இதுவரை நடந்த போட்டிகளில், போட்டிக்கான தலைப்பாக ஒரே ஒரு தலைப்பு தான் கொடுக்கப்பட்டு வந்தது. அந்த ஒரு தலைப்பும் கூட, போட்டியாளர்களை ஒரு குறுகிய வட்டத்திலிருந்து, நிர்ணயிக்கப்பட்ட கோட்பாட்டுக்குள் அமையும் விதம் போட்டிக்கான படத்தை அனுப்பும்படி செய்து வந்தோம். ஒரு சில முறை மட்டுமே 'open'ஆக உங்களுக்குப் பிடித்த விஷயத்தை பிடித்த விதத்தில் படம் எடுத்து அனுப்பலாம் என்று போட்டி அமைத்திருந்தோம்.
வருஷ ஆரம்பித்திலையே ஏன் இப்படி மொக்க பில்ட்-அப்புன்னு நீங்க நெனைக்கரது என் காதுல எக்கோ ஆகுது. பில்ட்-அப், இத்தோட நிறுத்திக்கினு, இந்த மாசம் போட்டி என்னான்னு சொல்றேன். வெயிட்டீஸ்.
போட்டித் தலைப்பு: 'சிறு கதைக்கு ஒரு படம்'
அதாவது, ஒரு சிறுகதையை படிச்சிட்டு, அந்த சிறுகதைக்கு ஏற்ற விதத்தில், ஒரு படத்தை 'நச்'னு க்ளிக்கி, போட்டிக்கு அனுப்பணும். உங்க கற்பனை குதிரைக்கும் நல்ல தீனி கிட்டும், பிற்தயாரிப்பிலும் கலக்க வழி கிட்டும் என்று நம்புகிறோம். எந்தச் சிறுகதை என்று ரொம்ப தேடவேண்டாம். கீழிருக்கும் 10 கதைகளில், ஏதாவது ஒரு கதைக்கு ஏற்றவாரு உங்கள் படம் இருக்க வேண்டும். போட்டிக்கான படத்தை ஈ.மெயிலில் அனுப்பும்போது, ஈ.மெயிலின் சப்ஜெக்ட்டிலும், படத்தின் பெயரிலும், சிறுகதையின் 'எண்'ணை குறிப்பிடுதல் நலம். இல்லைன்னா, picasaவில் கமெண்ட்டாக பின்னாளில் சேர்த்தாலும் போதும்.
1. நிமித்தகாரன் (அ) கனவுகளின் காதலி - Sridhar Narayanan
2. அப்பா சொன்ன நரிக்கதை - நிலா ரசிகன்
3. நறுமண தேவதை - எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன்
4. கடைசி இரவு - ராம்குமார் அமுதன்
5. சட்டை - முரளிகண்ணன்
6. வெள்ளை உருவத்தில் வில்லன் - பின்னோக்கி
7. ஹோம் வொர்க் - ஸ்ரீதேவி
8. கறுப்பு ஞாபகம் - ஆதிமூலகிருஷ்ணன்
9. நெல்லி மரம் - சதங்கா (Sathanga)
10. இக்கணம் இக்கதை - Nundhaa
விதிமுறைகள்: இங்கே
கடைசி தேதி, வழக்கமான 15 இல்லை. இந்த மாதம் 25 வரை நீட்டப்பட்டுள்ளது.
இணையத்திலிருந்து, சில சாம்பிள் படங்கள்:
3. நறுமண தேவதை - எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன்
source: Ethan Allen
9. நெல்லி மரம் - சதங்கா (Sathanga)
source: Sathanga
கலந்து கொண்டு சிறப்பிக்கப் போகும் அனைவருக்கும் அட்வான்ஸ்ட் நன்றீஸ்!
-சர்வேசன்
கதைகளுக்கான குட்டி ரெவ்யூ இங்கே படிக்கலாம்.
ReplyDeleteஇந்தக் கதைகள், சிறுகதை போட்டியில், டாப்10ல் வந்தவை.
http://surveysan.blogspot.com/2009/11/20.html
Interesting topic...
ReplyDeleteKudos :)
வருசப்பிறப்பும் அதுவுமா இப்படிக் குண்டைத் தூக்கிப்போட்டால் எப்படி?
ReplyDeleteநரிக்கு நான் எங்கே போவேன்??????
அட்லீஸ்ட் எதாவது பூனைக்கதை இருந்துருக்கக்கூடாதா??
பார்க்கலாம். தேறுதான்னு......
பிட் 'சார்'களுக்கு ஹேப்பி நியூ இயர்.
வித்தியாசமான போட்டி. அருமை.
ReplyDelete@ துளசி மேடம்,
கவலையே படாதீங்க, பின்னோக்கியின் கதையில் வில்லனே பூனைதான்:)! ஆனா வெள்ளையா இருக்கணும் நினைவிருக்கட்டும்:))!
