வணக்கம் மக்கா,
மேக்ரோ படங்கள் எடுப்பதற்கான வழிமுறைகள் பற்றிய தொடரை ஆரம்பிச்சுட்டு அதை கண்டுக்காம விட்டதுக்கு என்னை மன்னிச்சுருங்க. அந்த தொடரை தூசி தட்டி மறுபடியும் ஆரம்பிச்சாச்சு.
இந்த பதிவுல, Diopters(க்ளோஸ் அப் லென்ஸ்) மற்றும் Extension Tubes(எக்ஸ்டன்சன் டுயுப்) ஆகிய வழிமுறைகளின் எடுத்துக்காட்டுகளை பார்ப்போம்.
Diopters(க்ளோஸ் அப் லென்ஸ்):
கீழே உள்ள படம் 70-300mm லென்சின் உதவியுடன் எடுக்கப்பட்டது.
இந்த நெருக்கத்தில் தான் 7௦-3௦௦mm லென்சில் எடுக்க முடிந்தது.
பின்னர் 5T க்ளோஸ் அப் லென்சினை 7௦-3௦௦mm லென்சில் பொருத்தி எடுக்கப்பட்ட படம் கீழே.
70-300mm லென்சின் முன்பகுதி (க்ளோஸ் அப் லென்ஸ் பொருத்துவதற்கு முன்னாள்)
5T க்ளோஸ் அப் லென்ஸ்
70-300mm லென்சின் முன்பகுதி (க்ளோஸ் அப் லென்ஸ் பொருத்திய பின்)
SLR காமிராக்களில் மட்டும் அல்ல, சில Canon, Nikon, Panasonic Prosumer வகை காமிராக்களில்(eg Canon G10/G11, Canon S5 IS, Nikon Coolpix 5400, Lumix G1 etc) க்ளோஸ் அப் லென்சினை பொருத்தலாம். அதற்க்கு லென்ஸ் adapter வேண்டும். Prosumer காமிராக்களில் "Raynox DCR-250", "Raynox DCR 150" போன்ற க்ளோஸ் அப் லென்ஸ்களை பயன் படுத்தலாம்.
Extension Tubes(எக்ஸ்டன்சன் டுயுப்):
கீழே உள்ள படமும் 70-300mm லென்சினை மட்டும் பயன்படுத்தி எடுக்கப்பட்டது.
இந்த லென்சில் Kenko 20mm Extension tube பொருத்தி எடுக்கப்பட்ட படம் கீழே.
Kenko 20mm Extension tube
70-300mm லென்சில் Kenko 20mm Extension tube பொருத்தப்பட்ட பின்
இந்த எக்ஸ்டென்சன் டுயுப்கள் பல அளவில் கிடக்கும் (12mm, 20mm, 36mm etc). இவற்றை ஒன்றாக கூட சேர்த்து மாட்டலாம்.
லென்சின் இறுதி முனைக்கும், காமிரா சென்சாருக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரிக்க அதிகரிக்க, மேக்ரோ அளவும் பெரிதாகும். எக்ஸ்டன்சன் டுயுப் பயன் படுத்திய போது இந்த இடைவெளி அதிகரித்ததால் பூக்கள் பெரிதாக சென்சாரில் படம் பிடிக்கப்பட்டது.
போன பதிவில் கேட்கப்பட்ட கேள்விகள் -
//1:1 மேக்ரோவில் எக்ஸ்டென்சன் ட்யூப் யூஸ் பண்ணும்போது எந்த அளவு படத்தில் டீடெய்ல்ஸ் மாறாமல் வருகிறது?. //
எக்ஸ்டென்சன் டுய்பில் எந்த கண்ணாடியும் இல்லாததால் படத்தின் க்ளாரிட்டி கம்மி ஆகாது :)
//பொதுவாக எக்ஸ்டென்ஷன் ட்யூப்புகள் செமி மேக்ரோ லென்சுக்குத்தான் செட்டாகுமா அல்லது 1:1 மேக்ரோ லென்சுக்கும் செட்டாகுதா?//
எக்ஸ்டென்ஷன் ட்யூப்புகள் எல்லா வகையான லென்ஸ்களிலும் பயன் படுத்தலாம்.
//டெலிகன்வர்ட்டரில் 2Xஐ விட 1.4X ல் குவாலிட்டி வருவது போல எக்ஸ்டென்ஷன் ட்யூப்பில் எது நல்லா இருக்கும்? //
இடைவெளி அதிகம் ஆக ஆக வியு பைண்டர்ல காட்சி கொஞ்சம் இருட்டா தெரியும் (ஒளி கம்மியா சென்சார்ல பட்ரதால). மத்தபடி பிரச்சனை ஒன்னும் இல்லை.
உங்களுக்கு எதுவும் சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். மேலே கூறப்பட்ட வழிமுறைகள் பற்றி உங்களுக்கு மேலும் விபரம் தெரிஞ்சா அதையும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!!!
Showing posts with label Macro. Show all posts

Monday, April 12, 2010
Thursday, February 11, 2010
Macro படங்கள் எடுக்கும்போது ஏற்படும் பெரிய தொல்லை, படத்தின் முழு விவரங்களையும், ஃபோக்கஸ் செய்ய முடியாதது.
பெரிய அபெர்ச்சர் வைத்து எடுக்கும் மேக்ரோ படங்களில், மொத்த படத்தின் மிக குறுகிய விஷயங்களே, ஃபோக்கஸ் ஆகி, பளிச் என்று வரும். மற்ற இடங்கள், ஃபோக்கஸ் இல்லாத, மங்கலாய்தான் வரும்.
உதாரணத்துக்கு கீழே இருக்கும் படம். எனது கிட்டாரின் படம் அது. படத்தில், கம்பி ஃபோக்கஸிலும், கிட்டாரின் லோகோ மங்கலாயும் தெரிகிறது.
சில படங்களுக்கு, இந்த மாதிரி ஒரு DOF (depth) அழகைக் கொடுத்தாலும், மொத்த விஷயங்களும் பளிச்னு கொண்டு வரணும்னா என்ன பண்ணனும்?
ஒரே வழி(?) இதுதான்.
கேமராவை மேக்ரோ லென்ஸ் பொறுத்தி (லென்ஸ் இல்லாதவர்கள், reverse ring வாங்கி, சாதா லென்ஸை தலைகீழாய் போட்டு ), ட்ரைபோடில் வைக்கவும்
Manual மோடில் வைத்து, எடுக்க விருக்கும் மேக்ரோ விஷயத்தில் ஒரு பாகத்தை ஃபோக்கஸ் செய்யவும்.
க்ளிக்கவும்
அடுத்து, ஆடாமல் அசங்காமல், ஃபோக்கஸை கொஞ்சமாய் பின்னோ முன்னோ நகர்த்தி, சப்ஜெக்ட்டின், இன்னொரு பாகத்தை ஃபோக்கஸில் வைக்கவும்.
க்ளிக்கவும்
இப்படியே படத்தின் சகல பாகங்களையும், ஃபோக்கஸில் வருமாறு அமைத்து, க்ளிக்கிக் கொண்டே போகவும். பத்து பதினைஞ்சு படம் தேறும்.
இனி தான் வித்தை. எடுத்த படங்களை கணிப்பொரியில் தரவிறக்கம் செய்யவும்.
CombineZM ஒரு இலவச மென்பொறுள் இருக்கு, அதை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் எடுத்த பத்து பதினைந்து படங்களை, இந்த combineZMல் கொடுத்தால், அனைத்தையும் 'combine' செய்து, எல்லா படங்களிலிருந்தும், ஃபோக்கஸ் ஆன இடத்தை மட்டும் கோர்த்து, ஒரு அட்டகாசமான 'பளிச்' படத்தைக் கொடுக்கும்.
ட்ரை பண்ணிட்டுச் சொல்லுங்க. நானும் இன்னும் ட்ரை பண்ணிப் பாக்கலை. வீக்-எண்டுதான், பண்ணிப் பாக்கணும்.
மேலும் வாசிக்க:
விக்கியில்
Flickrல்
அழகான Focus Stack'd படங்களை ரசிக்க: Flickrல்
PiTல் மேக்ரோ பாடங்கள்
செய்முறை விளக்கம், இந்த வீடியோவில்:
சில படங்களுக்கு, இந்த மாதிரி ஒரு DOF (depth) அழகைக் கொடுத்தாலும், மொத்த விஷயங்களும் பளிச்னு கொண்டு வரணும்னா என்ன பண்ணனும்?
ஒரே வழி(?) இதுதான்.
Monday, September 28, 2009
வணக்கம் மக்கா,
நான் ஏற்கனவே சொல்லியபடி மேக்ரோ படங்களை நம்முடைய சாதாரன லென்ஸின் மூலம் கூட எடுக்கலாம். குறிப்பாக நம்முடைய லென்ஸின் "Minimum Focusing Distance" மாற்றி அமைக்க முடிந்தால், பொருட்களின் மிக அருகில் போகஸ் செய்து மேக்ரோ படங்கள் எடுக்க முடியும். சில வழி முறைகளை கீழே.
1.) Diopters(க்ளோஸ் அப் லென்ஸ்)
இந்த முறை மிகவும் எளியது. உங்களுடைய லென்ஸின் பில்டர் அளவிற்கு(52mm, 58mm, 62mm, 68mm, 77mm etc) ஏற்ப ஒரு க்ளோஸ் அப் லென்ஸ் வாங்கி நம் லென்ஸின் முன்னால் பொருத்தி விட வேண்டும் அவ்வளவு தான். இப்படி செய்வதால் நம் லென்ஸின் "Minimum Focusing Distance" அருகில் மாறி அமைந்து விடும். ஆட்டோ போகஸ் கூட வேலை செய்யும். மேலும் மற்ற காமிரா உற்பத்தியாளர்களின் க்ளோஸ் அப் லென்சை கூட பயன் படுத்தலாம். எடுத்துக்காட்டாக நிகான் லென்சில் கானான் க்ளோஸ் அப் லென்சை பொருத்தலாம்.
2). Extension Tubes (எக்ஸ்டன்சன் டுயுப்):
இந்த முறையில் உங்கள் லென்ஸின் இறுதிக்கும், காமிராவில் லென்ஸ் மாட்டும் இடத்திற்கும் இடைவெளியை உண்டாக்க வேண்டும். எக்ஸ்டன்சன் டுயுப்களில் வெறும் ஓட்டை தான் இருக்கும், கண்ணாடி பகுதி எதுவும் இருக்காது. இவற்றின் மூலம் இடைவெளியை ஏற்படுத்தலாம். இடைவெளி அதிகரிக்க, அதிகரிக்க பொருட்களின் அளவு காமிரா சென்சாரில் பெரிதாக இருக்கும். இந்த முறையில் "Minimum Focusing Distance" மாற்றம் இருக்காது. இந்த எக்ஸ்டென்சன் டுயுப்கள் பல அளவில் கிடக்கும் (12mm, 20mm, 36mm etc). இவற்றை ஒன்றாக கூட சேர்த்து மாட்டலாம். எல்லா எக்ஸ்டென்சன் டுயுப்களிலும் ஆட்டோ போகஸ் வேலை செய்யாது. "Kenko" எக்ஸ்டென்சன் டுயுப்களில் ஆட்டோ போகஸ் வேலை செய்யும், மற்ற டுயுப்களை பார்க்கும் பொது விலையும் குறைவு. (எக்ஸ்டென்சன் டுயுப்களின் குறை என்னவென்றால், வெறும் லென்சை பயன் படுத்தும் பொது கிடைக்கும் ஒளி அளவை விட கம்மியாக இருக்கும், இதனால் ஷட்டர் வேகம் கொஞ்சம் குறையும்.)
மற்ற வழி முறைகள் விரைவில்...

Monday, September 14, 2009
வணக்கம் மக்கா,
எல்லோரும் எப்படி இருக்கீங்க? நம்மோட புகைப்பட பொட்டியில பலவற்றை படம் பிடிக்குறோம். பெரிய, பெரிய கட்டம் ஆகட்டும், மனிதர்கள் ஆகட்டும், விலங்கு மற்றும் பறவைகள் ஆகட்டும் எல்லாத்தையும் பிடிக்குறோம். இவற்றிற்கும் "மேக்ரோ" புகைப்படங்களுக்கும் என்ன வித்யாசம் ? எளிமையாக சொல்லனும்னா மிக சிறியவற்றை படம் பிடிக்கறது தான் மேக்ரோ. மேக்ரோ புகைப்படத்தின் உண்மையான விளக்கம் என்னவென்றால் "உங்கள் புகைப்பட பேட்டியின் உள்ள சென்சார்/பிலிம் அளவே உள்ளவற்றை புகைப்படமாக பதிவு செய்வது". எடுத்துகாட்டாக உங்க காமிராவின் சென்சார் அளவு 23.6mm x 15.8mm என்று வைத்து கொள்வோம். அதே அளவு உள்ளவற்றை முழுப்படமாக எடுத்தால் அது மேக்ரோ என்றாகிறது. இதை 1:1 மேக்ரோ என்று அழைப்பார்கள்.
இன்னும் புரியாதவர்களுக்கு, கீழே உள்ள படம் 200mm சாதரண லென்ஸ் உதவியுடன் எடுக்கப்பட்டது.

அதே பூ 200mm மேக்ரோ லென்ஸ் உதவியுடன் 1:1 அளவில் எடுக்கப்பட்ட படம் கீழே. இந்த படத்தில் காணப்படும் பூவின் பகுதின் அளவும், என்னுடைய காமிரா சென்சார் அளவும் (23.6mm x 15.8mm) ஒன்று தான்.

இந்த பூவின் உண்மையான அளவை தெரிந்து கொள்ள கீழே உள்ள படம் பயன் படும் என்று நினைக்குறேன்.

படங்களை பார்த்தாச்சா ? முதலில் எழும் கேள்வி என்னவென்றால் மேக்ரோ மற்றும் சாதரண லென்ஸ் இவற்றுக்கிடையில் இவ்வளவு வேற்றுமையா ? அது ஏன் ?
மேக்ரோ மற்றும் சாதரண லென்ஸ் இவை இடையே உள்ள முக்கிய வேற்றுமை "Minimum Focusing Distance". (அதாவது எவ்வளவு அருகில் உங்கள் லென்சினால் போகஸ் செய்ய முடியும் ?). மேக்ரோ லென்சில் இந்த தூரம் மிகவும் குறைவு(என்னுடைய சாதாரன 200mm லென்சின் Minimum Focus Distance 5 அடி, 200mm மேக்ரோ லென்சின் MFD 1.6 அடி). அதனால் உங்கள் காமிரா சென்சாரில் சிறியவற்றை கூட முழுவதும் பரப்பி படம் பிடித்து விடலாம்.
மேலும் மேக்ரோ லென்ஸ் சாதாரன லென்சை விட ஷார்ப்னஸ் மற்றும் தெளிவு அதிகம்.
ஆனால் மேக்ரோ லென்சின் பலகீனம் நம் பர்ஸை பதம் பார்ப்பது :( . பெரும்பாலும் நமக்கு 1:1 அளவில் மேக்ரோ படங்கள் தேவை படாது. 1:2, 1:4 கூட போதும். கீழே உள்ள படம் சாதாரன 200mm லென்ஸ் உதவியுடன் தான் எடுக்கப்பட்டது (ஆனால் வேறு சில வழிமுறைகளை பயன்படுத்தி).

வரும் வாரங்களில் சாதாரன லென்சின் மூலம் மேக்ரோ படம் எடுக்கும் வழிமுறைகளை காண்போம்.
இப்போ சில குறிப்புகளை பாப்போம்.
* பெரும்பாலும் நாம லென்சை சப்ஜெக்டுக்கு அருகில் சென்று படம் பிடிப்பதால் DOF மிகவும் மெலிதாக இருக்கும், அதனால aperature கொஞ்சம் கம்மி பண்ணி வைங்க (f/9, f/16, f/25)
* இப்போ aperature கம்மி பண்றதால ஷட்டர் வேகம் கம்மி ஆகிடும். அதனால முடிஞ்ச வரைக்கும் முக்காலி பயன் படுத்துங்க
* முக்காலி பயன் படுத்த முடியாத நேரங்களில், ISO கூட்டி படம் எடுங்க. அப்போ கொஞ்சம் ஷட்டர் வேகம் அதிகமா இருக்கும்.
* அப்புறம் DOF மெலிதாக இருப்பதால், உங்க சப்ஜடையும், சென்சாரையும் Parallela வச்சுக்கோங்க. அப்பத்தான் உங்க சப்ஜெடின் எல்லா பாகமும் தெளிவா வரும்.
வேறு எதாவது விளக்கம் வேணும்னா பின்னூட்டத்தில் சொல்லுங்க.
நன்றி ! வணக்கம் !
சின்னஞ்சிறு உலகம் - முன்னுரை

Tuesday, August 4, 2009
வணக்கம் மக்கா,
எல்லோரும் எப்படி இருக்கீங்க ? எல்லோரையும் பாத்து ரெம்ப நாள் ஆச்சு. படம் எடுத்தும் நாள் ஆச்சு. ஆணி நெறையன்னு காரணம் சொன்னாலும், சோம்பேறி தனம் தான் முக்கிய காரணம் :D
எதையும் கஷ்டப்பட்டு செய்ய கூடாது, இஷ்டப்பட்டு செய்யனும்னு நம்ம சஞ்சய் ராமசாமி சொல்லி இருக்காக. அதனால எனக்கு மிகவும் பிடித்த புகைப்பட பிரிவான மேக்ரோ புகைப்படங்கள் எடுக்க கத்துக்க முடிவு பண்ணி இருக்கிறேன். அப்படியே கற்று கொள்ளும் போது, நான் கற்றவற்றை இங்க சைடு கேப்புல பதிவா போட்டு உங்க கிட்ட பகிர்ந்துக்கலாம்னு எண்ணம் :)
நாம் பொதுவா எல்லாவற்றையும் மேலோட்டமா தான் பாப்போம். கொஞ்சம் உற்று நோக்கினால் பல புதிய விஷயம் மற்றும் தகவல்கள் புலப்படும். இந்த உலகத்தில் பல நுட்பமான/அழகான/ விசித்திரமான வடிவங்களும், வண்ணங்களும் உள்ளன. அவற்றை நாம் கூர்ந்து நோக்கா விட்டால் அவை நமக்கு புலப்படாது. உதாரணமாக ஒரு நகை வாங்கும் போது, அந்த நகையின் வேலைப்பாடு, வடிவம் மற்றும் இன்ன பிறவற்றை நாம் எவ்வாறு கூர்ந்து ஆராய்வோம். ஆனால் நாம் பயன் படுத்தும் நாணயங்கள், பேனா முதலியவற்றை உற்று பார்த்து இருப்போமா ? தும்பியின் கண் அடுக்குகளை கூர்ந்து பார்த்து இருப்போமா ? நம்மில் பலர் அழகிய மலர்களை கூட உற்று நோக்குவது இல்லை. சின்ன சின்ன பொருட்களிலும், தாவரம் மற்றும் பூச்சி வகைகளிலும் பல வடிவங்களும், வண்ணங்களும் இருக்கின்றன. அந்த அழகை எல்லாம் நம் புகைப்பட பெட்டிக்குள் அடைக்கும் வழிமுறைகள் பற்றிய விளக்கம் அளிக்க எங்களால் முடிந்த சிறிய முயற்சி இந்த தொடர் - "சின்னஞ்சிறு உலகம்".
படக்குறிப்பு - 90mm, f/18, 1/2 விநாடி
இந்த தொடரில் கீழ் கண்ட தலைப்புகளை விரிவாக பாக்க போறோம்.
* "மேக்ரோ" மற்றும் "க்ளோஸ் அப்" புகைப்படங்கள் பற்றிய விளக்கம் மற்றும் இவற்றின் வேற்றுமை
* அடிப்படை/முக்கிய குறிப்புகள்
* "மேக்ரோ" மற்றும் "க்ளோஸ் அப்" புகைப்படங்கள் எடுக்க பல்வேறு வழி முறைகள். (இது பெரிய பகுதி. இதுக்கே பல பாகங்கள் தேவை படும்.)
* களப்பணி குறிப்புகள். (On the Field Tips and Tricks)
படக்குறிப்பு - 90mm, f/5.6, 1/160 விநாடி
முடிஞ்சவரைக்கும் விளக்க படங்களோட இந்த தொடரை எழுதலாம்னு இருக்கிறேன். அப்புறம் இந்த தொடர் குறிப்பா DSLR/SLR பயனாளர்களை கருத்திற் கொண்டு எழுதப்படுகிறது. ஆனால் இதன் அடிப்படை கொள்கைகள் அனைவரும் பயன் படுத்தலாம். முடிந்தால் பாயிண்ட் அண்ட் சூட் குறிப்புகளையும் சேர்த்து எழுதுறேன்.
ஏதாவது தலைப்பு விடுபட்டு இருந்தா சொல்லுங்க. அதையும் சேர்த்துடுவோம்.
படக்குறிப்பு - 90mm, f/6.3, 1/250 விநாடி
பி.கு. - நெறைய வார்த்தைகள்(குறிப்பா டெக்நிக்கல் வார்த்தைகள் ஹி ஹி ஹி ) ஆங்கில தழுவலாக இருக்கும். அதற்க்கு தூய தமிழ் சொல் தெரிந்தால் சொல்லுங்க. மாத்திடுவோம்.
எல்லோரும் எப்படி இருக்கீங்க ? எல்லோரையும் பாத்து ரெம்ப நாள் ஆச்சு. படம் எடுத்தும் நாள் ஆச்சு. ஆணி நெறையன்னு காரணம் சொன்னாலும், சோம்பேறி தனம் தான் முக்கிய காரணம் :D
எதையும் கஷ்டப்பட்டு செய்ய கூடாது, இஷ்டப்பட்டு செய்யனும்னு நம்ம சஞ்சய் ராமசாமி சொல்லி இருக்காக. அதனால எனக்கு மிகவும் பிடித்த புகைப்பட பிரிவான மேக்ரோ புகைப்படங்கள் எடுக்க கத்துக்க முடிவு பண்ணி இருக்கிறேன். அப்படியே கற்று கொள்ளும் போது, நான் கற்றவற்றை இங்க சைடு கேப்புல பதிவா போட்டு உங்க கிட்ட பகிர்ந்துக்கலாம்னு எண்ணம் :)
நாம் பொதுவா எல்லாவற்றையும் மேலோட்டமா தான் பாப்போம். கொஞ்சம் உற்று நோக்கினால் பல புதிய விஷயம் மற்றும் தகவல்கள் புலப்படும். இந்த உலகத்தில் பல நுட்பமான/அழகான/ விசித்திரமான வடிவங்களும், வண்ணங்களும் உள்ளன. அவற்றை நாம் கூர்ந்து நோக்கா விட்டால் அவை நமக்கு புலப்படாது. உதாரணமாக ஒரு நகை வாங்கும் போது, அந்த நகையின் வேலைப்பாடு, வடிவம் மற்றும் இன்ன பிறவற்றை நாம் எவ்வாறு கூர்ந்து ஆராய்வோம். ஆனால் நாம் பயன் படுத்தும் நாணயங்கள், பேனா முதலியவற்றை உற்று பார்த்து இருப்போமா ? தும்பியின் கண் அடுக்குகளை கூர்ந்து பார்த்து இருப்போமா ? நம்மில் பலர் அழகிய மலர்களை கூட உற்று நோக்குவது இல்லை. சின்ன சின்ன பொருட்களிலும், தாவரம் மற்றும் பூச்சி வகைகளிலும் பல வடிவங்களும், வண்ணங்களும் இருக்கின்றன. அந்த அழகை எல்லாம் நம் புகைப்பட பெட்டிக்குள் அடைக்கும் வழிமுறைகள் பற்றிய விளக்கம் அளிக்க எங்களால் முடிந்த சிறிய முயற்சி இந்த தொடர் - "சின்னஞ்சிறு உலகம்".
படக்குறிப்பு - 90mm, f/18, 1/2 விநாடிஇந்த தொடரில் கீழ் கண்ட தலைப்புகளை விரிவாக பாக்க போறோம்.
* "மேக்ரோ" மற்றும் "க்ளோஸ் அப்" புகைப்படங்கள் பற்றிய விளக்கம் மற்றும் இவற்றின் வேற்றுமை
* அடிப்படை/முக்கிய குறிப்புகள்
* "மேக்ரோ" மற்றும் "க்ளோஸ் அப்" புகைப்படங்கள் எடுக்க பல்வேறு வழி முறைகள். (இது பெரிய பகுதி. இதுக்கே பல பாகங்கள் தேவை படும்.)
* களப்பணி குறிப்புகள். (On the Field Tips and Tricks)
படக்குறிப்பு - 90mm, f/5.6, 1/160 விநாடிமுடிஞ்சவரைக்கும் விளக்க படங்களோட இந்த தொடரை எழுதலாம்னு இருக்கிறேன். அப்புறம் இந்த தொடர் குறிப்பா DSLR/SLR பயனாளர்களை கருத்திற் கொண்டு எழுதப்படுகிறது. ஆனால் இதன் அடிப்படை கொள்கைகள் அனைவரும் பயன் படுத்தலாம். முடிந்தால் பாயிண்ட் அண்ட் சூட் குறிப்புகளையும் சேர்த்து எழுதுறேன்.
ஏதாவது தலைப்பு விடுபட்டு இருந்தா சொல்லுங்க. அதையும் சேர்த்துடுவோம்.
படக்குறிப்பு - 90mm, f/6.3, 1/250 விநாடிபி.கு. - நெறைய வார்த்தைகள்(குறிப்பா டெக்நிக்கல் வார்த்தைகள் ஹி ஹி ஹி ) ஆங்கில தழுவலாக இருக்கும். அதற்க்கு தூய தமிழ் சொல் தெரிந்தால் சொல்லுங்க. மாத்திடுவோம்.
Saturday, August 2, 2008
இது பத்தி நம்ம சர்வேசன் ஏற்கெனவே ஒரு பதிவு தெளிவா போட்டிருக்காரு!!அந்த பதிவின் பின்னூட்டத்திலும் நிறைய தகவல்கள் உண்டு!
ஆனா இன்னைக்கு இது பத்தி ஒரு நல்ல அசைபடம் அகப்பட்டது.அதான் உங்க கிட்ட பகிர்ந்துக்களாம்னு...
quick video 4, extreme macro photography trick from Jim Talkington on Vimeo.

Thursday, July 3, 2008
படம் பிடிப்பதில் உள்ள ஆர்வக் கோளாறினால், சில பல ஆயிரங்களை எடுத்து விட்டு, ஓரளவுக்கு நல்ல DSLR காமிரா வாங்கிடறோம்.
இந்த DSLR கேமராலயும் நல்ல நல்ல படங்களா க்ளிக்கித் தள்ளறோம்.
ஆனா பாருங்க, எந்த அளவுக்கு செலவு பண்றோமோ, அந்த அளவுக்குதான், கேமராவில் வசதிகள் இருக்கும்.
சமீபத்தில் நான் வாங்கின canon rebel xtiல, 18-55mm lense தான் இருக்கு.
தூரத்தில் இருக்கும் பறவையோ, வானத்தில் இருக்கும் நிலாவையோ, பூக்களுக்குள் இருக்கும் மகரந்தத்தையோ இதைக் கொண்டு படம் பிடிக்க முடியாது.
இதுக்கு தனியா ஒரு பெரிய லென்ஸும் (telephoto 70-500mm), ஒரு macro லென்ஸும் வாங்கி வைக்கணும்.
ஆனா, என்ன எடுத்துக்கிட்டா, என்னுடைய 90% படங்கள், 18-55mm கொண்டே எடுத்திடலாம். 10% படங்கள் எடுக்க, என்னாத்துக்கு, தேவையில்லாம பெரிய செலவு செய்யணும்னு, telephoto, macro லென்ஸெல்லாம் வாங்காம காலம் தள்ளியாச்சு.
18-55mm லென்ஸ் வச்சுக்கிட்டு, ஒரு பூவை ஒரு அடி தள்ளி நின்னு, இந்த மாதிரிதான் எடுக்க முடியும்.
இந்தப் படத்தை பாத்த நம்ம ஜீவ்ஸ், என் கிட்ட இந்தப் பூவின் இதழ்களில் படிந்திருக்கும் பனித்துளியின் க்ளோஸ்-அப் இருக்கான்னு கேட்டு, வெந்த புண்ணுல வேலப் பாய்ச்சினாரு.
அடடா, அந்த அளவுக்கு கிட்டப் போய் அந்த பனித்துளிய எடுத்தா, ஜம்முனு இருக்குமே, பேசாம மேக்ரோ லென்ஸ் வாங்கிடலாமா இந்த வாரம்னு தீவிரமா யோசிச்சு எங்க குறைந்த விலைக்கு விக்கறான்னு தேட ஆரம்பிச்சேன்.
அந்தத் தேடலின் போதுதான் ஒரு நுட்பம் கண்ணில் பட்டது.
அதாவது, என்ன மாதிரி DSLR கேமரா வச்சிருக்கரவங்க, தனியா macro லென்ஸ் வாங்கமலே, தன்னிடம் இருக்கும் 18-55mm உதவியுடன் macro படங்கள் எடுப்பது எப்படின்னு சொல்லியிருக்காங்க.
முதலில் அதை படிக்கும்போது ஆச்சரியமா இருந்தது, ஏதோ ஏப்ரல்-1 மேட்டர் மாதிரி. ஆனா, இன்னிக்கு அதை முயற்சி செய்து படங்கள் க்ளிக்கியபோது, பெரிய ஆச்சரியம் தான் போங்க.
மக்கா, என்னமா ரூம் போட்டு யோசிக்கறாங்கன்னு ஒரே ஆச்சரியமா போயிடுச்சு.
டெகினிக்கு என்னவா? இதோ சொல்லிடறேன் (மூலம் இங்கே)
1) கேமராவ கைல எடுத்து ஆன் பண்ணிக்கங்க
2) கேமராவின் டயலை 'பூ' modeக்கு மாத்துங்க. (இல்லன்னா, உங்க focal lengthஐ manual modeல சின்னதா தேர்ந்தெடுத்துங்கங்க. eg., 5.6)
3) எந்த பொருளை கிட்டப் போய் எடுக்க ஆசப்பட்டீங்களோ, அதை ஃபோக்கஸ் பண்ணிக்கங்க.
4) இப்ப, உங்க லென்ஸ கழட்டுங்க. (அட, ஆமாங்க, மெய்யாலுமேதான் சொல்றேன்)
5) லென்ஸை தலைகீழ திருப்பி, இந்தப் பக்கத்தை, கேமராவின் பாடியோட ஒட்டிப் பிடிங்க ( இது சரியா பொருந்தாது, அதனால, ஜாக்கிரதையா கையால் அழுத்திப் பிடிக்கணும். உள்ள வெளிச்சம் போகாத மாதிரி)
6) இப்ப, பொருளை நோக்கி கேமராவை பிடித்து, கொஞ்சம் முன்னும் பின்னும் நகர்ந்து, எடுக்க வேண்டிய படம் ஃபோக்கஸ் ஆகும் வரை முயலவும்.
7) பொருள் பளிச்னு தெரியுதா? டகால்னு படத்தை க்ளிக்குங்க.
8) ஆச்சரியப் படுங்க! :)
ரொம்ப சுலபமான அழகான டெக்னிக்கு இது!
கண்டுபிடித்து சொன்ன மகானுக்கு நன்னி!
இனி, இந்த நுட்பத்தை வைத்துப் பிடித்த படங்கள் சில:
இது,'சாதா' 'பூ' மோடில் எடுத்தது (before):

இது மேக்ரோ நுட்பத்துடன் எடுத்தது:

இந்தப் பூக்களும் மேக்ரோ நுட்பத்துடன் எடுத்தது:

இது எல்லா கேமராலயும் வேலை செய்யுமான்னு தெரியல.Canon rebel xtiல எனக்கு வேலை செஞ்சுது. உங்க கேமராவில் முயன்று பார்த்து, படங்களைப் பதியவும்.
கேமரா லென்ஸை கழற்றிப் பிடிக்கும்போது, ஜாக்கிரதையா கையாளவும். எதையாவது ஒடச்சீங்கன்னா, நான் பொறுப்புலேது :)
அசத்துங்க!
நன்றி!
மூலப் பதிவெழுதிய flickr நண்பருக்கு நன்றிகளைச் சொல்லிடுங்க, இங்க க்ளிக்கி
இதோட அறிவியல் விளக்கம் இங்கே
-சர்வேசன்
இந்த DSLR கேமராலயும் நல்ல நல்ல படங்களா க்ளிக்கித் தள்ளறோம்.
ஆனா பாருங்க, எந்த அளவுக்கு செலவு பண்றோமோ, அந்த அளவுக்குதான், கேமராவில் வசதிகள் இருக்கும்.
சமீபத்தில் நான் வாங்கின canon rebel xtiல, 18-55mm lense தான் இருக்கு.
தூரத்தில் இருக்கும் பறவையோ, வானத்தில் இருக்கும் நிலாவையோ, பூக்களுக்குள் இருக்கும் மகரந்தத்தையோ இதைக் கொண்டு படம் பிடிக்க முடியாது.
இதுக்கு தனியா ஒரு பெரிய லென்ஸும் (telephoto 70-500mm), ஒரு macro லென்ஸும் வாங்கி வைக்கணும்.
ஆனா, என்ன எடுத்துக்கிட்டா, என்னுடைய 90% படங்கள், 18-55mm கொண்டே எடுத்திடலாம். 10% படங்கள் எடுக்க, என்னாத்துக்கு, தேவையில்லாம பெரிய செலவு செய்யணும்னு, telephoto, macro லென்ஸெல்லாம் வாங்காம காலம் தள்ளியாச்சு.
18-55mm லென்ஸ் வச்சுக்கிட்டு, ஒரு பூவை ஒரு அடி தள்ளி நின்னு, இந்த மாதிரிதான் எடுக்க முடியும். இந்தப் படத்தை பாத்த நம்ம ஜீவ்ஸ், என் கிட்ட இந்தப் பூவின் இதழ்களில் படிந்திருக்கும் பனித்துளியின் க்ளோஸ்-அப் இருக்கான்னு கேட்டு, வெந்த புண்ணுல வேலப் பாய்ச்சினாரு.
அடடா, அந்த அளவுக்கு கிட்டப் போய் அந்த பனித்துளிய எடுத்தா, ஜம்முனு இருக்குமே, பேசாம மேக்ரோ லென்ஸ் வாங்கிடலாமா இந்த வாரம்னு தீவிரமா யோசிச்சு எங்க குறைந்த விலைக்கு விக்கறான்னு தேட ஆரம்பிச்சேன்.
அந்தத் தேடலின் போதுதான் ஒரு நுட்பம் கண்ணில் பட்டது.
அதாவது, என்ன மாதிரி DSLR கேமரா வச்சிருக்கரவங்க, தனியா macro லென்ஸ் வாங்கமலே, தன்னிடம் இருக்கும் 18-55mm உதவியுடன் macro படங்கள் எடுப்பது எப்படின்னு சொல்லியிருக்காங்க.
முதலில் அதை படிக்கும்போது ஆச்சரியமா இருந்தது, ஏதோ ஏப்ரல்-1 மேட்டர் மாதிரி. ஆனா, இன்னிக்கு அதை முயற்சி செய்து படங்கள் க்ளிக்கியபோது, பெரிய ஆச்சரியம் தான் போங்க.
மக்கா, என்னமா ரூம் போட்டு யோசிக்கறாங்கன்னு ஒரே ஆச்சரியமா போயிடுச்சு.
டெகினிக்கு என்னவா? இதோ சொல்லிடறேன் (மூலம் இங்கே)
1) கேமராவ கைல எடுத்து ஆன் பண்ணிக்கங்க
2) கேமராவின் டயலை 'பூ' modeக்கு மாத்துங்க. (இல்லன்னா, உங்க focal lengthஐ manual modeல சின்னதா தேர்ந்தெடுத்துங்கங்க. eg., 5.6)
3) எந்த பொருளை கிட்டப் போய் எடுக்க ஆசப்பட்டீங்களோ, அதை ஃபோக்கஸ் பண்ணிக்கங்க.
4) இப்ப, உங்க லென்ஸ கழட்டுங்க. (அட, ஆமாங்க, மெய்யாலுமேதான் சொல்றேன்)
5) லென்ஸை தலைகீழ திருப்பி, இந்தப் பக்கத்தை, கேமராவின் பாடியோட ஒட்டிப் பிடிங்க ( இது சரியா பொருந்தாது, அதனால, ஜாக்கிரதையா கையால் அழுத்திப் பிடிக்கணும். உள்ள வெளிச்சம் போகாத மாதிரி)
6) இப்ப, பொருளை நோக்கி கேமராவை பிடித்து, கொஞ்சம் முன்னும் பின்னும் நகர்ந்து, எடுக்க வேண்டிய படம் ஃபோக்கஸ் ஆகும் வரை முயலவும்.
7) பொருள் பளிச்னு தெரியுதா? டகால்னு படத்தை க்ளிக்குங்க.
8) ஆச்சரியப் படுங்க! :)
ரொம்ப சுலபமான அழகான டெக்னிக்கு இது!
கண்டுபிடித்து சொன்ன மகானுக்கு நன்னி!
இனி, இந்த நுட்பத்தை வைத்துப் பிடித்த படங்கள் சில:
இது,'சாதா' 'பூ' மோடில் எடுத்தது (before):

