Saturday, August 13, 2011

நிற வேறுபாடு - Knowing Light - காரமுந்திரி III

3 comments:
 
டுத்து நாம் பார்க்கக்கூடியது கான்ட்ராஸ்ட் என்கிற நிற வேறுபாடு.

இந்த வேறுபாடு எங்கிருந்து வரும்? வெளிச்சம் பொருள் மேல ஒரே பக்கத்தில் இருந்து ஒரே கோணத்தில் விழும்போது வரும். இப்படி விழும்போது பொருளோட ஒரு பக்கம் அதிக வெளிச்சமும் மறு பக்கம் குறைவாகவும் இருக்கும். இதான் வேறுபாடு. பொருள் மேலே எல்லா கோணங்களிலேயும் வெளிச்சம் விழுந்தா அது குறைவான – லோ- கான்ட்ராஸ்ட்.

இப்படி அதிக கான்ட்ராஸ்ட் தரும் வெளிச்சத்தை ஹை கான்ட்ராஸ்ட் உள்ள ஒளி மூலம் என்றும் குறைவாக கான்ட்ராஸ்ட் தரும் வெளிச்சத்தை லோ கான்ட்ராஸ்ட் உள்ள ஒளி மூலம் என்றும் சொல்வோம்.

எப்படி இது அதிகம் குறைவுன்னு கண்டுபிடிக்கிறது? சுலபம். அதிக கான்ட்ராஸ்ட் இருந்தா நிழல் விழும். அந்த நிழல் கோடு வரஞ்சு இதோ பார் இது வரை இருக்குன்னு சொல்கிற அளவு துல்லியமா இருக்கும்.அஹா! இப்ப புரியுதா ஏன் இதைப்பத்தி கவலை படுகிறோம்ன்னு? இப்படிப்பட்ட நிழல் ஹார்ட் ஷேடோ ன்னும் குறைவான கான்ட்ராஸ்ட் இருக்கும் போது கிடைக்கும் நிழலை ஸாப்ட் ஷேடோ ன்னும் சொல்கிறாங்க. குறைவான துல்லியத்தோட எங்கே ஆரம்பிக்கிறது எங்கே முடியதுன்னு தெரியாத மாதிரி இருக்கிறது ஸாப்ட் ஷேடோன்னு சொல்ல வேண்டிய அவசியம் இல்லைதானே?

கோடை காலம் உச்சி வெயில் மண்டையை பொளக்குது. மேகமே இல்லை. இப்ப சூரியன் ஹை கான்ட்ராஸ்ட் மூலம். ஹார்ட் ஷேடோதான் கிடைக்கும். இதே பனிக்காலத்தில சூரியனையே காணாம மேகங்கள் சூழ்ந்துகிட்டு இருக்கிறப்ப கிடைப்பது லோ கான்ட்ராஸ்ட் ஒளி மூலம். சூரிய ஒளி மேகங்களிடையே புகுந்து சிதறி எல்லாப்பக்கங்களிலேந்தும் கீழே வரும் இல்லையா? இதனால் கிடைக்கக்கூடிய நிழல் ஸாப்ட் ஷேடோ:இந்த ஹார்ட் ஸாப்ட் என்கிறது நிழலோட விளிம்பை பொறுத்துத்தான் சொல்கிறோம். நிழல் எவ்வளோ கருப்பு என்கிறதை பொறுத்து இல்லைங்க. நிழல் எவ்வளோ கருப்பு என்கிறது பொருளோட பரப்பு என்ன மாதிரி இருக்கு, பக்கத்திலே இருக்கிற பொருட்கள் மேலே வெளிச்சம் பட்டு இங்கே சிதறுதான்னு பல மத்த விஷயங்களை பொறுத்து இருக்கு.

பொதுவா சின்ன இடத்திலிருந்து வரும் வெளிச்சம் அதிக கான்ட்ராஸ்ட் உம் பெரிய பரப்பில் இருந்து வரும் வெளிச்சம் குறைவான கான்ட்ராஸ்ட் உம் தரும். இவற்றில சில சாதனங்களைப் பொருத்தி கான்ட்ராஸ்ட் ஐ மாத்தவும் முடியும்.

இப்படி எல்லாம் இருந்தாலும் பிஸ்தா போட்டோகிராபர்கள் குறைவான கான்ட்ராஸ்ட் இருக்கிற இடத்தில அதிக கான்ட்ராஸ்டையும் அதிக கான்ட்ராஸ்ட் இருக்கிற இடத்தில குறைவாயும் காட்டுவாங்க. எல்லாம் தொழில் ரகசியம்!

ஒரு படத்தை எப்படி கம்போஸ் செய்யறது, எவ்வளோ எக்ஸ்போசர் கொடுக்கிறது போல பல விஷயங்கள் இருக்காம்! மேலும் எக்ஸ்போசர் கொடுத்தா சிலதுல கான்ட்ராஸ்ட் அதிகமாகும், சிலதுல குறையுமாம்.

எது எப்படியானாலும் கணினி மென்பொருளை பயன்படுத்தி பூந்து விளையாடிடலாம் இப்படி:


படங்கள்: # ராமலக்ஷ்மி

காரமுந்திரி I.
காரமுந்திரி II

-திவா
‘சித்திரம் பேசுதடி’
http://chitirampesuthati.blogspot.com/

3 comments:

  1. முதல் படம். இடது பக்க நபர் நல்ல வெய்யில்ல நிக்கிறார். ஹை கான்ட்ராஸ்ட். வலது பக்க நபர் கொஞ்ச நிழல்ல நிக்கிறார். லோ கான்ட்ராஸ்ட். (நிழல் இருக்கான்னா ந்னு கூட கேட்கிறா மாதிரி இருக்கு இல்லை?)

    இரண்டாம் படம். உச்சி வெய்யில். ஹை கான்ட்ராஸ்ட் ஒளி மூலம் - சூரியன். ஆனா நிழல்கள் வித்தியாசமா இருக்கு. தார் ரோடில் இருக்கிற நிழலுக்கும் மண் தரையில் இருக்கிற நிழலுக்கும் வித்தியாசம் இருக்கு.

    3/4 படங்கள். 4 ல மென்பொருளால கான்ட்ராஸ்ட் ஐ அதிகப்படுத்தி இருக்காங்க.

    ReplyDelete
  2. சுவாரஸ்யமான விவரங்கள். நன்றி திவாஜி.

    ReplyDelete
  3. தெளிவான விளக்கங்கள் நன்றி:)

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff