Friday, August 5, 2011

ஆகஸ்ட் போட்டி - மாதிரிப் படங்கள்

9 comments:
 
இந்த மாதத்திற்கான தலைப்பு - சோகம் :( அப்படின்னு அறிவிச்ச நடுவர் நாதஸ் அழகாய்ச் சொல்லிட்டார்:
“வாழ்க்கை பயணம் தொடர்ந்து சீராகச் செல்லாது. சில தடுமாற்றங்கள், கவலைகள் இடையிடையே தோன்றும். அத்தகைய உணர்வுகளை இந்த வாரம் படம் எடுக்கப்போகின்றோம். உங்களுடைய படம் இயலாமை, தோல்வி, விரக்தி, பரிதவிப்பு போன்ற உணர்வுகளை வெளிபடுத்தலாம்.”


"மாதிரிப் படங்கள் எங்கே" என உரிமைக் குரல் கொடுத்துப் போன கோமா, ஷ்ராவ்யன் ஆகியோருக்காகவும், தலைப்புக்காகக் காமிராவை கையிலெடுக்க இருக்கும் ஏனைய பிறருக்காகவும்...

#1 ராமலக்ஷ்மி


#2 ஜீவ்ஸ்


#3 கருவாயன்



#4 கருவாயன்


#5 ராமலக்ஷ்மி
சோகமென்றாலே வயசானவங்கதானா அப்படின்னு கேட்கவோ, கேட்காமலே ஒரு முடிவு கட்டவோ செஞ்சுடாதீங்க. வாழ்வின் விளிம்பில் ஒரு வித சோகத்தை விரக்தியைப் பரப்புகிற மாதிரியாக அமைஞ்சு போன படங்கள் இவை. எல்லாமே உடல்மொழியால் உணர்வை உணர்த்துவதாய் அமைஞ்சிருக்கு இங்கே.

ஆனா உணர்வை வெளிப்படுத்தும் சக்தி கண்களுக்கே அதிகம் என்பதை நம்மாலே மறுக்க முடியுமா? இதோ கீழுள்ள இந்தச் சிறுவனின் கண்ணில் தேங்கி நிற்கும் ஓராயிரம் கேள்விகளில் ஒன்றுக்குக் கூட நம்மிடம் விடை இல்லை:(!
#6 ஜீவ்ஸ்


இந்தக் கண்களை நேருக்கு நேர் நம்மால சந்திக்க முடியுதா?
#7 ராமலக்ஷ்மி


காட்டு ராஜாவைக் கட்டிப் போட்டோ அதன் கண்களில் உற்சாகமா வழியும்:(?
#8 ராமலக்ஷ்மி


இதுபோல பல விலங்குகள், குறிப்பா நாய்கள், மாடுகள் தனிமையில் சோகமாப் பார்த்தபடி இருக்கும். ஐந்தறிவு விலங்குகளுக்கும் உணர்வுகள் இருக்கே. கவனிச்சுப் பாருங்க.

தனிமையிலே குழந்தைகள் கூடதான் dull-ஆக bored-ஆக உணருவாங்க. பாருங்க இந்தப் பையனை. அம்மா ‘இப்ப விளையாடப் போகாதே. படி உட்கார்ந்து’ன்னு சொல்லிட்டாங்களோ:)?

#9 ஜீவ்ஸ்


இப்போ இலையுதிர்காலம். இந்தத் தலைப்பு அறிவிப்பான நாளுல காருல போயிட்டிருக்கும் போது பல இடங்களில் ஒத்த இலை கூட இல்லாத மரங்களைப் பார்த்தேன். அது கூட ஒரு சோகம்தான். நெடுஞ்சாலை என்பதால் நிறுத்தி எடுக்க முடியலை. ஆனா என்ன அழகான கோணங்களில் எடுக்கலாம்னு மனசு மட்டும் கணக்குப் போட்டுச்சு. அப்படியான படத்தைக் கொடுத்துட்டு ‘நீங்க சொன்னீங்கன்னு எடுத்தனே. மொதப் பத்துக்குள்ள கூட வரலியே’ன்னுல்லாம் கேட்கப்படாது:))! கட்டிடப் பின்னணியில்லாமல் வெண்மேகம் சூழ்ந்த வானோ, நிர்மலமான நீல ஆகாயமோ மட்டுமே பின்னணியா வருமாறு லோ ஆங்கிளில் எடுத்தா நல்லாருக்கும். லைட்டிங்கும் சோகமான மூடை கொண்டு வருமாறு இருக்கணும்.

இது ஒரு உதாரணத்துக்குதான். உங்க கற்பனையைத் தட்டி விடுங்க. சோகத்தை எப்படி படமெடுக்க என சோர்வாயிடாதீங்க. பாருங்க மொட்ட மரம் சோகமா தெரிஞ்சாலும், இன்னும் சில நாளுல துளிர்த்துத் தளிர்விட்டுப் பூத்துக் குலுங்கிடும். அது போலதான். எந்த உணர்வும் நிரந்தரமில்ல. எல்லாம் மாறி மாறி வருவதுதானே வாழ்க்கை. ஹி.. நடுவர் சொன்ன அதே பாயிண்ட்ல முடிச்சுக்கறேன்:)!

9 comments:

  1. வித்தியாசமான தலைப்பு.. குறிப்புகளும் நல்லாருக்கு.

    மொட்டைமரமும் ஓகேதானா.. ரெடி ஜூட் :-)))

    ReplyDelete
  2. பரவாயில்லையே....மாதிரிபடங்களுக்காகவே ஒரு பதிவு போட்டிருக்கிறீர்கள்....பாராட்டுக்கள் ராமலக்ஷ்மி....படங்கள் அனைத்தும் அருமை....

    ReplyDelete
  3. என் வீட்டு வாசலில் மொட்டை மரத்தை ,இதுவும் கடந்து போம் என்று சொல்லிய போது க்ளிக் பண்ணிய படம் தயார்

    ReplyDelete
  4. அருமையான விளக்கங்கள் குறிப்புகளுக்கு நன்றி ராமலஷ்மி

    ReplyDelete
  5. ஆகஸ்ட் மாத (சோகம் ) போட்டிக்கான புகைப்படம் அனுபயுள்ளேன் பெயர் :ஜெரால்ட்.JPG

    title of my pic :Buffoons feelings

    நன்றி

    ReplyDelete
  6. போட்டிக்கான படத்தை அனுப்பியாகிவிட்டது... balakumar.jpg

    ReplyDelete
  7. ஆகஸ்ட் போட்டிக்கு தபால்பெட்டி அனுப்பியுள்ளேன்

    ReplyDelete
  8. ஆகஸ்ட் மாத (சோகம்) போட்டிக்கான படம் அனுப்பியுள்ளேன்: Anirudh_V.jpg

    ReplyDelete
  9. when will the results get published?

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff