நான் ரொம்ப நாளா நெனைச்சிட்டு இருந்த எண்ணம் இது!!
நான் போர் அடிக்கற சமயங்களிலே (அதாவது ஒரு நாளிலே பாதிக்கும் மேற்பட்ட நேரம்) Flickr தளத்தின் explore பக்கத்துல வர படங்களை தான் பார்த்துட்டு இருப்பேன்.
நல்ல படங்களை எடுக்கனும்னா நிறைய நல்ல படங்களை பாக்கனும் என்பது என்னுடைய எண்ணம்.
நிறைய நல்ல படங்களை பார்க்கனும்,அது ஏன் நல்லா இருக்குன்னு புரிஞ்சுக்கனும்,நம்மளால ஏன் அந்த மாதிரி எடுக்க முடியலன்னு தெரிஞ்சுகிட்டு அதை சரி செய்ய பாக்கனும்,இதுதான் என்னுடைய சிந்தாந்தம்!
இப்படி நான் பார்க்கும் படங்களை அவ்வப்போது ஜி-டாக்கில் இருக்கும் தமிழ்மண நண்பர்களோடு பகிர்ந்துக்கொள்வேன். ஜீவ்ஸ் அண்ணாச்சி போன்ற புகைப்பட ஆர்வலர்கள் ஆன்லைனில் இருந்துவிட்டால் படங்களை பகிர்ந்துக்கொண்டு அதன் நிறைகுறைகளை பற்றி விவாதிப்பேன்.
இப்படி செய்யும் அரட்டைகளை ஜி டாக்கில் மட்டும் செய்யாமல் இந்த பதிவிலும் செய்யலாமே என்று பல நாட்களாக எண்ணிக்கொண்டிருந்தேன்.இன்றைக்கு செயலாக்க வேளை அமைந்தது!!
அவ்வப்போது Flickr Explore-ல் நான் காணும் படங்கள் சில வற்றை பதிவிட்டு அதை பற்றி என் மனதில் தோன்றும் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளலாம் என்று எண்ணம்.
இந்த பதிவை சார்ந்த பல வல்லுனர்களும்,வாசகர்கள்களும் படங்களை பற்றின தன்னுடைய கருத்துக்களையும் எண்ணங்களையும் பின்னூட்டத்தில் தெரிக்க நாமும் நாலு விஷயங்களை ஆலோசித்து அறிந்துக்கொள்ளலாம்.
என்ன?? ஐடியா நல்லா இருக்கா???
சரி இந்த தடவை என்னென்ன படங்கள் என்று பார்க்கலாம்.
© 2008, Richard Thompson
http://www.flickr.com/photos/richardthompson/2162728730/
Camera: Canon EOS 5D
Exposure: 20 sec (20)
Aperture: f/10
Focal Length: 18 mm
ISO Speed: 100
அடடா!!
என்ன வண்ணங்கள்.படம் எடுக்கறது எப்படின்னு எல்லாம் தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி எந்த நேரத்துல எடுத்தா படம் நல்லா வரும்னு தெரியனும்!! அதை நம்ம அண்ணாச்சி கரீட்டா கண்டுக்கிட்டாருன்னு நெனைக்கறேன். நல்லா மாலை நேரத்தில் இருள் சூழும் முன்னர் போய் எடுத்திருக்காருன்னு தெரியுது!!
அந்த சமயம் இந்த ஊருல எம்புட்டு குளிரா இருக்கும்னு எனக்கு தான் தெரியும் (இவரு படம் எடுத்ததும் மிசிகன் தான்).
