கம்பனிகாரங்க Macro ன்னு ஒரு செட்டிங் குடுத்திருக்காங்க.

அபர்ச்சர் ...ஷட்டர் ஸ்பீடு.. னெல்லாம் சொல்ல ஆரம்பிச்சாலே எல்லாரும் ஸ்பீடா ஓடிபோயிடுவீங்கன்னு எனக்கு தெரியும்.. ஸோ.. முடிஞ்ச வரையில் ஸிம்பிளா சொல்ல டிரை பண்ணறேன். Macro photography ஐ Close-up photography ன்னு சொல்லலாம். ஏன்னா பேருக்கேத்தாப்போல... கிட்ட இருக்கும் வஸ்து ( ஸப்ஜெக்ட்) ஐ இன்னும் கிட்டத்திலே .. பூதக்கண்ணடி வச்சு போட்டோ பிடிக்கரது. உதாரணத்துக்கு... செம்பருத்தி பூவை (கெமேரா இல்லாம.. சும்மா ) பார்க்கும் போது நாம் சாதாரணா கவனிப்பது .. செடி ( சின்னதா / பெருசா), தோட்டத்துக்கு நடுவிலே இருக்கா.. மூலையிலே இருக்கா, பூவின் நிறம் , இதழ் வடிவம் , petal-span ( பூ பெரிசா / சிருசா). ஆனால், கொஞ்சம் கிட்டே போய் மகரந்தம் , மகரந்த-பை , மகரந்த-பொடி எல்லாம் பார்க்கும் போது... நம்ம கண்களுக்கு (our field of vision)செடி - இலை - எல்லாம் தெரியாது.

கெமேராவிலே இருக்கும் Macro செட்டிங்கஸும் அது மாதிரி தான்.ஒரு ரோஜாப்பூவை முழுசா பார்த்தாலும் நல்லா இருக்கும், அதையே macro போட்டு, இதழ்களின் curves ஐ படம் புடிச்சாலும் நல்லா இருக்கும்..முதல் படம் ஒரு குழந்தையின் கண்ணோட்டத்திலே பார்த்தா மாதியும், ரேண்டாவது படத்தில் நாமே தேனீ மாதிரி பூவுக்குள்ளே போய் பார்த்து வராமாதிரி ஒரு அனுபவம் இருக்கும்... எதுவுமே perspective லே தான் இருக்கு

இனி உங்க கெமேராலே macro எப்படி செட் பண்ணலாம்ன்னு பார்க்கலாமா?
இதுக்கு நீங்க ஸ்பெஷலா இதுவும் செய்ய வேண்டியதில்லை.. (No manual adjustments for aperture / Focal length / shutter settings blah.. blah.. blah... நாம எதையோ நோண்டப்போய், ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆக... உள்ளதும் போச்சுடா நோள்ள கண்ணான்னு.. அப்புறம் எல்லாரும் என்னை தான் திட்டுவீங்க...). கெமேரா கம்பேனிக்கரனே macro ன்னு ஒரு ஸெட்டிங்க் குடுத்திருப்பான்.. அது உங்க கெமேராலே எங்கே இருக்குன்னு camera-manual அல்லது camera-company-website லே போய் பார்த்து சரியா எழுதி வச்சுக்கோங்க. அது படி செஞ்சா போதும்.. Advanced photography techniques கத்துக்கும்போது நீங்களே செட்டிங்ஸை மாத்தலாம்... இங்கே என்ன நடக்குதுன்னா... ஓரத்திலே இருக்கிரதெல்லாம் ஒரு-மாதிரி blurred ஆகவும் , நடுவிலே இருப்பதும் மட்டும் sharp ஆகவும் வரும்... சொல்லணும்னா.. fade-in /fade-out எபெக்ட் கிடைக்கும். மலர்களுக்கும் அது தானே அழகு.

Macro செட் பண்ணினதோட வேலை முடிஞ்சுதா ??
Macro செட் பண்ணினேன், படம் எடுத்தேன் , கம்ப்யூட்டர்லே பார்த்தேன்னு இல்லாம, ... ஒரே விஷயத்தை ( ஸப்ஜெக்ட்டை) பல கோணத்திலே பல முறை படம் எடுங்க ( காசா-பணமா.... டிஜிடல் கெமேரா தானே... பிலிமா வெஸ்ட்டாக போகுது)... கஞ்சத்தனம் பண்ணாம டகா-டகான்னு எடுத்து தள்ளுங்க. ஜூம் பண்ணி - ஜூம் பண்ணாம - கிட்டே போய் - தூர இருந்து - surroundings ஐ சேற்த்து - surroundings இல்லாம - ஸப்ஜெக்ட் பட்டுமே viewfinder ஐ முழுசா அக்கிரமிச்சா மாதிரி - நீங்களா ஒரு ambiance ஐ வச்சு அதிலே சப்ஜெக்ட்டை க்ளிக்கி - ஸ்டூல் மேலே நின்னு - குப்புற படுத்து - எப்பெப்பிடியெல்லாம் ஒரு சப்ஜெக்ட்டை படம் எடுக்க முடியும்ன்னு உங்க logic க்கு தோணுதோ அப்படி எல்லாம் 20-30 க்ளிக்கினீங்கன்னா.. அதிலே ஒரு 5 -10 வது தேறும்.

இதிலே என்ன விஷேஷம்ன்னா... மலர்கள் சலிச்சுக்காம போஸ் குடுக்கும் , என்ன தான் மூஞ்சிகிட்டே கெமேராவை கொண்டு போனாலும் "எக்ஸ்ப்ரெஷண்" மாறாம சிரிக்கும். யோசிச்சு பாருங்க... மனுஷனை நிறுத்தி மேலே சொன்ன வித்தையெல்லாம் காட்டினீங்கன்னா...conscious யாகி expression எல்லாம் ஓடிப்போயிடும்

மலர்கள் மலரும்போது
மலர்களை படம் எடுக்கணும்ன்னா ... கொஞ்சம் இல்லை ரொம்பவே மெனெக்கடணும்.
  1. பூக்களை outer ல் படம் எடுக்க மிக சிறந்த நேரம் 5.45 - 6.30 am ::::6.15 - 6.45 pm
  2. பூவை பறித்து படம் எடுக்கணும்னா... பறித்த 45 min க்குள்ளே எடுக்கணும்
  3. மழை நல்லா கொட்டி தீர்ந்து கொஞ்சூண்டு சூர்ய வெளிச்சம் வருமே... இந்த நேரத்தை மிஸ் பண்ணாம உங்க மெம்மரி கார்ட் full ஆகுர வரை படம் எடுங்க... believe me... these will be among your treasured pictures
  4. நல்ல dark colored பூக்கள்ள்ன்னா... light background ( butter paper - பழைய வேஷ்டி.. கட்டம் போட்ட லுங்கியெல்லாம் யூஸ் பண்ணக்கூடாது ) லே எடுப்பா இருக்கும்
  5. light colored பூக்கள் ( white rose , white hibiscus) ஐ dark background ( Black -paper (these are almost like black chart paper)... dark colored (preferably black , dark brown)... bedsheets without any prints) லே எடுக்கலாம்
  6. Barber shop லே தண்ணி ஸ்பிரே பண்ண வச்சிருப்பாங்களே... அது மாதிரி big-bazaar போய் வாங்கிட்டு வாங்க... ஏன்னா கைய்யாலெ தண்ணி தெளிச்சா... சரியா இருக்காது.. இதழில் நீர்-துளி வேணும்ன்னா ஸ்பிரே தான் பண்ணனும்.... அதுக்கு தான் இது
சொன்ன நம்புவீங்களா... லால்பாக் மலர்கண்காட்சியிலே நான் 150-200 படம் எடுத்தேன்.. அதிலே 50 தான் தேறிச்சு.. அதுக்கு தான் சிரமம் பார்க்காம் என்னென்ன கோணத்திலே எடுக்க முடியுமோ.. அப்படியெல்லாம் எடுங்கன்னு சொல்லறேன்.... இந்த மாதிரி மெனகெட்டா 75% வேலை முடிஞ்சுது.. மிச்சம் இருக்கிர 25% தான் Post-production...

Post Production ன்னா.. அது image manupliation ன்னு நிறைய பேர் நினைச்சுகிட்டு இருக்காங்க.... அதனாலே தான் Post-production பண்ணாம இருக்க முக்கிய காரணம். ரெண்டும் வேறே வேறே. Post production . உள்ளதை இன்ன்னும் மெருகேத்தி காட்டுரது... Image Manuplation ன்னா... இல்லாத்த ஒண்ணை இருக்கிரா மாதிரி காட்டுரது... புரிஞ்சுதா... ஸோ கவலைப்படாம போட்டிக்கான உங்க படங்களை post production பண்ணி submit பண்ணுங்க... ஏர்க்கணவே படங்களை submit பண்ணிட்டீங்கன்னா... Dec15 வரை நேரம் இருக்கு.. post production பண்ணி அதுக்கான லின்க் குடுங்க.. போட்டியில் அதை சேர்த்துக்கொள்வோம்

சில macro படங்கள் உங்கள் பார்வைக்கு. ஒவ்வொரு படத்தையும் க்ளிக்கி பெருசா பாருங்க.. மேக்ரொவின் மாயாஜாலம் புரியும்.



Information and Image Source:-
http://digital-photography-school.com/blog/photographing-flowers/
http://en.wikipedia.org/wiki/Macro_photography
http://www.hankinslawrenceimages.com/newsletter/articles/flowers.htm

16 comments:

  1. இன்னுமொரு லிங்க்:

    http://digital-photography-school.com/blog/photographing-flowers/

    ReplyDelete
  2. நன்றி பிரகாஷ்
    லின்க் add பண்ணியாச்சு

    ReplyDelete
  3. நான் ஏதாவது பூக்கடைக்குள்ளே புகுந்திடலாமின்னு திட்டம் போட்டேன்.நீங்க பூவுக்கு சவரம் செய்யற மாதிரி மூஞ்சில தண்ணியெல்லாம் தெளிக்கனுமுன்னு சொல்றீங்க!ம்.ஹும் இது சரிப்பட்டு வராது.வேற ஏதாவது ஐடியாவோட ஆட்டத்துக்கு வர்ரேன்.

    பி.கு.5.45 காலை நேரம் ராசிபலன் வேற சொல்றீங்க.இந்த வாரம் வீக் எண்ட் தூக்கம் போச்சு.

    ReplyDelete
  4. Perfecto!!
    நம்ம போட்டிக்கு ஏத்த கனக்கச்சிதமான போஸ்ட்!!!
    சொல்ல வேண்டியது எல்லாம் காரெக்ட்டா சொல்லிட்டீங்க,இனி படங்கள் எப்படி வருதுன்னு பார்ப்போம்!! :-)

    ReplyDelete
  5. @ Surveysan
    thank you

    @நட்டு
    //பூவுக்கு சவரம் செய்யற மாதிரி மூஞ்சில தண்ணியெல்லாம் தெளிக்கனுமுன்னு சொல்றீங்க!///
    இப்படி எல்லாம் சொலக்கூடாது.. ஒரு முறை நீர்-துளியுடன் படம் எடுத்து உங்க லேப்டாப்லே full screen லே பாருங்க... அப்புறம் சொல்லுங்க.. எப்படி இருந்ததுன்னு.. ஓ கே வா ? ?

    @Cvr
    Thank you very much

    ReplyDelete
  6. My macro attempt long back. It has no post processing. Raw, macro photo

    http://picasaweb.google.com/kirankumar.gosu/Imaging/photo#5108656752967497506


    ~Truth

    ReplyDelete
  7. ம்ம்...புதிதாக ஒன்றை கற்றுக் கொண்டேன். நன்றி...

    //பூவை பறித்து படம் எடுக்கணும்னா... பறித்த 45 min க்குள்ளே எடுக்கணும்//

    எங்கோ படித்தது...

    "பூக்களை ரசிப்பவர்கள்
    அதை செடியிலேயே
    சிரிக்க விடுவர்"-னு

    ReplyDelete
  8. Truth
    Macro நல்லா வந்திருக்கு.. இன்னும் பல angle லெ முயர்ச்சி பண்ணி பாருங்க.. அம்சாமான படங்கள் கிடைக்கும்

    ReplyDelete
  9. வாங்க சீனு..
    //
    "பூக்களை ரசிப்பவர்கள்
    அதை செடியிலேயே
    சிரிக்க விடுவர்"-ன/////

    உண்மைதான்..
    புகைப்படக்க்லையும்
    க்ஷண-நேரத்தை
    பத்திரப்படுத்தும்
    கவிதை தானே ? ?

    ReplyDelete
  10. Deepa.



    அருமையான தகவல்கள். வாழ்த்துக்கள். குளோஸ் அப் க்கும் மேக்ரோவிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது, பெரும்பாலோர் இரண்டுமே ஒன்று என்ற அளவில் தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.


    -- Jeeves

    ReplyDelete
  11. உண்மை தான் ஜீவ்ஸ்...
    வித்தியாசத்தை தெரிஞ்சுக்க ஒரே வழி
    same subject - same zoom லே without macro but must be a closeup shot .... and ... with macro & reasonable adjustment in the focus (line-length)

    இப்படி ஒரே விஷ்யத்தை ரெண்டு விதமா படமமெடுத்து "full screen" லே பார்த்தா தான் வித்தியாசம் புரியும்.. இதுக்கு ஏதாவது படம் அகப்படுதான்னு பார்த்து தான் பதிவு போடணும்

    நான் closeup photography ன்னு சொன்னது in general sense... :) thats all

    ReplyDelete
  12. Deepa,

    You are just rocking asusual girl:)

    ReplyDelete
  13. priya said...

    Deepa,

    You are just rocking asusual girl:)//


    repeateeeeee

    -- jeeves

    ReplyDelete
  14. Dear sir,

    Please tell me something about focus point

    though i am professional photographer i am confusing about focussing,

    Focus point need for bust couples, standing couples and function photos
    Thank you

    Muralidharan

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff