'யாருமில்லாத தீவொன்று வேண்டும்...' இப்பிடி யாராவது நெனச்சிங்கன்ன, உங்களுக்கு இந்த பதிவு பிரயோசனமாக இருக்கும். ஏன்னா எப்பிடி குட்டி உலகம் உருவாக்கலமாங்கிறதான் பாடம். அதுவும் அஞ்சே நிமிசத்துல. உங்கட்ட இருக்க வேண்டியதெல்லாம்.
1. காமரா
2. காம்பியூட்டர்
3. ஃபோட்டோஃசொப் / கிம்ஃப்
அதுக்கு முன்னாடி, பனரோமா (Panorama) பத்தி கொஞ்சம் தெரிச்சுக்குவம். பனரோமா என்பது செந்தமிழில் அகலப்பரப்பு. காட்சிகள அகலமா ஃபோட்டோ புடிச்சா அதான் பனரோமா. இத பனரோமா வியூ (Panorama View/அகலப்பரப்பு காட்சி) என்டும் சொல்லாம். பொதுவாக 4 ஷாட்ஸ் மூலமா இத எடுக்கலாம். இது சொஞ்சம் சிரமமான வேலதான்.
பனரோமா சாம்பிளுக்கு இந்தப் படம்
சாம்பிளுக்கு....
சாதாரண ஃபோட்டோ ( # ராமலக்ஷ்மி)
பனரோமாவுக்கு பொருத்தமாக Crop செய்யப்பட்டது.
குட்டி உலகம் ரெடி!
குட்டி உலகத்துக்கான ஃபோட்டோவை தெரிவு செய்தல்:
படிமுறை 1:
ஃபோட்டோவை சற்சதுரமாக மாற்றுங்கள்.
படிமுறை 2:
ஃபோட்டோவை தலைகீழாக மாற்றுங்கள்.
படிமுறை 3:
ஃபோட்டோவிற்கு ஃபோலார் எஃபெக்ட்டை அப்ளை செய்தல்
படிமுறை 4:
இனி செய்ய வேண்டியதெல்லாம், படத்தை மெருகூட்ட வேண்டியதே. அங்காங்கே இருக்கும் புள்ளிகளை அகற்றி வல, இட பங்கங்கள் பொருந்தும் இடத்தில் உள்ள செயற்கைத்தன்மையினை அகற்ற வேண்டியதுதான். Clone Stamp Tool, Smudge Tool என்பன இதற்குப் பயன்படும்.

பனரோமா ஃபோட்டோ புடிக்க எனக்கு நேரமில்ல என்டு நெனச்சிங்கன்னா உங்களுக்கு ஒரு சுலபமான வழி.
சாதாரண ஃபோட்டோ ( # ராமலக்ஷ்மி)
பனரோமாவுக்கு பொருத்தமாக Crop செய்யப்பட்டது.
குட்டி உலகம் ரெடி!
குட்டி உலகத்துக்கான ஃபோட்டோவை தெரிவு செய்தல்:
- 2:1 என்ற விகிதப்படி உள்ள காட்சிகள் சிறப்பானவை (அல்லது 2:1 என்ற விகிதப்படி Crop செய்யப்பட்ட ஃபோட்டோ). எவ்வளவுக்கு அகலம் அதிகமாக இருக்குதோ, அவ்வளவுக்கு சிறப்பான 'குட்டி உலகம்' கிடைக்கும்.
- ஃபோட்டோவின் கீழ்ப்பகுதியில் (25% அல்லது குறைவாக) மண் தரை, நீர் இருப்பது சிறந்தது. ஏன்னா இதுதான் நடுப்பகுதியாக மாறும்.
- ஃபோட்டோவின் மேற்பகுதியில் (25% அல்லது குறைவாக) ஆகாயம், மேகம் இருப்பது சிறந்தது.
- வலப்பக்கமும் இடப்பக்கமும் முடிந்தளவு ஒரே மாதிரியாக (நிறம், காட்சி, காட்சியின் உயரம்) இருப்பது சிறந்த காட்சியை உருவாக்கும். ஏன்னா வல, இட பக்கங்கள் ஒன்னா சந்திக்கும்.
- காட்சியின் கிடையான (horizontal) எல்லைகள் உயர்ந்து தாழ்வாக இருக்காமல் சமமாக இருக்க வேண்டும். இல்லன்னா 'குட்டி உலகம்' பிளந்ததுபோல் காட்சியளிக்கும்.
படிமுறை 1:
ஃபோட்டோவை சற்சதுரமாக மாற்றுங்கள்.
- மெனுவில் Image> Image Size
- Constrain Proportions என்பதன் √ அடையாளத்தை நீக்கிவிடுங்கள்.
- "Width" ற்கு ஏற்றவாறு "Height" யை மாற்றிவிடுங்கள். Ex: 1800x1800
படிமுறை 2:
ஃபோட்டோவை தலைகீழாக மாற்றுங்கள்.
- மெனுவில் Image> Rotate Canvas>180o (எதிர்மறையான குட்டி உலகம் தேவையென்றால் படத்தை தலைகீழாக மாற்றத் தேவையில்லை.)
படிமுறை 3:
ஃபோட்டோவிற்கு ஃபோலார் எஃபெக்ட்டை அப்ளை செய்தல்
- மெனுவில் Filter > Distort > Polar Coordinates (கிம்ப்பில் Filters > Distorts > Polar Coords.)
- “Rectangular to Polar”தெரிவு செய்யப்பட்டிருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.
படிமுறை 4:
இனி செய்ய வேண்டியதெல்லாம், படத்தை மெருகூட்ட வேண்டியதே. அங்காங்கே இருக்கும் புள்ளிகளை அகற்றி வல, இட பங்கங்கள் பொருந்தும் இடத்தில் உள்ள செயற்கைத்தன்மையினை அகற்ற வேண்டியதுதான். Clone Stamp Tool, Smudge Tool என்பன இதற்குப் பயன்படும்.
(படம்: ஜெருசலேம், இஸ்ராயல்) |
குட்டி உலகம் ரெடி!
வட்டமாக ஏரியும் சுற்றிவர மரங்களுமாய் குட்டி உலகம் அழகு:)!
ReplyDeleteகடைசிப் படம் மிகப் பிரமாதம்.
நல்ல பகிர்வு. நன்றி ஆன்டன்.
Good one.
ReplyDeleteNalla pathivu Anton!!
ReplyDeletesuperb... i'l try definitely..
ReplyDelete