இது மேக்ரோ நுட்பத்துடன் எடுத்தது:

இந்தப் பூக்களும் மேக்ரோ நுட்பத்துடன் எடுத்தது:

இது எல்லா கேமராலயும் வேலை செய்யுமான்னு தெரியல.Canon rebel xtiல எனக்கு வேலை செஞ்சுது. உங்க கேமராவில் முயன்று பார்த்து, படங்களைப் பதியவும்.
கேமரா லென்ஸை கழற்றிப் பிடிக்கும்போது, ஜாக்கிரதையா கையாளவும். எதையாவது ஒடச்சீங்கன்னா, நான் பொறுப்புலேது :)
அசத்துங்க!
நன்றி!
மூலப் பதிவெழுதிய flickr நண்பருக்கு நன்றிகளைச் சொல்லிடுங்க, இங்க க்ளிக்கி
இதோட அறிவியல் விளக்கம் இங்கே
-சர்வேசன்
Monday, December 3, 2007
இந்த மாத போட்டி தலைப்பு போட்டு 3 நாள் கூட ஆகலை.. அதுக்குள்ளேயே பதிவெல்லாம் கம-கமன்னு மணக்குது.. நறுமணம் மட்டும் இருந்தா போதுமா.. பூக்காரம்மா. பூ தொடுக்கும்போது பார்த்திருக்கீங்களா ? ?... கையிலே கிடைச்ச அரும்பை அப்படியே தொடுக்கவே மாட்டாங்க... ஒவ்வொரு அரும்பையும் நல்லா (க்ளோசப்லே) பார்த்து பார்த்து தான் தொடுப்பாங்க... தொடுக்கும்போது அவங்க பார்க்கிர கண்ணோட்டம் தான் படம் எடுக்கும் போதும் நமக்கு வேணும்.. ஏன்னா... மலரின் எந்த குணம் உங்களை படம் எடுக்க தூண்டிச்சோ.. அதே குணத்தை படத்தை பார்க்கும் போதும் பார்வையாளர்க்கு நீங்க காண்பிக்கணும். அதுக்காக தான் கேமேறா கம்பனிகாரங்க Macro ன்னு ஒரு செட்டிங் குடுத்திருக்காங்க.
அபர்ச்சர் ...ஷட்டர் ஸ்பீடு.. னெல்லாம் சொல்ல ஆரம்பிச்சாலே எல்லாரும் ஸ்பீடா ஓடிபோயிடுவீங்கன்னு எனக்கு தெரியும்.. ஸோ.. முடிஞ்ச வரையில் ஸிம்பிளா சொல்ல டிரை பண்ணறேன். Macro photography ஐ Close-up photography ன்னு சொல்லலாம். ஏன்னா பேருக்கேத்தாப்போல... கிட்ட இருக்கும் வஸ்து ( ஸப்ஜெக்ட்) ஐ இன்னும் கிட்டத்திலே .. பூதக்கண்ணடி வச்சு போட்டோ பிடிக்கரது. உதாரணத்துக்கு... செம்பருத்தி பூவை (கெமேரா இல்லாம.. சும்மா ) பார்க்கும் போது நாம் சாதாரணா கவனிப்பது .. செடி ( சின்னதா / பெருசா), தோட்டத்துக்கு நடுவிலே இருக்கா.. மூலையிலே இருக்கா, பூவின் நிறம் , இதழ் வடிவம் , petal-span ( பூ பெரிசா / சிருசா). ஆனால், கொஞ்சம் கிட்டே போய் மகரந்தம் , மகரந்த-பை , மகரந்த-பொடி எல்லாம் பார்க்கும் போது... நம்ம கண்களுக்கு (our field of vision)செடி - இலை - எல்லாம் தெரியாது.
கெமேராவிலே இருக்கும் Macro செட்டிங்கஸும் அது மாதிரி தான்.ஒரு ரோஜாப்பூவை முழுசா பார்த்தாலும் நல்லா இருக்கும், அதையே macro போட்டு, இதழ்களின் curves ஐ படம் புடிச்சாலும் நல்லா இருக்கும்..முதல் படம் ஒரு குழந்தையின் கண்ணோட்டத்திலே பார்த்தா மாதியும், ரேண்டாவது படத்தில் நாமே தேனீ மாதிரி பூவுக்குள்ளே போய் பார்த்து வராமாதிரி ஒரு அனுபவம் இருக்கும்... எதுவுமே perspective லே தான் இருக்கு
இனி உங்க கெமேராலே macro எப்படி செட் பண்ணலாம்ன்னு பார்க்கலாமா?
இதுக்கு நீங்க ஸ்பெஷலா இதுவும் செய்ய வேண்டியதில்லை.. (No manual adjustments for aperture / Focal length / shutter settings blah.. blah.. blah... நாம எதையோ நோண்டப்போய், ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆக... உள்ளதும் போச்சுடா நோள்ள கண்ணான்னு.. அப்புறம் எல்லாரும் என்னை தான் திட்டுவீங்க...). கெமேரா கம்பேனிக்கரனே macro ன்னு ஒரு ஸெட்டிங்க் குடுத்திருப்பான்.. அது உங்க கெமேராலே எங்கே இருக்குன்னு camera-manual அல்லது camera-company-website லே போய் பார்த்து சரியா எழுதி வச்சுக்கோங்க. அது படி செஞ்சா போதும்.. Advanced photography techniques கத்துக்கும்போது நீங்களே செட்டிங்ஸை மாத்தலாம்... இங்கே என்ன நடக்குதுன்னா... ஓரத்திலே இருக்கிரதெல்லாம் ஒரு-மாதிரி blurred ஆகவும் , நடுவிலே இருப்பதும் மட்டும் sharp ஆகவும் வரும்... சொல்லணும்னா.. fade-in /fade-out எபெக்ட் கிடைக்கும். மலர்களுக்கும் அது தானே அழகு.
Macro செட் பண்ணினதோட வேலை முடிஞ்சுதா ??
Macro செட் பண்ணினேன், படம் எடுத்தேன் , கம்ப்யூட்டர்லே பார்த்தேன்னு இல்லாம, ... ஒரே விஷயத்தை ( ஸப்ஜெக்ட்டை) பல கோணத்திலே பல முறை படம் எடுங்க ( காசா-பணமா.... டிஜிடல் கெமேரா தானே... பிலிமா வெஸ்ட்டாக போகுது)... கஞ்சத்தனம் பண்ணாம டகா-டகான்னு எடுத்து தள்ளுங்க. ஜூம் பண்ணி - ஜூம் பண்ணாம - கிட்டே போய் - தூர இருந்து - surroundings ஐ சேற்த்து - surroundings இல்லாம - ஸப்ஜெக்ட் பட்டுமே viewfinder ஐ முழுசா அக்கிரமிச்சா மாதிரி - நீங்களா ஒரு ambiance ஐ வச்சு அதிலே சப்ஜெக்ட்டை க்ளிக்கி - ஸ்டூல் மேலே நின்னு - குப்புற படுத்து - எப்பெப்பிடியெல்லாம் ஒரு சப்ஜெக்ட்டை படம் எடுக்க முடியும்ன்னு உங்க logic க்கு தோணுதோ அப்படி எல்லாம் 20-30 க்ளிக்கினீங்கன்னா.. அதிலே ஒரு 5 -10 வது தேறும்.
இதிலே என்ன விஷேஷம்ன்னா... மலர்கள் சலிச்சுக்காம போஸ் குடுக்கும் , என்ன தான் மூஞ்சிகிட்டே கெமேராவை கொண்டு போனாலும் "எக்ஸ்ப்ரெஷண்" மாறாம சிரிக்கும். யோசிச்சு பாருங்க... மனுஷனை நிறுத்தி மேலே சொன்ன வித்தையெல்லாம் காட்டினீங்கன்னா...conscious யாகி expression எல்லாம் ஓடிப்போயிடும்
மலர்கள் மலரும்போது
மலர்களை படம் எடுக்கணும்ன்னா ... கொஞ்சம் இல்லை ரொம்பவே மெனெக்கடணும்.
Post Production ன்னா.. அது image manupliation ன்னு நிறைய பேர் நினைச்சுகிட்டு இருக்காங்க.... அதனாலே தான் Post-production பண்ணாம இருக்க முக்கிய காரணம். ரெண்டும் வேறே வேறே. Post production . உள்ளதை இன்ன்னும் மெருகேத்தி காட்டுரது... Image Manuplation ன்னா... இல்லாத்த ஒண்ணை இருக்கிரா மாதிரி காட்டுரது... புரிஞ்சுதா... ஸோ கவலைப்படாம போட்டிக்கான உங்க படங்களை post production பண்ணி submit பண்ணுங்க... ஏர்க்கணவே படங்களை submit பண்ணிட்டீங்கன்னா... Dec15 வரை நேரம் இருக்கு.. post production பண்ணி அதுக்கான லின்க் குடுங்க.. போட்டியில் அதை சேர்த்துக்கொள்வோம்
சில macro படங்கள் உங்கள் பார்வைக்கு. ஒவ்வொரு படத்தையும் க்ளிக்கி பெருசா பாருங்க.. மேக்ரொவின் மாயாஜாலம் புரியும்.

Information and Image Source:-
http://digital-photography-school.com/blog/photographing-flowers/
http://en.wikipedia.org/wiki/Macro_photography
http://www.hankinslawrenceimages.com/newsletter/articles/flowers.htm

- பூக்களை outer ல் படம் எடுக்க மிக சிறந்த நேரம் 5.45 - 6.30 am ::::6.15 - 6.45 pm
- பூவை பறித்து படம் எடுக்கணும்னா... பறித்த 45 min க்குள்ளே எடுக்கணும்
- மழை நல்லா கொட்டி தீர்ந்து கொஞ்சூண்டு சூர்ய வெளிச்சம் வருமே... இந்த நேரத்தை மிஸ் பண்ணாம உங்க மெம்மரி கார்ட் full ஆகுர வரை படம் எடுங்க... believe me... these will be among your treasured pictures
- நல்ல dark colored பூக்கள்ள்ன்னா... light background ( butter paper - பழைய வேஷ்டி.. கட்டம் போட்ட லுங்கியெல்லாம் யூஸ் பண்ணக்கூடாது ) லே எடுப்பா இருக்கும்
- light colored பூக்கள் ( white rose , white hibiscus) ஐ dark background ( Black -paper (these are almost like black chart paper)... dark colored (preferably black , dark brown)... bedsheets without any prints) லே எடுக்கலாம்
- Barber shop லே தண்ணி ஸ்பிரே பண்ண வச்சிருப்பாங்களே... அது மாதிரி big-bazaar போய் வாங்கிட்டு வாங்க... ஏன்னா கைய்யாலெ தண்ணி தெளிச்சா... சரியா இருக்காது.. இதழில் நீர்-துளி வேணும்ன்னா ஸ்பிரே தான் பண்ணனும்.... அதுக்கு தான் இது
Post Production ன்னா.. அது image manupliation ன்னு நிறைய பேர் நினைச்சுகிட்டு இருக்காங்க.... அதனாலே தான் Post-production பண்ணாம இருக்க முக்கிய காரணம். ரெண்டும் வேறே வேறே. Post production . உள்ளதை இன்ன்னும் மெருகேத்தி காட்டுரது... Image Manuplation ன்னா... இல்லாத்த ஒண்ணை இருக்கிரா மாதிரி காட்டுரது... புரிஞ்சுதா... ஸோ கவலைப்படாம போட்டிக்கான உங்க படங்களை post production பண்ணி submit பண்ணுங்க... ஏர்க்கணவே படங்களை submit பண்ணிட்டீங்கன்னா... Dec15 வரை நேரம் இருக்கு.. post production பண்ணி அதுக்கான லின்க் குடுங்க.. போட்டியில் அதை சேர்த்துக்கொள்வோம்
சில macro படங்கள் உங்கள் பார்வைக்கு. ஒவ்வொரு படத்தையும் க்ளிக்கி பெருசா பாருங்க.. மேக்ரொவின் மாயாஜாலம் புரியும்.

Information and Image Source:-
http://digital-photography-school.com/blog/photographing-flowers/
http://en.wikipedia.org/wiki/Macro_photography
http://www.hankinslawrenceimages.com/newsletter/articles/flowers.htm
Subscribe to:
Posts (Atom)