Thursday, January 14, 2010
இரைச்சல் நீக்கம் - Noise reduction
Posted by
நாதஸ்
at
9:15 AM
13 comments:
Labels:
Lessons பாடங்கள்,
post production பிற்தயாரிப்பு,
நாதஸ்
வணக்கம் மக்கா,
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !
இன்னைக்கு நம் படங்களில் வரும் இரைச்சலை(noise) நீக்குவதுன்னு எப்படின்னு பாப்போம்.
இரைச்சலை போக்குவதற்கு பல நீட்சிகள் இணையத்தில் உள்ளன. எடுத்துகாட்டு - "NoiseWare", "Neat Image" "Dfine".
எல்லா நீட்சிகளும் பெரும்பாலும் ஒரே மாதிரி தான் இயக்க வேண்டி இருக்கும்.
மேலே சொன்ன நீட்சிகளில் "NoiseWare-Community Edition" இலவசமா கிடைக்கும். நம் பயன்பாட்டிற்க்கு இந்த நீட்சியே போதுமானது.
முதலில் இந்த நீட்சியை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.
கீழே உள்ள படத்தில் கொஞ்சம் இரைச்சல் இருகின்றது(குறிப்பாக Background )
பின்னர் உங்களுடைய படத்தினை இந்த நீட்சியில் திறந்து கொள்ளுங்கள்
இந்த நீட்சியில் இடது புறத்தில் இரைச்சலை நீக்குவதற்கு பல அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் "Default" செட்டிங்கை நான் பயன் படுத்துவேன்(நீங்கள் மற்ற செட்டிங்கை பயன்படுத்தி முயன்று பாருங்கள்). தேவையான செட்டிங்கை தேர்வு செய்து "Go" பொத்தானை அமுக்கவும்.
இப்போ இரைச்சல் நீங்கிய படம் உருவாகிவிடும்.
இத்தோடு நம் வேலை முடிந்து விடுவதில்லை. இரைச்சலை நீக்கும் போது சில டிடைல்ஸ் மற்றும் ஷார்ப்னஸ் குறைந்து விடும். எடுத்துக்காட்டாக மேலே உள்ள படத்தில், அந்த பறவையின் முகம் மற்றும் வயிற்று பகுதிகளில் ஷார்ப்னஸ் மற்றும் டிடைல்ஸ் போய்விட்டது.
இந்த குறையை போக்குவதற்கு "Selective Coloring செய்வது எப்படி ?" என்ற பதிவில் பயன்படுத்திய முறையில் "முதல் படம்" மற்றும் "இரைச்சல் நீக்கிய படம்" ஆகியவற்றை இணைத்து "Selective Noise Reduction" பண்ணலாம். அப்படி செய்த படம் கீழே.
மேலும் இந்த இரைச்சல் நீக்கும் நீட்சியினால் வேறு ஒரு பயன் உள்ளது. Portrait படங்களை இந்த நீட்சியில் பயன் படுத்தும் பொழுது, சருமத்தில் இருக்கும் குறைகளையும் நீக்கும்(கொஞ்சம் மேக்கப் போட்டாப்ல இருக்கும் :) )
எடுத்துகாட்டு
இரைச்சல் நீக்குவதற்கு முன்
இரைச்சல் நீக்கிய பின்
இதை பற்றி வேற ஏதாவது கேள்வி இருந்தா கேளுங்க. நன்றி!
Subscribe to:
Post Comments (Atom)
இரைச்சல் இருந்தாலும் இல்லன்னாலும் உங்க பறவை படம் அமோகமா இருக்கு :)
ReplyDeleteமிக நல்ல தகவல்கள்...நன்றி ..::)))
ReplyDeleteNalla pathivu, Nandri. Indha Paravai padam ivlo closeup eppadi edutheenga? Zoom pannina padam qlty kammi ayidadha??
ReplyDeleteஅருமையான மிக தேவையான பதிவு... Chan கேட்டதை போல Zoom செய்து படம் எடுத்தால் இரைச்சல் வருமா? அல்லது அதற்கு தனியாக Zoom லென்ஸ் பொருத்தி எடுக்க வேண்டுமா? அதை இந்த நீட்சி மூலம் சரி செய்யலாமா? விடை தாருங்கள்...
ReplyDeleteசர்வே, பலா பட்டறை, Chan மற்றும் கமலகண்ணன் நன்றி !!!
ReplyDelete@Chan-
இந்த படம் தொலைதூர(telephoto) லென்ஸ் மூலம் எடுக்கப்பட்டது. SLR/DSLR லென்ஸ்களில் Zoom செய்தாலும் quality குறையாது.
@ கமலகண்ணன்
SLR/DSLR லென்ஸ்களில் Zoom செய்வதற்கும், இரைச்சலுக்கும் சம்பந்தம் இல்லை. (But this is not the same case with Point&Shoot. We can reduce the noise in Point&Shoot by going to Manual mode(instead of using auto) and disabling Auto-ISO)
- nathas
நன்றி நாதஸ், உங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி... மிகவும் பயனாக இருந்தது.
ReplyDeleteமிகவும் அருமையாக இருக்கிறது. மிகவும் உபயோகமான நீட்சி. பயன்படுத்தி பார்த்தால் பிரம்மாண்டமாய் இருக்கிறது நன்றி நாதஸ் அவர்களே...
ReplyDeleteஇங்கே சென்று பார்க்கவும்
http://kamal-photography.blogspot.com/2010/01/noise-reduction.html
Nandri Nanbarae.
ReplyDeletethamilish moolam i found this nice site. thanks very much
ReplyDeleteMurugan
Same as SurveySan - both the versions of the bird look awesome :)
ReplyDeleteSrini
Ada.. Vedikundu murugesan inga enga vathaaru?
ReplyDeleteISO athikama vachcha noise varuma.......ex..400-6000..........?
ReplyDelete@K.R.nandha...
ReplyDeletedefinetly noise will appear,
in small,prosumer camera, ISO 400 and on wards...
in modern DSLR ISO 3200 and on wards...
-karuvayan