Sunday, January 27, 2008

ஜனவரி 2008 - PIT போட்டி - அனைத்துப் படங்களைப் பற்றிய கருத்துக்கள்

19 comments:
 
ஜனவரி மாதப் போட்டிக்கான படங்களைப் பார்த்ததும் மனதில் தோன்றிய சில கருத்துக்கள்.
மனதில் தோன்றியவை அப்படியே தட்டச்சி உள்ளேன், ரொம்ப ஆராயல. அடிக்க வராதீங்க. ;)

இந்த போட்டிகளின் வெற்றியே, நாம் பலரிடம் பெரும் feedback தான்.
நீங்களும் படங்களுக்கான நிறை குறைகளை எடுத்துச் சொல்ல தயங்காதீர்கள்.

எல்லோரும் சேர்ந்து கற்போம், கலக்குவோம்! :)

இனி என் ஒரு வரி விமர்சனங்களைப் பார்ப்போமா?

1) SALAI JAYARAMAN - படம்1, படம்2
கருத்து: சும்மா பாயிண்ட் & ஷூட். சிறப்பாக வர உழைக்கவில்லை :)

2) அப்பாஸ் Abbas - படம்1, படம்2
கருத்து: அற்புதமான படங்கள். ஆனா, கவித்துவம் கொஞ்சம் அதிகமாயிடுச்சு. ஜனங்களோடு கலவாத, ஒரு ஆர்ட்-வர்க் மாதிரி இருந்தது. குறை ஒன்றுமில்லை. தண்ணி பாட்டிலில் ஒரு சொட்டு தண்ணீ கீழே வழுக்கி வந்திருந்தத, பன்ச் கூடியிருக்கும்.

3) Shiv - படம்1, படம்2
கருத்து: ஏற்கனவே சொன்ன மாதிரி, க்ராப் கொஞ்சம் செஞ்சு, வெளிச்சம் குறைத்தால் சரிவந்திருக்கும்.

4) Nathas - படம்1, படம்2
கருத்து: அருமை. ஷார்ப்னெஸ் கொஞ்சம் கம்மி (பென்ஸிலுக்கு இல்ல, படத்துக்கு:). ஆனா, அதுவும் ஒரு அழகா அமஞ்சு போச்சு படத்துக்கு. எடுக்கப்பட்ட ஏங்கிள் சூப்பர்.

5) Sanjai - படம்1, படம்2
கருத்து: பேப்பர் படத்தில், அந்த கப்பு இடிச்சுது. டைம்-ஸ்டாம்பும் தவிர்க்கணும். வாட்சில், ஒளி கூடுதலாய், அந்த மின்மினுப்பு கூடிப்போய் blown-highlights ஆனது. வாட்சின் ஏங்கிளும் எடுபடலை.

6) இளைய கவி - படம்1, படம்2
கருத்து: ரொம்ப மங்கலாய் போய் விட்டது படங்கள். வண்னங்கள் உதவும். வெளிச்சமும் உதவும் :)

7) ஓசை செல்லா - படம்1, படம்2
கருத்து: அருமை. டாப்பில் தெரியும் வானமும் மேகமும் வெகுவாய் ரசித்தேன். கட்டம் கட்டிய விதம் அருமை.

8) ஆயில்யன் - படம்1, படம்2
கருத்து: ஷூ. பளிச்! சேப்பியா மாத்திட்டதால(?) ஒரு செயற்கைத் தனம். சாவியும் நிக்க வச்சதால, செயற்கைத் தனம்.

9) சூரியாள் - படம்1, படம்2
கருத்து: வாச்சுக்கு பேக்ரவுண்ட் எடுபடலை. ஸ்விட்சில் நிறைய வெற்றிடங்கள்.

10) priya - படம்1, படம்2
கருத்து: விளக்கு சப்ஜெக்ட் அழகு. சிறந்த புகைப்படமா தேர்ந்தெடுக்க, சப்ஜெக்ட் அழகா இருந்தா மட்டும் பத்தாதே, புகைப்படக்காரரின் கைவரிசையும் லேசா எட்டிப் பாக்கணும் :) பைசாக்களில் வெற்றிடங்கள் அதிகம். அஞ்சு நாணயங்களை வேற எப்படி எடுக்கரதுன்னு சொல்லத் தெரியல. யாராவது எடுத்து வித்யாசம் காட்டுங்கப்பா :)

11) Mohan Kumar - படம்1, படம்2
கருத்து: மெழுகுவத்தி பின்கள் நல்ல முயற்சி. மெருகேற்றினால் நன்றாய் வரும். வளையலுக்குள் மாத்திரைகளா? யைக்ஸ்! a big turn-off for me, personally :)

12) ஒப்பாரி - படம்1, படம்2
கருத்து: என்னத்த சொல்ல? காண்டாவுதுன்னுவாங்களே, அப்படியிருக்கு. கலக்கியிருக்கீங்க கலக்கி. :) PHILIPSக்கு விளம்பரம் தரும் படங்களுக்கெல்லாம் இனி பரிசு கொடுக்கமாட்டோம் ;) விஷயம் தெரிஞ்சவங்க யாராவது குறை ஏதாச்சும் சொல்லுங்கப்பா :)

13) கா என்றால் கார்த்திக் (இது கொஞ்சம் ஓவருல்ல? :-)) - படம்1, படம்2
கருத்து: க்ளிப் அருமை. பின்னணி சரியில்லாமல் போய்விட்டது. வேறு கோணத்தில் DOF ப்ரயோகம் செய்து எடுத்துப் பாருங்கள். ஹெட்-ஃபோனில் ஈர்ப்பு இல்லாமல் போய்விட்டது.

14) காட்டாறு - படம்1, படம்2
கருத்து: தலாய் லாமா படம் அருமை. ஆனா, நடுவாய் வைத்து எடுக்காமல் ஒரு ஓரத்தில் தள்ளி எடுத்திருந்தால் நச்னு வந்திருக்கும். ப்ளூ க்ரிஸ்டல் அழகு. ஆனா, அது சப்ஜெக்ட்டினால் வந்த அழகு. வெறும் பாயிண்ட் & ஷூட்.

15) குசும்பன் - படம்1, படம்2
கருத்து: சிகரெட் உடலுக்குக் கேடு :) விளக்கும் அதன் ஃப்ரேமும் நல்லாயிருந்தது. ஏங்கிள் எடுப்பா இல்லியோ? நடூ-செண்டர்ல நின்னு, அன்னாந்து பாத்து எடுத்து பாத்தீங்களா?

16) கைப்புள்ள - படம்1, படம்2
கருத்து: 0 வாட்ஸ் பல்பு அழகு. ஆனா, பல்பின் நடுவில் ஒளி gradualஆ குறைஞ்சிருந்தா நல்லாயிருந்திருக்கும். blown-heighlights(நன்றி an&). க்ரைண்டர பத்தி ஏற்கனவே அரச்சிட்டோம் அதனால விட்டுடறேன்.

17) சத்யா - படம்1, படம்2
கருத்து: பின் பத்தி ஏற்கனவே குத்திட்டோம். பட்ஸ் டக்னு பாத்தா பூரியல. 90டிக்ரீ இடதா திருப்பி யிருந்தா படம் நல்லா வந்திருக்கும். பின்னணி கலர் அழகு.

18) வீராசுந்தர் - படம்1, படம்2
கருத்து: வத்திக்குச்சி நல்லாவேயிருந்தது. குறிப்பப அந்த மூணு குச்சி இருந்தது. முடிஞ்சா, எல்லா குச்சியையும் பத்தவச்சு ஒண்ண க்ளிக்கி பாருங்க :) வித்யாசம் கூடாலாம். ( டேமேஜுக்கு நான் பொறுப்பில்ல).

19) ஜெ ('வாழ்ஹ' :-)) - படம்1, படம்2
கருத்து: வாட்ச் பின்னணி சரியில்ல. சீப்பு படம் டக்னு புரியல்ல. நிக்க வெக்காம படுக்க வச்சு எடுத்திருக்கலாம்.

20) இ.கா.வள்ளி - படம்1, படம்2
கருத்து: விளக்கு நல்ல முயற்சி :) அடுப்பு எடுபடல. அடுப்பு மேல ஒரு ஸ்டீல் குக்கர் வச்சு, ஸ்டேல் பாத்திரட்த்தில் அடுப்பின் ஜ்வாலை தெரியர மாதிரி எடுத்தாட்தான் உண்டு. இன்னொரு வழி, சுத்தியும் இருட்டாக்கி, வெறும் நெருப்பு மட்டும் தெரியர மாதிரி எடுக்கரது.

21) எம். ரிஷான் ஷெரீப் - படம்1, படம்2
கருத்து: இராந்தல் ஏற்கனவே ஏத்தியாச்சு. கால்குலேட்டர் நல்லாதான் இருந்தது. டக்னு தோனியது, அந்த நோட்டுல, '99322234243 X 9766234323 = ' ன்னு எழுதி வச்சு அது தெரியர மாதிரி எடுத்திருந்தா, படத்துக்கு உயிர் வந்திருக்குமோ? ;)

22) நைட் ஷியாமள... ஸாரி.. நைட் ராம்! - படம்1, படம்2
கருத்து: வெளக்கு நல்ல முயற்சி. பொம்மை கார் எடுப்பது எப்படின்னு நம்ம An& பதிவ பாருங்க.

23) மின்னுது மின்னல் - படம்1, படம்2
கருத்து: மின்னல் மாதிரி இல்ல முதல் படம். டல்லாயிருந்தது. குப்பைத் தொட்டி கச கச மொஸைக் தரை பின்னணியில் எடுபடலை.

24) இம்சை - படம்1, படம்2
கருத்து: good knight நல்ல முயற்சி. இருட்ல எடுத்து பாத்தீங்களா? ipod புரியல்ல.

25) நட்டு - படம்1, படம்2
கருத்து: நல்ல வாட்சு. எவ்ளோ? இன்னும் க்ளோஸப்ல எடுத்திருந்தா நச் கூடியிருக்கும். subtle லைட்டிங் அவசியம் வாட்சுக்கு.

26) நந்து f/0 நிலா - படம்1, படம்2
கருத்து: முதல் பேட்டரி அழகு. பின்னணியில் ஒரு பெரிய 2-in-1ஓ, ட்ரான்ன்ஸிஸ்டரோ மங்கலா தெரிஞ்சிருஞ்சா உயிர் கூடியிருக்கும். ரெண்டாவதும் ஓ.கே. ஆனா, why தீக்குச்சி?

27) ILA(a)இளா - படம்1, படம்2
கருத்து: வெளக்கு எடுத்த விதம் நல்லாயிருக்கு. ஆனா எடுத்த வெளக்கு சரியில்லை (குசும்பன் கிட்ட கடன் கேட்டுப் பாருங்க). ஜன்னல் படம், ரொம்ப ஆர்ட்டிஸ்டிக்கா போயிடுச்சு. சப்ஜெக்ட் சரிவர தெரியல.

28) குட்டிபாலு - படம்1, படம்2
கருத்து: கலர் டப்பா, ஸிம்ப்ளி சூப்பர்ப். ஒரு குறையும் தெரியல எனக்கு. வளையல் எடுபடல. கண்ணாடி டேபிள் மேலயோ, கறுப்பு துணியிலோ வெச்சு எடுத்திருக்கலாம்.

29) வாசி - படம்1, படம்2
கருத்து: lifebuoy glow அழகு. பாத்ரூம் கெட்டப்புல எடுத்திருந்தா சிறப்பாயிருந்திருக்கும். தண்ணி தெளிச்சிருக்கலாம். வாட்ச் எடுக்கும்போது 10.10 நேரம் வைக்க வேணாமா? போட்டோ குத்தம் ஆயிடப் போவுது. :)

30) லக்ஷ்மணராஜா - படம்1, படம்2
கருத்து: பூட்டு அழகு. அந்த தண்ணிய வெரலால தொடணும் போல இருக்கு :) க்ளிப் படமும் மேகமும் நல்லாவே இருந்தது. ரெண்டுமூணு சட்டை இருந்திருந்தா நல்லாயிருக்கும். ஆனா மழை வரும்போது துணியிருந்தத, பொறுள் குற்றமாயிருக்குமோ?

31) M S K - படம்1, படம்2
கருத்து: விளக்கு அழகா வந்திருக்க வேண்டியது, பின்னணி சரியில்லாததால் எடுபடலை. உங்க ஃப்ளிக்கர் பக்கத்தில் பிள்ளையாரும், கலர் விளக்கும் அருமை ;)

32) ஆனந்த் - படம்1, படம்2
கருத்து: படங்களில் வறட்சி அதிகம். அன்றாடம் உபயோகிக்கும் பொருள் செயினா? வசூல்ராஜாவா நீங்க? :)

33) லொடுக்கு - படம்1, படம்2
கருத்து: சேர் அழகு. ஆனா, நிழலும், சேரின் வளைவை காமிக்கர மாதிரி இருந்திருக்கணும். டேபில் லேம்ப்பில் கிராப்பிங் ப்ரச்சனை.

34) ஜெஸிலா - படம்1, படம்2
கருத்து: சீப்பு உவ்வே ;) ஷவர் அழகு. ஆனா, மஞ்ச ஹேலோஜன் வெளக்கு போட்டு எடுத்திருந்தா அழகு கூடியிருக்கும். பின்னணி கறுப்பாயிருந்திருக்கலாம்.

35) Sathia - படம்1, படம்2
கருத்து: மத்து இந்த பக்கமா திருப்பி வச்சு DOF ப்ரயோகம் பண்ணியிருந்தா ஜூப்பரா வந்திருக்கும். சேர் வரிசைப் படுத்தியதில் சிறு பிழை இருக்கு :)

36) இலவசக்கொத்தனார் - படம்1, படம்2
கருத்து: blinds ஓ.கே. நாலாவதா ஒரு சி.டிய பின்னாடி வச்சிருந்தால் நெறைய சி.டிக்கள் இருக்கரதா ஒரு infinity ப்ரக்ஞை வந்திருக்கும். :)

37) ஆதி - படம்1, படம்2
கருத்து: நகைக் கடைல வேல செய்றீங்களா? ஒரு வளையல்ல பச்ச நூல் டாக் தெரியுது? :) நகைகள் கண்ணாடி டேபிளில் வைத்து, ஹால்லோஜன் போட்டு எடுத்தா நல்லா வந்திருக்கு எனக்கு. கேனான் ஷாட் சூப்பர். நன்றி அதுக்கு ;)

38) J K - படம்1, படம்2
கருத்து: fan கவித்துவம். ஜூம் பண்ணியிருந்தா இந்த கவித்துவம் போயிருக்கும். அருமை. cell phone எடுபடல.

39) முத்துலெட்சுமி - படம்1, படம்2
கருத்து: cellphone ஏங்கிள் மாத்தினா அழகு கூடும். ஓப்பாரி படத்தை பார்த்து அத மாதிரி ட்ரை பண்ணலாம். வெளக்கு அழகு. க்ராப் ப்ரச்சனை உள்ளது. பின்னணியும், வெளக்கின் கலரும் மேட்ச்சிங்கா இருக்கு :)

40) Truth - படம்1, படம்2
கருத்து: ரெண்டு படமும் அட போட வைக்கப் பார்த்தது. ஆனா, ஒரு ஷார்ப்னெஸ் இல்லாததால் சப்னு போயிடுச்சு.

பங்கு பெற்று சிறப்பித்த அனைவருக்கும் நன்றீஸ்!

க்ளிக்குவோம், கற்போம், கலக்குவோம்!

நீங்களும் ஒரு வரி எல்லா படத்டுக்கும் ஒரு வரி விமர்சனம் சொல்லிட்டுப் போங்க பாப்பம் ( ஸ்ஸ்ஸ்ஸ், என்னது தாவு தீந்திருமா? பரவால்ல எழுதுங்க :) )

:)

19 comments:

  1. அட!!
    அருமையான முயற்சி!!
    இத்தனை படங்களுக்கு தொடர்ந்து கருத்து சொல்ல அநியாயத்துக்கு பொறுமை வேணும்!!
    மிக்க நன்றி சர்வே!!
    All valid comments!
    Kudos!! :-)

    ///க்ளிக்குவோம், கற்போம், கலக்குவோம்!///
    இதுவே நம்ம PIT caption-அ வெச்சிரலாம் போல இருக்கே!!
    க்ளிக்குவோம் தான் கொஞ்சம் உருத்துது!! :-)

    ReplyDelete
  2. நீங்க எழுதுனத படிச்சதுக்கே தாவு தீந்துடுச்சு! சான்ஸ்ஸே இல்ல! கலக்கிட்டீங்க! தேர்வான படங்களை மட்டும் விமர்சனம் செய்யாமல் எல்லா படத்திற்கும் விமர்சனம் போடறது கலந்து கொண்ட எல்லாருக்கும் சந்தோஷம். ஒவ்வொரு விமர்சனத்தையும் பார்க்கும் போது எவ்வளவு துல்லியமா படங்களை அலசி தேர்வு செஞ்சிருக்கீங்கன்னு புரியுது. Hats Off!

    ReplyDelete
  3. இந்த மாதிரியான விமர்சனத்தைதாங்க நான் எதிர்ப்பார்த்தேன். இதை தொடர்ந்து பண்ணுங்களேன்...

    ReplyDelete
  4. சி.வி.ஆர் சொன்ன மாதிரி உண்மையிலே பொறுமையான சர்வே.அடுத்த ஆட்டத்துக்கு சீக்கிரம் பேர் சொல்லுங்க!

    ReplyDelete
  5. நன்றீஸ்!

    //இந்த மாதிரியான விமர்சனத்தைதாங்க நான் எதிர்ப்பார்த்தேன். இதை தொடர்ந்து பண்ணுங்களேன்...//

    நேரம் கிடைச்சா கண்டிப்பா முயற்சிப்போம் :)
    ஒவ்வொரு படம் போட்டிக்கு வரும்போதும், அவங்கவங்க பதிவுலயே போய் கமெண்ட போடவும் முயற்சிக்கறோம்.
    இந்த மொத்தமா எழுதரதுதான் தாவு தீர வேலை ;)

    ReplyDelete
  6. ///////க்ளிக்குவோம், கற்போம், கலக்குவோம்!///
    இதுவே நம்ம PIT caption-அ வெச்சிரலாம் போல இருக்கே!!
    க்ளிக்குவோம் தான் கொஞ்சம் உருத்துது!! :-)
    ///

    நல்லாயிருக்கே ஐடியா :)
    க்ளிக்குவோம் = அமுக்குவோம் = நல்லாயில்லை.

    க்ளிக்குவோம் = படம் பிடிப்போம் == ஓ.கே ஆனா, பன்ச் இல்ல.

    க்ளிக்குவோம் = ????வோம்?


    என்னக்கேட்டா, க்ளிக்குவோம் ஓ.கே ம்பேன் :)

    ReplyDelete
  7. Super Post Survey -Thanks a lot.

    /////க்ளிக்குவோம், கற்போம், கலக்குவோம்!///

    நல்லாருக்கு இது. எனக்குத் தோணின ஒண்ணு இது :)

    'கற்பது கண்ணளவு'

    ReplyDelete
  8. Hi,

    It is a pins collection and not a candle. Can check out my other pics and leave your comments if possible.

    http://kmohankumar.blogspot.com/

    Cheers,
    Mohan

    ReplyDelete
  9. mohan kumar, தவறு திருத்தப்பட்டது.

    அருமையான முயற்சி.
    படத்தில் ஷார்ப்னெஸ் கம்மி. ப்ளர்டா இருக்கு. :)

    ReplyDelete
  10. //முதல் பேட்டரி அழகு. பின்னணியில் ஒரு பெரிய 2-in-1ஓ, ட்ரான்ன்ஸிஸ்டரோ மங்கலா தெரிஞ்சிருஞ்சா உயிர் கூடியிருக்கும். ரெண்டாவதும் ஓ.கே. ஆனா, why தீக்குச்சி?//

    நீங்கள்ளாம்தான் வழிநடத்தும் கோடுகள் ன்னு உசுப்பேத்திவிட்டீங்களே, அத ட்ரை பண்ணி பாத்தேன். அதுக்கு தீக்குச்சிதான் கிடச்சது.

    சிரிக்காதீங்க பாஸ். :P

    ReplyDelete
  11. //நீங்கள்ளாம்தான் வழிநடத்தும் கோடுகள் ன்னு உசுப்பேத்திவிட்டீங்களே, அத ட்ரை பண்ணி பாத்தேன். அதுக்கு தீக்குச்சிதான் கிடச்சது.//

    வழி நடத்தும் கோடுகள் இயற்கையா படத்துல அமையணும். இல்லாத்த கோட கொண்டு வந்து வச்சு எடுத்தா சரிபடாது. :)

    ReplyDelete
  12. //நீங்கள்ளாம்தான் வழிநடத்தும் கோடுகள் ன்னு உசுப்பேத்திவிட்டீங்களே, அத ட்ரை பண்ணி பாத்தேன். அதுக்கு தீக்குச்சிதான் கிடச்சது.

    சிரிக்காதீங்க பாஸ். :P//


    வேறு விதமா முயற்சித்திருக்கலாம். தீக்குச்சிய மேலே வைக்காமல்..

    உதாரணத்துக்கு சீவீஆர் படம் ஒண்ணு ஃபிளிக்கர் ல இருக்கு அப்புறம் லிங்க் தாரேன்

    ReplyDelete
  13. மொத்தப் படங்களுக்கும் கருத்து சொல்லிய நடுவர்ஸ்.. க்ரேட் . தொப்பியை எடுக்கிறேன் உங்களுக்காக ( அதான இங்கிலீசுல ஹாட்ஸ் ஆப் டூ யூ அப்படிம்பாங்களே )

    ReplyDelete
  14. சுந்தர்ஜி

    "கற்பது கண்ணளவு"... நல்லாருக்கே ?


    மக்கள்ஸ் நீங்களும் சொல்லுங்களேன் எது நல்லாருக்கோ அது முகப்பிலே போட்டுடலாம் ?

    ReplyDelete
  15. அடுத்த போட்டிக்கான தலைப்பு நெருப்பு -ன்னு இருந்தா, கொளுத்திர வேண்டியதுதான்!! :-))))

    @///வீராசுந்தர் - படம்1, படம்2
    கருத்து: வத்திக்குச்சி நல்லாவேயிருந்தது. குறிப்பப அந்த மூணு குச்சி இருந்தது. முடிஞ்சா, எல்லா குச்சியையும் பத்தவச்சு ஒண்ண க்ளிக்கி பாருங்க :) வித்யாசம் கூடாலாம். ( டேமேஜுக்கு நான் பொறுப்பில்ல).

    ReplyDelete
  16. எல்லா படத்துக்கும் கருத்து - சூப்பர்ங்க.

    நன்றி சர்வேசன்.

    ReplyDelete
  17. எல்லாருக்கும் நன்றிங்கோ!

    ReplyDelete
  18. சீவ்ஸ்

    /தொப்பியை எடுக்கிறேன் உங்களுக்காக //

    யாராச்சும் பார்த்துட்டு 'கண் கூசுது'ன்னு திட்டறதுக்கு முன்னாடி தொப்பியை மாட்டுங்க மறுபடி :-)

    பயணமெல்லாம் சவுரியமா இருந்துச்சா?

    ReplyDelete
  19. கலக்கிட்டீங்க சர்வேசன்... ஒவ்வொருத்தர் fotos'க்கும் comments கொடுக்கிறதுன்கிறது உண்மையிலேயே கொஞ்சம் கஷ்டமான காரியம் தான்.

    BTW, friend'க்கு marriage'க்கு நகை எடுக்கப் போகைல எடுத்த snap அது... வேற ஒரு friend கல்யாணத்துக்கு போறப்போ, நீங்க சொன்ன idea'வை try பண்றேன். :-)

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff