Monday, February 1, 2010
2010 பிப்ரவரி மாத போட்டி அறிவிப்பு
வணக்கம் மக்கா,
எல்லோரும் எப்படி இருக்கீங்க. இந்த முறை ஒரு எளிமையான தலைப்போடு வந்து இருக்கிறேன்.
மனித நாகரிக வளர்ச்சியில் மிக முக்கிய கண்டுபிடிப்பு சக்கரம். சக்கரம் வந்த பிறகு மக்களின் பயணங்களுக்கு துணை புரிய பல வகை வாகனங்கள் வந்து விட்டன. சக்கரமே இல்லாமல் கூட வாகனங்கள் உள்ளன.
ஹி ஹி ஹி... எதுக்கு சுத்தி வளைச்சுகிட்டு. இந்த மாசத்தலைப்பு - "வாகனங்கள்"
(ஒன்றோ, ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள்)
An&
இந்த முறை உங்களுக்கு சப்ஜெக்ட் கிடைக்கலைன்னு குறை கூற முடியாது :)
ரோட்ல போறது, பறக்கறது, மிதக்கறதுன்னு பல வாகனம் இருக்கு. சைக்கிள் முதல் விமானம் வரை பலது இருக்கு.
ஏன் நீங்கள் அன்றாடம் பயணம் செய்யும் வாகனத்தையே கூட படம் பிடிக்கலாம்.
CVR
விதிமுறைகள்: இங்கே
கடைசி தேதி: பிப்ரவரி 15 2010
போட்டி முடிவு: பிப்ரவரி 25 2010
நம் படம் தனித்து தெரிய, வித்யாசமான கோணம்(POV), Panning, Zoom Burst இப்படி பல உத்திகளை பயன் படுத்தவும்.
ஜீவ்ஸ்
படத்தில் வாகனங்களுக்கு அதிக முக்கியம் அளியுங்கள். வாகன ஒட்டுனருக்கோ, அதில் பிற பயணிகளுக்கோ அல்லது சுற்றுபுரத்திற்கோ அதிக முக்கியமளிக்க தேவை இல்லை.
ஓடாமல் ஓரத்தில் துரு பிடித்து கிடக்கும் வாகனங்களை கூட படம் எடுக்கலாம் அனால் பொம்மை கார், பொம்மை கப்பல்ன்னு படம் எடுத்து அனுப்ப கூடாது. :P
போட்டியில் பங்குபெற போகும் அனைவருக்கும் என் நன்றி மற்றும் வாழ்த்துக்கள் !!!
டிஸ்கி: எமதர்மரோட வாகனம் அப்படின்னு சொல்லி எருமை மாட்டோட படத்தை அனுப்பி லந்து பண்ண கூடாது.
Subscribe to:
Post Comments (Atom)
சுவாரஸ்யமான போட்டி..:))
ReplyDeletewow. interesting.
ReplyDeleteஉண்மையிலேயே வித்தியாசமான தலைப்பு...
ReplyDeleteநல்ல தலைப்பு தல
ReplyDelete`~எமதர்மரோட வாகனம் அப்படின்னு சொல்லி எருமை மாட்டோட படத்தை அனுப்பி லந்து பண்ண கூடாது.`~
ReplyDeleteசெம கமெண்ட்..
`~மனித நாகரிக வளர்ச்சியில் மிக முக்கிய கண்டுபிடிப்பு சக்கரம்.`~
மனிதனின் முதல் கண்டுபிடிப்பே சக்கரம் தான்..
-கருவாயன்
நல்ல தலைப்பு! போட்டி கடுமையாக இருக்கும்னு நினைக்கிறேன்!
ReplyDeleteதலைப்பு super!
ReplyDelete//டிஸ்கி: எமதர்மரோட வாகனம் அப்படின்னு சொல்லி எருமை மாட்டோட படத்தை அனுப்பி லந்து பண்ண கூடாது. //
நல்லவேளை சொன்னீங்க நான் நிஜமாவே ஒரு எருமையை போட்டோ புடிச்சு அனுப்பலாம் என்றிருந்தேன் :-)
// நல்லவேளை சொன்னீங்க நான் நிஜமாவே ஒரு எருமையை போட்டோ புடிச்சு அனுப்பலாம் என்றிருந்தேன் :-) //
ReplyDeleteஓவியாவின் லந்துக்கு ஒரு அளவே இல்லாம போயிடுச்சுப்பா...
போட்டிக்கான படத்தை அனுப்பி இருக்கிறேன்
ReplyDeleteமயில் எலி எல்லாம் வாணாமா???????
ReplyDeleteநல்ல தலைப்பு
போட்டிக்கான புகைப்படம் அனுப்பியுள்ளேன்
ReplyDeletePiT ன் பிப்ரவரி மாத புகைப்படபோட்டிக்காக (வாகனங்கள்)
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
போட்டிக்கான புகைப்படம் அனுப்பியுள்ளேன்.
ReplyDeleteநன்றி
பிரேம்
I've sent my picture for the contest!
ReplyDeleteபோட்டிக்கான புகைப்படம் அனுப்பியுள்ளேன்.
ReplyDeletehttp://thacnathaku.blogspot.com/2010/02/2010-pit.html
forgot to put the display name in the subject
ReplyDeletepl add
VAASI
வணக்கம்,
ReplyDeleteவாகனங்கள் - போட்டிக்கான எனது புகைப்படம்,
http://shadowtjay.blogspot.com/
போட்டியாளர்கள் அனைவரக்கும் வாழ்த்துகள்; PIT குழுவினருக்கு எனது அன்பான நன்றிகள்
TJay
போட்டிக்கான படம் அனுப்பியிருக்கிறேன்
ReplyDeleteஇந்த நிமிடத்தில் என் படம் பிகாசாவில் பதிவாகவில்லையே...
ReplyDelete@goma -
ReplyDeleteஇப்போது அனைத்து படங்களும் பிகாசாவில் தெரியும்.
படத்தில் பெயர் இல்லாதவர்கள். பிகாசாவில் தங்கள் படங்களின் கீழ் தெரிவிக்கவும். நன்றி !