மகளிர் தினம் அனுசரிக்கப்படும் இந்த மார்ச் மாதத்தில் ITHI மகளிர் அமைப்பு விழிப்புணர்வுக்காக அறிவித்திருக்கும் ஒளிப்படப் போட்டிதான் FEMME VUE.
ஐடி துறையில் பணியில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ள நேரும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் காணவும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவும் பெங்களூரில் இயங்கி வரும் அமைப்பு ITHI. அவ்வப்போது உழைக்கும் மகளிரின் பிரச்சனைகள், உரிமைகள் குறித்த கருத்தரங்கங்கள், விவாதங்கள், கூட்டங்களை மகளிருக்காகவும், பொதுமக்கள் உணர்ந்து கொள்வதற்காகவும் தொடர்ந்து நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தப் போட்டியின் நோக்கம் ஒத்த கருத்தும் புரிதலும் கொண்டவர்களை ஒன்று சேர்த்து மகளிர் குறித்த உலகின் பார்வையை, மகளிர் பிரச்சனைகளை வெளிக் கொண்டு வருவதேயாகும். வேறு எந்த விதத்திலும் சொல்ல முடியாத கதையை மனதில் தைப்பது போல அழுத்தமாகச் சொல்லக் கூடிய சக்தி வாய்ந்தவை ஒளிப்படங்கள் என நம்புகிற அமைப்பு, அனைவரையும் இதில் பங்கு கொண்டு தம்மைக் கெளரவிக்கக் கேட்டுக் கொள்கிறது.
படங்கள் கண்டிப்பாகப் பின் வரும் கருக்களை வெளிப்படுத்துபவையாக இருக்க வேண்டும்:
பிரிவுகள்:
படங்களைச் சமர்ப்பிக்கவும் மேலும் விரிவான விவரங்களுக்கும் இங்கே http://itecentre.co.in/ithi/#events செல்லவும்.
30 மார்ச் அன்று போட்டியில் முதல் 3 இடங்களைப் பெற்றவர்களுக்கு கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். பெங்களூரில் எந்த இடத்தில்.. என்பது அவர்களது தளத்தில் விரைவில் அறிவிப்பாகும். அத்துடன் அமைப்பின் FB பக்கத்தில் https://www.facebook.com/Ithiforwomen வென்றவர்களது ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்படும்
ஒளிப்பட நுட்பங்கள் பிரமாதமாக அமைய வேண்டும் என்பதை விடவும் எத்தனை வலுவாக படம் கருவை வெளிப்படுத்துகிறது என்பதற்கே அதிக முக்கியத்துவம் தரப்படும்.

- வெவ்வேறு சமுதாயங்கள் பெண்களை எப்படிப் பார்க்கின்றன.. சித்தரிக்கின்றன..
- சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்கு.. அரசியல், கலை, கல்வி, ஆய்வுத் துறை, தொழில் துறை, ஊடகங்கள் ஆகியவற்றில் பெண்களின் இடம்..
- இன்றைய உழைக்கும் மகளிர்.. சமூகம் அவர்களை எப்படி நடத்துகிறது..
பிரிவுகள்:
- A பிரிவு, தனிப்படங்களுக்கானது.
- B பிரிவு, ஒளிப்படக் கதைக்கானது (அதாவது 2 அல்லது 5 படங்கள் ஒரு குறிப்பிட்டக் கருவை வெளிப்படுத்துவதாக.. அல்லது ஒரு கதையைச் சொல்வதாக.. இருக்க வேண்டும்).
- படங்களை அனுப்பக் கடைசித் தேதி: 27 மார்ச் 2014 மாலை ஐந்து மணி.
- உலகின் எல்லாப் பாகங்களிலிருந்தும் ஆண், பெண் இரு பாலினரும், எந்த வயதினரும், எந்த நாட்டினரும் என யார் வேண்டுமானாலும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
- ஒருவர் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் ஒரே படத்தை இரண்டு பிரிவுகளுக்கும் கொடுக்கக் கூடாது.
- அடிப்படை திருத்தங்கள் செய்து படங்களை மேம்படுத்த அனுமதி உண்டு.
- வண்ணம், கருப்பு வெள்ளை இரண்டு வகைப்படங்களும் தரலாம்.
- JPG file ஆக சமர்ப்பிக்க வேண்டும்.
- 1500x2100 பிக்ஸல்; 150-க்கு அதிகமான dpi மற்றும் 20 MB அளவு வரை இருக்கலாம். [வெற்றி பெற்றவர்கள் print செய்யும் வசதிக்காக, அதிக resolution படங்களை போட்டிக்குப் பிறகு சமர்ப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.]
படங்களைச் சமர்ப்பிக்கவும் மேலும் விரிவான விவரங்களுக்கும் இங்கே http://itecentre.co.in/ithi/#events செல்லவும்.
30 மார்ச் அன்று போட்டியில் முதல் 3 இடங்களைப் பெற்றவர்களுக்கு கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். பெங்களூரில் எந்த இடத்தில்.. என்பது அவர்களது தளத்தில் விரைவில் அறிவிப்பாகும். அத்துடன் அமைப்பின் FB பக்கத்தில் https://www.facebook.com/Ithiforwomen வென்றவர்களது ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்படும்
ஒளிப்பட நுட்பங்கள் பிரமாதமாக அமைய வேண்டும் என்பதை விடவும் எத்தனை வலுவாக படம் கருவை வெளிப்படுத்துகிறது என்பதற்கே அதிக முக்கியத்துவம் தரப்படும்.
***
AID பெங்களூர், விழிப்புணர்வுக்காக நடத்திய ஒளிப்படப் போட்டி குறித்த அறிவிப்பு விரிவாக இங்கே. கலந்து கொண்ட படங்களில் கண்காட்சிக்குத் தேர்வான படங்கள் 15 குறித்த விவரங்கள் இங்கே. இவற்றோடு பெங்களூர் குறித்த மேலும் பல ஒளிப்படங்களுடன், மார்ச் 15 மற்றும் 16 தேதிகளில், பெங்களூரின் தொம்லூர் பகுதியிலிருக்கும் தளம் அரங்கில் நடைபெறவிருக்கும் கண்காட்சியில் வாய்ப்புக் கிடைக்கிறவர்கள் கலந்து கொள்ளுங்கள்!
***
போட்டியின் நோக்கம் சிறப்பு... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteI am a subscriber of this VALUABLE BLOG, via email.
ReplyDeleteNow a days I am not getting your post emails.
Last post I received on 9/12/2013.
After that I didn't get any post.
Checking the spam folder regularly and marked yours as important and starred in my Gmail account.
Please check this on your side.
Please add a FAVICON for this blog, which will give more attention especially in Bookmarks.
ReplyDeleteThanks in advance.