புத்தாண்டில் ஒரு புதுமையான தலைப்புகளில் PiT அடுத்து கட்டத்திற்கு நகர்கிறது என்பது உண்மைதான்
ReplyDeleteமிக அருமையான தலைப்புகள், வித்தியாசமான போட்டி நன்றிகள் பல... PiT உறுப்பினர்களுக்கு...
இக்கதைகள் ஒரு புத்தகமாக வெளியிடப் படப்போகிறது என்றே நினைக்கிறேன். ஒரு வேளை பின்னாட்களில் இப்புகைப்படங்கள் கதைக்கு பயன்படுத்தி பிரசுரிக்கப் பட்டால், புகைப் படத்தின் உரிமை யாரை சாரும்?
ReplyDelete-வித்யா
ஆஹா டைட்டிலுக்கு வித்தியாசமான செலக்ஷந்தான்!
ReplyDeleteஅசத்தப்போகும் பிட் ஒளி ஒவியர்களுக்கு வாழ்த்துக்கள் :)
திடீர் என ஒரு சந்தேகம், 10 கதைகளுக்குள் ஏதாவது ஒரு கதைக்கு ஒரு புகைப்படம்தான் ஒருவர் அனுப்ப வேண்டுமா? என்ற விபரம் தர வேண்டுகிறேன்...
ReplyDeleteநன்றீஸ் அனைவருக்கும். ஹாப்பி புது வருஷம்.
ReplyDeleteவித்யா
ReplyDelete////இக்கதைகள் ஒரு புத்தகமாக வெளியிடப் படப்போகிறது என்றே நினைக்கிறேன். ஒரு வேளை பின்னாட்களில் இப்புகைப்படங்கள் கதைக்கு பயன்படுத்தி பிரசுரிக்கப் பட்டால், புகைப் படத்தின் உரிமை யாரை சாரும்?////
கதைகள் புத்தகமாக வரும் நன்னாள் வந்தால், புகைப்படத்தின் உரிமை புகைப்படம் எடுத்தவரையே சேறும்.
கமல்கண்ணன்,
ReplyDelete///10 கதைகளுக்குள் ஏதாவது ஒரு கதைக்கு ஒரு புகைப்படம்தான் ஒருவர் அனுப்ப வேண்டுமா?///
ஆமாம். ஒரே ஒரு படம்தான் போட்டிக்கு அனுப்பணும்.
kasisiva, நீங்க அனுப்பிய படம் எந்த கதைக்கு என்பதை பிக்காஸா ஆல்பத்தில் தெரியப்படுத்தவும். நன்றி.
ReplyDeleteகொஞ்சம் கடினமான சவால்தான் பிற்தாயரிப்புல ரென்டு மூனு படம் இணைக்க சுதந்திரம் கிடைச்சா ,இண்ணும் அழகா பண்ணலாம்னு நினைக்கிறேன்.2
ReplyDeleteஒப்பாரி, with background and without backgroundனு ரெண்டு படம் இருக்கு. எது போட்டிக்கு?
ReplyDelete///கொஞ்சம் கடினமான சவால்தான்//// இதுவரை ரெண்டு பேர் தான் அனுப்பியிருக்கீங்க. என் வேலை சுலபமாயிடும்போல இருக்கு :)
-சர்வேசன்
//// பிற்தாயரிப்புல ரென்டு மூனு படம் இணைக்க சுதந்திரம் கிடைச்சா ,இண்ணும் அழகா பண்ணலாம்னு நினைக்கிறேன்/////
ReplyDeleteசெஞ்சிருக்கலாம். ஆனா, இப்ப டூ லேட். நீங்க ஒண்ணுக்கும் மேல க்ளிக்கியிருந்தால், தயவு செய்து, உங்க பதிவில் போட்டு பகிரவும். அதிலிருந்து சிறந்ததை உங்க ஆளுங்கள கேட்டு போட்டிக்கு அனுப்பலாம் :)
கலக்கலா இருக்கு உங்க படம்.
-சர்வேசன்
கம்பிமத்தாப்போட ஒரு பொடியன் ஃபோட்டோ இருக்கே. எந்த கதைக்கு அந்த படம்?
ReplyDeletewithout background படத்தையே, போட்டிக்கு எடுத்து கொள்ளவும். with background படம் pp செய்யப்பட்டுள்ளது.
ReplyDeleteலீவுல போனவங்களெல்லாம் திரும்பி வந்திருக்கமாட்டார்கள் என்று கொம்பேனி எண்ணுவதால், போட்டி ஜனவரி 25 வரை நீட்டப்பட்டுள்ளது.
ReplyDeleteஅனுப்பாதவங்க அனுப்புங்க.
வணக்கம்,
ReplyDeleteஏதோ நம்மால முடிந்தது.
http://shadowtjay.blogspot.com/2010/01/blog-post.html
Tjay
I have sent a photo for the contest.
ReplyDeleteபடம் அனுப்பிய அனைவருக்கும் நன்னி.
ReplyDeleteமுடிவுகள் விரைவில்.
-சர்வேசன்