Saturday, March 27, 2010

`ஒன்று` இரண்டாவது சுற்றில் முன்னேறியவர்கள்... மற்றும் விமர்சனங்கள்..

23 comments:
 
அன்பு நண்பர்களே.. `ஒன்று` போட்டியில் முதல் சுற்றில் 35படங்கள் முன்னேறியிருந்தன.. அடுத்த சுற்றில் 19 படங்கள் வெளியேறியவர்கள் போக, இறுதி சுற்றிற்கு முன்னேறியவர்களின் லிஸ்ட்... 1.ஆயில்யன் 2.அமல் 3.பூபதி 4.செல்லம் 5.கனேஷ் 6.கெளதம் 7.கார்த்திக் 8.KVR 9.MQN 10.NICHOLAS 11.பிரகாஷ் 12.ரகு முத்துகுமார் 13.S.M.ANBU ANAND 14.சத்தியா 15விக்னேஷ் 16.விஜயாலயன் போட்டோவை பதிவேற்ற கொஞ்சம் வலையவில்லை... மன்னிக்கவும்.. அது ஏன் என்று கீழே பார்த்தால் தெரிந்து கொள்வீர்கள்... சரி..இந்த முதல் சுற்றிலிருந்து ஏன் படங்கள் வெளியேறின , என்ன காரணம் என்று வெளியேறிய படங்களை பற்றிய விமர்சனங்களை பார்ப்போம்... இவற்றில் எதுவும் வரிசைபடி கிடையாது... பெரியதாக பார்க்க படத்தை க்ளிக் செய்து பார்க்கவும்.. 1.ananth பையன் தண்ணீரில் குளிப்பதை நல்ல தெளிவாக படம் எடுத்துள்ளீர்கள்.. அதுவும் பசசை கலரில் தண்ணீர் அருமை.. ஆனால், 1.இந்த இடம் கட் ஆகாமல் இருந்திருக்கவேண்டும்..இதுவே படத்துக்கு குறை.. 2.குறைகள் இருந்தாலும்.. படத்தில் பச்சை கலரில் தண்ணீர் இருப்பது படத்திற்கு மிகவும் அழகு சேர்க்கின்றது.. நல்ல தெளிவான படமும் கூட.. இருந்தாலும் படத்தில் ஸ்பெசலாக எதுவும் இல்லாததால் அடுத்த சுற்றிற்கு முன்னேறவில்லை.. 2.gopal மிக அருமையான சிரிப்பை படம் பிடித்துள்ளீர்கள்..ஆனால், 1. கண்கள் தான் இந்த மாதிரி படங்களுக்கு உயிர்..ஆனால் முகத்தில் படும் எதிர் வெயிலால் கண்கள் பகுதியில் shadows அதிகமாக தெரிகின்றது.. இதை தவிர்த்திருக்க வேண்டும்.. அதற்கு ஒரே வழி flash பயன்படுத்துவது தான்..(இந்த மாதிரி harsh வெயில் நேரங்களில் மட்டும்) 2.இந்த மாதிரி க்ராப் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.. 3.பின்னால் தெரியும் இந்த கருப்பு பகுதி படத்திற்கு சிறிய தொந்தரவு.. சிறுமியின் புன்னகை மிக அழகாக இருந்தாலும் மேலே சொன்ன சில குறைகள் தான் இந்த படத்திற்கு தடை.. 3.jenova purple கலரில் மெழுகுவர்த்தியின் ஒளியை அழகாக இருக்கின்றது.. அதுவும் distraction இல்லாத backgroundல்..ஆனால், 1. படத்தில் negative space ரொம்பவும் அதிகமாக அதுவும் கருப்பு கலரில் இருப்பது குறை.. 2. இந்த மாதிரி க்ராப் செய்தால் நன்றாக இருக்கும். 3. படத்தில் purple கலர் நன்றாக இருக்கின்றது.. மேலே சொன்ன குறைகள் இல்லாமல் இருந்திருந்தால் அடுத்த சுற்றிற்கு போயிருக்கும்.. 4. kamal சிறுவனை ஜன்னல் ஒளியில் வைத்து வித்தியாசமாக முயற்சி செய்துள்ளீர்கள்..ஆனால் 1. படத்தின் இந்த பகுதியில் முழுவதும் ரொம்பவே இருட்டு.. இதுவே இப்படத்திற்கு மைனஸ்.. 2.இந்த இடத்தில் மட்டும் வெளிச்சம் பத்தாது.. இன்னும் ஒளி தேவை.. நல்ல முயற்சி.. ஆனால் பத்தாது.. 5.karthik (vandalur) 1.இந்த முறையில் கம்போசிஸன் இருந்திருக்க வேண்டும் என்பது என் கருத்து..தலை பகுதி ரொம்பவும் க்ராப் ஆகிவிட்டது.. 2.பேக்கிரவுண்ட் கலர் மிகவும் அருமை.. ஆனால் நெகட்டிவ் space ஆக போய்விட்டது.. 3.நல்ல டீடையில்ஸ்.. கண்கள்(முகம்) கீழ் நோக்கி பார்ப்பதால், கம்போசிஸன் கிழே இன்னும் கொஞ்சம் இடம் வேண்டும்..ஆனால் பின்னால் தான் இடம் அதிகமாக இருக்கின்றது.. 6. mallika 1. இந்த இலைகள் தான் இந்த தலைப்புக்கும்,இந்த பூவிற்கும் ஒரு தடை..கண்கள் அங்கேயும் அதிகமாக அலை பாய்கின்றன.. 2. பூ நட்ட நடுவில் இருக்கின்றது, பொதுவாக ஒரு முக்கிய subject என்பது too centerஆக இருக்ககூடாது என்பது photographyயில் எழுதப்படாத ஒரு விதி..இதனால் கண்கள் இரண்டாக பிரியும்.. படத்தில் பூவின் ஷார்ப்னெஸ் பத்தவில்லை 7.mangai 1. குதிரையை வைத்து கறுப்பு பேக்கிரவுண்ட் எப்படி எடுத்தீர்கள்?? தெரிவித்தால் உபயோகமாக இருக்கும்..கண்டே பிடிக்க முடியவில்லை.. 2.ஒரு படத்திற்கு நாலு ஃப்ரேம் என்பது ரொம்பவே ஒவர் டோஸ்..படத்தை விட ஃப்ரேமே பெரிதாக இருப்பது போல் உள்ளது.. 3.glow effect ரொம்பவும் அதிகம்.. இருந்தாலும் இது உண்மையான குதிரையை வைத்து எடுத்ததா, இல்லை ஆர்ட் என்று நினைப்பதா என்று வரும் பெரும் குழப்பமே இப்படத்திற்கு மைனஸ்.. 8.manivannan. 1.இந்த மாதிரி நிழல்கள் வராமல் இருக்க வேண்டும்.. அதற்கு ஃப்ளாஷ் தான் வழி.. 2.இந்த மாதில் க்ராப் இருந்தால் composition நன்றாக இருக்கும்.. 3.குழந்தையில் expression அருமை.. நல்ல முயற்சி.. இருந்தாலும் பத்தாது.. 9.meenatchisundaram 1.இந்த பகுதி கொஞ்சம் distract செய்கின்றது.. 2.இந்த முறையிலான க்ராப் சரியாக வரும்.. 3.பேக்கிரவுண்ட் கலர் நன்றாக இருந்தாலும் இவ்வளவு space காண்பிக்க தேவையில்லை. 4.இன்னும் க்ளோஸ் போய் எடுத்தால் details நன்றாக இருக்கும்.. 10.nandakumar.. நல்ல angle ல் ஒரு மரத்தை படம் எடுத்திருப்பது மிக அழகாக இருக்கின்றது.. ஆனால்.. 1.இந்த கலர் வானம் artificialஆக இருப்பது மைனஸ்.. 2.கொஞ்சம் அதிகமாக brightness or over exposure காலியிடம் கண்களை lead செய்கிறது..இருந்தாலும் இந்த மாதிரி படங்களில் இது இல்லாமல் எடுப்பதும் கஷ்டம் தான்.. 3.இந்த வகையில் க்ராப் செய்திருந்தால் நன்றாக இருக்கும் 11.prabakar ஒரு சிறிய குருவியை மிக அழகாக படம் பிடித்துள்ளீர்கள்..அதுவும் குருவியின் கறுப்பு,வெள்ளை இரண்டும் நல்ல expose ஆகி உள்ளது. ஆனால், 1.இந்த க்ராப் என்பது சரியாக இருக்கும்.. நீங்கள் க்ராப் செய்திருப்பது ரொம்பவும் wide. 2.இந்த பகுதியில் வெளிச்சம் அதிகம் மற்றும் தொந்தரவு செய்கின்றது.. தவிர்த்திருக்கலாம்.. 3. - do - 4. cluttered background.. 12.priya குத்து விளக்கை ஒளியுடன் அழகாக படம் பிடித்துள்ளீர்கள்.. 1.குத்து விளக்கு பாதியாக இருப்பது கொஞ்சம் சிம்பிளாக தெரிகின்றது.. அதுவுமில்லாமல் படம் செண்டராக இருப்பது,பேக்கிரவுண்டில் கொஞ்சம் noise மாதிரி தெரிவது, மைனஸ்.. 13.raja 1.பையனுடைய action வித்தியாசமாக இருப்பது அழகு.. படமும் நல்ல தெளிவு.. 2.கொஞ்சம் ஒவர் exposure .. பையன் சிவப்பாக இருப்பதால் உடம்புக்கு metering செய்திருந்தால் இந்த மாதிரி அதிக வெளிச்சத்தை தவிர்கலாம்.. 3.மேலேயும்,சைடிலும் negative space தேவையில்லை.. 4.இந்த க்ராப் நன்றாக இருக்கும்..இருந்தாலும் உடம்பு ரொம்பவே க்ராப் ஆகிவிட்டது.. 14. gopal நல்ல தெளிவாக வாத்து படத்தை எடுத்துள்ளீர்கள்..வெள்ளை வாத்தும் சரியான expose ஆகியுள்ளது.. ஆனால், 1.இந்த க்ராப் போதும்.. 2.ரொம்பவும் plain negative space கவரவில்லை.. 3.கீழே இன்னும் இடம் விட்டு படம் எடுத்திருக்க வேண்டும்.அப்பொழுது தான் வாத்து போகும் திசை முழுதாக தெரியும்.. அல்லது மேலே இருந்து வாத்து வருகின்ற மாதிரி இருந்திருக்கவேண்டும்.. 15.senthil அருமையாக சிவப்பு சூரியனை படம் எடுத்துள்ளீர்கள்..இருந்தாலும்.. 1.அந்த கம்பி மற்றும் wire லைன் படத்துக்கு(தலைப்புக்கு) மைனஸ்... 2.இந்த முறையில் க்ராப் இருந்தால் composition சரியாக இருக்கும்.. 3.post processing கொஞ்சம் அதிகமானதால் noise மற்றும் கலர் திரிந்துள்ளது.. 16.thomas ரொம்ப அழகான குட்டி பையன்... நல்ல சிரிப்பு.. நல்ல தெளிவு..படமும் black and whiteல் நன்றாக உள்ளது..ஆனால், 1.இந்த க்ராப் போதும்..சைட் தேவையில்லை.. 2.சிறுவன் அன்னாந்து கேமராவை பார்ப்பதால் இது normal portrait மாதிரி effect இருக்கின்றது .அதுவுமில்லாமல் நீங்கள் மேலிருந்து படம் எடுக்காமல்..கணகளுக்கு நேராக எடுத்திருந்தால் பேக்கிரவுண்ட் இன்னும் clear ஆக இருந்திருக்கும்.. இந்த படம் 38mm ல் எடுத்துள்ளீர்கள்..இந்த மாதிரி portrait எடுக்குகும் போது முடிந்த அளவு focal length ஐ அதிகபடுத்தி(50mmக்கும் மேல்) நீங்கள் பின்னாடி சென்று எடுத்தால் நல்ல effect ஆக இருக்கும்.. 17.vennila meeran. அழகான ஜம்ப் ஷாட் எடுத்துள்ளீர்கள்..(பாவம்,அவர் எத்தனை முறை குதித்தாரோ??) அதில் நீல மேகமும் அழகு..ஆனால், 1.படத்தின் சப்ஜெக்ட் பாதி தெளிவாகவும்,பாதி silhoutte effect ஆகவும், குதிப்பவர் சிரமப்பட்டு பார்ப்பதும் இருப்பது மைனஸ்.. 2.பேக்கிரவுண்ட் கலர் நன்றாக இருந்தாலும்.. கொஞ்சம் நீலம் அதிகமாக இருப்பது செயற்கையாக தெரிகின்றது.. இதற்கு முற்றிலுமாக silhoutte ஆக வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் 18.vishnu புது கேமரா மற்றும் prime lens ஐ வைத்து குழந்தை படத்தை அழகாக எடுத்துள்ளீர்கள்..கண்கள் நல்ல focus,சிரிப்பும் அழகு..portrait ஐ நார்மலாக எடுக்காமல் சற்று மாறி வேறு போஸில் எடுத்திருப்பது நன்றாக இருந்தாலும் composition பெர்ஃபெக்டாக இல்லையே...இந்த லென்ஸை வைத்து இன்னும் ஷார்ப்பாக எடுக்க வேண்டும்.. 1.தலையை கீழே சாய்ப்பது போல் இருக்கின்றது..இதனால் கீழே இடம் விட்டு படம் எடுத்திருக்க வேண்டும்.. 2.இந்த பகுதி வெளிச்சம் மற்றும் கறுப்பு பகுதி கொஞ்சம் distract பன்னுகின்றது.. பொதுவாக சப்ஜெக்ட் நிழலில்(or வெளிச்சம் குறைவாக) இருந்து, பேக்கிரவுண்ட் வெளிச்சம் அதிகமாக இருந்தால் முடிந்த அளவு அதை தவிர்க்கவும்.. 3.இந்த மாதிரி டைட் க்ராப் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.. என்றைக்கும் portrait ஐ பொறுத்த வரையில் too center ஆக படம் எடுப்பதை தவிர்க்கவும்..ஏனென்றால் அது நம் கண்களை இரண்டாக பிரிக்கும் இதனால் படத்தின் effect குறையும்.. 19.winsen ஆட்டுக்குட்டி சிரிப்பது போல் அழகான படம்..சிவப்பு கலரில் செடியும் அருமை..ஆனால், 1.சிவப்பு பேக்கிரவுண்டில் இந்த மாதிரி வெள்ளை தெரிவது கொஞ்சம் உறுத்தல்.. 2.இந்த மாதிரி இடம் விட்டு compose செய்திருக்கலாம்.. 3.ஆட்டின் முகம் வெட்கப்படுவது போல் அழகாக இருக்கின்றது.. இருந்தாலும் போட்டிக்கு இது பத்தாது.. இந்த சுற்றில் வெளியேறிய படங்களில் கிட்டதட்ட அனைத்திலும் ஏதோ ஒரு வகையில் composition என்பது முதல் மற்றும் முக்கிய குறையே.. அடுத்து composition நன்றாக இருந்தாலும் சப்ஜெக்ட் என்பது நார்மலாக, அதாவது யார் வேண்டுமானாலும் இந்த படத்தை எடுக்கலாம் என்பது போல் இருந்தால் அடுத்த சுற்றிற்கு போக முடியாமல் போய் விட்டது.. சரி விடுங்கள்.. அடுத்த முறை ஒரு வெறியோடு கலக்கி விடலாம்... இந்த விமர்சனங்கள் யாரையாவது புண்படுத்தி இருந்தால் அந்த சிரமத்திற்காக வருந்துகிறேன்.. இருப்பினும் இதையெல்லாம் சுட்டி காட்டாமல் இருந்தால் அதை சரி படுத்த வாய்ப்பில்லாமல் போய் விடும் என்பதற்காகவே இந்த விமர்சனங்கள்.. இந்த படங்கள அனைத்தையும் என்னால் முடிந்த வரையில் crop மற்றும் கொஞ்சம் alter செய்து இங்கே பதிவேற்றியுள்ளேன்.. கண்டிப்பாக பார்க்கவும்.. ஏதும் குறை இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.. மிக விரைவில் இறுதி சுற்றில் வென்றவர்களின் படங்களுடன் உங்களை சந்திக்கின்றேன்.. நன்றி கருவாயன்..

23 comments:

  1. மிக அருமை

    தவறுகள் சுட்டிகாட்டப்பட்டிருப்பது, அதை களையும் வழிகள் மேலும் நல்ல ரிசல்ட்களுக்கு வழிவகுக்கும்


    முதல் படம் பச்சை தண்ணீர் எனக்கு மிகவும் பிடித்த 1 :)

    ReplyDelete
  2. அருமையான தேர்வுகள்... முதல் பத்து இடங்களை பிடித்த அனைத்து படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்...

    நல்ல விமர்சனம் மற்றும் நடுவரின் பங்களிப்பு....

    பாராட்டுக்கள்...

    ReplyDelete
  3. மிகவும் அருமையான விமர்சனம் மற்றும் தேர்வு முடிவுகள்!
    நான் எடுத்த படத்தை மிகவும் சிறப்பாக கலாய்ச்சிருக்கீங்க ! நன்றி!:-)

    ReplyDelete
  4. @மங்கை... நியாயமா உங்க படத்தை இன்னும் கொஞ்சம் ரவுண்ட் கட்டியிருக்கனும்...

    ஏன்னா நீங்க ரெண்டு வெவ்வேறு பெயரில் படத்தை அனுப்பியது இப்ப தான் எனக்கு தெரிந்தது..

    ஆனால் உண்மையில் உங்கள் படத்தை கலாய்க்கவில்லை..

    -கருவாயன்

    ReplyDelete
  5. மிகவும் அருமையான விமர்சனம்/feedback.. என் படம் தேர்வானதில் மகிழ்ச்சி..

    ReplyDelete
  6. @கருவாயன் நியாயமா உங்க படத்தை இன்னும் கொஞ்சம் ரவுண்ட் கட்டியிருக்கனும்... :-0இன்னுமா:(

    மனிதாபிமானத்தோட நடந்திருக்கணும் ;)
    இனிமே அப்படி அனுப்ப வில்லை ...\\done!
    தேர்வான அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....PIT இன் சேவைக்கு நன்றி!!!!

    ReplyDelete
  7. பூதப்பாண்டி - சேவூர்March 28, 2010 at 1:33 AM

    மங்கை
    கருவாயன் தமாசுக்காக அப்படிச் சொல்லியிருக்கிறார். தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அடுத்து அடுத்த போட்டிகளில் உங்களின் படத்தை எதிர்பார்க்கிறோம்

    உங்கள் படத்தின் தீவிர ரசிகன்

    ReplyDelete
  8. மிகுந்த சிரத்தையுடனான விமர்சனங்கள். தெளிவான விளக்கங்கள். நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது. நன்றி.

    க்ராப்பிங் விஷயத்தில் நீங்கள் சொல்லியிருப்பது போல அமைந்திருந்தால் பிரமாதமாக இருந்திருக்கும்தான். ஆனால் ’சிலநேரம்’ தேவையற்ற இன்னபிற விஷயங்கள் படத்தில் தெரிந்தால் வேறுவழியின்றி டைட் க்ராப்பிங்கோ அல்லது நீங்கள் சரியில்லை என சுட்டியிருக்கிற விதத்திலோ அமைய நேர்ந்து விடுகிறது:(!

    முன்னேறியவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. @ராமலக்‌ஷ்மி..

    நீங்கள் சொல்வது சரிதான் ஆனால்,வந்திருந்த சில portrait படங்களில் இருந்து டைட் க்ராப்பிங் பன்னுவதை தவிர வேறு வழி இல்லை.. அவர்கள் அனுப்பிய படங்களின் compositionஐ விட,அதை டைட் க்ராப்பிங் செய்து பார்க்கும் போது நன்றாக தெரிந்தது..அதானால் தான் டைட்டாக க்ராப் செய்வது நல்லது என்று சொன்னேன்..

    சில நேரங்களில் டைட் க்ராப்பிங் என்பது கூட அழகாக தான் இருக்கும்..ஆனால் கண்டிப்பாக டீடெய்ல்ஸ் பக்காவாக இருப்பது மிக அவசியம்..

    மற்றபடி டீடெயில்ஸ்,தெளிவு,ஷார்ப்னெஸ் இல்லாத படங்களை டைட்டாக க்ராப் செய்தால்
    மிகவும் மோசமாக தான் தெரியும்.. அந்த மாதிரி படங்களை தான் டைட்டாக க்ராப் செய்ய கூடாது..

    -கருவாயன்

    ReplyDelete
  10. அனைவருக்கும் நன்றி.. ஆமாங்க இருதிச்சுற்றில் என் படமும் இருக்கு இந்த முறை !!!

    ReplyDelete
  11. //நல்ல விமர்சனம் மற்றும் நடுவரின் பங்களிப்பு....//

    நிச்சயமாக.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. எத்தனையோ வேலைகளுக்கு இடையில் எங்கள் படங்களை விமர்சனம் செய்து நாங்கள் கற்றுக்கொள்ள உதவி செய்யும் திரு கருவாயன் அவர்களுக்கு நன்றி... மேலும் இந்த விமர்சனங்களை அப்படியே ஒரு பதிவாக இருக்குமாறு செய்யவும். எங்களுக்கு சந்தேகம் வரும்போழுது பார்துக்கொள்ள உபயோகமாக இருக்கும்.

    ReplyDelete
  13. Nice critics, you are doing wonderful job mr.karuvayan. all the best for final contestants.

    ReplyDelete
  14. ஏன் தேர்வாக வில்லை என்பதை விளக்கமாக குறித்திருப்பது எங்களை போன்ற ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு உதவும். அருமையான பாடங்கள், படங்களோடு.. :)நன்றி.

    ReplyDelete
  15. Thanks for the valuable feedback Karuvayan ;-)
    Really very useful for the beginners like me , will definitely do better next time

    Wishes for the people who got selected!!

    Jenova

    ReplyDelete
  16. எனக்குப் பிடித்த சில படங்கள் இரண்டாம் சுற்றில் வெளியேறியது வருத்தமே. ஆனாலும், அதற்கான விளக்கங்கள் எங்களுக்குக் கற்றுக்கொள்ளும் பாடமாக அமைந்துள்ளது. நன்றி

    ReplyDelete
  17. அருமை. உங்களுடைய கருத்துகள் நல்ல பாடம்.

    ReplyDelete
  18. இரண்டாம் சுற்றுக்கு தேர்வானவர்களுக்கு வாழ்த்துகள். நான் நினைத்த படம் முதல் மூன்று இடங்களுக்குள் வருதான்னு பார்க்கறேன். சீக்கிரம் முடிவை சொல்லுங்கப்பா.

    ReplyDelete
  19. அருமையான அலசல். இவ்வளோ பொறுமையா நேரம் செலவழிச்சி படங்களை விமர்சனம் பண்ணி இருக்கீங்க கருவாயன்! வாழ்த்துக்கள்! அதிலும் நீங்களே படங்களை எடிட் பண்ணி போட்டிருப்பது சூப்பர்! இதுக்காகவே இன்னும் பல பேர் இனிமேல் போட்டில கலந்துக்குவாங்க!

    ReplyDelete
  20. Good Selection Pictures.Better you explain more why did you reject other photos. Because, better we will do best in future.

    ReplyDelete
  21. 3 வது படத்தின் கருத்துக்கும் 6 வதுக்கும் முரண் பாடு தெரிகிறதே ?.. 6 வதில் நடுவில் இருக்க கூடாது என்றால், 3 வது இடப்பக்க ஓரத்தில் இருப்பது சரிதானே ?. சந்தேகம் என்பதால் கேட்கிறேன். தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

    ReplyDelete
  22. @பின்னோக்கி...

    ```சந்தேகம் என்பதால் கேட்கிறேன். தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்```

    இதில் தவறாக எடுத்துக்கொள்ள எதுவுமே இல்லை நண்பரே..

    3வது படம் என்பது ரொம்பவும் ஓரத்தில் இருக்கின்றது.. அந்த மாதிரி இருக்கும் போது background ரொம்பவும் plainஆக எஃபெக்ட் எதுவும் இல்லாமல் இருந்தால் அது நெகட்டிவ் space அல்லது empty space ஆக தான் தெரியும்..இது ஒரு போட்டோவுக்கு தேவையில்லை..

    அதனால் அந்த படத்திலிருந்து டைட் க்ராப் செய்து மீண்டும் ஃப்ரேம் செய்துள்ளேன்..
    அதை picassa albumல் போட்டுள்ளேன் பார்க்கவும்..

    அப்படி க்ராப் செய்த படமும் செண்டராக தான் இருக்கும்,ஆனால் நமது கண்கள் பிரியாது...

    இதை பற்றி இன்னொரு நண்பர் கேள்வி கேட்டுள்ளார்.. அது இந்த link comments ல் உள்ளது,அதற்கு விளக்கமாக பதிலளித்துள்ளேன்... பார்க்கவும்..http://photography-in-tamil.blogspot.com/2010/03/blog-post_30.html

    மேலும் சந்தேகங்கள் ஏதும் இருந்தால் தாராளமாக கேளுங்கள்..

    நன்றி
    கருவாயன்

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff