வெட்டும் கோடுகள்: ஒரு கடற்கரைக் காட்சியையோ அல்லது சூரிய உதயம் அல்லது அஸ்தமனம் இவற்றையோ நீங்கள் படம் பிடிப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தப் படத்தில் அடிவானக் கோடோ (Horizon) அல்லது கடற்கரையோ படத்தின் வெட்டும் கோடாகக் குறுக்கே ஓடும். கீழே உள்ள படங்களைப் பாருங்கள்.
படம் A

படம் A யில் வெட்டும் கோடு படத்தினை இரு சம பாதிகளாகப் பிரித்திருக்கிறது. படம் B யிலும் C யிலும் கோடு அதனை 1/3, 2/3 எனப் பிரித்திருக்கிறது. இப்போது கீழே உள்ள படங்களைப் பாருங்கள்.

முதல் படத்தில் வெட்டும் கோடான அடிவானக் கோடு படத்தினை இரண்டாக வெட்டுகிறது. படத்தினை உங்கள் கேமிராவில் சிறிது பார்க்கும் கோணத்தில் மாற்றம் செய்து இரண்டாவது படத்தில் இருப்பது போல எடுத்திருந்தால் எப்படி இருக்கும்?
இப்போது சொல்லுங்கள் இந்த இரண்டு படங்களில் எது உங்கள் மனதைக் கவருகிறது என்று.
வெட்டும் கோட்டினை எங்கு வருமாறு எடுக்க வேண்டும் என்ப்பது நீங்கள் எந்தப் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது.
அடுத்த மடலில் இழுத்துச் செல்லும் கோடுகள் (Leading lines) பற்றிப் பார்ப்போம்.
ஆங்கிலத்தில் விளக்குவது எளிதாக இருந்திருக்குமோ என்னவோ. நான் சொல்ல நினைப்பது உங்களுக்குப் புரிகிறதா? இதற்கு பதில் கிடைப்பதைப் பொறுத்து இருக்கிறது நான் இந்த இழையைத் தொடருவதும் நிறுத்துவதும்.
-நடராஜன் கல்பட்டு

நீங்கள் மூன்றாம் பாகத்திற்குப் பதி 4 என்று கொடுத்துவிட்டீர்கள்.
ReplyDeleteமற்றபடி எனக்குத் தேவையான தகவல்களாகவே இருக்கின்றன.
இது இயற்கை காட்சி என்பதால் வானம் அதிகம் உள்ள முதல் படம் தான் நல்லா இருக்கு. 2வது படத்தில் எல்லாம் நெருக்கமாக உள்ளது போல் உள்ளதால் முதல் படம் போல் இது இல்லை.
ReplyDeleteமுதல் படம்தான் சரி..
ReplyDeleteஇயற்கை காட்சிகளில் வானம் கொஞ்சம் அதிக இடம் பிடிப்பதில் தவறேதும் இல்லை..
அதோடு இயற்கை காட்சிகளில் நாம் உணரும் அமைதிக்கு வானமே காரணம் என்பதால்..
முதல் படமே பெஸ்டு...!!
நல்ல தமிழில் நல்ல விளக்கம் தந்திருக்கிறீர்கள்.
ReplyDeleteஎன்னை போன்றோர்கு நல்ல "நினைவு படுத்தல்" பாடங்களாக இவை அமைந்திருக்கு.
தொடரட்டும் உங்கள் பணி.
www.flickr.com/photos/nagappanr
ம்ம்ம்ம்ம்... எதை மையப்படுத்துகிறோம் என்கிறது முக்கியம் இல்லையா? வானத்து அழகா இல்லை கரையில் உள்ளனவா? எது முக்கியம்?
ReplyDeleteஅவசியமா தொடருங்க!
நல்ல பதிவு சார். உண்மையில் இரு படங்களுக்கும் சிறிது நேரம் எனக்கு வித்தியாசம் தென்படவில்லை. பின்னர் புரிந்து கொண்டேன். முதல் படமே அமைதி தருவதாக, மனதிற்கு இதமாக அமைந்துள்ளது. கட்டாயம் இந்த இழையை தொடரவும். நன்றி. :)
ReplyDeleteநல்லா பதிவு, தொடரட்டும் உங்கள் சேவை...
ReplyDelete