நண்பர்களுக்கு வணக்கம்!
அறுபத்தி மூன்று நாயன்மார்கள் மாதிரி 63 படங்கள். அதில் இருந்து பத்தை மட்டும் தேர்ந்தெடுக்க முடியாமல், பதினெட்டு படங்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இப்போ அதில் இருந்து முதல் மூன்றை தேர்ந்தெடுக்கணும். ஸ்ஸப்பா..கண்ணை கட்டுதே!
எல்லா படங்களுமே எனக்கு பிடித்தமான படங்கள் தான். இருப்பினும் மிகவும் பிடித்தது, பார்த்தவுடன் மனதை கவருவது, கம்போசிங், சிறிய குறைகள் ஆகியவற்றை வைத்து முதல் மூன்று இடங்களை பிடித்த படங்களை காண்போம்.
மூன்றாம் இடம் - Aaryan:
அழகான மாலை(?) வேளையில் நீல நிற வானத்தில் சிகப்பு நிற பட்டம். பட்டம் மற்றும் அது கட்டப்பட்டிருக்கும் நூல் வரை மிகவும் தெளிவாக பதிவாகியுள்ளது. அழகான கம்போசிங்! இதுவே மூன்றாம் இடத்தை பிடித்த படம். வாழ்த்துக்கள்!
இரண்டாம் இடம் - Rajes:
முதல் இடம் - Sathishkumar:
பார்த்தவுடன் மனதை கவர்ந்த படம். மாலை நேர வெய்யில், அழகான வண்ணங்கள், காற்றில் பறக்கும் குமிழி, அந்த குமிழியில் தெரியும் பிரதிபலிப்பில் உள்ள நீர் தேக்கத்திலும் பிரதிபலிப்பு என்று பல விஷயங்களை உள்ளடக்கிய படம். இடது பக்கத்தில் மட்டும் கொஞ்சம் இருண்டு விட்டது, இருப்பினும் அது பெரிதாக தெரியவில்லை. இதுவே முதல் இடத்தை பிடித்த படம். வாழ்த்துக்கள்!
சிறப்பு கவனம்:
Rajasekaran:
மற்ற படங்களுக்கும் அந்தந்த படத்திலேயே விரைவில் பின்னூட்டம் இடுகிறேன். போட்டியில் பங்கு பெற்ற மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கு வாழ்த்துக்கள். எனக்கு இந்த வாய்ப்பு தந்த பிட்டிற்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்.
நட்புடன்
சத்தியா.
அறுபத்தி மூன்று நாயன்மார்கள் மாதிரி 63 படங்கள். அதில் இருந்து பத்தை மட்டும் தேர்ந்தெடுக்க முடியாமல், பதினெட்டு படங்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இப்போ அதில் இருந்து முதல் மூன்றை தேர்ந்தெடுக்கணும். ஸ்ஸப்பா..கண்ணை கட்டுதே!
எல்லா படங்களுமே எனக்கு பிடித்தமான படங்கள் தான். இருப்பினும் மிகவும் பிடித்தது, பார்த்தவுடன் மனதை கவருவது, கம்போசிங், சிறிய குறைகள் ஆகியவற்றை வைத்து முதல் மூன்று இடங்களை பிடித்த படங்களை காண்போம்.
மூன்றாம் இடம் - Aaryan:
அழகான மாலை(?) வேளையில் நீல நிற வானத்தில் சிகப்பு நிற பட்டம். பட்டம் மற்றும் அது கட்டப்பட்டிருக்கும் நூல் வரை மிகவும் தெளிவாக பதிவாகியுள்ளது. அழகான கம்போசிங்! இதுவே மூன்றாம் இடத்தை பிடித்த படம். வாழ்த்துக்கள்!
இரண்டாம் இடம் - Rajes:
மிகவும் அழகான கம்போசிங். தெளிவான, ஷார்ப்பான படம். நெருப்பின் மீது காற்றின் தாக்கத்தை அழகாக காட்டியுள்ள படம். இதுவே இரண்டாவது இடத்தை பிடித்த படம்.
பார்த்தவுடன் மனதை கவர்ந்த படம். மாலை நேர வெய்யில், அழகான வண்ணங்கள், காற்றில் பறக்கும் குமிழி, அந்த குமிழியில் தெரியும் பிரதிபலிப்பில் உள்ள நீர் தேக்கத்திலும் பிரதிபலிப்பு என்று பல விஷயங்களை உள்ளடக்கிய படம். இடது பக்கத்தில் மட்டும் கொஞ்சம் இருண்டு விட்டது, இருப்பினும் அது பெரிதாக தெரியவில்லை. இதுவே முதல் இடத்தை பிடித்த படம். வாழ்த்துக்கள்!
சிறப்பு கவனம்:
Rajasekaran:
ரொம்பவே கவர்ந்த படம். மேகமும், தென்னை மரமும் சேர்ந்து அருமையான எபெக்ட் கொடுத்திருக்கிறது படத்திற்கு. நிறங்களும் அருமையாக வந்துள்ளது. ஒரே குறை அந்த இரண்டாவது தென்னை மரம் வெட்டு பட்டு உள்ளது தான். அதையும் உள்ளடக்கி அல்லது தவிர்த்து எடுத்திருந்தால் கண்டிப்பாக இந்த படம் வெற்றி பெற்றிருக்கும். வாழ்த்துக்கள்!
Durai:
பச்சை பசேல் என்று மலைப்ரதேசம், மைனா படத்தில் வருவது போல் அழகான உள்ளது. காற்று வீசுவதை மலையில் உள்ள புற்கள் பிரதிபலிக்கின்றன. முழுவதுமாகவே பச்சையாக இல்லாமல் வானமும் தெரிவது போல், அல்லது செம்மண் பூமி தெரிவது போல இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். படத்தை பார்த்தவுடன் கண்கள் நேராக அங்கு இருக்கும் மக்களை நோக்கி தான் செல்கிறது. அவர்களையும் நன்றாக காண்பித்து, அவர்களின் உடைகள், தலை முடி காற்றில் பறப்பது போல் இருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும். வாழ்த்துக்கள்!மற்ற படங்களுக்கும் அந்தந்த படத்திலேயே விரைவில் பின்னூட்டம் இடுகிறேன். போட்டியில் பங்கு பெற்ற மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கு வாழ்த்துக்கள். எனக்கு இந்த வாய்ப்பு தந்த பிட்டிற்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்.
நட்புடன்
சத்தியா.