இந்தவார க்ளிக்கில் தேர்வு செய்யப்பட்ட படம். கார்திக். ஆர். யாதவுடையது. வாழ்த்துகள் கார்த்திக்.
முதுமையின் சித்திரம் கருப்பு வெள்ளையில்.
தொலைத்த இளமை நரைத்த முடியில்.
வாழ்வின் அனுபவங்கள் தோலின் சுருக்கங்களில்.
நாமும் ஒரு நாள் இந்நிலையை எய்துவோம் என்பதை மறந்த மதிகெட்ட மனிதரால்..
ஒதுக்கப்பட்ட வேதனை ஓடுகின்றன நெற்றியின் வரிகளிலே.
-
தேர்வுக்கான காரணம்: Sharpness/ clever b&w treatment / conveys emotion clearly, the loneliness.
- தேர்வும் கவிதையும் காரணமும் - ராமலக்ஷ்மி