Friday, February 26, 2010

2010 பிப்ரவரி மாத போட்டி முடிவுகள்

16 comments:
 
வணக்கம் மக்கா,
இந்த மாத போட்டியில் வெற்றிப்பெற்ற முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களின் விவரம் கீழே,


முதல் இடம் - செல்லம்

நமக்கு நன்றாக பரிச்சயமான வாகனம். பொதுவாக வெளி இடங்களில் ஒளியமைப்பு நன்றாக அமைவது கடினம். இந்த படத்தில் ஒளியமைப்பு சிறப்பாக உள்ளது. ரயில் நிலையமும் படத்திற்கு வலு சேர்க்கிறது. ரயிலின் முன்னால் சிறிது இடம் அளித்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.


இரண்டாம் இடம் - MRK

Panning நன்றாக பயன் படுத்தப்பட்டுள்ளது. நம் கவனமும் வாகனத்தை விட்டு எங்கும் சிதறவில்லை. காரின் கண்ணாடியில் Sun-film இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்(உள்ளே இருப்பவர் தெரிய மாட்டார் :) )


மூன்றாம் இடம் - விஜயாலன் மற்றும் வாசி


இரண்டு படங்களுமே சப்ஜெக்டை முன்னிலை படுத்தி எடுக்கப்பட்டவை. விஜயலானின் படத்தில் வானத்தின் வண்ணம் அருமை. வாசி, கார் விளம்பரத்தில் உள்ளது போல காரினை போஸ் செய்ய வைத்துள்ளார். :)

வெற்றி பெற்றவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ! பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி !!!

16 comments:

  1. Congratulations.. chellam, mrk, vijayalan and vaasi.
    Nice selections.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் செல்லம்.
    வாழ்த்துக்கள் MRK.
    வாழ்த்துக்கள் விஜயன்.
    வாழ்த்துக்கள் வாசி.

    ReplyDelete
  3. Thanks for the judges, and those who commented it. congratulations for the other winners and best of luck for the rest for next time.
    VAASI

    ReplyDelete
  4. வெற்றிப்படங்கள் எல்லாமே சூப்பர். அதிலும் முதல் படம்!!! எப்படி ஆளே இல்லாம இருக்கு?? அதுவும் சென்னையில்????/ ஒருவேளை வேற நாடோ????

    ReplyDelete
  5. பரிசுக்கு நன்றி! செல்லம், MRK, வாசி ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள்.
    ~ விஜயாலயன்
    பி.கு.: எனது பெயர் கொஞ்சம் தப்பாக எழுதப்பட்டிருக்கின்றது :-(

    ReplyDelete
  6. வாசி இப்படத்தை எந்த நாட்டில் வைத்து எடுத்தார்?

    ReplyDelete
  7. PIT குழுவிற்கு எனது நன்றி. :)
    செல்லம், விஜயாலயன், வாசி ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள்.

    @துளசி கோபால் - சென்னையில் பல இடங்கள் இது பொல் உள்ளது. இது பறக்கும் ரயில் நிலையம். மக்களிடையே ரொம்ப ப்ரபலம் இல்லை.

    ReplyDelete
  8. எனது புகைப்படம் முதல் இடத்தில் நம்ப முடியவில்லை....

    PiT பொறுப்பாளர்களுக்கு மிக்க நன்றி...

    எனது துணைக்கு மிக்க மிக்க நன்றி... மிக அதிகமாக எனக்கு ஊட்டமளித்திருக்கிறார்

    வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    நான் முதன் முதலில் முதல் இடத்தை பெற்றதால் என்ன பரிசு என்று தெரிந்து கொள்ளலாமா?

    ReplyDelete
  9. செல்லம்,
    //நான் முதன் முதலில் முதல் இடத்தை பெற்றதால் என்ன பரிசு என்று தெரிந்து கொள்ளலாமா?

    முதல் பரிசு, 8Gram தங்கக் காசு, அமெரிக்க சென்று வர விமான டிக்கெட், அல்லது கூடுவாஞ்சேரி பக்கத்தில் 60*40 வீட்டு மனை என்று எல்லாம் தர எங்களுக்கும் ஆசைதான். ஆனால் Global Recession , கடன் கிரெடிட் கார்ட் பேங்க் தொல்லை இருப்பதால் எதுவும் இல்லை. :)


    உண்மையில் , மாதாந்திரப் போட்டிகள், அனைவரிடம் ஆர்வத்தையும், புகைப்படக் கலை பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தவே நடத்துப் படுகின்றன. முதலில் சில மாதங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போட்டிகள், அனைவரின் ஆதரவினால் கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேலாக மாதந்தோறும் நடக்கிறது. பரிசுக்காக நடத்தப்படுவை அல்ல.

    சில முக்கியமான் தருணங்களில் ( மெகா போட்டிகள்) பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன. அவை போட்டி அறிவிப்பின் போதே தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கும்.


    வெற்றி பெற்றதற்கு வாழ்த்து !

    ReplyDelete
  10. நால்வருக்கும் நல்வாழ்த்துக்கள்!

    எல்லோரையும் போலவே எனக்கும் ஆவல் முதல்படம் எடுக்கப்பட்ட இடம் எதுவென அறிய:)!

    செல்லம் ப்ளீஸ்!

    ReplyDelete
  11. எனது புகைப்படம் இந்த அளவுக்கு ஆர்வத்தை தூண்யிருக்கும் என நினைத்து பார்க்கவில்லை. பாராட்டியே அனைவருக்கு நன்றிகள்.
    இந்த புகைப்படம் எடுத்த இடம் சென்னை மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையம் 20-12-2009 ஞாயிறு அன்று காலை 8.30 மணிக்கு எடுத்தது. ஞாயிறு என்றாலே சென்னையில் அதிகம் மக்களை பார்க்க முடியாது.
    அன்று காலையிலே நல்ல வெயில் அடித்தது. அதனாலதான் புகைப்படம் எடுக்கும் போது சரியான ஒளிபதிவு ஆகியிருக்கிறது.
    அதில் என்ன சுவரசியம் என்றால், புகைப்படம் எடுக்கும் போது ரயில் நிலைய ஊழியர் என்னிடம் வந்து " யார் நீங்க Press ?" என்று கேட்டார்
    " நான் இல்லை நமது தளத்தை சொல்லி புகைப்படம் பயிற்சிக்காக எடுக்கிறேன் " என்று சொன்னேன்.
    "இங்கு அனுமதியின்றி புகைப்படம் எடுக்க கூடாது நிலைய மேலாளர் கூப்பிடுகிறார் " என்று சொல்லி, உடனே நிலைய மேலாளரிடம் அழைத்து சென்றார்.
    மேலாளர் " ரயில்வே காவல்துறை அதிகாரியிடம் தகவல் சொன்னீர்களா ? " என்று கேட்டார்
    " இல்லை " என்று சொன்னேன்.
    " கீழ் தளத்தில் இருக்கிறது உடனே தகவல் சொல்லிவிட்டு பின் எடுங்கள் " என்று சொன்னார்
    " சரி ஐயா " என்று சொல்லிவிட்டு அந்த அலுவலகம் எங்கு இருக்கிறது என்று அவரிமே விசாரித்துக் கொண்டு அவர் காட்டிய வழியே வந்தேன்.
    அடுத்தது அங்கு தகவல் சொல்வது போல இறங்கி அப்படியே வெளியே வந்து என்னுடைய வாகனத்தை எடுத்து திரும்பி பார்க்காமல் வீட்டுக்கு ஓடிவந்து விட்டேன்.
    இப்போது நினைத்து பார்த்தாலும் சிரிப்பாக இருக்கிறது. ஆனால் அந்த படமே முதல் இடத்தை பிடிக்கும் என்று நினைத்துக் கூடப்பார்க்கவில்லை.
    பொது இடத்தில் படம் எடுக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்யிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.
    துளசி கோபால் & ராமலக்ஷ்மிக்காக இந்த மலரும் நினைவுகள்...

    ReplyDelete
  12. அச்சச்சோ..... படம் எடுக்கக்கூடாதா?

    நாங்க நாலு தோழிகள் பறக்கும் ரயில் அனுபவத்துக்குப் பறந்தப்ப ஏராளமா எடுத்துத் தள்ளிட்டோமே!!!!

    ஒருவேளை அனுமதி..... ஞாயிறுக்கு மட்டுமோ!!!!

    பதில் சொன்னது ரொம்ப நன்றி, 'செல்லம்'.

    ReplyDelete
  13. பகிர்வுக்கு நன்றி செல்லம். சுவாரஸ்யமான அனுபவமே:)! நீங்கள் சொல்கிற மாதிரிதான், இப்போது பல பொது இடங்களில் காமிராவைக் கையில் எடுக்க முடிவதில்லை. துளசி மேடம் போல நாமும் வலைப்பூ முகவரியுடன் [அனுமதித்தால் பிட் தளத்தையும் சேர்த்துக் கொண்டு] ஒரு கார்ட் வைத்துக் கொள்ளலாமோ:)?

    ReplyDelete
  14. உண்மைதான் நீங்கள் சொல்வது போல கார்டுவைத்துக் கொண்டால் நல்லது.

    நமது தள நிர்வாகிகள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

    ReplyDelete
  15. //உழவன்... படத்தில வண்டி நம்பர் துபாய் னு இருக்கிறதே! துபாய்தாங்க சத்தியமா..
    துபாயிலிருந்து 120 கி மீ தூரத்தில் ஹட்டா என்னும் இடம் இருக்கிறது. அங்கு எடுத்தது வண்டி விளம்பரத்திற்கு எப்படி எடுப்பார்கள் என தோன்றவே எடுத்தது. ஒரு சிறிய தவறு இதில் உள்ளது வண்டியின் சக்கரம் நேராக இல்லாமல் கோணலாக இருக்க வேண்டும் (இன்னும் நன்றாக இருக்கும்)

    -வாசி

    ReplyDelete
  16. ஆகா.. :) கொஞ்சம் late ஆ வந்துட்டன்.. நானும் கலந்துருக்கலாம்.. அடுத்த முறை பாத்துப்போம்.. செல்லம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. இதே போன்றதொரு shot நான் போன வருடம் எடுத்தது.. கருத்துக்களை வரவேற்கிறேன்..

    http://www.flickr.com/photos/mail2vsenthil/3659744805/

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff