சமீப இடுகைகள்...

Disclaimer : Copyrights to the Photos shown in this blog are belongs to the respective owner of the photo(s). Refrain Copying and using the photo from this blog with out prior permission from the owner of the photo.


Monday, January 25, 2010

இந்த வாரப் படம் - சிலந்தி வணக்கம்

PiTன் Flickr groupஐ பற்றி தெரிந்திருக்கும். புகைப்பட ஆர்வலர்கள் யார் வேண்டுமானால் இணைந்து, தங்களின் சிறந்த படைப்புகளை மற்ற ஆர்வலர்களுக்குக் காட்சியாக்க உதவும் வழி இது.
மாதாந்திர போட்டிகள், ஒரு 'தலைப்பு'க்குள் இயங்கும், ஆனால், இந்த Flickr groupல் நீங்கள் சமீபத்தில் க்ளிக்கி, உங்களுக்கு ரொம்பவே பிடித்துப் போன படங்களை சேர்த்து, மற்றவர்களின் 'ஆஹா/ஓஹோ'க்களையோ, 'ஹ்ம்/நல்லால்லை'க்களையோ பெறலாம்.

இதுவரை பலரும் இணைந்து, பலப்பல படைப்புக்களை அனுப்பியுள்ளார்கள். அனைத்தையும் பார்க்க, இங்கே சொடுக்கவும்.

இனி வரும் வாரங்களில், சமீபத்தில் வந்திணைந்த படங்களில், வெகுவாய் கவர்ந்த ஏதாவது ஒரு படத்தை, 'இந்த வாரப் படம்' என்ற தலைப்பில் பதிவேற்றலாம் என்று இருக்கிறோம்.

இந்த வரிசையில், ஃப்ளிக்கர் பக்கத்தை திறந்ததும் 'வணக்குமுங்கோ' என்று பணிவாய் எழுந்து நின்று வணக்கம் சொன்ன Dharanendra Momayaவின் Spidy முதலில் இடம்பிடிக்கிறது.
அருமையான க்ளிக்கு Dharanendra!

Spidy.......!

இதுவரை flickr groupல் இணையாதவர்கள், இங்கே க்ளிக்கி இணையலாம்.

சில ஊர்களில், Flickr வேலை செய்யாது என்பது வருத்தமான உண்மை. அந்த ஊர்களில், http://www.flickr.com என்பதர்க்கு பதிலாக http://www.flickr.mud.yahoo.com/ என்று முயன்று பார்க்கலாம்.

PIT Group - View this group's photos on Flickriver

மீண்டும் சந்திக்கும் வரை.. பை பை..

-சர்வேசன்

Share

8 comments:

கோவி.கண்ணன் said...

அருமை, பார்த்தாலே கடித்துவிடும் போன்ற துல்லியம்

SurveySan said...

Dharanendra Momaya, தமிழ் படிக்கத் தெரியுமா? do you read tamil?

என்னமோ போங்க. whatever.. வாழ்த்துக்கள். அருமையான படம். congrats.. good shot.

:)

ராமலக்ஷ்மி said...

அழகாய் போடுதே வணக்கம்:)!

எடுத்தவருக்கு தமிழ் தெரிந்திருக்க வாய்ப்பில்லைன்னுதான் நினைக்கிறேன்:)! ஆனாலும் சொல்லி வைப்போம் வாழ்த்துக்களை!!

//இங்கே க்ளிக்கி இணையலாம்.//

ஆகா அப்படியா? வர்றேன்:)!

நாதஸ் said...

வாழுத்துக்கள் தரனேன்தரா !
இவருக்கு தமிழ் தெரியும். இவர் கோவையை சார்ந்தவர் !

djmomaya said...

நான், தமிழ் நன்றாக எழுத,படிக்க மற்றும் பேசத் தெரிந்த இந்தியன்.... :)

சர்வேசன் ஸார்.... உங்கள் "வணக்கமுங்கோ" என்ற கொங்குத் தமிழ் மிகவும் இனிமையாக

உள்ளது.
வாழ்த்துக்கு நன்றி.

DM.

SurveySan said...

///தமிழ் நன்றாக எழுத,படிக்க மற்றும் பேசத் தெரிந்த இந்தியன்.... :)

சர்வேசன் ஸார்.... உங்கள் "வணக்கமுங்கோ" என்ற கொங்குத் தமிழ் மிகவும் இனிமையாக ////


ஹி ஹி. ஐ ஆம் த சாரி!

வாழ்த்துக்கள் உங்களுக்கு. :)

இரவு கவி said...

I'm in this group. But not able to upload more than 5 images. Do you have any limitation like this ?. If i want to upload my photos, i'm forced to delete the previous photos. :-(

SurveySan said...

இரவு கவி, we just have a limit of 2 pics per day per member.
pls try again.

Post a Comment

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

PiT இணைப்பு

வருகைப் பதிவேடு



PiT'ers in Flickr

PIT Group - View this group's photos on Flickriver

  © Blogger template 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP