வணக்கம் மக்கா,
இந்த மாதப்போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி. வந்திருந்த வாகனங்களில் முன்னேறிய முதல் 10 வாகனங்கள் கீழே,
பெருசு

MRK

செல்லம்

முத்துகுமரன்

டில்லிபாபு

TJay

வாசி

விஜயாலன்

சத்தியா

பிரேம்

முன்னேறியவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் !
மற்ற படங்களின் விமர்சனம் கீழே,
நந்தா - விமானம் இந்த படத்துல மிக மிக சிறியதாக இருக்கு. :(
வீரவிஷ்வா - நல்ல படம். ஆனா நெருக்கமான காட்சி அமைப்பு. அந்த ஆட்டோ முழுமையா இல்லை. அதே போல் ஆட்டோவிற்கு முன்னால் சிறிது இடமளித்து இருக்கலாம்
விக்னேஷ் - அருமையான காட்சி அமைப்பு. ஆனா போட்டியின் தலைப்புக்கு விலகி இருக்கு. வாகனத்தை (ரயிலை) விட காத்திருக்கும் நபரே கவனத்தை ஈர்க்கிறார்.
உஸ்மான் - இந்த படத்தில் எல்லா ட்ராளியும் வரிசையாக ஒழுங்குபடுத்தி வைக்கப்பட்டுள்ளதால், வாகனம் என்ற எண்ணம் மனதில் எழவில்லை.
கணேஷ் - இந்த படம் கொஞ்சம் silhouette மாதிரி இருக்கு. மேலும் விமானத்தின் முன்பக்கத்தை எடுத்திருந்தால் நன்றாக இருக்கும்.
ஜெய் - சாதாரண காட்சி அமைப்பு. :(
வெங்கட்நாராயணன் - நல்லா இருக்கு ஆனா கொஞ்சம் டல்லா இருக்கு. கொஞ்சம் பிற்சேர்க்கை செய்து பாருங்கள்
கலீல் - நீங்க பல படம் அனுப்பி வச்சு இருக்கீங்க. ஆனா அந்த படங்கள் தலைப்புக்கு சிறிது விலகியோ அல்லது சாதாரண காட்சி அமைப்பாக உள்ளது. உங்கள் முயற்சி அனைத்தையும் ஒரே படத்தில் செலுத்தி அடுத்த முறை போட்டிக்கு அனுப்புமாறு வேண்டுகிறேன். நன்றி !
முத்துகுமரன் - நல்ல படம். ஆனா கவனம் விமானத்தில் சாகசம் செய்யும் ஆட்களின் மேல் விழுகிறது. மேலும் background நீல வானமாக இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்.
செந்தில் - நல்லா முயற்சி ஆனா சில இடையூறுகள் உள்ளது.
ஆ.ஞானசேகரன் - ரெம்ப நல்ல படம். ஆனா முதல் பத்து படங்களில் இருக்கும் பஞ்ச் இதில் சிறிது குறைவு
எமிலின் - தீயை அணைக்கும் முயற்சி தான் உடனடியாக மனதில் பதிகிறது. நல்ல முயற்சி
கார்த்திக் - வித்யாசமான சப்ஜெக்ட். ஆனா சாதாரணமான காட்சி அமைப்பு. வேறு கோணங்களில் முயற்சி செய்து பார்த்து இருக்கலாம்.
காசிவிசு - நல்ல கோணம் மற்றும் சிறந்த படம். ஆனா நெருக்கமான காட்சி அமைப்பு. அந்த கார் முழுமையா இல்லை. மேலும் மேல் பகுதி கொஞ்சம் ஓவர் எக்ஸ்போஸ் ஆகிடுச்சு.
பூபதி - சாதாரணமான காட்சி அமைப்பு மற்றும் கொஞ்சம் டல்லா இருக்கு
ஆயில்யன் - அருமையான படம். நல்ல டோன். ஆனா தலைப்புக்கு விலகி உள்ளது.
மகன் - நல்லா இருக்கு. வித்யாசமாவும் இருக்கு. ஆனா உங்க கிட்ட இன்னும் நெறைய எதிர் பாக்குறோம் தல.
பிரேம் ஆனந்த் - நல்ல முயற்சி. ஆனா முதல் பத்து படங்களில் இருக்கும் பஞ்ச் இதில் குறைவு.
ஸ்ரீ - இந்த படத்தில் சாலை தான் பிரதானம். அந்த சாலையில் இருப்பவை இரண்டாம் பட்சமாக படுகிறது.
ரமேஷ் - நல்லா இருக்கு. விமானத்தின் சில பகுதிகள் ஒழுங்கா எக்ஸ்போஸ் ஆகலை(கருப்பா இருக்கு)
சந்திரசேகர் - அழகான காட்சி அமைப்பு. இந்த படத்தில் வாகனத்திற்கு முக்கியத்துவம் சிறிது குறைவு
கோமா - சின்ன படம். சாதாரணமான மற்றும் நெருக்கமான காட்சி அமைப்பு.
ராமலட்சுமி - அழகான படம். பஞ்ச் இதில் கொஞ்சம் குறைவு. வேறு கோணங்களை முயற்சித்து பார்க்கலாம்.
வெண்ணிலா மீரான் - நல்ல முயற்சி. அந்த பஸ் படத்திற்கு வலு சேர்க்கிறது. சில டிஸ்டர்பன்செஸ் (குறிப்பா பின் கதவில் இருக்கும் நபர்).
பிரியதர்சன் - நல்ல கோணம் மற்றும் காட்சியமைப்பு. ஆனா கருப்பு வெள்ளை இந்த படத்தில் எடுபடவில்லை. கொஞ்சம் டல்லா இருக்கு
காவியம் - அருமையான காட்சி. அழகான இடம். தலைப்புக்கு முக்கியத்துவம் குறைவாக உள்ளது
கமல் - நல்ல கோணம் மற்றும் நல்ல முயற்சி. சில டிஸ்டர்பன்செஸ் மேலும் தண்டவாளங்களுக்கு சிறிது அதிகம் முக்கியத்துவம் உள்ளது போல் இருக்கு.
இன்னும் சில நாட்களில் முதல் மூன்று படங்களோடு சந்திக்கிறேன். நன்றி !
டிஸ்கி - சில படங்களில் பஞ்ச் இல்லை அப்படின்னு நான் சொல்றாதால யாரும் என்னை குத்தனும்ன்னு(பஞ்ச்) ஆசை படாதீங்க. வித்யாசமான கோணங்கள் மற்றும் சிறிதளவு பிற்சேர்க்கை இவையே போதுமானது.
அருமையான தேர்வு. முன்னேறியிருக்கும் முதல் பத்து பேருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteமுன்னேறியவர்களுக்கு வாழ்த்துக்கள் :))
ReplyDelete//சில படங்களில் பஞ்ச் இல்லை அப்படின்னு நான் சொல்றாதால யாரும் என்னை குத்தனும்ன்னு(பஞ்ச்) ஆசை படாதீங்க// நினைச்சேன்! 3 இடத்தில பஞ்ச் கேக்குறாரே சரி காசா பணமா கொடுத்திடலாமோன்னு :))))
Arumayana thervu..Thervanavargalukku Vaazhthukkal!!
ReplyDeleteமுதல் பத்து பேர்களுக்கு வாழ்த்துகள்... தேர்வும் அருமை பாராட்டுகள்
ReplyDeleteஎன்னுடைய புகைப்படமும் முதல் 10 இடத்தில், தேர்வு குழுவினருக்கு நன்றி! மற்ற 9 பேருக்கும் பாராட்டுக்கள்...
ReplyDeleteமுதல் 10 இடங்களை பிடித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்... மிக சரியான தேர்வு...
ReplyDeleteanaivarukkum enadhu vazthukkal... :) :)
ReplyDeletepadangal ellam miga arumai..
neenga nalla vishayam seithu kondirukeerergal... :) :)
தேர்ந்தெடுக்கப்படாத படங்களுக்கும் விமர்சனம் கொடுக்கும் உங்களோட செயல் பாராட்டுக்குரியது. அதுக்காகவாவது அடுத்த போட்டியில் கலந்துக்கனும் என்ற ஆவல் அதிகமாகியுள்ளது. தேர்வாகியவர்களுக்கும் தேர்வாகதவர்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteபங்குபற்றியவர்களின் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள். அத்துடன் முதல் பத்திற்குள் முன்னேறியவர்களுக்கு வாழ்த்துக்கள். ஒவ்வொரு படத்திற்கும் விமர்சனம் தரும் நடுவர்களுக்கு நன்றி.
ReplyDeleteபங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
ReplyDeleteபடங்கள் எல்லாம் அருமை
நான் போட்டிக்கு அனுப்பிய படம் என் பெயரிட்டு(நந்தகுமார்) அனுபபிருந்தேன். ஆனால் என்னவோ தெரியவில்லை என் படத்திற்கு கீழே PIT CONTEST என்று வந்துள்ளது. அதனால்தான் என்னவோ விமர்சனம் கொடுக்கவில்லை என்ற சந்தேகம் உள்ளது. தயவு செய்து விளக்கம் அளித்தால் என் சந்தேகம் தீரும்.
ReplyDeleteபாராட்டுகள்... பங்கேற்ற அனைவருக்கும், பத்துக்குள் முந்தியவர்களுக்கும்...
ReplyDeleteநடுவர்களுக்கும் போட்டியை நடாத்துபவர்களுக்கும் எங்கள் அனைவருடைய ஸ்பெசல் பாராட்டுகள்...
எங்களை எப்போதும் ஆச்சரிய படுத்துபவர்கள் நீங்கள் தான்..!
பத்து பேருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDelete//நான் போட்டிக்கு அனுப்பிய படம் என் பெயரிட்டு(நந்தகுமார்) அனுபபிருந்தேன். ஆனால் என்னவோ தெரியவில்லை என் படத்திற்கு கீழே PIT CONTEST என்று வந்துள்ளது. அதனால்தான் என்னவோ விமர்சனம் கொடுக்கவில்லை என்ற சந்தேகம் உள்ளது. தயவு செய்து விளக்கம் அளித்தால் என் சந்தேகம் தீரும்.//
ReplyDeleteதாமதத்திற்கு மன்னிக்கவும் நந்தகுமார்.
உங்களுடைய படத்தில் ஒளியமைப்பு நன்றாக உள்ளது. வண்ணங்களும் நன்று. ரயிலின் முன்புறமாக எடுத்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும். இந்த படம் பக்கவாட்டில் எடுக்கப்பட்டாலும், வேறு கோணத்தில் முயன்று இருக்கலாம்.