சரியான நேரத்துல,சரியான இடத்துக்கு கஷ்டம் பாக்காம போய் சேருவது நாம் புகைப்படக்கலையில் கற்க வேண்டிய முதல் பாடம்.
exposure 20 secs-னு இருக்கறது கவனிங்க!! நிச்சயம் முக்காலி போட்டு தான் எடுத்திருப்பாரு!! படம் என்ன crisp-a இருக்கு பாருங்க.தண்ணீரின் மேல ஓரத்தில் இருக்கும் மரங்களின் பிரதிபலிப்பு எவ்வளவு தெளிவாக படத்தில் அமையுமாறு செய்திருக்கிறார். முப்பகுதி கோட்பாடு மற்றும் வழிநடத்தும் கோடுகள் ரொம்ப அழகா உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது!!
சூப்பர் ஷாட்!
----------------------------------------------
http://www.flickr.com/photos/hichako/2176682903/
Camera: Canon EOS 10D
Exposure: 0.001 sec (1/750)
Aperture: f/5.6
Focal Length: 90 mm
ISO Speed: 100
படத்துல மிக அழகான ஒளி அமைப்பு!! நிச்சயமா சற்றே மேக மூட்டமான நாள் ஒன்றில் தான் இந்த படத்தை எடுத்திருப்பாருன்னு நெனைக்கறேன். ஏன்னா ரொம்ப பளிச்சுன்னு இல்லாம,அதே சமயம் ரொம்ப கம்மியாவும் இல்லாம சரியான அளவு குழைந்த ஒளி (diffused light) இந்த படத்துல. நடுவுல இருக்கற பூவுல மட்டும் லேசா கொஞ்சம் நிழல் தெரியுது மத்தபடி படம் முழுக்க மெல்லிய ஒளி அமைப்பு தான்.
அதுவுமில்லாமல் படத்துல முன் இருக்கும் பூக்கள் பின்னிருக்கும் பூக்கள் out of focus ஆகி நடுவில் இருக்கும் பூக்கள் மட்டும் தெளிவாக தெரியுமளவிற்கு மிகக்குறைந்த குவிய ஆழம் (shallow depth of field)
படத்தின் பின்னூட்டங்களை பார்த்தால் அண்ணாச்சி Tamron macro 90mm lens உபயோகிச்சிருக்காருன்னு தெரியுது!! இந்த மாதிரி சிறப்பான ஃபோகஸ் உள்ள படங்கள் பார்த்தாலே நிச்சயம் கிட் லென்ஸில் இல்லாமல் வேறு ஏதாவது வெளியில் வாங்கிய லென்ஸாக இருப்பது நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம்.
----------------------------------------------
http://www.flickr.com/photos/rouleau/2182633497/
Camera: Canon EOS 10D
Exposure: 0.033 sec (1/30)
Aperture: f/1.8
Focal Length: 50 mm
ISO Speed: 400
இந்த படத்தினை பற்றி ஒரே வார்த்தையில் கருத்து கூற வேண்டும் என்றால் நான் சொல்லும் வார்த்தை DOF என்றுதான் இருக்கும்!!
புகைப்படக்கலையில் Shallow DOF எனப்படும் உத்திக்கு சிறந்த உதாரணம் ஒன்றை காட்ட வேண்டும் என்றால் இந்த படத்தை கண்ணை மூடிக்கொண்டு காட்டி விடுவேன்.
தன்னிடம் உள்ள நல்ல தரமான லென்ஸை முழுமையாக பயன்படுத்தி சரியாக துப்பாக்கியின் முனையில் ஃபோகஸை நிறுத்தியிருக்கிறார்!!
சூப்பர்!!
----------------------------------------------
சரி இதே மாதிரி சுவாரஸ்யமான வேறு மூன்று படங்களோடு உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.
இப்போதைக்கு நான் அப்பீட்டு ஆகிக்கறேன்.
படத்தை பற்றிய உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் பின்னூட்டத்துல சொல்லுங்க!
அரட்டை அடிப்போம்!!
வரட்டா?? :-)

ம்! என்ன சொல்லணமுன்னு தெரியலை. ஆனா மூணு படங்களும் நல்லா இருக்கு. அதுவும் அந்த நடு படம் ரொம்பவே சூப்பர்!
ReplyDeleteஎனக்கென்னவோ துப்பாக்கி படம் தான் பிடித்திருக்கு.
ReplyDeleteபூக்களின் படம் அருமை சி.வி.ஆர்!
ReplyDeleteநல்ல முயற்சி , flickr - photoplow பத்தி கேள்வி பட்டீங்களா, அருமையா இருக்கு, முடிஞ்சா வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்தலாமே.
ReplyDelete// நடுவுல இருக்கற பூவுல மட்டும்
ReplyDelete//லேசா கொஞ்சம் நிழல் தெரியுது
அது , அதன் மேல் இருக்கும் பூவின் நிழல் .
உச்சி வெயில், நேர் கீழ் நிழல்?
இரண்டாம் படத்துக்கு மட்டும்தான் creative commons licence இருக்கு . மற்ற இரண்டு படங்களையும் இப்படி இங்கே உபயோகிக்கலாமா ?
@கொத்தனார்
ReplyDeleteஆமாம் கொத்தனாரே!
கூடவே ஏன் நல்லா இருக்குன்னும் கண்டுக்கிட்டீங்களா??
@வடுவூர் குமார்
ஆமாம் குமார்!!
Top class imagination and execution
@ஜீவா
நன்றி!!
படம் பிடித்தவரின் திறமையை நாம் பாராட்டாமல் இருக்க முடியவில்லை!! :-)
@ஒப்பாரி
Photoplow id க்ரியேட் பண்ணியாச்சு!!
ரெண்டு தடவை உட்புகுந்து அரட்டை அடிக்கலாம்னும் பாத்தேன்!!
ஆனா நமக்கு தெரிஞ்சவங்க யாருமே இல்லாம புதுசா அந்த எடத்துல என்ன பண்ணுறதுன்னு தெரியல!
அதுவுமில்லாம பெருசா ஒன்னும் எந்த அரட்டை அறையும் கலகலன்னு இருக்கா மாதிரி தெரியல!
Photoplow பேட்ஜ் கூட என்னுடைய பதிவில் ரொம்ப நாள் Sidebar-ல வெச்சிருந்தேன்!! சமீபத்துல தான் எடுத்து விட்டேன்.
@AN&
///அது , அதன் மேல் இருக்கும் பூவின் நிழல் .
உச்சி வெயில், நேர் கீழ் நிழல்?/////
ஆமாம் அண்ணாச்சி! நானும் அதான் நினைக்கிறேன்!!
படத்தின் ஒளி அமைப்பு மேகமூட்டமான சமயத்தில் எடுக்கப்பட்டது போல இருந்தாலும் இந்த நிழல்களை பார்த்தால் வானம் முழுவதுமாக மேகமூட்டமாக இல்லாமல் கொஞ்சம் மெல்லிய சூரிய ஒளியும் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.
//இரண்டாம் படத்துக்கு மட்டும்தான் creative commons licence இருக்கு . மற்ற இரண்டு படங்களையும் இப்படி இங்கே உபயோகிக்கலாமா ?////
மத்த ரெண்டு பேருக்கும் ,ஆட்சேபனை இருந்தால் சொல்லுங்கள் என்று Flickr mail அனுப்பியிருக்கேன்!!
அவங்களுக்கு விருப்பமில்லைனா பதிவுல இருந்து எடுத்துரலாம்!
இனிமே முன்னாடியேஒழுங்கா அனுமதி வாங்கிட்டே போட பாக்கறேன்! :-)
//இரண்டாம் படத்துக்கு மட்டும்தான் creative commons licence இருக்கு . மற்ற இரண்டு படங்களையும் இப்படி இங்கே உபயோகிக்கலாமா //
ReplyDeleteflickrல் உள்ள அந்த ஒரிஜினல் படமே அப்படியே img tag வச்சு போட்டுட்டு அப்படியே அந்த படத்துக்கு ஒரு லிங்க் கொடுத்துட்டா நல்லது. எந்த ப்ரச்சனையும் வராது.
படங்கள save பண்ணி வலையேத்தும்போது, ப்ரச்சனையாகலாம்.
:)
மத்தபடி, எனக்கு முதல் படம் பிடிக்கல. ஏன்னு யோசிச்சூ சொல்றேன்.
இரண்டாம் படத்தின் angle அருமை, ஒரு freshness இருக்கு படத்துல.
மூன்றாம் படம், தூள்!
///flickrல் உள்ள அந்த ஒரிஜினல் படமே அப்படியே img tag வச்சு போட்டுட்டு அப்படியே அந்த படத்துக்கு ஒரு லிங்க் கொடுத்துட்டா நல்லது. எந்த ப்ரச்சனையும் வராது.////
ReplyDeleteGulf-la Flickr தடை செய்யப்பட்டிருப்பதால் அரபு நாடுகளை சேர்ந்த நண்பர்களால் அப்படி நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும் படங்களை பார்க்க முடியாது!!
அதற்காகத்தான் மெனக்கெட்டு படங்களை Flikcr-இல் இருந்து தரவிறக்கி வலையேற்றிக்கொண்டிருக்கிறேன்!! :-(
என் பதிவில் கூட பல சமயங்களில் என்னுடைய Flickr படங்களை நேரடியாக காண்பிக்காமல் தனியாக வலையேற்றி என்னுடைய Google storage limit குறைத்துக்கொண்டு இருக்கிறேன்!
என்ன பண்ணுறது??? :-)
ரிச்சர்டிடம்(முதல் படம்) இருந்து அனுமதி வாங்கியாகி விட்டது,இரண்டாவது படத்தின் சொந்தக்காரருக்கு மடல் அனுப்பியாகிவிட்டது, இன்னும் பதில் ஒன்றும் வரவில்லை!! ;)
ReplyDeleteமிக அருமையா இருக்கு இரண்டாவது படம்.
ReplyDeleteநீங்கள் சொல்லி இருக்கு விசயங்களையும் மைண்டில் வெச்சுக்கிறேன் அடுத்த முறை செஞ்சுடலாம்!!!
இங்கு flicker தடை என்பதால் ஓசை செல்லா படத்தை பொடியனை அனுப்ப சொல்லி பார்த்தேன்!!!
இரண்டாவது படம் அருமையா இருக்கு சரியான கோணம் மற்றும் ஒளி அமைப்பு. ம்ம் நாங்களும் முயற்சி பண்றோம் இத விட நல்லா எடுக்கறதுக்கு :)
ReplyDeleteஇது என் பங்குக்கு,
ReplyDeleteபோன 2 மாசமா கலந்துக்க முடியல, இப்ப எப்படியாச்சும் கலக்குறதுன்னு அட கலந்துக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன். ப்ளாக்கர் லிங்க் என்னமோ தகறாரு பண்ணுது ஏன்னு தெரியல ஏதாவது ஒண்ணாவது க்ளிக் ஆகட்டுமேன்னு பிகாசா லிங்க் தந்திருக்கிறேன்
1.http://picasaweb.google.com/shivatkp/xmNSSG
2.http://vaasiyin-nizhal.blogspot.com/2008/01/picture-for-pit-december.html
மொத ரெண்டு படம் அழகுன்னா மூனாவது படம் அறிவு. நல்லாருந்துச்சு படங்க.
ReplyDelete//Gulf-la Flickr தடை செய்யப்பட்டிருப்பதால் அரபு நாடுகளை சேர்ந்த நண்பர்களால் அப்படி நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும் படங்களை பார்க்க முடியாது!!//
ReplyDeleteபோட்டிக்கு படம் அனுப்பி விட்டு இப்பத்தான் இங்கே வந்தேன்.எனக்கெல்லாம் படம் நல்லாவே தெரியுது.ஒரு வேளைப் பக்கத்து வீட்டுல படம் காண்பிக்க மாட்டிங்கிறாங்க போல!
@குசும்பன்
ReplyDeleteசூப்பரு!
கலக்குங்க அண்ணாச்சி!!
@அனுசுயா!!
அப்படி போடுங்க!! வாழ்த்துக்கள்!! :-)
@ஜிரா
நீங்க சொன்னா சரிதான் அண்ணாச்சி!! :-)
@நட்டு!
இந்த பதிவில் உள்ள படங்கள் flickr-இல் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்டு வலையேற்றப்பட்டது!
எனக்கு தெரிஞ்சு துபாயில் மற்றும் சில அரபு நாடுகளில் Flickr தடை செய்யப்பட்டிருகிறது!!
உங்களுக்கு Flickr தெரிந்தால் அதற்கு ஏதாவது ப்ராக்ஸி காரணங்கள் இருக்கலாம் என்று நினைக்கிறேன்!! :-)
நல்ல ஆரம்பம் CVR... கலக்குங்க.
ReplyDeleteBTW, அந்த இரண்டாம் படம் மாதிரி தான் நானும் ஒரு படம் எடுத்துப் போட்டேன் நம்ம flowers contest'க்கு...
http://www.flickr.com/photos/ursathi/2108359197/
இதுல என்ன தப்பு பண்ணிருக்கேன்னும் சொன்னா நல்லாயிருக்கும். :-)
First photo is awesome.
ReplyDeleteAnchors, I have a suggestion, cant we have a separate post, which always appear on the home page [say on the left, along with important links] where in, we can post some of the pics that we shoot. We always had to wait for a competition and then post the relevant photos, leaving some of the good photos archived. Why should we discuss photos from flickr shot by someone [asking for the permission], when we can take photos better than that. :-) Just a suggestion. We all have loads of good photos lying idle on our computers, Aren't they? :-)
You may consider this.
~Truth, nothing else!
@ஆதி
ReplyDeleteNice perspective and lighting!! :-)
@உண்மை
நீங்கள் சொன்ன கருத்துக்களை நாங்களும் யோசித்திருக்கிறோம்.
நம்மில் உள்ளவர்களின் படங்களை போட வேண்டும் என்றால் எந்த படங்களை தேர்ந்தெடுப்பது,யார் படங்களை தேர்ந்தெடுப்பது என்பது ஒரு மிகப்பெரிய overhead/கருத்து வேறுபாடு ஆகலாம் என்பதால் தான் பொதுவாக flickr-இல் இருந்து எடுத்து போட்டேன்.
But i can see the point you are making!
//கருத்து வேறுபாடு
ReplyDeleteI think, you misunderstood. I meant to say that let ppl post their photos may be using links and others can comment on the same. If the photos are not brought out, we will miss the best for ever. I said, we will have a public forum, where any one can participate to get opinions, suggestions, feedback [ellam onnu thaano :P] from others and rectify them. Also, as the post rightly says, we learn from seeing the photos of others.
//Blogger Truth said...
ReplyDelete//கருத்து வேறுபாடு
I think, you misunderstood. I meant to say that let ppl post their photos may be using links and others can comment on the same. If the photos are not brought out, we will miss the best for ever. I said, we will have a public forum, where any one can participate to get opinions, suggestions, feedback [ellam onnu thaano :P] from others and rectify them. Also, as the post rightly says, we learn from seeing the photos of others.///
Pretty elaborate idea,one which ran through our minds at some point of time! :-)
But something like this needs a lot more coordination,effort,time and facilities than a group blog.
We already have a "PIT group" in flickr which was started to create a base for an idea like this.
But since a sizable amount of our readers are from gulf,we wont be able consider that for something which we can roll out to all our readers through the blog.
But those who are able to access flickr can join in the PIT group to showcase and gain feedback from the PIT community.
இது http://flickr.com/photos/tjvinoth எம் படைப்பு
ReplyDelete