Wednesday, July 15, 2009

PiT கேள்வி பதில் பக்கம்

243 comments:
 
எல்லாருக்கும் வணக்கம். Landmarkஐ அனுப்பியவர்களுக்கும், அனுப்பப் போகிறவர்களுக்கும், முதற்கண் நன்றீஸ்.
ஒரு பக்கம் மாதாந்திர போட்டிகளும், இன்னொரு பக்கம், புகைப்படம் எடுப்பது எப்படி? எடுத்த படத்தை நேர்த்தியாக்குவது எப்படி? என்கிற ரீதியல் பாடங்களும் PiTல் இடம் பெற்று வருகிறது.

இந்தப் பதிவுகளில் வரும் பின்னூட்டங்களில், அடிக்கடி இடம் பெறும் விஷயம், நம் PiT ஆர்வலர்களின் கேள்விக் கணைகள்.
சில கேள்விகள்/சந்தேகங்கள், பதிவுக்கு சம்பந்தம் உள்ளதா இருக்கும், அதை அங்கேயே தீத்து வச்சு, பதிவெழுதிய நாட்டாம தீர்ப்பு சொல்லிடுவாரு.

ஆனா, பல கேள்விகள், அந்த பதிவுக்கு சம்பந்தமில்லாத பொத்தாம் பொதுவான கேள்வியா இருக்கும். ஒண்ணு, அந்தக் கேள்விக்கு தனியா (பதிவு) ரூம் போட்டு பலரும் சேந்து அலசி ஆராஞ்சு பிரிச்சு மேய வேண்டியிருக்கும், கேட்டவரின் சந்தேகத்தை தீக்க.
இல்லன்னா, கேட்ட இடத்திலேயே ஒரு பின்னூட்டத்தில் கேள்விக்கு பதில் சொல்லும்ம்படியாகவும் இருக்கும்.

கேள்வி கேக்கரது ஈஸி, பதில் தேடரது/சொல்ரதுதான் நெம்பக் கஷ்டம். கூட்டு முயற்சியில்ல்லாமல் அதை செய்வது நெம்ப நெம்ப கஷ்டம் :)

கூட்டிக் கழிச்சு சொல்லணும்னா, கேள்வி கேக்கரதுக்கு ஒரு முறை இருக்கு, அதை இனிமேலேருந்து அமல் படுத்தலாம்னு இருக்கோம். கண்ட எடத்துலையும், கண்டதையும் கேக்கப்டாது.

இனி முதல், உங்கள் கேள்விக் கணைகளை, இந்தப் பதிவில் பின்னூட்டமாய் அளிக்கவும்.
உ.ம்:
அ) வெளிநாட்டுக்கு டூர் போறேன். கேமராவுடன் என்னென்ன எடுத்துக்கிட்டு போகணும்?
ஆ) Canon Rebel வாங்கலாம்னு இருக்கேன். $500 கேக்கறான். ஓ.கேவா? இது நல்ல கேமராவா?
இ) இதோ இந்தப் படம் போன வாரம் புடிச்சேன். ஏதோ ஒண்ணு நல்லால்ல. என்ன மிஸ்ஸிங் என் படத்துல? http://உங்க படத்தின் உரல்.கோம்
ஈ) கிம்ப்ல என் படம் இப்படி இருக்கரத அப்படி மாத்தரது எப்படி?
உ) என் மூஞ்சி ஏன் அம்சமா வர மாட்டேங்குது படங்களில்?
ஊ) கேமரால தூசி விழுந்துருச்சு. துடைப்பது எப்படி? ( இதற்கு ஒரு பதிவு கூடிய விரைவில் வர இருக்கிறது )
etc..

கேள்வியைப் பொறுத்து, அந்த கேள்விக்கு, இதே பதிவில், பின்னூட்டமாயும் பதில் வரலாம். அல்லது, தனிப் பதிவில் உங்கள் கேள்வியை மட்டும் போட்டு, அக்கு வேறு ஆணி வேராய், PiT ஆர்வலர்கள் அனைவரையும் அழைத்து, பிரித்து மேயலாம். ( இ, ஈ மாதிரி கேள்விகள் )
( உ மாதிரி கேள்விகளை தவிர்க்கவும். உண்மை கசக்கும். ஆனால் உங்க கேள்வி, என்னைப் போன்ற பலருக்கும் இனிக்கலாம். "எனக்கு மட்டுமே நடக்கர விஷயம் இல்ல"ன்னு ஊர்ஜீதம் ஆவதால் :) )

ஓ.கே தானே?

மறவாமல், 'Subscribe by email' ஆப்ஷனை கமெண்ட் பொட்டிக்கு கீழே இருக்கும் லிங்க்கை அமுக்கி தேர்ந்தெடுக்கவும். அப்பதான், இந்தப் பதிவில் நடக்கும் சம்பாஷணைகள், உங்கள் ஈ.மடலுக்கு வந்து சேறும்.

உங்கள் அனைவரின் பங்களிப்பும் இந்த "கேள்வி பதில்" சிறப்பாய் நடக்க மிக்க அவசியம்.

நன்றீஸ்ஸ்ஸ்ஸ்!

source: oberazzi

243 comments:

  1. அருமையான முயற்சி.

    என்னை போன்ற கத்துக்குட்டிகள் கத்தும் குட்டிகள் ஆக நல்ல வாய்ப்பு.

    ReplyDelete
  2. நல்ல விஷயம்...

    ஆனா.... (ஆரம்புச்சுடாங்கப்பான்னாதீங்க)

    இல்ல... பதிவுல வைத்து கொள்வதற்கு பதில் ஒரு ஃபோரம் ஒண்ணு தொடங்கலாமே... அதற்கு முதல் பக்கத்தில் லிங்க் கொடுக்கலாமே... நிறைய் இலவச ஃபோரம் கிடைக்குதேனு சொல்லவந்தேன்..

    சும்மா ஒரு ரோசனதான்.

    ReplyDelete
  3. அழகரசன்July 15, 2009 at 9:36 PM

    ஆரம்பிச்சுருவோம் ...
    என் மூஞ்சி ஏன் அம்சமா வர மாட்டேங்குது படங்களில்? ஏன் ? ஏன் ? ஏன் ?

    ReplyDelete
  4. பிட் குழுவினருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்!

    ReplyDelete
  5. நான் மிக சமீபத்தில் பிட் நண்பர்களின் உதவியுடன் ஒரு நிக்கான் டி-40 வாங்கினேன். அதற்கு நன்றிகள். நான் புதுசு என்பதால் கத்துக்குட்டி கேள்விகள் மட்டுமே.
    சந்தேகங்கள்:

    1. ஐ.எஸ்.ஓ இன்றி.. அதாவது 200-க்கு கம்மியா முடியாதா? ஐ.எஸ்.ஓ பூஜ்ஜியம் சாத்தியமா? இது காம்பென்சேஷன் தானே? ஆட்டோவில் போட்டால் சமன் செய்துவிடுகிறது... எனக்கு இருட்டை இருட்டாகவே எடுக்க வேண்டும்.. என்ன செய்ய?

    2. பி,எஸ்,ஏ,எம் என்றால் என்ன? (குத்துமதிப்பா தான் தெரியும்.. முழுசா தெளிவா சொன்னா தேவலை)

    3. 18-55 எம்.எம் என்பது 35 எம்.எம் ஃபார்மேட்டில் ஏன் மாறுகிறது? எஃப் ஸ்டாப் என்று விளிப்பதை இந்த எம்.எம் கணக்கிலேயே சொல்லித்தொலைத்தால் என்ன? 18-க்கும் 24-க்கும் இடையில் வைத்து எடுத்தால் அதை எப்படி இந்த அலகில் குறிப்பிடுவது?

    4. லென்ஸ் வகைகள் குறித்து ர.சுருக்கமாக.. ப்ளீஸ்.

    5. ரிவர்ஸ் மேக்ரோ பதிவில் குறிப்பிட்டிருப்பது கேனானுக்கு மட்டுமே செல்லுபடியாகும் போல. ஒரே லென்ஸ் இருக்கும் பட்சத்தில் அதைக் கழற்றியவுடன் லென்ஸ் நாட் அட்டாச்ட் என்று வருகிறது. இரண்டு லென்ஸ்கள் வைத்திருந்தால் மட்டுமே சாத்தியமாகிறது. அதுவும் கருப்பு பேக்கிரவுண்டில் சிறிய வெளிச்ச வளையத்திலேயே எடுக்க முடிகிறது, மேலும் அனாசாய சோடியம் பல்பு தேவைப்படும் போல... இந்த மேக்ரோ ரிங் மற்றும் இது சார்ந்த பிற எக்விப்மெண்ட் எவ்வளவாகும்? (இது போன்ற சிக்கன சிகாமணி ஐடியாக்களை திரட்டித் தரவும்)

    6. கேமிராவில் வீடியோ ஃபார்மேட் பால்/என்.டி.எஸ்.சி என்றிருக்கிறதே... அதன் பயன்பாடு என்ன? மேலும் (யு.எஸ்.பி பக்கத்துல) டி.வி ஔட் எதுக்கு?

    ReplyDelete
  6. i understand white balance concept. but where to use what setting? how to use custom WB?

    till date, i hv been successful only with 'auto wb'

    ReplyDelete
  7. வெங்கிராஜா
    உங்களின் இந்த கேள்விக்கான

    2. பி,எஸ்,ஏ,எம் என்றால் என்ன? (குத்துமதிப்பா தான் தெரியும்.. முழுசா தெளிவா சொன்னா தேவலை)

    பதில் இங்கே இருக்கு.

    http://photography-in-tamil.blogspot.com/2008/03/exposure-modes.html

    Nikon ல் எஸ் என்பது கேனானில் Tv என்று இருக்கும் Shutter Priority mode.

    ம்

    ReplyDelete
  8. வெங்கிராஜா, மொதல்ல ஒண்ணு சொல்லிக்கறேன்.
    கேள்வி கேக்கரது ரொம்ப சுலபம். பதில் சொல்றது பெரிய டார்ச்சர் :) ( just kidding )
    உங்க கேள்விக்கு கூகிளாண்டவர் கூட பதிலத் தரலை. காலரை தூக்கி விட்டுக்கோங்க.

    ////1. ஐ.எஸ்.ஓ இன்றி.. அதாவது 200-க்கு கம்மியா முடியாதா? ஐ.எஸ்.ஓ பூஜ்ஜியம் சாத்தியமா? இது காம்பென்சேஷன் தானே? ஆட்டோவில் போட்டால் சமன் செய்துவிடுகிறது... எனக்கு இருட்டை இருட்டாகவே எடுக்க வேண்டும்.. என்ன செய்ய?
    /////

    ISO level உங்க ஃபிலிமின் (இப்ப சென்ஸார்) சென்ஸிடிவினெஸ்ஸை குறிப்பிடுது.

    உதாரணத்துக்கு, ஒரு பேப்பர்ல நிறைய எண்ணையை தடவி ராத்திரி வெளீல வச்சீங்கன்னா, பூச்சியெல்லாம் பச்சக்னு வந்து ஒட்டிக்குமே.

    எந்த அளவுக்கு எண்ணைய தடவறீங்களோ அந்த அளவுக்கு பூச்சி ஒட்டும்.
    iso 400, 800 எல்லாம், அதிக எண்ணையுள்ள பேப்பர்.

    100ம் 200ம் கொஞ்சம் கம்மி.

    கொஞ்சமாவது எண்ணை இருந்தாதான், ஒரு பூச்சியாவது ஒட்டும்.

    எண்ணையே இல்லாத பேப்பர் ( ISO 0) வச்சா, ஒரு பூச்சியும் ஒட்டாது.
    அப்படிப்பட்ட பேப்பர் எதுக்கு?

    ISO level 0 எல்லாம் கிடையாது (எனக்குத் தெரிஞ்சு), அப்படியே கிடைத்தாலும், அதில் இரூட்டை தவிர ஒரு பொட்டு வெளிச்சமும் ஒட்டாது.

    இருள் நல்லா வரணும்னா, உங்க காமெராவில் உள்ள lowest iso (50 or 100) வச்சு எடுங்க. auto உபயோகிக்காதீங்க.

    (ஒண்ணும் தெரியலன்னாலும், தெரிஞ்ச மாதிரி பதில் சொல்றது நெம்ப கஷ்டமான வேலைங்க:) )

    #3) வேர யாராச்சும் சொல்லுங்கப்பா

    #4) இது ஏற்கனவே PiTல் இருப்பதாய் ஞாபகம். இல்லன்னா, ஒண்ணு போட்டுடலாம்.

    #5) macro ring nikonக்கும் கிடைக்குது. $10க்கு. ebayயில் பார்க்கவும். ஆனா, canon போலவே, ஒரு படம் எடுக்கரதுக்குள்ள மண்டை காஞ்சுடும். auto-focus ஆகாததால், வரும் காய்ச்சல் இது.

    #6 ) usb பக்கத்துல tv out , slide show பார்ப்பதர்க்கு.
    pal/ntsc - கேள்வி கேட்டே பேர் வாங்கரவரா நீங்க? :)
    எனக்குத் தெரிஞ்சது - நம்மூர்ல Pal, அமெரிக்கால ntsc. எதையும் தலைகீழ பண்ற இவனுங்க, இத்த மட்டும் விட்டுடுவாங்களா என்ன?
    மேல் விவரங்கள் இங்கே - wikiல் உண்டு.
    இதுக்கும் காமெராவுக்கு என்னங்க சம்பந்தம்? :)


    கேள்விக்கு நன்னி.

    ReplyDelete
  9. //ஆனா, canon போலவே, ஒரு படம் எடுக்கரதுக்குள்ள மண்டை காஞ்சுடும். auto-focus ஆகாததால், வரும் காய்ச்சல் இது.//
    ஃபோக்கஸ் ஒரு பிரச்சனையில்லை. ஷாட்களை தவறவிட்டாலும் பரவாயில்ல, கற்றுக்கொள்ளவேண்டும் என்று மேன்யுவலில் தான் எடுக்கிறேன். ஆனால்.. இந்த மிகச்சிறிய வியனெட் படுத்துதே... க்ராப் பண்ணாம முழு ஃப்ரேமிலும் இமேஜ் விழாதா? இந்த எறும்பையெல்லாம் எடுக்குறாய்ங்களேப்பா...

    //ISO level 0 எல்லாம் கிடையாது (எனக்குத் தெரிஞ்சு), அப்படியே கிடைத்தாலும், அதில் இரூட்டை தவிர ஒரு பொட்டு வெளிச்சமும் ஒட்டாது. //
    ஐ.எஸ்.ஓ.. எக்ஸ்போஷர் மாதிரி காம்பென்சேஷன்-னு நினைச்சேன். அதனாலதான் லந்தாயிருச்சு.. ஹிஹி

    //மேல் விவரங்கள் இங்கே - wikiல் உண்டு.
    இதுக்கும் காமெராவுக்கு என்னங்க சம்பந்தம்? :)//
    இல்ல பாசு... டி-40யில வீடியோவே கிடையாது.. அதனாலதான் குழம்பிட்டேன்..

    An& & SurveySan சிரத்தையோடு பதில் போட்டதற்கு நன்றிகள்!

    ReplyDelete
  10. பேச/அலச இடம் குடுத்த PiT ku நன்றி.
    ரொம்ப நாளைக்ப்புறம் இப்பதான் கேமரா ஒண்ணு வாங்க அதிர்ஷ்டம் வந்திருக்கு.

    budget 20000 ரூ. எவ்ளோ googleல தேடினாலும், எத்தன review படிசாலும், எத வாங்கறததுணு முடிவு பண்ண முடியல... கொஞ்சம் யாராவது ஹெல்ப் பண்ணுங்களேன் ப்லீஸ்.
    Sony DSC H50 எப்படி, அதுல external flash attach பண்ண முடியாதாம் , இதுக்கு வேற ஏதாவது solution உண்டா???
    please suggest me to get a better one.

    vengiraja, புதுசா camera வாங்கிறுக்கிறதா சொல்றீங்க, உங்க அனுபவம் சொல்லுங்களேன்....

    ReplyDelete
  11. ஹாய் பிரியதர்சன் ,புது கேமரா வாங்குவதற்கு என் வாழ்துக்கள்.. என்னை பொறுத்த வரையில் DSLR கேமரா வாங்குவதே சிறந்தது.. ஸ்பீட் மற்றும் குவாலிட்டி இரண்டிலும் DSLR ஐ விட sony dsc h50௦ குறைவே.. நான் nikon d40௦ ஐ கடந்த ஒரு வருடமாக பயன் படுத்தி வருகிறேன்.. இது rs.20000/- க்குள் கண்டிப்பாக கிரே மார்க்கெட் இல் கிடைக்கும் . கேமரா மற்றும் 18-55mm லென்ஸ் இரண்டும் சேர்த்து ... சைஸ் மட்டும் சோனி ஐ விட கொஞ்சம் பெரிதாக இருக்கும்.. சைஸ் பிரச்சினை இல்லை என்றால் nikon d40௦ வாங்கவும்.. DSLR இல் ஒரு முறை பழகி விட்டீர்கள் என்றால் கண்டிப்பாக சோனி dsc h50௦ போன்ற prosumer மாடல் எல்லாம் கண்டிப்பாக பிடிக்காது .. நான் இரண்டையும் பயன் படுத்தி உள்ளேன் .. other than compact size and higher zoom,nikon d40 is more than enough for beginners..

    -suresh babu

    ReplyDelete
  12. //i understand white balance concept. but where to use what setting? how to use custom WB?

    till date, i hv been successful only with 'auto wb'//

    still waiting for answer

    ReplyDelete
  13. நாகப்பன்,
    எனக்குத் தெரிந்து custom WB பிற்சேர்க்கையில் செய்வது தான் எளிது.
    முதலில் படத்தை Jpgல் எடுக்காமல் Rawல் எடுத்துக் கொள்ளுங்கள். படத்தில் கருப்பு/வெள்ளை அல்லது 18% Grey இருக்கும்மாறு எடுத்துக் கொண்டால் பிற்சேர்க்கையில் இதன் முலம் சரி செய்துக் கொள்ளாலம். 18% Grey Card க்கள் $20 குறைவாய் கிடைக்கின்றன.

    கேமராவிலே செய்யும் CustomWB எவவளவு சரியாக இருக்கும் என்று தெரியவில்லை. இதை செய்வதும் எளிதுதான். முன்னர் குறிப்பட்டதுப் போல 18% Grey Card யை முழுதாய் படம் எடுத்துக் கொண்டு, உங்களின் கேமரா manualல் இந்தப் படத்தை எப்படி WBக்கு மூலமாக மாற்றுவது என்று குறிப்படப்பட்டு இருப்பதுப் போல மாற்றிக்கொண்டால் , அதே வெளிச்சத்தில் எடுக்கும் படங்கள் சரியான WB யுடன் கேமரா மாற்றிக் கொள்ளுங்கள்.

    ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கேமரா முழு வெள்ளையும், முழு கருப்பையும் 18% Grey க்கு மாற்ற முயற்ச்சிக்கும். நீங்கள் கேமராவுக்கு ஒரு 18% Grey படத்தை reference ஆக அளிக்கிறீர்கள்.

    பிற்சேர்க்கையில் சரி செய்வது பற்றி வேண்டுமானல் சொல்லுங்கள், இரண்டு இடுகைகள் கலர் கரெக்க்டு என்ற தலைப்பில் PiTல் இருக்கு.

    மேலும் விளக்கம் வேண்டுமானல் தெரியப்படுத்துங்கள்.

    ReplyDelete
  14. Thanks thalaivaa.....
    GIMP + PIT irucka .....veru enna venum!

    ReplyDelete
  15. பிரியதர்ஷன், 21000 க்ரே மார்க்கெட்டில் (பில்/வாரண்டி இல்லாமல்) டி-40 சென்னையில் கிடைக்கிறது. இது லென்ஸ்களை மாற்றக்கூடிய எஸ்.எல்.ஆர் எனப்படும் வகையைச்சார்ந்தது. இதில் படம் எடுக்க கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருந்தாலும், குவாலிடியில் பல மடங்கு பெட்டர். இல்லை, ஒரு பாயிண்ட் அண்டு ஷூட் கேமிரா போதும் என்றால் கோடாக் இசட் சீரீஸ், நிக்கான் கூல்பிக்ஸ் பி சீரீஸ், பேனசோனிக் லூமிக்ஸ் இசட் சீரீஸ்.. மூன்றும் சிறந்தவை. சோனி எச்- 50 மொக்கை கேமிரா.. வாங்க நான் பரிந்துரைக்க மாட்டேன். கிட்டத்தெட்ட ஆறு மாசம் தேடி கேமிரா வாங்கியவன் என்ற முறையில் இதனைச் சொல்கிறேன். எனது ஷார்ட்லிஸ்ட்: அட்வான்ஸ்ட் எஸ்.எல்.ஆர் என்றால் நிக்கான் டி-40. பி&எஸ். என்றால் லூமிக்ஸ் இசட்-50. முடிவு உங்களுடையதே.

    ReplyDelete
  16. திரு பிரியதர்ஷன்!

    உங்களின் புகைப்படக் கலை மீதுள்ள ஆர்வத்தை பார்க்கும்போது சில காலம் கழித்தாவது நீங்கள் D-SLR வாங்குவீர்கள் என்றே நினைக்கிறேன். அதனால் கொஞ்ச நாள் பொறுத்தாவது (இன்னும் கொஞ்சம் பணம் சேமித்து) ஒரேயடியாக D-SLR வாங்குவதே நல்லது என்று தோன்றுகிறது. அதே நேரம் சீக்கிரமே பயணம் போக வேண்டியிருந்தால் அல்லது வீட்டில் ஏதாவது முக்கிய நிகழ்வுகள் இருந்தால் உடனடியாக கேமராவை வாங்கிவிடுங்கள். சில சந்தர்ப்பங்கள் வாழ்க்கையில் மீண்டும் வருவதில்லை.

    நான் இப்போது Canon 450D D-SLR மற்றும் Sony DSC H7 இரண்டினையும் பயன்படுத்துகிறேன். எனது கத்துக்குட்டித்தனமான அனுபவங்களிலிருந்து...

    D-SLRஇல் உள்ள நன்மைகள்
    1. நினைத்த மாதிரியெல்லாம் படம் எடுக்கலாம் (ஆனால் எனக்கு மட்டும் சறுக்கி விடுகிறது)
    2. படங்களின் துல்லியம் அதிகம்
    3. கையில் எடுத்தவுடன் கொஞ்சமாவது நல்லா போட்டோ பிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் தானாகவே வந்துவிடுகிறது
    4. பெரிய போட்டோகிராபர் என்று மற்றவர்களை நம்ப வைக்கலாம்

    D-SLRஇல் உள்ள சங்கடங்கள்
    1. விலை அதிகம். அத்துடன் ஆசைக்கு அளவில்லாததால் நிறைய பின்னிணைப்புகளை (accessories) வாங்க வேண்டுமென்ற அரிப்பு இருந்து கொண்டே இருக்கும்.
    2. அதிக நிறை மற்றும் பருமன். எப்பொழுதும் எடுத்துச் செல்வது கடினம்.
    3. விலை உயர்ந்த wide range (Eg:18-200mm) இல்லாவிடின், லென்சை திரும்பத்திரும்ப கழற்றி மாற்ற வேண்டிய தேவை பல தடவை ஏற்படும்.

    Sony DSC H50இல் உள்ள நன்மைகள்
    1. விலை குறைவு
    2. Wide range lens. இதே range லென்ஸ் D-SLRஇற்கு வாங்கவேண்டுமாயின் பல இலட்சங்கள் செலவாகும் (ஆனால் அதற்கு ஏற்ற தரம் இருக்கும்).
    3. எப்போதும் எங்கும் எடுத்துச் செல்லாலாம். எனது Sony H7ஐ எப்போதுமே என்கூடவே வைத்திருப்பேன்.
    4. Sonyஇன் vivid colours மீது எனக்கு எப்போதுமே தனிக்காதல் உண்டு.

    Sony DSC H50இல் உள்ள சங்கடங்கள்
    1. பின்னிணைப்புகள் அதிகம் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் விலையும் அதிகம், D-SLR, பின்னிணைப்புகள் அளவிற்கு தரமான output கிடைக்காது.
    2. கேமரா தான் நினைத்ததை மட்டுமே focus பண்ணும் (செமையாக கடுப்பேத்தும்). குறிப்பாக இயற்கை சூழலில் பறவைகள், மிருகங்கள், கூட்டத்தில் ஒரு தனி நபர் போன்றவற்றை வேண்டியவாறு focus பண்ணுவது முடியாது என்றே சொல்லலாம்.
    3. Manual controls பெயரளவிற்கு மட்டுமே இருக்கும்.

    என்னை பொறுத்தவரை Sony H50 கொடுக்கும் விலைக்கு ஏற்ற தரமான கேமரா. இதைவிட எனது இரண்டு நண்பர்களிடம் H50 கேமரா உண்டு. அவர்கள் H50 பற்றி இதுவரைக்கும் எந்த குறையும் சொன்னதில்லை.
    அதே நேரம் நிஜமான புகைப்படக் கலைக்கு D-SLR வாங்குவது நல்லது.

    அன்புடன்,
    விஜயாலயன்

    ReplyDelete
  17. மேலும் ப்ரியதர்ஷன், 30000 ரூபாய் வரையுள்ள எஸ்.எல்.ஆரில் வீடியோ பிடிக்க முடியாது. குடும்ப நிகழ்ச்சிகள், டூர்கள் ஆகியவற்றில் வீடியோ எடுக்க நீங்கள் விரும்பினால், நீங்கள் சொல்லும் பணத்திற்கு எஸ்.எல்.ஆர் கிடைக்காது. கிட்டத்தெட்ட அதைப்போல் மூன்று மடங்கு செலவாகும்.

    எஸ்.எல்.ஆர்:
    கெனான் வாங்குவதென்றால் EOS 1000D. பில் இன்றி 27000. இதில் லைவ்-வ்யூ (அதாவது படத்தை வ்யூ ஃபைண்டரில் மட்டுமின்றி எல்.சி.டி திரையிலும் பார்க்கும் வசதி) கூடுதலாக உண்டு.

    நிக்கான் வாங்குவதெனாற்ல் D40: இருப்பதிலேயே சல்லிசான விலைகொண்ட எஸ்.எல்.ஆர். 21000த்துக்கு கிட் லென்சுடன் கிடைக்கிறது (பில் இல்லாமல் தான்). அதிக ஸூம் முடியாதென்றாலும், ஒரு ஆறு மாசம் வரையாவது நங்கு பழகலாம், பின் நம் ரசனைக்கும் தேவைக்குமேற்ற லென்ஸ் வாங்கிக்கொள்ளலாம்.

    மற்றபடி பிற ப்ராண்டு எஸ்.எல்.ஆர்கள் இவற்றுடன் ஒப்பிடுமளவு இல்லை, விலையும் அதிகம்.

    பாய்ண்ட் ஆண்ட் ஷூட்:
    பானசோனிக் லூமிக்ஸ் Z50 அல்லது பிற Z சீரீஸ்: அற்புதமான கேமிரா. பெஸ்ட் இன் தெ ரேஞ். நிறைய பேர் பரிச்சயமில்லாத ப்ராண்ட், ஆனால் அதி-மேதாவி. லெய்கா லென்ஸ் உடையது- உலகின் மிகச்சிறந்த லென்ஸ் இதுவே. ஸ்விவல் டைப் எல்.சி.டி உண்டு. லென்ஸ் ரேஞ் 35-420 எம்.எம். சும்மா எங்கோ இருக்கும் கழுகைக்கூட துல்லியமாக படம் பிடிக்கிறது. வீடியோ க்ளாரிட்டியும் பிரமாதம். எச்.டி எனும் அதி-துல்லிய வீடியோ எடுக்கலாம். வேறு யோசனையே இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம்.

    கோடாக் Z1012: இதை விட பெஸ்ட் ஆஃபர் மார்க்கெட்டில் கிடைக்காது. பனிரெண்டாயிரம் ரூபாய் தான். 12 எக்ஸ் ஸூம், 10 மெகாபிக்சல் கேமிரா. எச்.டி வீடியோ எடுக்கக்கூடியது.

    நிக்கான் P80: பிராண்ட் ஸ்பெசிஃபிக்காக இருந்தால் வாங்கலாம். ஸூம் ரேஞ் இதுதான் ரொம்ப ஜாஸ்தி: 18 எக்ஸ். விலையும் 20 வந்துவிடும். இதை வாங்குவதற்கு டி-40 மேல். பி&எஸ் மட்டும் தான் வாங்குவேன், அதையும் நிக்கானில் தான் வாங்குவேன் என்று கங்ஙனம் பிடித்து அலைபவர்களுக்கு மட்டும் உகந்தது.

    இது எல்லாவற்றையும் விட ஒரு கேனான் ஏ-570 வாங்கி கொஞ்ச நாள் பழகிவிட்டு பின் வாங்கலாம் என்பதும் ஒரு யோசனை. விலை ஆறாயிரத்து ஐந்நூறு என்று நினைக்கிறேன். ஏழு மெகாபிக்சல், அதனால் படங்களை நன்றாகவே ப்ரிண்ட் செய்யவும் முடியும். மோட்கள், அட்ஜஸ்ட்மெண்ட் எல்லாம் இருக்கும். என்ன மேன்யுவலாக எதையும் செய்ய முடியாது. கேமிரா நினைப்பதை தான் எடுத்து கொடுக்கும். உங்களுக்கு என்ன தேவை என்பதைப்பொறுத்தே நீங்கள் வாங்கும் கேமிரா முடிவு செய்யப்படவேண்டும். மேலதிக விவரங்களுக்கு (என்னிடம் கேட்பதை விட சர்வேசன், சி.வி.ஆர், நாதஸ் இன்னும் பலர் இருக்கிறார்கள். அதையும் மீறி என்னிடம் தான் கேட்பேன் என்றால்) என் பதிவில் பின்னூட்டமோ, மின்னஞ்சலோ அனுப்பவும். இங்கு எதேச்சையாக பார்க்க நேர்ந்தது. மிஸ் ஆகிவிடும் வாய்ப்பிருக்கிறதல்லவா?
    நல்ல நாள் ஒன்றில் போய் உடனே ஒன்று வாங்கிடுங்க! :D

    ReplyDelete
  18. வெங்கிராஜா, Third-eye

    மிக நல்லத் தகவல்களை பகிர்ந்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  19. I have to decide between Nikon 40D and Canon EOS1000D. I ahve been using canon EOS 350D for the past 1 year.

    How much would a basic lens 55 - 300mm cost for Nikon D?

    Canon 1000D and 55-250 lens costs around 48K with VAT and warranty.

    (my previous comment crashed IE, so didnt know if it was delivered :(

    -Saravanan

    ReplyDelete
  20. Currently using a Lumix FZ7, idhai ellam padichi dSLR aasai thothi-kichu

    ReplyDelete
  21. hi ace,

    if you using eos 350d,why do you want nikon d40? nearly both were the same..so if you upgrade you will go to canon`s 50d or some else.. otherwise you dont get any benefit with nikon d40..or only liveview option and more pixel benefit with canon 1000d.. so,dont buy either models..stick with canon 350d

    canon 55-250mm lens available for rs.11000-12000..this is very beautiful lens,light weight,close focusing capability than other zoom lens,IS,nice quality etc. but please check this lens will autofocus with your 350d camera.

    nikon 55-200mm vr available for rs.8500 in grey market,but now this is very demand and non availble.. this one is also very beautiful lens.

    if you really need to upgrade any camera,consider canon 40d or 50d or in nikon d90 or d5000.

    -suresh babu

    ReplyDelete
  22. Dear Sir,

    Please teach me where is the focus point for the bust couple and Standing couples Because it is my big problem when i going for Marriages and other functions

    Muralidharan

    ReplyDelete
  23. முரளி,
    பொதுவாக, மக்களின் படங்களில் அனைத்திலும் “கண்கள்” சரியாக, தெளிவாக இருக்க வேண்டும். கண்கள் out of focus ல் இருந்தால் படம் சரியாக இருக்காது. உங்களின் focus point கண்களில் இருக்குமாறு மாற்றிக் கொள்ளுங்கள்.

    என்ன கேமரா உபயோகிக்கிறீர்கள்? auto focus உபயோகப்படுத்துகிறீர்கள் என்றால் உங்கள் கேமராவில் focus point மாற்றும் வசதி இருக்கா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

    உங்கள் படத்தில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட நபர்கள் இருக்கிறார்கள் என்றால், கேமராவுக்கு அருகில் இருக்கும் நப்ரின் கண்கள் தெளிவாக இருக்கும் படி எடுங்கள். உங்களின் aperture மற்றும் DOF படத்தில் இருக்கும் மற்றவர்களை தெளிவாக தெரியும்படி மாற்றிக் கொள்ளலாம்.

    ReplyDelete
  24. DearSir,
    Thank you for your reply for focus problem.

    I am using D70s DSLR Camera, I am professional photographer. Please give me some useful tips for Wedding photography . also need tips for ISO usage for flash photography

    Thank you

    Muralidharan

    ReplyDelete
  25. Murali,
    Do you have any external flash ?
    In built flash of D70s is very harsh and small ?
    Since you have Nikon, do you own SB600, SB 800 or SB 900 ? Then you can use CLS ( creative Lighting System of Nikon ) for good effort.
    else you need to use manual flash techniques.

    Please have a look at
    strobist.blogspot.com.
    They have lot of tips/techniques for flash photography

    ReplyDelete
  26. ஆதவா
    உங்களின் கேள்வியை இங்கேயும் போடுகிறேன்.

    ///////////////////////////////////////////
    அன்பு நண்பருக்கு...
    எனக்கு ஒரு உதவி செய்வீர்களா?

    ரூபாய் 6000 முதல் 8000 வரை விலையுள்ள நல்ல தரமான கேமரா வாங்க எண்ணியிருக்கிறேன். உங்கள் ஆலோசனை தேவை... "எந்த கேமரா வாங்கறது - பகுதி 1" பதிவைப் படித்தேன்.. ஆனால் பாதியில் நின்றுவிட்டதைப் போன்று இருக்கிறது!!

    எனது முகவரி : aadava@gmail.com

    உங்களை பெரிதும் எதிர்பார்க்கிறேன்!!!

    அன்புடன்
    ஆதவா

    ReplyDelete
  27. ரொம்ப நன்றி An&

    குறிப்பிட்ட மாடலோடு, சில features உம் சொன்னால் வசதியாக இருக்கும்... எனக்கு Photography யில் மிகுந்த ஆர்வம் இருந்தாலும் அதிக செலவு செய்ய பயப்படுகிறேன். (முதலில் P&S வாங்கிவிட்டு பிறகு SLR போகலாம் என்று!!!)

    ReplyDelete
  28. hi adhava..
    if you have budget for SLR go with it..if not,wait and save money for DSLR..in my opinion DSLR is easy and faster than any P&S.
    it is difficult to capture moving subjects in P&S,this may leads to discourage your photography interests..you can learn easily in DSLR than P&S.

    you must need atleast rs.10,000 for a good P&S camera,adding around 9000 you will get excellent quality DSLR..

    other than size and less amount,there is nothing special in P&S camera`s..dont hesitate,if you are beginner or enthusiasist go with DSLR.

    -suresh babu

    ReplyDelete
  29. திரு முரளி!
    மேலும் பெரும்பாலும் (Automatic) Portrait mode இல் புகைப்படம் எடுக்கும்போது DOF கம்மியாக இருக்கும். இதனால் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட வரிசைகளில் நபர்கள் இருக்கும் புகைப்படங்களில் Focus பண்ணப்பட்டவர்கள் இருக்கும் வரிசையில் இருப்பவர்கள் மட்டுமே தெளிவாக தெரிவார்கள்.
    எனவே Group photo எடுக்கும்போது Portrait modeஐ தவிர்ப்பது நல்லது.
    அன்புடன்,
    விஜயாலயன்

    ReplyDelete
  30. http://www.kenrockwell.com/tech/recommended-cameras.htm

    ஆதவா, உங்களுக்கும் எல்லோருக்குமான ஒரு முழுமையான கைட்.

    ReplyDelete
  31. அன்பின் நண்பர்களுக்கு!
    எனது சிற்றறிவிற்கு எட்டிய வரையில் எல்லா விதத்திலும் முழுமையான கேமரா என்று எதுவும் இல்லை. பெரும்பாலும் அதிக விலையில் கிடைக்கும் கேமராக்களில் குறைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். ஆகவே இணையத்தில் வலையேற்றப்பட்டிருக்கும் கேமரா பற்றிய விமரிசனங்களில் (reviews) அவற்றின் குறைகள் சொல்லப்பட்டிருக்காதவிடத்தில் அந்த விமரிசனங்களை எழுதியவரின் குறிக்கோள் (intention) / முழுமையான அறிவு (full knowledge) கேள்விக்குரியது என்பது எனது தாழ்மையான கருத்து.
    எப்பொழுதும் ஒன்றுக்கு மேற்பட்ட விமரிசனங்களை பார்த்து தீர்மானத்திற்கு வருவதே மேல்.
    பின்வரும் சுட்டியில் ஓரளவிற்கு நன்றாக ஒவ்வொரு கேமராவினதும் குறைநிறைகளை அலசியிருப்பார்கள்.
    http://www.dcresource.com/reviews/allreviews.php
    ஆனால் இதனையும் முழுமையானதென்று கூறமுடியாது.
    அன்புடன்,
    விஜயாலயன்

    ReplyDelete
  32. karuvyan, vengiraja, vijayalayan, third eye-vijay, mattrum nan nalla camera vaanga asi valangum anaivarukum nandrikal pala...
    Already i used PS digi cams like sony dsc w70 and canon (forgot the model) and get bored.. bcoz it never gave the result wat i need.. sometimes it surprises me but many times disappointment only remains. presently my focus is on Nikon D40. i think its good to start with.... sila chinna doubts, ennana.. athu 6 MP camera so ithu pothuma ??? (enna madhri kathukutiku athiga MP better pic quality and clarity nu oru ninaipu) athan?!!!
    then ppl are saying that very few lenses only available to suit that camera (coz focus motor is not in that camera) is it true?
    intha santhegatha konjam theerthu vachitingana, oru nalla parthu vaangida vendiyathuthan...
    apuram innoru vishyam, wait panni innum konjam undiyalla (ATM) la kasu serthu innum better ah onna vaangalamanum idea iruku... unga karuthukalayum sollunga.
    taminglish ku mannikavum, (officela vitukey vida matikranga... :-(

    ReplyDelete
  33. For confusions around the megapixel issue:
    http://paathasaari.blogspot.com/2009/07/ii.html

    Focus motor is not there in D40, Yes. i.e) The lens controls whether we should manually focus the subject or automatically do it.
    But it is not a big problem. With Manual Focus, you can fit in AF-S and AF lenses. If you are particular about autofocus only, then you can buy only the expensive AF lenses. Simple.

    The choice is yours. The real jump from D40 is D90 in my opinion which is about 80,000. So, I bought the D40 itself. It is left to you whether you pick D40 or flash few more bucks for a D60 or a D80. IMO, both are not worth their price. D40 is a much better deal. You can buy lenses with the money you get, which is the most sensible investment, since you'll use them forever and if at all, resale value doesn't drop too much like the camera bodies. It remains constant for even 5 years or so.

    ReplyDelete
  34. நண்பர்களின் பார்வைக்கு... முதல் பக்கத்தில் வெளியிட்டால் அனைவருக்கும் பிரயோஜனப்படும்.
    http://en.wikipedia.org/wiki/Wikipedia:Wikipedia_Takes_Chennai

    ReplyDelete
  35. Currently I am residing in Bangalore. What is the critera to become a freelance photographer. Should we have to register somewhere. Give me details about that.

    ReplyDelete
  36. தர்மா
    எனக்குத் தெரிந்து register எதுவும் தேவை யில்லை. Flickr ஏகப்பட்ட பெங்களூர் சம்பந்தப்பட்ட groups இருக்கு. மேல் விவரம் அங்கே கிடைக்கக்கூடும்.
    freelance என்ன செய்ய விரும்புகிறீர்கள் ?

    ReplyDelete
  37. நான் Exposure compensation (EV) நல்லா பயன்படுத்துவேன், ஆனா இந்த Flash Exposure Compensation (FEC) பயன் படுதினதே இல்லை. இன்-பில்ட் பிளாஷ்-ல இத என்ன, எப்படி, எங்க-னு சொன்னா நல்லா இருக்கும்.

    என் கிட்ட இருக்குறது Panasonic DMC-FZ7. I hope this feature is available in dSLRs too.

    ReplyDelete
  38. நாகப்ப்பன்.
    ஆமாம். அனைத்து DSLRல்லும் இந்த வசதி இருக்கு.

    பொதுவாக புதிய கேமராக்க்களில் TTL ( Though the Lens) flash metering இருக்கும். அதாவது, கேமரா, உங்களின் லென்ஸின் வழியாக, படத்தை எடுப்பதற்க்கு முன். ஒரு சிறிய pre-flash செய்து, எந்த அளவுக்கு, எவ்வளவு நேரத்த்துக்கு flash ஒளிக்க வேண்டும் என்று தெரிவு செய்யும். பல நேரங்களில் இந்த கணிப்பு தவறாக போகலாம். அல்லது உங்களுக்கு பிடிக்காமல் போகலாம்.

    Flash Exposure Compenstation மூலம், இந்த கணக்கை மாற்றிக் கொள்ளலாம். உதாரணதிற்கு, நீங்கள், கேமராவை 1-stop குறைவாக flash வேண்டும் என்று மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் flash விளைவு குறைவாக இருக்கும்.

    ReplyDelete
  39. பதிலுக்கு நன்றி.
    இத்தனை நாளா இது தெரியாம போச்சே-னு வருத்தமா இருக்கு ...... பிளாஷ் பயன்படுத்தி வெளிறி போன என் படங்களுக்கு தீர்வு FEC தான்-னு புரியுது.

    ReplyDelete
  40. PIT குழுவினருக்கு வணக்கமும் நன்றிகளும்,
    தங்களின் கருத்து பகிர்தல் வியக்க வைக்கிறது....புகைப்படகலையை பிட்டு பிட்டு PIT-யில் வைத்துள்ளீர்கள்,,,நன்றி...வெறும் மொக்கை படங்கள் எடுத்துவந்த என்னையே நண்பர்கள் பாராட்டும் அளவிற்கு வளர்துவிட்டீர்கள்....நன்றிகள்.....

    நான் தற்போது உபயோகிக்கும் P&S Kodak C140 யில் long time exposure option,night landscape போன்றவைகளை தெளிவாக எடுக்க Tripod வாங்கலாம் என்று யோசனை...வாங்கும் Tripod, எதிர்காலத்தில் வாங்கும் Nikon D40 க்கும்( கருவாயன் அவர்களின் ஆலோசனைப்படி ) பொருந்துமாறு வேண்டும் என்பதால் உங்கள் ஆலோசனையை எதிர்பாக்கிறேன்......

    மேலும், எனது ஓரளவு மொக்கை படங்கள் சில உங்களின் பார்வைக்கு...தவறுகளை சுட்டிகாட்டி மேலும் கைதூக்கிவிட விரும்புகிறேன்...

    http://picasaweb.google.com/lh/photo/TCYbE5itdj4F60m6DhJ0Ww?feat=directlink

    ReplyDelete
  41. senthilkumar,
    ஒரு tripod வாங்கினால், எல்லா கேமராவிலும் அநேகமாய் உபயோகப் படுத்த முடியும். ஸோ, C140க்கு வாங்கரது, D40க்கும் உபயோகப்படுத்தலாம்.

    ஐந்தடி வரை நீளும் முக்காலி வாங்கினால், அத ஒவ்வொரு எடத்துக்கும் எடுத்துக்கிட்டு போரது பெரிய ப்ரச்சனை.

    என்னிடம் உள்ள vivitar ஆரம்பத்தில் ஒரு மாதம் உபயோகித்ததோடு சரி. அப்பரம் பல இடங்களிலும் உள்ள டேபிளும், சுவரும் தான் முக்காலியாக பயன்படுகிறது.

    ஸோ, உங்க உபயோகம் எந்த அளவுக்கு தீவிரமா இருக்கும்னு யோசிங்க. C140 இன்னும் கொஞ்ச மாசத்துக்கு வச்சிருப்பீங்கன்னா, mini spider வகை முக்காலி வாங்கிக்கோங்க. $2 க்கு கிடைக்கும்.

    மாசத்துக்கு சில முறையாவது தீவிரமா உபயோகிப்பீங்கன்னா, 4 ~ 5 அடி முக்காலி யோசிக்காம வாங்குங்க. SunPak, Vivitar எல்லாம் சீப்பான விலைக்கு கிடைக்கும் நல்ல ட்ரைபாடுகள்.

    related topic from PiT http://photography-in-tamil.blogspot.com/2007/10/5-1.html

    ReplyDelete
  42. Hai friends,

    I have lot of interests in Photography and i want to learn a lot still now i am in LKG only in photography.

    I have bought a Canon EOS 500D camera and i want to learn about the camera techniques and getting a good photo through that, can any one help me please.

    Thanks and Regards,
    Ejas

    ReplyDelete
  43. Ejas, welcome to the club. we may not have any specific posts about 500D techniques, but since its a dslr, you can use previous lessons to explore your camera.

    start here
    http://photography-in-tamil.blogspot.com/2007/08/1-f-stop.html

    ReplyDelete
  44. அன்பின் நண்பர்களுக்கு!
    பின்வரும் சுட்டியில் "தூய்மையான அபிவிருத்திப் பொறிமுறை" (clean development mechanism) எனும் தலைப்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு பிரிவு நடத்தும் புகைப்படப்போட்டி பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன.
    http://cdm.unfccc.int/contest/index.html
    விரும்பியோர் பங்குபற்றலாம்.
    அன்புடன்,
    விஜயாலயன்

    பி.கு.: இப்படியான தகவல்களை எந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்ற தகவலை ** உங்கள் நகரில் வர இருக்கும் புகைப்படத்துறை சார்ந்த நிகழ்ச்சிகள்/நிகழ்வுகள் பற்றி அறியத் தாருங்கள் ** என்ற அறிவிப்பில் சேர்த்துக்கொண்டால் நன்றாகவிருக்குமே?

    ReplyDelete
  45. ஒரு Canon EOS 1000D வாங்கலாம்னு இருக்கேன் ; லென்ஸ் தேர்வு தான் குழபம்மா இருக்கு....
    1. கிட் லென்ஸ் (18-55mm ) மட்டும்
    2. கிட் லென்ஸ் + 50mm f/1.4 for portraits (குழந்தைகளை எடுக்க)
    3. லென்ஸ் மாற்றும் வேலைய குறைத்து ஒரே 18-250mm Canon lens

    கேமரா-வோட சேத்து 30-35k வந்தா சரி...தொடங்குறதுக்கு எது சிறந்த தேர்வு?

    Pentax 200D தான் யோசிச்சிட்டு இருந்தேன்...ஆனா இந்தியா-வுல கிடைக்குதா தெரியல.....
    சென்னை-ல வைப்பு உண்டா?

    -நாகப்பன், பரோடா

    ReplyDelete
  46. நாகப்பன்
    Pentax எனக்கு அதிகம் தெரியாது. Canon/Nikon ல் வசதிகள அதிகம் ( நிறைய lens/repair வாய்ப்புகள் ).

    1000ட்/xs நல்ல கேமராதான்.Canon ல் 18-250 இருக்கா என்ன ? எனக்கு தெரிந்து 18-200 தான் இருக்கு.
    18-55 + 55-250 அல்லது 18-200 இரண்டும் ஒகேதான்.
    50mm ல் 1.4 விட குறைந்த விலையில் 1.8 கிடைக்கும். அதுவும் நல்ல லென்ஸ்தான்.

    ReplyDelete
  47. நன்றி ஆனந்த்,
    18-200 mm லென்ஸ் விலைய பாத்து மாரடைப்பே வந்திடுச்சு...........
    இப்போதைக்கு இருக்குற காசுல - கேமரா + கிட் லென்ஸ் + 50mm f/1.8 தான் முடியும்

    யாருக்காவது சென்னைல எங்க வாங்குறது-னு தெரியுமா?
    ஊருக்கு வரும் போது தான் வாங்கணும்.

    ReplyDelete
  48. நாகப்பன், தேடியதில் இது கண்ணில் பட்டது. இந்த கடையில் முயன்று பாருங்கள்.

    http://chennai.quikr.com/c-Camera-Accessories-Canon-EOS-500D-With-18-200mm-Lens-W0QQAdIdZ64165271

    ReplyDelete
  49. hi friends...
    anyone have a photoshop cs4 and flash books in tamil.

    Best Regard,
    Suria
    E-Mail: suriavarman2008@yahoo.co.in
    Web: itismycac.blogspot.com

    ReplyDelete
  50. இந்த கேள்வி குறிப்பா நம்ம கிம்ப் தல ஆனந்துக்கு,
    இந்நாள் வரை, கலர் படங்களை கருப்பு வெள்ளை-யா மாத்த நம்ம பிட் டுடோரியல் - சேனல் மிக்சர் தான் பயன்படுத்திட்டு வரேன்.
    ஆனா இந்த, gradient filter, dodges and burns எல்லாம் கிம்ப்ல எப்படி பண்றது.
    ஒரு ஆர்கூட் கலந்துரையாடல்-ல போடோஷோப்-ல பன்றத்தா படிச்சேன்.
    நா நிறைய கருப்பு வெள்ளை மாத்துவேன், ஆனா கண்ட்ரோல் கிடைக்காம கஷ்ட படுறேன்.
    சில பளுக்-இன் கூட முயற்சி பண்ணிட்டேன், பயன் இல்லை.

    சிறு விளக்கம், சில லிங்க்ஸ் இல்ல ஒரு புது பதிவு.
    எதுவா இருந்தாலும் சரி தான்.

    ReplyDelete
  51. நாகப்பன்,
    Dodge and Burn பற்றி தெளிவாய் இந்த இடுகையில் இருக்கு

    http://photography-in-tamil.blogspot.com/2008/11/blog-post_11.html


    சேனல் மிக்ஸர் மூலம் முதலில் கருப்பு வெள்ளைக்கு மாற்றிக் கொண்டு இந்த இடுகையில் கூறிய வாறு 50 % grey layerல் சிறிய opacity பிரஷ் முலம்
    Non destructive Dodge and Burn செய்துக் கொள்ளலாம்.

    Gradient map மூலம் கருப்பு வெள்ளைக்கு மாற்றுவது பற்றி விரவில் ஒரு இடுகையாய் எழுதி விடுகிறேன்


    ----

    An&

    ReplyDelete
  52. நன்றி An& - simple but very effective, especially for touching portraits clicked in natural light without reflectors.
    waiting for your post on gradient tool.

    ReplyDelete
  53. Dear sir,
    I am photographer, Please give me some tips and techniques for wedding photography. I am also having confusion about focus point, i.e Where to focus for standing couple ,bust couple and groups
    Thank you

    ReplyDelete
  54. முரளி
    இதே கேள்வியை நீங்கள் ஏற்கனவே கேட்டு இருக்கிறீர்கள். அந்த கேள்வியும் அதற்கான பதிலும் இதே பக்கத்திலேயே இருக்கே.



    murali said...

    Dear Sir,

    Please teach me where is the focus point for the bust couple and Standing couples Because it is my big problem when i going for Marriages and other functions

    Muralidharan
    July 24, 2009 10:35 PM
    An& said...

    முரளி,
    பொதுவாக, மக்களின் படங்களில் அனைத்திலும் “கண்கள்” சரியாக, தெளிவாக இருக்க வேண்டும். கண்கள் out of focus ல் இருந்தால் படம் சரியாக இருக்காது. உங்களின் focus point கண்களில் இருக்குமாறு மாற்றிக் கொள்ளுங்கள்.

    என்ன கேமரா உபயோகிக்கிறீர்கள்? auto focus உபயோகப்படுத்துகிறீர்கள் என்றால் உங்கள் கேமராவில் focus point மாற்றும் வசதி இருக்கா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

    உங்கள் படத்தில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட நபர்கள் இருக்கிறார்கள் என்றால், கேமராவுக்கு அருகில் இருக்கும் நப்ரின் கண்கள் தெளிவாக இருக்கும் படி எடுங்கள். உங்களின் aperture மற்றும் DOF படத்தில் இருக்கும் மற்றவர்களை தெளிவாக தெரியும்படி மாற்றிக் கொள்ளலாம்.
    July 24, 2009 11:11 PM

    ReplyDelete
  55. Murali.

    திருமணப் புகைப்படம் மற்ற எல்லா புகைப்படங்களைப் போலத்தான். ஆனால் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்.

    1 - இது வாழ்வின் ஒருமுறைக்கான நிகழ்வு. எனவே ஒவ்வொரு நிகழ்வும் மிக முக்கியமானவை. தவறவிட்ட தருணங்கள் மீண்டும் கிடைக்காது. ஆகவே மிகவும் கவனம் தேவை.

    2 - மொத்தக் குடும்பமும் உங்களை நம்பி இருக்கிறது. ஆகவே முடிந்தால் இரு குடும்பத்தினரின் முக்கியமானவர்களிடம் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பழகி சினேகபாவம் வளர்த்துக் கொள்ளுதல் நலம். கூடவே தவற விடக்குடாத முக்கிய ஆட்கள் என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். பாட்டி, மாமா மாமி என்று. அது உங்களின் மேல் அவர்களுக்கு நம்பிக்கை வளர்ப்பதோடு நிகழ்ச்சியில் அவர்கள் சிறப்பாக ஒத்துழைக்க உதவும். கூடவே எது போன்ற புகைப்படங்கள் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று ஒரு பட்டியலை செய்து கொள்ளுங்கள்.

    உதாரணத்துக்கு என்னுடைய திருமணத்தை புகைப்படம் எடுத்தவர் மிக முக்கியமான ஒருவரை புகைப்படம் எடுக்க தவற விட்டுவிட இன்றும் அது ஒரு புள்ளியாக நிற்கிறது.

    3 - புகைப்படம் எடுக்கும் இடத்தை ஏற்கனவே ஒருமுறை சென்று பார்த்து பழகிவிட்டால் எந்த இடத்தில் நிறுத்தி மணமக்களை புகைப்படம் எடுக்க ஏதுவாக இருக்கும் என்று தேர்வு செய்ய வசதியாக இருக்கும்.

    4 - உங்களிடம் இருக்கும் கேமரா ஒன்று மட்டுமே போதும் என்று முடிவு செய்து விடாதீர்கள். கூட ஒன்று வைத்துக் கொள்ளுங்கள் கடன் வாங்கியாவது. ஏற்கனவே சொன்னது போல் இது வாழ்கையில் ஒருமுறை நடக்கும் நிகழ்ச்சி. இந்த கேமரா எதாவது பிரச்சினை செய்தால் அடுத்தது உதவியாக இருக்கும்.

    5 - பேட்டரி, மெமரி கார்ட் & சார்ஜர் எல்லாம் ஒரு ஸ்பேர் வைத்துக் கொள்ளுங்கள்.

    6 - மணமக்களை புகைப்படம் எடுக்கும் போது அவர்களின் முகத்தை & கண்களை போகஸ் செய்து எடுக்கவும். முகபாவம் துள்ளியமாக தெரிய உதவும்.

    7 - ஏற்கனவே நீங்கள் எடுத்த புகைப்படங்களில் சிறந்தவைகளை ஆல்பமாகத் தொகுத்து அவர்களுக்கு காண்பிக்கலாம். அது உங்களின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.

    8 - முக்கியமாக உங்களின் ஈடுபாடும் கூடவே க்ரியேட்டிவிட்டியும். ப்ளாஷ் அடிச்சு எல்லாரும் போட்டோ எடுத்துவிடலாம். நன்றாக எல்லாரும் கவரும் வகையில் எடுக்க வேண்டும்.

    9 - மணமக்களை தனியாக நிறுத்தி எடுக்கும் போது வெறுமனே இப்படி அப்படி என்று போஸ் கொடுத்து எடுக்கச் சொல்லாமல் முகபாவம் சிறப்பாக அமையும் படி சிறு சிறு ஜோக்குகள், கிண்டல்கள் என்று ஆரம்பித்தால் புகைப்படம் வெறும் புகைப்படமாக இல்லாமல் உயிரோட்டமாக இருக்கும்.

    10 - மணமக்களை மட்டுமே இல்லாமல் அங்கே ஓடியாடும் குழந்தைகளையும் கவனியுங்கள். அவை ஆல்பத்திற்கு மேலும் மெருகேற்றும் ஒன்றாக இருக்கும். முடிந்தால் ஒரு துணை புகைப்படக்காரரை வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பக்கம் மணமக்களை எடுத்துக் கொண்டிருக்கையில் அடுத்தவர் மற்றவர்களை, குழந்தைகளை என கவனித்து எடுக்க உதவும்.

    11. முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று, புகைப்படம் எடுப்பது உங்கள் தொழில் அதே நேரத்தில் மணமக்களை அல்லது விழாவில் உள்ளவர்களை தொந்தரவு செய்வது இல்லாமல் எடுக்க வேண்டும்.

    12 - ஃப்ளாஷ் / விளக்கின் வெளிச்சம் ரொம்ப ஹார்ஷாக முகத்தின் மீது விழுவதை தவிர்க்கவும். முடிந்தால் டிஃப்யூசர் உபயோகிங்கள்.

    13 - முடிந்தால் ரா (RAW ) பார்மாட்டில் புகைப்படம் எடுக்க முயலுங்கள். கொஞ்சம் அதிகப் படியான வேலை தான் ஆனாலும் சில கருப்படித்த படங்கள் ஆனால் முக்கிய படங்கள் எல்லாம் சரி செய்து திரும்ப பெற உதவும்.

    14 - ஒரே ஆங்கிள்,ஒரே பெர்ஸ்பெக்டிவ் என இருக்காமல் வித்தியாசமாக முயன்று பாருங்கள்.

    15 - மோதிரம் போடுதல், மங்கள நாணை பிடித்திருக்கும் நாத்தியின் கை என சின்ன சின்ன விஷயங்களை க்ளோசப்பில் எடுக்கலாம். அட்டகாசமாக இருக்கும். இரண்டாவது ஆள் இந்த நேரத்தில் உதவலாம்.

    16 - பிண்ணனியில் கவனம் செலுத்துங்கள். பேக்ட்ராப் சீலைகள் சில கைவசம் வைத்திருங்கள். மணமக்களை தனியாக புகைப்படம் பிடிக்க உதவும்.

    17. குழு புகைப்படம் எடுக்கும் போது கஞ்சி போட்ட மாதிரி விரைப்பாக இருப்பார்கள் நம் ஆட்கள். முடிந்தால் அதை மாற்றி கல கலப்பான சூழல் உருவாக்கப் பாருங்கள்.

    18 - பொறுமை மிக அவசியம். கல்யாண வீட்டை சேர்ந்தவர்கள் சற்றே இப்படி அப்படி உங்களை விரட்டலாம், பொறுத்துக் கொள்ளுங்கள், அவர்களுக்கு விளக்குங்கள் இப்படி அவர்கள் விரட்டுவதால் புகைப்படங்கள் சரியாக வராமல் போகக் கூடிய வாய்ப்புகளை. அதே நேரம் முக்கியமானவற்றை தவற விடக் கூடாது.

    19 - எடுத்த புகைப்படங்களை சரியில்லை என்றால் அவ்வப்போதே அழித்து விடாதீர்கள். அவை பெரிய திரையில் வேறு பெர்ஸ்பெக்டிவ் தரலாம்.
    20 . கடைசியா... மாத்தி யோசிங்க. ஒரே மாதிரி எடுக்காதீங்க


    இதை சீக்கிறம் முடிஞ்சா பதிவகவே போட்டுட்றோம்

    ReplyDelete
  56. Dear sir,
    Thank you for your reply for my focussing problem.
    One more question
    Can I use high ISI for wedding?, and where to use More ISO

    Murallidharan

    ReplyDelete
  57. நான் எடுக்கும் படங்கள் பல சரியாக இருக்கமாட்டிக்குது (பிரி பிரியா இருக்கும் - lens-ல மண் ஒட்டியிருந்தா படம் எப்படி வருமோ அப்படி). என்னோட எல்லா படங்களும் அப்படி வராது, முக்கியமான படங்கள் மட்டும் :-((. ஏன் இப்படி வருதுன்னு புரியமாட்டிக்குது. எப்படி பிரி பிரியா இல்லாம ஒழுங்கான படம் எடுக்கறது?

    ReplyDelete
  58. kurumban
    can you send us as an example pic please ?

    ReplyDelete
  59. Grainy Image என்பதை தான் பிரி பிரியா இருக்கும் மண் ஒட்டியிருக்கும் என்று தமிழ் படுத்தி இருக்கேன். :-)). நான் எடுக்கும் முக்கியமான படங்கள் grainy படமா வந்து அந்த படத்தை பயன்படுத்த முடியாம போயிருது. கண்றாவியா எடுத்தாலும் பரவால grainy இல்லாம படம் எடுக்கனும் என்பது தான் என் விருப்பம். என் நண்பனோட குழந்தை பிறந்தநாள் விழாவை நான் மட்டுமேபடம் பிடித்தேன் அதில் பாதிக்கு மேல் grainy images.

    ReplyDelete
  60. photos.in.tamil@gmail.com முகவரிக்கு படங்களை அனுப்பிட்டேன்.

    ReplyDelete
  61. என்னிடம் இருக்கும் Kodak Easy Share 813 க்கு பதிலாக வேறு வாங்கலாம் என்று இருக்கிறேன்.

    1. Nikon Coolpix P90 12.1MP Digital Camera with 24x Wide Angle Optical Vibration Reduction (VR) Zoom and 3 inch Tilt LCD

    2. Canon Powershot SX10IS 10MP Digital Camera with 20x Wide Angle Optical Image Stabilized Zoom

    Nikon P90 ல் zoom மற்றும் HD video இருப்பதால் அதை வாங்க விரும்புகிறேன். ஆனால் amezonல் சிலர் சரி இல்லை என்றும் சிலர் மிக நன்றாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?

    Canon Powershot SX10IS எல்லா தளங்களும் பரிந்துரைக்கிற மாடல்.

    சென்னையில் மேல் சொன்ன இரண்டு மாடல்களும் கிட்டத்தட்ட ஒரே விலை. எதை தெரிவு செய்யலாம்?

    இரண்டும் என் விருப்பம் Canon Powershot SX20IS புதிதாக வந்திருந்தாலும் விலை அதிகமாக இருக்கிறது.

    ReplyDelete
  62. வெங்கட்ராமன்,

    நீங்கள் சொல்லும் கேமராக்கள் இரண்டும் 'Prosumer' என்ற வகையினைச் சேர்ந்தது. Professional Modelகளான DSLRகளுக்கும் Consumer Modelகளான Point and Shoot கேமராக்களுக்கும் இடைபட்டவை இவ்வகை கேமராக்கள். அதிலும் நீங்கள் சொல்லிய இரண்டு மாடல்களும் 'Superzoom' என்ற வகையினைச் சார்ந்தவை. என்னிடம் இருந்த Canon Digital IXUS கேமரா3x ஜூம் கொண்ட P&S கேமரா. இந்த கேமராவை மாற்றும் போது நான் மேற்கண்ட ஆய்வுகளைச் செய்தேன். Superzoom கேமரா வாங்குவது என்று முடிவு செய்துவிட்டால் கண்டிப்பாக Panasonic Lumix DMC-FZ28 கேமராவையும் கருத்தில் கொள்ளவும். என்னிடம் உள்ளது இதற்கு முந்தைய மாடலான FZ18 கேமரா. FZ28 6-7 மாதங்களுக்கு முன்னர் வந்த புதிய மாடல். 18x ஜூம் கொண்டது இக்கேமரா. கண்டிப்பாக ஒரு மிகச் சிறந்த கேமரா இது. உபயோகிப்பது மிக எளிது, நான் முன்னர் உபயோகித்த Canon போன்றே எளிதான Dialகளும் ஜூம் லீவரும் கொண்டது இது. அதோடு ஷட்டர் ஸ்பீடு, அபெர்ச்சர் இவற்றை மாற்ற எளிதான ஜாய்ஸ்டிக்கும் இதில் உள்ளது. Nikon P90 நான் பரிசோதித்து பார்த்து திருப்தி இல்லாமல் Panasonic வாங்கினேன். Canon Powershot நல்ல கேமரா தான். சந்தேகம் இல்லை. ஆனால் அதில் rechargable Lithium-Ion பேட்டரி உபயோகிக்க முடியாது. பென் டார்ச் பேட்டரி தான் உபயோகிக்க வேண்டும். புதிய மாடலில் இருக்கிறதா எனத் தெரியவில்லை. FZ18இல் Li-Ion பேட்டரி உள்ளது. 8MP resolutionஇல் பேட்டரி மாற்றாமல் 350 படங்கள் வரை நான் எடுத்திருக்கிறேன். 2GB மெமரி கார்டு வரை நான் உபயோகித்திருக்கிறேன். பயன்பாட்டின் போது எந்த குறையும் தென்படவில்லை. ஆனால் Powershotஐ விட விலை மலிவாக இருக்காது என்பது என் எண்ணம். FZ28இன் reviewக்களையும் படித்துப் பாருங்கள். ஆனால் என்னை பொருத்த வரை கண்டிப்பாக P90 வாங்க வேண்டாம்.

    மேலும் விபரங்கள் தேவை பட்டால் கேளுங்கள். நன்றி.

    ReplyDelete
  63. மன்னிக்கவும். 6-7 மாதங்களுக்கு முன்னர் வெளியான புதிய Panasonic மாடல் FZ38 என்பது. FZ28 அதற்கு முன்னர் வந்த மாடல்.

    http://www.photographyblog.com/reviews/panasonic_lumix_dmc_fz38_review/

    ReplyDelete
  64. சுரேஷ்பாபுDecember 9, 2009 at 8:23 PM

    வெங்கட்ராமன், என்னை கேட்டால் ஒரு dslr வாங்குங்கள் என்று தான் சொல்வேன்..ஏற்கனவே நீங்கள் ஒரு point and shoot கேமராவை பயன் படுத்தியுள்ளீர்கள்,எனவே அடுத்த கட்டமாக dslr தான் சிறந்த வழி.. நீங்கள் குறிப்பிடுள்ள prosumer வகைகள் நல்ல zoom range மற்றும் video option இருந்தாலும், picture quality,fast,
    noise free image,action shots என்று பார்த்தால் dslr ஒன்றே சிறந்த வழி.. prosumer க்கும்,dslr க்கும் size பொருத்த வரையில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை..

    prosumer cameraவில் நல்ல zoom range இருந்தாலும் என்னை பொருத்த வரையில் சுமாராக 300 mm(35mm format) க்கும் மேல் பயன்படுத்துவது சவாலான விசயம்..அதுவுமில்லாமல் 300mm மேல் என்பது மிகவும் நல்ல வெளிச்சத்தில் மட்டுமே wild life மற்றும் திருட்டுதனமாக தூரத்தில் வரும் ஃபிகர்களை எடுப்பதற்க்கு தான் பயன். நீங்கள் எத்தனை முறை இந்த மாதிரி போட்டோ எடுப்பீர்கள் என்று நன்றாக யோசிக்கவும்..

    பொதுவான புகைப்படங்கள் எடுப்பதற்க்கு 28 - 80 mm (18-55mm DSLR format) zoom range என்பதே போதும்..இந்த zoom range ல் wild life,some candit shots தவிர முடிந்த அளவில் அனைத்தும் எடுக்கலாம்..

    budget கொஞ்சம் தான் அதிகம்,பட்ஜெட் டைட் என்றால் சிறிது காலம் பொறுத்திருந்து வாங்கவும்..

    எனவே, 300-600mm என்பதை கண்டு மயங்க வேண்டாம்..பயன்பாடு மிகவும் குறைவு..

    இல்லை எனக்கு prosumer type தான் வேண்டும் என்றால், இவ்விரண்டில் FEATURES பல வகையில் nikon p90 ,canon sx10is ஐ விட அதிக பயன்..

    NIKON P90 CANON SX10IS

    12 MEGA PIXEL 10 MEGA PIXELS
    3.0 INCH LCD 2.5 INCH LCD
    26-624MM 28-560MM
    F2.8-5.0 APERTURE RANGE.. F2.8-5.7

    இதில் 3.0 inch LCD DIPLAY வை தவிர மற்ற feautures ல் முக்கியமான வித்தியாசம் பெரிதாக இல்லை..

    இருந்தாலும் picture quality என்று பார்த்தால் canon சிறந்ததாக தெரிகிறது.(AS PER REVIEWS)

    மேலும் canon sx20is மற்றும் canon sx10is இவ்விரண்டிற்க்கும் உள்ள வித்தியாசம் மிக குறைவே..

    12 mega pixel மற்றும் high quality video(720p) with HDMI output இவ்விரண்டை தவிர சொல்லிகொள்ளும்படி பெரிதாக ஒன்றும் இல்லை,எனவே canon sx20is ஐ பற்றி கவலைபடவேண்டாம்..

    கைப்புள்ள சொல்வது போல் panasonic fz28 or fz38/35,மாடல்களையும் பரிசீலனை செய்யவும்,ஏனென்றால் panasonic cameraக்கள் உலகதரம் வாய்ந்த leica lensஐ பயன்படுத்துகின்றனர்..

    prosumer வகை என்று பார்த்தால்,nikon ஐ விட canon மற்றும் panasonic மாடல்கள் சிறந்ததே..

    எனவே,canon sx10is மற்றும் panasonic fz28 or 38 விலை வித்தியாசம் இல்லை என்றால் இரண்டுமே சிறந்தது,வித்தியாசம் இருப்பின் எது விலை குறைவோ அதை வாங்கவும்...

    இன்னும் ஏதும் சந்தேகம் இருப்பின் கண்டிப்பாக கேட்கவும்..

    -சுரேஷ் பாபு.

    ReplyDelete
  65. Take it from me - I switched to dSLR (EOS1000D for 25k INR) just a month ago, after using a prosumer camera (Panasonic FZ7) for 3 years. I feel i have wasted 3 yrs of my digital fotography in a bridge cam, although most of my skills as on date have been acquired from FZ7 with it's world class Leica lens.
    When I bought the prosumer, I was not so sure of my fotographic skills....thats the reason - so the break even point is more within you.

    On any given day, I would opt a dSLR - upgradable and flexible, less noise and real photography.
    On the zoom part, a EOS 1000D with kit lens and a Sigma70-300 non-APO would cost you under 31k-32k INR. Almost your PNS price

    ReplyDelete
  66. Thanks to all for participating.
    We will make *sticky* post soon
    "Which camera to buy ? "

    ReplyDelete
  67. கைப்புள்ள, சுரேஷ்பாபு & Nagappan மிக்க நன்றி.

    Panasonic FZ38 விலை கொஞ்சம் பரவாயில்லை அதனால் வாங்கலாம் என்று முடிவு செய்திருந்தேன்.

    ஆனால் Nagappan அவர்கள் prosumer camera வாங்கிய அதே மன நிலையில் தான் நான் இருக்கிறேன். என்னால் எந்த அளவுக்கு அதை நன்றாக உபயோகிக்க முடியும் என்று தான் பயப்படுகிறேன். இதுவரை DSLR வகை கேமிராக்களை தொட்டுக் கூட பார்த்ததில்லை.

    For new DSLR users
    http://www.canon.co.in/p/EN/112-Digital-Cameras/189-EOS/745-EOS-1000D-Kit-EFS-18-55/

    Panasonic FZ38
    அல்லது
    EOS 1000D Kit (EFS 18-55)

    புதிதாக் லென்ஸ் வாங்காமல் EOS 1000D KIT ஐ உபயோப்பதில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா. அவர்கள் தரும் லென்ஸ் எத்தனை x zoom க்கு நிகரானது.

    கொஞ்சம் காலம் பொருத்து லென்ஸ் வாங்கிக்கொள்ளலாம், அதுவரை DSLRஐ கற்றுக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்.

    என்ன சொல்றீங்க, என்ன செய்யலாம்.

    ReplyDelete
  68. உங்களுக்கு பணம் மற்றும் சைஸ் பிரச்சினையில்லையென்றால்,பேசாமல் DSLR வாங்கவும்..இது மற்ற கேமராக்களை விட பயன்படுத்துவது மிகவும் சுலபம்..மிகவும் நம்பகமானது.

    அதற்காக,prosumer வகைகள் மோசம் என்று சொல்லவிலலை..compare பன்னினால் DSLR சிறந்தது என்று சொல்வேன்..

    பல நேரங்களில் prosumer கேமராவில் வரும் electronic view finder மற்றும் LCD screen ஐ வைத்து படம் எடுப்பது மிகவும் சிரமம்.முக்கியமாக சூரிய ஒளியில் இதை பயன்படுத்தி படம் எடுப்பது சிரமம்.

    எல்லோரும் DSLR சைஸை பார்த்து ,பயன்படுத்துவது சிரமம் என்றே நினைக்கின்றனர்.உண்மையில் சின்ன கேமாரக்களை பயன்படுத்துவது தான் சிரமம்(என் கருத்து).

    canon eos 1000d மற்றும் 18-55 IS kit lens ஒரு சில விசயங்களை தவிர அதிலேயே கலக்கலாம்..

    பொதுவாக x என்பது எத்தனை முறை(times)என்று அர்த்தம். உதாரணமாக kitlensயே வைத்துகொள்வேம்..அந்த லென்ஸ் 18mmல் ஆரம்பிக்கிறது,55mmல் முடிகிறது..எனவே,18லிருந்து 3 தடவை பெருக்கினால் 54 வருவதால் இந்த லென்ஸ் 3x zoom என்று கூறப்படுகின்றது..

    28-200 என்றால் 7x zoom (28*7=200)
    18-200 என்றால் 11x zoom (18*11=200)
    55-200 என்றால் 3.6x zoom
    18-85 என்றால் 4.7x zoom.
    35-600 என்றால் 17x zoom.

    எனவே x ன் அளவை பார்த்து மயங்க வேண்டாம்..எந்த zoom rangeல் ஆரம்பித்து,முடிகிறது என்று தான் பார்க்க வேண்டும்.

    kit lensஏ ஒரு நல்ல லென்ஸ் தான்..most of the purpose இதிலேயே கலக்கலாம்..

    1.landscape
    2.portrait
    3.macro(பாதி)
    4.family
    5.group photos..

    மேலே சொன்ன வகைகளை இந்த zoom rangeல் தான் சுலபமாக எடுக்க முடியும்..

    இதை பயன்படுத்திய பிறகு,இந்த zoom range பத்தவில்லை என்றால்,வேறு லென்ஸ் வாங்கிக்கொள்ளலாம்.பல வகையான் லென்ஸ் எளிதாக கிடைக்கின்றது..

    -சுரேஷ் பாபு

    ReplyDelete
  69. Please explain me about OPTIMIZE IMAGE
    I am Using NIKON D 70S

    Thank you

    Muralidharan

    ReplyDelete
  70. Murali.

    கேள்வி இன்னும் சற்று விளக்கமாக கேளுங்கள். என்ன கேட்கவருகிறீர்கள் என்பதில் தெளிவில்லை.

    பட மேம்படுத்தல் - எடுப்பதற்கு முன்பா அல்லது அப்புறமா ?

    ReplyDelete
  71. What is the meaning of Optimize Image. Normal , Vivid, Sharper. Custom ,etc. I cant understand about all these things, Which is better to select for function photography

    MURALIDHARAN
    .

    ReplyDelete
  72. இன்று சென்னை பாரிமுனையில் சில கடைகளில் சென்று விசாரித்தேன். Cannon 1000D இல்லை. கிட்டத்தட்ட எல்லா கடைகளிலும் Nikon D3000, Nikon D60 வகையறாக்கள் தான் இருக்கின்றன.

    Nikon D3000 தேர்வு செய்யலாமா, விலை சகாயமாக இருந்தால்.

    விரிவான விளக்கத்திற்கு நன்றி சுரேஷ்பாபு.

    ReplyDelete
  73. nikon d3000,d60,d40(கிடைத்தால்)..எது விலை கம்மியோ அதை வாங்கவும்.. picture quality என்று பார்த்தால்,மூன்றும் ஒரே மாதிரி தான்.. pixel மட்டும் தான் வித்தியாசம்.. ஒரு சில features மாறுபடும்..மற்றபடி எதை வாங்கினாலும் பிரச்சினை இல்லை..

    உஙளுக்கு canon மீது விருப்பம் இருந்தால் கொஞ்சம் 1000dக்காக wait பன்னலாம்..அல்லது nikon models எதையும் நம்பி வாங்கலாம்.

    நான் படித்த வரையில் nikon மாடல்கள் user friendly.. மற்றும் kit lensஐ பொறுத்த வரையில் nikon கொஞ்சம் சிறந்தது..

    -சுரேஷ் பாபு

    ReplyDelete
  74. Cannon 1000D வாங்கியாச்சு.
    விலை ரூபாய் 25500/- பில் மற்றும் வாரண்டியுடன் Camera citi யில் வாங்கினேன்.

    கைப்புள்ள, சுரேஷ் பாபு மற்றும் நாகப்பன் மிக்க நன்றி.

    ReplyDelete
  75. 55-200mm லென்சுக்கும், 70-300mm லென்சுக்கும் என்னென்ன வித்தியாசங்கள்?

    *சிறிய ஃபோக்கல் லெந்த் மிஸ் ஆகும் என்றாலும், அது சில அடிகள் பின் செல்வதிலோ முன் செல்வதிலோ மறையும், இல்லையா?
    *எனக்கு தூரத்தில் இருக்கும் விலங்குகளையும் மனிதர்களையும் தெளிவாகப் பிடிக்க, இந்த லென்ஸ் சரிப்படும் என்று தோன்றுகிறது. நிலவையும்!

    ReplyDelete
  76. The subject is dark and it has a bulb(or some light source) glowing in one particular spot. The light from this bulb is not spread to the whole of the subject, i.e, the whole of the subject is dark, except for one spot. Now when I have to shoot this subject which is totally dark, I need long exposure. But the long exposed shot, makes that bulb over exposed spoiling the entire pic. What do I do? Explain with samples if possible. I was stumped with this issue last night. Or these subjects are to be shot only during the day time?

    ReplyDelete
  77. @வெங்கட்ராமன்...
    வாழ்த்துக்கள், ஒரு நல்ல கேமராவை வாங்கிட்டீங்க.இனிமே நல்ல படங்களை எடுத்து அசத்த வேண்டியது உங்க பொறுப்பு..அடுத்த பட்ஜெட்அருமையான canon 55-250mm lens க்கு ரெடி பன்னுங்க..

    @வெங்கிராஜா..

    55-200mm lens பயன்படுத்தினால் 200-300mm zoom range மிஸ் ஆகிறது..300mmல் வைத்து ஒரு இடத்தில் இருந்து படம் எடுப்பதை,200mmல் வைத்து எடுக்கும் போது, இன்னும் இரண்டு அடி முன்னே சென்றால் மட்டுமே எடுக்கலாம்..300mmஆல் நமக்கு ரெண்டு அடி முன்னே செல்வது மிச்சம் ஆகிறது..

    70-300mm பயன்படுத்தினால்,55-70mm zoom range மிஸ் ஆகிறது..உதாரணமாக,55mmல் வைத்து இரண்டு பேரை எடுக்கலாம்,ஆனால் 70mmல் அப்படி எடுக்க வேண்டும் என்றால் இரண்டு அடி பின்னால் செல்ல வேண்டும்..55mmஆல் நமக்கு இரண்டு அடி பின்னால் செல்வது மிச்சம் ஆகிறது..

    தூரத்தில் இருப்பதை எடுக்க அதிக zoom தேவை..இதுவே 400mmஆக இருந்தால் இன்னும் முன்னே செல்வது மிச்சம்.

    என்னை பொறுத்த வரையில் முன்னால் செல்வது கொஞ்சம் சுலபம்,பின்னால் செல்வது கொஞ்சம் சிரமம்..
    -சுரேஷ் பாபு

    ReplyDelete
  78. Truth,
    the simplest way.

    shot 1. Meter for the subject, ( does your camera has spot meter ) and take a shot. Light will be over exposed. Dont worry
    Shot2. Meter for the bulb/light shource. Take shot
    Merge in PP.

    A good example will be take a shot of laptop/computer/tv. It will be difficult to get with diplay in it correctly. It is easy to merge in two shots.

    ReplyDelete
  79. Truth, as an& suggested exposure blending is the best option.

    HDR also comes in handy.
    http://photography-in-tamil.blogspot.com/2007/12/hdr.html

    ReplyDelete
  80. As in, if I own a 55-200mm, is it advisable to sell it to buy the 70-300? (FYI, 70-300 will be Sigma with Macro switch and 55-200 is Nikon)

    ReplyDelete
  81. வெங்கிராஜா,

    உங்களிடம் nikon 55-200mm lens இருந்தால்,sigma 70-300mm கண்டிப்பாக தேவையில்லை..

    இவ்விரண்டும் இல்லை என்றாலும்,வாங்கும் போது nikon 55-200mm vr lensஐயே வாங்கவும்..

    ஏனென்றால்,

    1.200-300mm zoom difference மற்றும்
    2.nikon ஐ விட அதிகமான macro mode(nikon 1:4 vs sigma 1:2 macro ratio)
    இவ்விரண்டு வித்தியாசத்தை தவிர வேறு எந்த நன்மையும் sigmaவில் கிடையாது..

    விலையும் பெரிய வித்தியாசம் இல்லை(nikon(rs.8500-9000) vs sigma (8000-8500)


    இதில் 200-300mm zoom வித்தியாசத்தை nikon 200mm ல் வைத்து ஒரு அடி அல்லது இரண்டு அடி முன்னே சென்றால் போதும் 300mm ல் எடுக்க வேண்டியதை எடுத்துவிடலாம். இந்த zoom range பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.

    macro என்று பார்த்தால்,sigma கொஞ்சம் பலன் அதிகம் தான்..ஆனால் macroவில் 1:3 ratioவுக்கு கீழ் 1:2.5,1:2,,என்று close up போகும் போது கண்டிப்பாக tripod இல்லாமல் நம் கையால் மட்டுமே வைத்து shake இல்லாமல் எடுப்பது மிகவும் வாய்ப்பு குறைவு..focus செய்வதும் மிக சிரமம்..

    இவற்றை தவிர மிக முக்கியமான,
    1.picture quality
    2.focusing speed
    3.silent focusing
    4.VR
    5.NIKON name
    6.correct focus
    etc..etc
    என்று பார்த்தால் NIKON மிகவும் சிறந்தது..

    எனவே nikon 55-200mm lens மிகவும் சிறந்தது..

    நான் இவ்விரண்டையும் பயன் படுத்தியுள்ளேன்,என்னிடம் இருப்பது nikon 55-200mm vr lens..சாம்பிளுக்கு இங்கே பார்க்கவும்..இதில் கிட்டதட்ட அனைத்தும் nikon 55-200mmல் எடுத்ததே..

    http://www.flickr.com/photos/30041161@NO3/

    -கருவாயன்

    ReplyDelete
  82. வெங்கிராஜா,இதை பயன்படுத்தி பார்க்கவும் ,http://www.flickr.com/photos/30041161@N03/

    ReplyDelete
  83. வணக்கம்ங்க,

    I have Nikon D5000 with 18-55mm AF VR and 55-200mm AF lens.

    Is Reverse lens technique for Macro shooting is possbile in Nikon D5000. I tried for that but after removing the lens, camera says no lens attached.

    Is there any other way to perform macro photography with available lens. Pls suggest.

    Thanks,
    Ramanathan

    ReplyDelete
  84. //Is Reverse lens technique for Macro shooting is possbile in Nikon D5000//

    Yes you can. You should get a "Nikon BR-2A Lens Reversing Ring". Also let me know what lens do you have.

    If you have zoom lenses like 70-300 or 55-200, You can use extension tubes for that.

    Check this out - http://photography-in-tamil.blogspot.com/2009/09/1.html

    ReplyDelete
  85. Thank you Nathas,
    I have following lenses,

    1. AF-S Nikkor 18-55mm 1:3.5-5.6G
    2. AF-S Nikkor 55-200mm 1.:4-5.6G ED

    I have two doubts,

    1. How auto focus will work with extension tube as the actual side to be connected has all interfaces.

    2. What does 1:3.5-5.6G like values describe.

    Pls correct if am wrong with something.

    thanks,
    Ramanathan

    ReplyDelete
  86. And also pls confirm whether Nikon BR-2A will work with D5000 as the body does not has auto focus functionality.

    Correct if am wrong.

    Thanks,

    ReplyDelete
  87. @ Ramanathan

    // How auto focus will work with extension tube as the actual side to be connected has all interfaces.//

    Kenko போன்ற எக்ஸ்டன்ஷன் ட்யுப்கள் தான் லென்சுக்கும், காமிராவுக்கும் இடையே இருப்பதை காமிராவுக்கு தெரிவிப்பது இல்லை. இதனால் ஆட்டோ போகஸ் வேலை செய்கிறது.
    Please note "If you use Nikon extension tubes, Auto focus won't work"

    ReplyDelete
  88. //2. What does 1:3.5-5.6G like values describe.//

    This denotes the maximum aperture that we can use at the end focal lengths of the lens.

    For Example -
    Nikon 18-55mm 1:3.5-5.6G
    This means the maximum aperture that we can use at the focal length 18mm is 3.5 for this lens. Similarly the maximum aperture that we can use at the focal length 55mm is 5.6.

    G stands for "Gelded". This means no aperture ring. In old lenses there will be an aperture ring in the lens itself to control the aperture value. With G lens the aperture value has to be controlled in camera only.
    (Nowadays this becomes a standard for all new lenses)

    ReplyDelete
  89. //whether Nikon BR-2A will work with D5000 as the body does not has auto focus functionality.//

    Yes, Nikon BR-2A will work with D5000. But in reverse lens you have to manual focus. Also BR-2A can accept only lens with 52mm filter thread diameter. For lenses with other filter thread diameter, we have to use step up and step down rings.
    I am writing a post on this will publish it soon in PIT.

    ReplyDelete
  90. @ராமனாதன்,..

    என்னை கேட்டால் நீங்கள் இன்னும் பல விசயங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது இருக்கின்றது..அதனால அதையும் இதையும் பன்னாம இருக்கிறத வெச்சு நிறைய படம் எடுங்க.. அப்புறமா ட்யுப்,ஃபில்டர்லாம் வாங்கலாம்..

    புது கேமரா வேற,அதே மாதிரி நீங்கள் வைத்துள்ள slow லென்ஸ் ஐ வைத்து ரிவெர்ஸ் பன்னினால் தலைவலி தான் வரும்.. அப்புறம் இருக்கிற ஆசையும் போய்டும். இதுக்கெல்லாம் prime லென்ஸ்(ஃபாஸ்ட் லென்ஸ்) தான் சரி வரும்..

    நீங்கள் வைத்திருக்கும் லென்ஸ் பயன்பட்டாலும் இந்த மாதிரி hard ஆக (ரிவர்ஸ்,டுயுப்) பயன்படுத்துவது புது கேமராவுக்கு நல்லதல்ல.

    உங்களுக்கு மேக்ரோ தான் பிரியம் என்றால்,அதற்கான மேக்ரோ லென்ஸே வாங்கவும் அதுவும் பத்தவில்லை என்றால் மட்டுமே டுயுப்,ரிவர்ஸ் என்று போகலாம்..அது வரைக்கும் உங்களிடம் உள்ள லென்ஸிலேயே நன்றாக மேக்ரோ பழகவும்..பொறுமையாக இருக்கவும்..

    -கருவாயன்.

    ReplyDelete
  91. @ராமனாதன்..

    `~What does 1:3.5-5.6G like values describe`~

    இதை அதிகபட்ச aperture அளவு என்று கூறுவார்கள்.. இது லென்ஸ்க்கு லென்ஸ் மாறுபடும். இந்த அளவு எவ்வளவு குறைகிறதோ, லென்ஸின் வேகம் அதிகரிக்கும்.இதனால் நமக்கு படங்களை ஆடாமல் தெளிவாக எடுக்க முடியும்

    அதாவது நீங்கள் 18mmல் வைத்து எடுக்குக்கும் போது அதிகபட்சமாக 3.5 வரை தான் apertureஐ குறைக்க முடியும்,அதே சமயம் 50mm வரை zoom செய்யும் போது கொஞ்சம் கொஞ்சமாக aperture அதிகமாகி அதிகபட்சமாக 5.6 வரை தான் apertureஐ பயன்படுத்த முடியும்.

    apertureஐ 3.5ல் வைத்து எடுக்கும் போதும்,5.6ல் வைத்து எடுக்கும் போதும் shutter speedன் அளவு மாறும்.. aperture நம்பர் அதிகமாக(உ.ம். 5.6,8,9) நாம் எடுக்கும் வேகம் குறைந்து விடும்.இதனால் நாம் வெளிச்சம் குறைவான நேரத்தில் வேகம் பத்தாமல் படம் ஆடி தெளிவில்லாமல் வரும்.

    ஒரு சில லென்ஸ்களில் 18-55mm 1:2.8 g என்று போட்டிருந்தால்,18mmலிருந்து 55mm வரை அதிகபட்சமாக aperture அளவு 2.8 வரை பயன்படுத்தலாம்..

    -சுரேஷ் பாபு

    ReplyDelete
  92. ரொம்ப நன்றி நண்பர்களே.நிறைய பதில்களால் நான் தெளிவு ஆனேன்.

    @Karuvayan

    //என்னை கேட்டால் நீங்கள் இன்னும் பல விசயங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது இருக்கின்றது..//

    நீங்க ரொம்ப சரியாக சொன்னீங்க.....சீக்கிரம் கத்துகிறேன்

    @நாதஸ்
    Thanks nathas

    @சுரேஷ் பாபு
    Thanks sureshbabu


    ஒரு ஆர்வத்தில் DSLR வாங்கினேன். இன்னும் முழுவதுமாக கற்கவேண்டும். Am confident that with help of PiT, i could make it.

    ReplyDelete
  93. Dear Sir, I am Professional Photographer.
    Presently I am having Nikon D70s Camera. I want to buy a new Camera either D80 or D90. Please advie me which is better?

    Muralidharan

    ReplyDelete
  94. @முரளி..

    D80 எல்லாம் `வரலாறு`ஆகி ரொம்ப நாள் ஆச்சு..

    நீங்க புதுசா வாங்க விரும்பினா d90 ரொம்ப நல்ல கேமரா.. பட்ஜெட் பிரச்சனை இல்லைன்னா d90 ஒரு நல்ல வழி..
    பட்ஜெட் பிரச்சனை என்றால் d5000 மற்றொரு நல்ல option.. இரண்டுமே ஒரே ப்ராஸசர் தான் ஒரு சில வித்தியாசங்கள் உண்டு.

    இல்லை உங்களுக்கு பழசே போதும் என்றால் d80ஐ second hand ஆக வேண்டுமானால் வாங்கலாம்.. ஆனால் d70sக்கும் d80க்கும் பிக்சர் குவாலிட்டியில் பெரிய வித்தியாசம் நம்மால் கண்டுபிடிக்க முடியாது.

    நீங்கள் upgrade ஆக விரும்பினால் D80 வேண்டாம்.

    நீங்க என்னென்ன லென்ஸ் வைத்துள்ளீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாமா?

    -கருவாயன்

    ReplyDelete
  95. Thank you for your reply, I am having sigma 70 - 200 lens .

    Muralidharan

    ReplyDelete
  96. நண்பர்களே,

    சர்வேசனின் "இலவச HDR" பதிவினை உபயோகப்படுத்தி உருவாக்கிய HDR படங்கள் உங்கள் பார்வைக்கு...
    http://www.flickr.com/photos/45424909@N05/

    நன்றிகளுடன்,
    ராமநாதன்

    ReplyDelete
  97. Friends,
    My friend planning to buy second hand Canon EOS 350D with 18-55 mm kit lens. Camera is ready. What things need to be noted before buying the camera.
    Is it good to buy such cameras. The owner says that only 1000 shots have been taken.

    Pls suggest. Thanks,
    Ramanathan Sundaram

    ReplyDelete
  98. @ramanathan sundaram...

    எவ்வளவு விலைக்கு தருகிறார் என்று சொல்லியிருந்தால் கொஞ்சம் எளிதாக கூறலாம்..

    ஆனால் கண்டிப்பாக ரூ.15,000 - 16,000 ற்க்கும் மேல் இருந்தால் கண்டிப்பாக வாங்கவேண்டாம்..

    350D என்பது நல்ல மாடலாக இருந்தாலும்,இன்றைய நிலவரப்படி இந்த மாடல் பழையது தான்..

    இதில் வரும் LCD screen அளவு, இப்போ வருகின்ற மாடல்களை கம்பேர் செய்து பார்த்தால் சிறியது,அதுவுமில்லாமல் LCD RESOLUTION கம்மி.orange கலர் தூக்கலாக இருக்கும்.

    மற்றபடி இந்த கேமரா ஒரு சிறந்த கேமரா தான்..


    உங்களுக்கு பட்ஜெட் ப்ரச்சினை இல்லையென்றால் வேறு மாடல்கள் பார்க்கவும்..

    அல்லது பட்ஜெட் பிரச்சனையென்றால் இந்த மாடல் ரூ.15,000 க்கும் கீழ் லென்ஸுடன் கிடைத்தால் வாங்கலாம்.

    அவர் விலை அதிகமாக கூட வாங்கியிருக்கலாம்,ஆனால் அது அந்த காலம்..அதை பற்றி நீங்கள் கவலைபட வேண்டாம்.

    இதை விட நல்ல திறன் மற்றும் புதிய features கொண்ட புது மாடல்களே ,புதியதாகவே ரூ.21,000 முதல் கிடைக்கின்றது..


    அப்படி அந்த பழைய மாடலை வாங்கும் போது நீங்கள் கவனிக்க வேண்டியது ,
    லென்ஸில் scratches இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும், அப்புறம் சென்சாரில் டஸ்ட் படிந்துள்ளதா என்று பார்க்கவும்.

    இதை நல்ல வெள்ளை சுவர் அல்லது தெளிவான மேகத்தை படம் எடுத்து பார்த்தால் படத்தில் dust உள்ளதா என்பது தெரிந்துவிடும்..

    முடிந்தால் அவர் என்ன விலைக்கு தருகிறார் என்பதை தெரிவிக்கவும்..

    -கருவாயன்

    ReplyDelete
  99. Thanks friend,

    The price comes around 16K to 17K. He claims that he has shot about 1000 shots and has no problem with camera. I suggested him to go for new one so that warranty also includes.

    Thanks, Ramanathan.

    ReplyDelete
  100. Dear Friends,
    In what case usage of external flash is required. Or what are the cases in which built-in flash cannot satisfy the requirement. Can we avoid the usage of external flash with exposure compensation.

    Pls clarify, Thanks,
    Ramanathan

    ReplyDelete
  101. ராமநாதன் சுந்தரம்,
    //In what case usage of external flash is required

    உங்களுக்கு எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம். பொதுவாக குறைந்த ஒளி இருக்கும் இடங்களில். ஒளி குறைவாக இருந்தால் ISO அதிகமாகவோ அல்லது shutter speed குறைத்தோ படம் எடுக்க முயற்சிக்கலாம். ஆனால் பல சமயங்களில் செயற்கை ஒளி தேவை.

    //what are the cases in which built-in flash cannot satisfy the requirement

    கேமராவில் இருக்கும் ப்ளாஷ் சிறியது. ஆனால் அதிக ஒளி தரக்கூடியது. இதில் படம் எடுத்தால் நிழல்கள் கடினமாக, படம் வெளுத்து காணப்படும்.
    External Flash பெரும்பாலும் பெரியவை. அவற்றை பல திசைகளில் திருப்பி, ஒளியை சிதறடித்து, நிழல்களின் கடினத்தன்மையை குறைக்கலாம்.


    //Can we avoid the usage of external flash with exposure compensation

    முதலியே கூறியவாறு, இந்த முறை அனைத்து இடங்களிலும் பயன் தராது. உதாரணதிற்கு ISO அதிகரித்தால் இரைச்சல் அதிகமாகும் shutter speed குறைத்தால் படம் தெளிவாக இருக்காது ( முக்காலி இல்லாமல் ).


    ப்ளாச் . ஒளி குறைவான இடத்துக்கு மட்டும்தான் என்று இல்லை. இந்த மாதிரி படங்கள் எடுக்கவும் தேவை.

    http://anandvinay1.blogspot.com/2010/01/nifty-fifty-50mm.html

    http://anandvinay1.blogspot.com/2010/02/blog-post_21.html

    http://anandvinay1.blogspot.com/2010/01/blog-post_31.html


    என்னை கேட்டால், external flash வாங்குவது நல்லது.

    ReplyDelete
  102. I have a canon EOS 400D. Is there any specific model of external flash to buy?

    ReplyDelete
  103. ரொம்ப நன்றிங்க An&


    //கேமராவில் இருக்கும் ப்ளாஷ் சிறியது. ஆனால் அதிக ஒளி தரக்கூடியது. இதில் படம் எடுத்தால் நிழல்கள் கடினமாக, படம் வெளுத்து காணப்படும். //

    இதனை நானும் அனுபவித்திருக்கிறேன்

    Flashக்கும் பணம் சேர்க்க ஆரம்பிக்கிறேன்.

    -Ramanathan

    ReplyDelete
  104. jayashree,

    580/550 ex
    430/420 ex
    270 ex
    இவற்றில் எது வேண்டுமானாலும்.

    270 விலை மலிவானது. ஆனால் பக்கவாட்டில் திருப்ப முடியாது.

    580 விலை அதிகம.

    550 /420 பழைய மாடல்கள். விலை மலிவாய் கிடைக்கும்.

    420/430 கிட்டத்தட்ட உங்களின் அனைத்து தேவைகளுக்கும் போதுமானதாய் இருக்கும்.

    ReplyDelete
  105. ஒரு முறை சூரியனை நேரடியாக படம் எடுத்தேன். அதனால் எனது கேமெராவுக்கு ஏதேனும் பாதிப்பு வந்துள்ளதா என்று எவ்வாறு தெரிந்துகொள்வது.
    அதன்பிறகு மற்ற பல படங்கள் எடுத்துவிட்டேன். அவைகளில் எந்த குறையினையும் பார்க்க முடியவில்லை.Model - Nikon D5000
    -ராம்

    ReplyDelete
  106. என்னிடம் உள்ளது Nikon D5000. எனது நண்பரிடம் உள்ளது Canon rebel T1i. இருவரும் இரவில் நடந்த ஒரு நாட்டுபுற கலைநிகழ்ச்சி ஒன்றை படம்பிடித்தோம். இருவருமே ஒரே மோட் (P) வைத்து அருகருகே படம்பிடித்தோம். ஆனாலும் difference உள்ளது. When i checked side by side during shooting, the aperture and shutter values were different for same composition. What is the reason for the difference.

    ReplyDelete
  107. "ஒரு முறை சூரியனை நேரடியாக படம் எடுத்தேன். அதனால் எனது கேமெராவுக்கு ஏதேனும் பாதிப்பு வந்துள்ளதா என்று எவ்வாறு தெரிந்துகொள்வது.
    அதன்பிறகு மற்ற பல படங்கள் எடுத்துவிட்டேன். அவைகளில் எந்த குறையினையும் பார்க்க முடியவில்லை.Model - Nikon D5000"

    ராம்,எனக்கு தெரிந்த வரையில் கேமராக்களுக்கு பாதிப்பு இல்லை.. ஆனால் ரொம்ப நேரம் லென்ஸ் வழியாக சூரிய ஒளியை பார்த்தால் கண்களுக்கு பாதிப்பு கொஞ்சமாக வரலாம்..


    ”என்னிடம் உள்ளது Nikon D5000. எனது நண்பரிடம் உள்ளது Canon rebel T1i. இருவரும் இரவில் நடந்த ஒரு நாட்டுபுற கலைநிகழ்ச்சி ஒன்றை படம்பிடித்தோம். இருவருமே ஒரே மோட் (P) வைத்து அருகருகே படம்பிடித்தோம். ஆனாலும் difference உள்ளது. When i checked side by side during shooting, the aperture and shutter values were different for same composition. What is the reason for the difference.”

    கேமராவுக்கு கேமரா கொஞ்சம் வித்தியாசப்படும்,அப்படியில்லை என்றால் எதுக்கு வெவ்வேறு மாடல்கள்??..

    அதுவுமில்லாமல் இரண்டு பேரும் ஒரே P மோட்ல் வைத்து எடுத்திருந்தாலும், ISO,exposure compensation,white balance,metering..இதில் ஏதாவது ஒன்று மாறியிருந்தாலும் aperture மற்றும் shutter speed மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது..

    மேலும் லென்ஸ் என்பது இதில் முக்கிய பங்கு வகிக்கும்.. இரண்டு பேரும் ஒரே zoomல் வைத்து எடுத்ததா என்பதையும் பார்க்கவும்.. அதுவுமில்லாமல் லென்ஸ் என்பது வெவ்வேறு.. அதனால் மாற்றம் என்பது கண்டிப்பாக வரும்..

    -கருவாயன்

    ReplyDelete
  108. I used Adapter lens ring BR-2A with my Nikon D5000 and lens 18-55mm 1:3.5-5.6G DX VR. I selected the Manual mode but got message as "Picture too Dark" and F-number was F-- with only aperture value. The output was very dark even after using flash. What could be the reason.

    ReplyDelete
  109. I want to buy D90 camera as suggested by you some times back. Where can I buy the camera in Chennai
    for correct price

    Muralidharan

    ReplyDelete
  110. @murali...

    you can buy nikon d90 from following places in chennai without bill,

    they are all offered around 35-37K for body only,and with lens it will be around 48-50K..

    1.millenium cameras , fazal complex,wallajah road,
    contact no:98401-765999.

    2.foto trade,fazal complex.. contact no: 044-28547113

    3.millenium photos , 146-a,burma bazar ,chennai .. contact no:9840071765

    4.dominic burma bazar,contact no:044-25341375

    try to call your convinience..

    -கருவாயன்

    ReplyDelete
  111. @முரளி
    nikon d90 with 18-105mm kit lens என்றால் body மட்டும் வாங்கவும்.. 18-105mm லென்ஸ் கொஞ்சம் சுமார் மற்றும் விலை அதிகம்,எனவே இந்த லென்ஸ் ஐ வாங்க வேண்டாம்..nikon d90 body வாங்கவும்..

    விலையை அனைத்து இடங்களிலும் விசாரித்துவிட்டு வாங்கவும்..

    -கருவாயன்

    ReplyDelete
  112. Dear friends..
    i just bought DSLR (nikon d40) almost my 10 year dream come to my hand now! looking to buy a lens pl suggest also do let me who can teach to take photo's would be happy some one teach's in tamil
    Baskar
    9884018346

    ReplyDelete
  113. @Baskar...

    வாழ்த்துக்கள்... நீங்க ஒரு அருமையான கேமராவை வாங்கியதற்காக..

    நீங்கள் இன்னும் ஒரு லென்ஸும் வாங்கவில்லையா?

    அப்படி இல்லை என்றால் முதலில் நிக்கான் கிட் லென்ஸ் ஆன 18-55mm லென்ஸையே வாங்கிவிடவும்.. இப்போதைக்கு இது போதும்..விலை கிட்டதட்ட 5000 முதல் 6000 வரை வரும் என்று நினைக்கின்றேன்

    பட்ஜெட் ப்ரச்சினை இல்லையென்றால் நிக்கான் 18-200mm லென்ஸ் வாங்கவும்.இதில் நிறைய கத்துக்கலாம். விலை கிட்டதட்ட 35000 வரும்..

    உங்கள் அனுபவம் தான் புகைப்படம் எடுப்பதை எளிதாக கற்று தரும்.. பிறகு தான் பாடங்கள் எல்லாம்..

    பிட் ல் உள்ள பாடங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நன்றாக படிக்கவும்.. அதை கேமராவில் அனுபவமாக்கவும்..பிறகு வரும் சந்தேகங்களை கேட்டு தெளிவு படுத்திக்கொள்ளலாம்..

    இப்போதைக்கு இந்த மாதிரி ஆரம்ப்பிக்கவும்..

    நீங்கள் இன்னும் எந்த லென்ஸும் வாங்கவில்லையா?

    தெளிவுபடுத்தவும்

    -கருவாயன்

    ReplyDelete
  114. @ ரெண்டு -
    //I used Adapter lens ring BR-2A with my Nikon D5000 and lens 18-55mm 1:3.5-5.6G DX VR. I selected the Manual mode but got message as "Picture too Dark" and F-number was F-- with only aperture value. The output was very dark even after using flash. What could be the reason.//
    லென்சை திருப்பி வச்சு எடுக்கும் போது இப்படி நடப்பது சகஜம்.
    நீங்க Aperture(A) மோட்ல வச்சு, பிளாஷ் இல்லாம, ட்ரைபாட் வச்சு முயற்சி பண்ணி பாருங்க.
    நீங்க என்ன பிளாஷ் பயன் படுத்தினீங்க.In-Built பிளாஷ் உள்ளரங்கில் அந்த அளவுக்கு வெளிச்சம் தராது.
    பிளாஷ் பயன் படுத்தும் போது முக்கால்வாசி கேமரா ஷட்டர் வேகத்தை 1/60 ஆக்கிடும். அந்த exposure பத்தாது.
    அந்த வேகத்துக்கு நெறைய ஒளி தேவை.
    மேலும் காமிராவில் பிளாஷ் compensation பயன் படுத்தி அதிக ஒளி வருமாறு செய்யலாம்.
    முதலில் 55mm வச்சு முயற்சி பண்ணி பாருங்க அதுதான் எளிது.

    ReplyDelete
  115. Dear friend karuvayan, thanks i got 18-55 lens along with the camera.. thanks let me grap all the lessons from PTI. looks like lens would be very expensive ! let me start save money 18- 200
    thanks

    ReplyDelete
  116. @அனானி..பாஸ்கர்??

    ரொம்ப அருமையான லென்ஸ் வாங்கிட்டீங்க.. இனிமே படம் காட்டுங்க... முடிந்த அளவு க்ளோஸ் ஆக போய் படம் எடுக்கவும்,அப்பதான் படம் நன்றாக வரும்..

    -கருவாயன்

    ReplyDelete
  117. நன்றி அன்பு சகதர்களுக்கு வணக்கம் நான் நோக்கியா d 3000 வாங்கலாம் என்று இருக்கின்றன் இதன் நிறை குறைகளை ஸொல்லூந்கல் க்நோக்கர் தலத்தில் மிஹ்யும் மோசம் என்று இருக்கின்றது

    ReplyDelete
  118. நன்றி அன்பு சகதர்களுக்கு வணக்கம் நான் நோக்கியா d 3000 வாங்கலாம் என்று இருக்கின்றன் இதன் நிறை குறைகளை ஸொல்லூந்கல் க்நோக்கர் தலத்தில் மிஹ்யும் மோசம் என்று இருக்கின்றது

    ReplyDelete
  119. Nazer
    Nokia D3000 or NIKON D3000 ?

    ReplyDelete
  120. நண்பர்களே,

    நீங்கள் எந்த electronic உபகரணம் வாங்க நினைத்தாலும் www.alatest.com என்ற தளத்திலும் பாருங்கள்.

    You will get good idea. This site claims as independent body to review all the items.

    ReplyDelete
  121. Hallo brothers i like to buy one slr camera 20to 25 thousand please tell me good one thank you all brothers

    ReplyDelete
  122. @anonymous

    1.நீங்க எங்க வாங்கலாம்னு இருக்கீங்க? சென்னையிலா அல்லது வெளி நாட்டிலா?

    2. நீங்கள் சொன்ன பட்ஜெட், கேமரா bodyக்கு மட்டுமா அல்லது லென்ஸுடன் சேர்த்தா?

    3. பில்லுடனா,க்ரே மார்க்கெட்டில்லா?

    இந்த மூன்று கேள்விகளுக்கும் தகவல் அளித்தால் சரியான பதில் சொல்ல உதவியாக இருக்கும்..

    விரைவில் பதிலை எதிர் பார்க்கின்றேன்

    நன்றி
    கருவாயன்..

    ReplyDelete
  123. Dear friend karuvayan,
    thanks pl find my flickr link..
    http://www.flickr.com/photos/45373516@N08/
    pl give your valueable feed back many thanks
    Baskar9884018346

    ReplyDelete
  124. thank you mr karuvayan i like to buy chennai with lens with bill another one question nikon d3000 iwas check some site that site giving diffrent rating exasamble ala test 100% dpreiw 72% another one site telling worst witch one can i belive thank you once again mr karuvayan

    ReplyDelete
  125. i like to buy chennai with lens with bill another one question iwas check about nikon d3000 some site that site giving diffrent rate examble ala test 100% dpreviw 72% another one telling worst witch one can i belive

    ReplyDelete
  126. @anonymous,tamilan,nazer...(மூன்று பேரும் ஒருவரே என்று நினைக்கின்றேன்)...

    நீங்கள் DSLR உலகிற்கு புதிது என்றால் nikon d3000 கேமரா ஒரு நல்ல கேமரா தான்,பயப்படாமல் வாங்கலாம்..

    ஒரு சில reviews மோசம் என்று கூறுவதற்க்கு பல காரணிகள் உள்ளன.. மோசம் என்று சொல்வதற்கு காரணம்,இது வரை வந்த நிக்கான் கேமராக்களில் இந்த d3000 கேமராவில் புதிதாக ஒன்றும் ஸ்பெசல் இல்லை என்பதால் அப்படி சொல்கின்றனர்.. அதாவது பழைய மாடல்களுக்கும் nikon d3000 மாடலுக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை..ஆனால் விலை மட்டும் அதிகம்,இதானால் பழைய மாடலே சிறந்தது என்று சொல்கின்றனர்..

    பழைய மாடல்(d40) கிடைத்தால் வாங்கி பணத்தை கொஞ்சம் மிச்சம் பன்னலாம்,.. ஆனால் கிடைக்கவில்லை என்றால்?? வேறு வழியில்லை நிக்கான் d3000 தான் வழி..

    with billஉடன் 25000 ரூபாய்க்குள் கிடைக்க வாய்ப்பில்லை.. க்ரே மார்க்கெட் தான் வழி.. இதிலும் நீங்கள் பயப்படாமல் வாங்கலாம்..

    பில்லுடன் வேண்டுமென்றால் சென்னையில் இந்த இடத்தில் ட்ரை பன்னவும்..

    BNS Distribution pvt.ltd,
    31,old no.16,vijaya raghava road,1st floor,
    t.nagar,
    chennai - 17.
    ph:044-28150465


    பில் இல்லாமல் பரவாயில்லை என்றால் இந்த இடங்களில் ட்ரை பன்னவும்,

    1.millenium cameras , fazal complex,wallajah road,
    contact no:98401-765999.

    2.foto trade,fazal complex.. contact no: 044-28547113

    3.millenium photos , 146-a,burma bazar ,chennai .. contact no:9840071765

    4.dominic burma bazar,contact no:044-25341375

    -கருவாயன்

    ReplyDelete
  127. thank you for advice mr karuvayan but now i decided to buy canon 1000d can you recoment this product thank you

    ReplyDelete
  128. @tamilan..

    கண்டிப்பாக canon 1000d வாங்கலாம்.. மிகவும் நல்ல கேமரா.விலையும் நியாயமானதே..

    நிக்கான் d3000ஐ விட ஒரு சில வகையில் கொஞ்சம் நல்ல கேமரா தான். கொஞ்சம் ப்ளாஸ்டிக் பாடி மாதிரி இருக்கும்.. அது உங்களுக்கு பரவாயில்லை என்றால் தைரியமாக canon 1000d ஐ வாங்கலாம்..

    சென்னை spencer plaza வில் உள்ள இந்த இடத்தில் பில் மற்றும் 2 வருட வாரண்ட்டியுடன் ரூ.26000க்கு கிடைக்கின்றது..
    http://www.shetalacamera.com/productdetails.asp?prodid=345

    ஆன்லைனில் வாங்க முடிந்தால் இந்த இடத்தில் ட்ரை பன்னவும்..விலை 24500
    http://www.jjmehta.com/webshop/index.html?target=dept_66.html&lang=en-us

    லென்ஸ் வாங்கும் போது canon லென்ஸையே வாங்கவும்.. விலை குறைவு என்பதற்காக வேறு ப்ராண்ட் லென்ஸ் வேண்டாம்

    -கருவாயன்

    ReplyDelete
  129. thank you mr karuvayan.i bought 1000d canon next i like to buy all in one eibson photo printer witch one can i buy.can you give me good one model no. and shop address in chennai

    ReplyDelete
  130. hi Can i use manul tele lense( 15 - 200) for my Nikon D40 (since i can get at lesser cost and learn manul focusing)

    pl confirm
    many thanks
    Baskar
    9884018346

    ReplyDelete
  131. @baskar..

    15-200mm என்ற லென்ஸே கிடையாது.. எந்த லென்ஸ் என்பதை சரியாக தெளிவுபடுத்தவும்..

    எனக்கு தெரிந்து 18-200mm என்று தான் உள்ளது.. அதுவும் nikon d40ல் ஆட்டோ ஃபோகஸ் ஆகும்..

    எந்த லென்ஸாக இருந்தாலும் ஆட்டோ ஃபோகஸ் என்பது இக்காலத்தில் மிகவும் நல்லது.. மேன்யுவல் ஃபோகஸ் லென்ஸ் வேண்டாம்.. அது ரொம்பவும் கஷ்டம்..

    -கருவாயன்.

    ReplyDelete
  132. '''thank you mr karuvayan.i bought 1000d canon next i like to buy all in one eibson photo printer witch one can i buy.can you give me good one model no. and shop address in chennai''''

    @anonymous...

    congrats for buying canon 1000d..excellent camera..still i havn`t used any photo printer,so i cant help you regarding printer.. will search and tell you the best model..

    -karuvayan

    ReplyDelete
  133. //next i like to buy all in one eibson photo printer witch one can i buy//

    Printing photos in a Photographic print shop is more economical and the quality will be good as they have the latest gadget. Don't invest in photo printer immediately.
    Also you have to consider about calibration of printer with your monitor.(The colors you see in the monitor might not be same as what you print). This will be taken care in Print shops.

    ReplyDelete
  134. Thanks Dear Karuvayan,

    (it was 70-200 or 75-240 i guess not to sure about the correct model)

    is it adviceable to use manul lense in nikon d40

    pl confirm is the manul lense(any of the range up to 300mm) will affect the my camera.

    will it affect the body/sensor/camera.

    pl advice / confirm.

    many thanks. Baskar9884018346

    ReplyDelete
  135. @பாஸ்கர்..

    manual லென்ஸ் பயன்படுத்துவதால் nikon d40 க்கு எந்த பாதிப்பும் வராது.. தைரியமாக பயன்படுத்தலாம்..

    ஆனால் manual focus என்பது zoom lens ஐ பொறுத்தவரையில் பயன்படுத்துவது கடினமானது.. சிறிய தவறு செய்தாலும் out of focus ஆகி படம் மங்கலாகிவிடும்..

    manual focus என்பது macro போட்டோ சம்பந்தமான விசயங்களுக்கு தான் பயன் அதிகம்..

    அதனால் எந்த லென்ஸ் வாங்கினாலும் உங்கள் கேமராவில் auto focus ஆககூடிய லென்ஸையே வாங்கவும்..

    ஓ.சி.யில் லென்ஸ் கிடைத்தால் வேண்டுமானால் பயன்படுத்தவும்.. காசு போட்டு manual focus லென்ஸ் வாங்கவேண்டாம்..

    -கருவாயன்

    ReplyDelete
  136. Dear friend கருவாயன்,
    ரொம்ப நன்றிங்க !!
    பாஸ்கர்

    ReplyDelete
  137. நண்பா,...
    நான் canon 500D பயன்படுத்துகின்றேன். தற்பொழுதுதான் கற்றுக்கொண்டுள்ளேன். ஒரு நிகழ்வு நடக்கும் பொழுது எடுக்கும் போட்டாவில் யாராவது ஒருவர் அசந்துள்ளதாக இருக்கின்றது. இதை எப்படி தவிற்பது. எப்படி எந்த மோடில் எடுத்தால் படம் சிறப்பாக இருக்கும்.?

    ReplyDelete
  138. @ஞானசேகரன்...அசந்துள்ளதாக என்றால்?? கண்கள் மூடியபடி படம் விழுந்துள்ளதா??

    அப்படியென்றால் அது flash பயன்படுத்தியிருந்தால் வந்திருக்கும் என்று நினைக்கின்றேன்..

    flash பயன்படுத்தும் போது ஷட்டர் வேகமாக இயங்கியிருக்கலாம்.. இந்த மாதிரி நேரங்களில் ஒருவர் கண் மூடி திறப்பதற்குள் கேமரா படம் பிடித்திருக்கும்..

    இந்த மாதிரி நேரங்களில் ஷட்டர் ஸ்பீடு modeல் வைத்து shutter speedன் அளவை குறைத்து ட்ரை பன்னி பார்க்கவும்..

    -கருவாயன்

    ReplyDelete
  139. i like to buy external flash for my canon 1000d witch one best thank you

    ReplyDelete
  140. If you want the best, thn
    580 EX II.
    But for majority of general purpose 430EX should suffice.

    YOu can choose 550EX or 420EX. These are old version of 580 and 430.

    ReplyDelete
  141. மிக்க நன்றிங்க கருவாயன்.. முயற்சித்துபார்க்கின்றேன்..

    ReplyDelete
  142. focuslight witch one best for studieo howmany watts need thank you my dears

    ReplyDelete
  143. அனானி... உங்கள் கேள்வி தெளிவாக புரியவில்லை... சரியாக உங்கள் தேவைகளை தெரியப்படுத்தவும்..

    நன்றி..

    ReplyDelete
  144. thank you mr karuvayan(if someonetake photo in studieo cameraman useing two highpower lamp i thing that name is focuslight)i ask about that focuslight type or model and how many watts thankyou once again mr karuvayan

    ReplyDelete
  145. Dear Sir
    My Nikon Sb800 flash gives me more problem. Please suggest the best service centre in Chennai for Nikon Products.

    Muralidharan

    ReplyDelete
  146. shutterஅ பாதி அழுத்தி Focus செய்யும் போது என்னால் வேண்டிய பொருளை\இடத்தை ஒழுங்காக Focus செய்யமுடியவில்லை. zoom ஆகி zoom out ஆகி லென்ஸ் முன்னாடியும் பின்னாடியும் போய் என்னால் ஒழுங்காகவே Focus செய்யமுடியாமல் போகிறது. போன மாத போட்டியிலும் இதனால் நான் நினைத்த மாதிரி படம் எடுக்க முடியவில்லை. இப்ப தண்ணியையும் (நீர் சொட்டு) எடுக்க முடியவில்லை. Macro படம் எடுக்கும் போது தான் இது நடக்கிறது, எடுப்பதும் இருட்டடித்து காணப்படுகிறது. long shot ok. தவறு எங்க என்று புரியவில்லை. நான் Canon S3 IS பயன்படுத்துகிறேன்.

    ReplyDelete
  147. குறும்பன் உங்க காமிராவோட "Minimum Focusing distance" என்னன்னு பாருங்க. அந்த தொலைவுக்கு மேலே கிட்ட கொண்டுபோகாதிங்க.
    மேலும் இந்த Canon S3 IS la "Super Macro Mode" இருக்கு அதை முயற்சி செய்து பார்தீங்களா ? அந்த மோட்ல subject கிட்டத்துல படம் எடுக்கலாம் ?
    ஒழுங்கா போகஸ் ஆகாததற்கு இன்னொரு காரணம் Low Light மற்றும் "Not much contrast in the picture" . நல்ல வெளிச்சத்துல ஒரு முறை முயற்சி செய்து பாருங்க.

    சொட்டுகின்ற நீர் துளிகளை படம் எடுக்க Manual Mode தான் எளிது. Pre-focus செஞ்சு எடுக்க முயற்சி பண்ணி பாருங்க.

    ReplyDelete
  148. Minimum focusing distance (in Super Macro mode) is 0 cm/0 inches, which ought to be close enough to cover just about any imaginable eventuality. macro has a minimum focusing distance of about 10cm (from memory). தேடியதில் இந்த விவரம் கிடைத்தது. நான் நீர் துளியை படம் பிடிக்க manual mode ஐ தான் முயன்றேன். shutter speed 1/320 வைத்து முயன்றேன். shutter ஐ பாதி அழுத்தி focus பண்ணும் போது zoom-in, zoom-out ஆகி வெளிச்சத்தை போக்கி இருட்டடித்து நிற்கிறது. zoom-in, zoom-out வெளிச்சத்தையும் காண்பித்து கடைசியாக இருட்டுக்கு வந்து நிற்கிறது. நான் பல இடங்களில் இதை முயன்று விட்டேன் எல்லா இடங்களிலும் இது தான் நடக்கிறது. focus ஒழுங்காக இருந்தால் பச்சை நிறத்தில் கட்டம் வரும் focus சரிஇல்லையென்றால் பச்சை நிறத்தில் வராது. அருகில் focus செய்யும் போது பச்சை நிறத்தில் அல்லாமல் மஞ்சள் நிறத்திலேயே கட்டம் நிற்கிறது. நமது பொருள் ஒழுங்காக focus ஆகவில்லை என்பதை இது சொல்கிறது.

    ReplyDelete
  149. gimp 2 removal . i was follow your advice last time coming like this message what can ido please reply me. Error while executing script-fu-smart-remove:

    Error: eval: unbound variable: plug-in-resynthesizer

    ReplyDelete
  150. @குறும்பன்..

    focus பிரச்சினை என்றால் நாதஸ் சொல்ற மாதிரி இரண்டே இரண்டு காரணங்கள் தான்..

    1. minimum focusing distance கீழ் ஃபோகஸ் செய்தால்..
    2.போதிய வெளிச்சம் இல்லாமல் இருத்தல்..

    இவ்விரண்டை தவிர வேறு காரணம் இருக்க வாய்ப்பில்லை...

    ஒன்றை முயற்சி செய்து பார்க்கவும்.. ஒரு சில கேமராக்களில் மேக்ரோ mode என்பது wide angleல் மட்டுமே ஃபோகஸ் ஆகும்.. உங்கள் கேமராவில் உள்ள அதிகபட்ச wide angle ல்(36mm) முயற்சி செய்து பார்க்கவும்..

    மேலும் programme mode ல் முயற்சிக்கவும்..அதுவுமில்லாமல் close up ஷாட் ஐ பொறுத்த வரையில் நீங்கள் பயன்படுத்திய shutter speed ஜாஸ்தியாக தெரிகின்றது..அதையும் 1/60secs வரை குறைத்து பார்க்கவும்..

    -கருவாயன்

    ReplyDelete
  151. Anon,
    //rror: eval: unbound variable: plug-in-resynthesizer

    Did you do this correctly ?

    இந்த zip கோப்பில் இருக்கும் resynthesizer.exe இங்கே
    c:\Program Files\GIMP-2.0\lib\gimp\2.0\plug-ins நகர்த்திக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  152. Dear Sir,

    Good morning

    Which Lens will be suitable for D90 for my Professional busines. I am wedding photographer. Either 18-135 or 18- 105.

    Reply required urgently.

    Muralidharan

    ReplyDelete
  153. முரளி,

    திருமண புகைப்படத்திற்கு ஏற்ற தனியான லென்ஸ் என்று எதுவும் இல்லை. அது நீங்கள் எடுக்கும் விதத்தைப் பொருத்தது. பொதுவாக மேலே சொல்லி இருக்கும் இரண்டுமே நல்ல லென்ஸுகள் தான். இரண்டுமே திருமண புகைப்படத்திற்கு ரொம்பவும் கை கொடுக்கும்.

    முடிந்தால் 50mm 1.8 f பிரைம் லென்ஸ் கைவசம் வைத்திருங்கள் மிகவும் உதவியாக இருக்கும் ( உபயோகத்தால் மட்டுமே ;) )

    ReplyDelete
  154. மிக்க நன்றி

    முரளி

    ReplyDelete
  155. Dear Sir

    My D70s camera is in fine condition. I am not interested to sell. Shall I use 18-105VR lens for D70 instead of 18-70

    Murali

    ReplyDelete
  156. @முரளி...என்னைக்கேட்டால் 18-70mm ஏற்கனவே இருந்தால் 18-105mm தேவையில்லை.. ஒரு/இரு அடி முன்னே சென்றால் போதும் 105mmல் எடுக்கவேண்டியதை எடுத்து விடலாம்..அதுவுமில்லாமல் 18-70mm கொஞ்சம் fast aperture and fast AF..

    18-70mm இல்லை என்றால் மட்டுமே, புது லென்ஸ்,extra focal length,VR போன்றவற்றிற்காக 18-105mm வாங்கலாம்..

    -கருவாயன்..

    ReplyDelete
  157. மிக்க நன்றி

    முரளி

    ReplyDelete
  158. PIT புகைப்பட குழுவினருக்கு முதற்கண் வணக்கம். நான் உங்களது இணையதளத்தின் தீவிர வாசகன். பிரான்ஸ் நாட்டில் "System Eng" ஆக பணிபுரிகிறேன். எனினும் புகைப்பட கலையில் எனக்கு மிகவும் ஈடுபாடு உண்டு. எனவே உங்களது "PIT Picassa" புகைப்பட ஆல்பத்தை ஒவ்வொரு நாளும் பார்வையிடுவேன்.

    நானும் புகைப்படகலை கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் வேலையில் 3 மாதம் விடுப்பு கேட்டுக்கொண்டு இந்தியா வரலாம் என இருக்கின்றேன். எனது சொந்த ஓர் பாண்டிச்சேரி. எனவே போட்டோ கலை பயில எனக்கு சென்னையில் ஒரு நல்ல "institute" இருக்குமா(diploma courses in photography) என தெரிவித்தால் அதில் சேர்ந்து கற்றுக்கொள்ள ஏதுவாக இருக்கும். அப்படியே உங்களது தளத்தின் டிப்ஸ்களை கொண்டும் பழகிவிடலாம் என இருக்கின்றேன். ஏற்கனவே போட்டோ சுமாராக எடுப்பேன். 3 மாத கால‌ம் போதுமா?

    என்னிடம் "DSLR" கேமராக்கள் இல்லை. பிலிம் ரோல் மாடல்களில் nikon F50,Olympus OM101,Minolta 303i ஆகிய கேமராக்களை பயன்படுத்தியிருக்கிறேன்.

    இங்கு என்னுடைய வெள்ளைகார நண்பனிடம் கேட்கையில் ஆரம்ப நிலைக்கு "Nikon D3000" பயன்படுத்து என கூறுகிறான்.பின்னர் "Olympus" DSLR
    கேமராக்களை பயன்படுத்தலாம் என அறிவுறுத்துகிறான். மேலும் பிரான்ஸ் நாட்டில் Nikon,Canon ஐ காட்டிலும் professionals "Olympus" ஐ தான் சிபாரிசு செய்கின்றார்கள். இது ஏன் என கூறமுடியுமா?. ஆனால் இன் விலையை பார்த்தால் தலை சுற்றுகிறது.

    எனவே எந்த கேமராவை தேர்வு செய்யலாம் எப்படி புகைபட கலையை பயிலுவது என‌ தங்களுடைய மேலான ஆலோசனைக்காக காத்திருக்கின்றேன். நன்றி வணக்கம்.

    ReplyDelete
  159. @நித்தி க்ளிக்ஸ்..

    உங்களது புகைப்பட ஆர்வத்திற்க்கும்,PITன் தீவிர வாசகனாக இருப்பதற்க்கும் மிக்க மகிழ்ச்சி..வாழ்த்துக்கள்..

    எனக்கு தெரிந்த வரையில் சென்னையில் நல்ல photography courses எடுக்ககூடிய instituteகள் இருப்பதாக தெரியவில்லை..

    ஊட்டியில் வேண்டுமானால் light and life acadamy என்ற புகழ்பெற்ற institute ஒன்று உள்ளது.ஆனால் அங்கே ஒரு வருட course தான் எடுப்பதாக தெரிகின்றது..feesம் அதிகம் என்று நினைக்கின்றேன் ..அதற்கான விபரங்களை இந்த லிங்க்கில் பார்த்து தெரிந்து கொள்ளவும் http://www.llacademy.org/

    ஆனால் இதற்காக மட்டும் நீங்கள் leave போட்டு படிக்க எல்லாம் வரவேண்டிய தேவையில்லை என்று நினைக்கின்றேன்..

    அந்த காலத்தில் தான் roll கேமராவை வைத்து கற்றுக்கொள்ள சிரமம்,institute எல்லாம் தேவை..
    இப்பொழுதெல்லாம் டிஜிட்டல் கேமரா,இண்டெர்னெட் வசதியுடன் சிறந்த வகையில் எளிதாக கற்று கொள்ளலாமே..

    என்னை பொறுத்த வரையில் தீவிர ஆர்வமும்,அனுபவமும்,தொடர்ந்து(regular) படம் எடுப்பதுமே சிறந்த institute தான்..

    அதையும் மீறி ஒரு சில விசயங்களுக்காக(advertising..போன்ற)மட்டுமே இந்த மாதிரி diplamo courseகள் தேவை..

    ReplyDelete
  160. @நித்தி க்ளிக்ஸ்..

    olympus கேமரா தான் சிறந்தது என்று கூறுவதெல்லாம்,காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு கதை தான்...ஒரு காலத்தில் வேண்டுமானால் அப்படி இருந்திருக்கலாம்,இப்பெல்லாம் அப்படி கண்டிப்பாக கிடையாது.. இன்றைய காலத்தில் olympus கேமராக்களை விட பல நல்ல கேமராக்கள் வந்துவிட்டன..

    நான் பயன்படுத்திய வரையில் nikon கேமரா,மற்ற brandகளை விட ஒரு நல்ல user friendly ,பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும்..

    நீங்கள் ஆரம்ப நிலையில் இருப்பதால் உங்களுக்கு பேசிக் nikon DSLR கேமராக்களே போதும் என்று நினைக்கின்றேன்..

    ஆனால் இப்பொழுது உள்ள nikon d3000 என்பது கொஞ்சம் சுமாரான மாடல் தான்.. உங்களுக்கு budget பிரச்சினை இல்லையென்றால் nikon d5000 கேமரா வாங்கலாம்.. இந்த கேமரா மிகவும் நன்றாக இருப்பதாக experts reviewகள் கூறுகின்றன.. நம்பி வாங்கலாம்..கைக்கு அடக்கமாக சிறியதாகவும் இருக்கும்..

    -கருவாயன்

    ReplyDelete
  161. நன்றி சார் பயனுள்ள ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  162. என்னுடைய கேமரா canon powershot A580 இதில் உள்ள Exposure Control Method - Program AE; AE Lock உபயோகிப்பது எப்படி வழிகாட்டுங்கள் நன்பர்களே

    நன்றி

    - ரமேஷ்

    ReplyDelete
  163. PIT குழுமத்திற்கு வணக்கம், சார் தங்களின் ஆலோசனைபடி Nikon D5000 வாங்கலாம் என கடைக்கு சென்றேன். ஆனால் விலை கொஞ்சம் கூடவே இருந்தது. ஆரம்பநிலை தானே என panasonic Lumix FZ38 கேமராவை வாங்கியிருக்கிறேன். தங்களின் பதிவில் தாங்கள் பதிவில் கூறிபடி shutter,aperture,iso போன்றவைகளை படித்துக்கொண்டிருக்கிறேன். நான் வாங்கியுள்ள இந்த panasonic கேமரா நல்ல கேமராவா? HD யில் வீடியோவின் தரம் நன்றாக இருக்கின்றது.

    புகைப்படம் இன்னும் தெளிவாக எடுக்கவில்லை.....

    PIT Group kku நன்றி சார்!!!

    ReplyDelete
  164. @நித்தி க்ளிக்ஸ்.. panasonic fz-38 கேமரா ஒரு நல்ல கேமரா தான்...வாழ்த்துக்கள்...

    27-486mm வரை என்பது நல்ல சூம் ரேஞ்ச்.. இதை வைத்து எல்லாவித போட்டோவும் எடுக்கலாம்..

    இப்பொழுதுள்ள prosumer வகைகளில் இந்த மாடல் மிக சிறந்ததே..

    நல்ல optics,RAW வில் படம் எடுக்கும் வசதி,HD வீடியோ,ஸ்டீரியோ ரெக்கார்டிங்,வெயிட் குறைவு,நல்ல மற்றும் ஸ்பீடு ஆட்டோஃபோகஸ், effective OIS.. இவை எல்லாம் இந்த கேமராவின் நன்மைகள்...

    இவ்வளவு இருந்தாலும் picture quality என்று பார்க்கும் போது கண்டிப்பாக nikon d5000 ஐ நெறுங்க முடியாது(ஒரு சில இடங்களை தவிர)..

    prosumer கேமராக்களை பொறுத்துவரையில் முடிந்த அளவு ISO 400 க்குள் எடுக்கவும்..இதற்கு மேல் போனால் கண்டிப்பாக noise தெரியும்..

    இந்த கேமராவில் முடிந்த அளவு raw mode ல் வைத்தே படம் எடுக்கவும்,அப்பொழுது தான் pp பன்னும் போது சிரமம் இல்லாமல் ,கொஞ்சம் குவாலிட்டி குறையாமல் clour noise ஐ remove செய்யலாம்.. jpeg ல் noise reduction அதிகம் செய்வதால் கொஞ்சம் soft ஆக இருக்கலாம்..

    ஒரு சிறு வருத்தம்..தாங்கள் கேமரா வாங்கியது முக்கியமாக போட்டோ எடுக்கத்தான்,கண்டிப்பாக வீடியோ எடுப்பதற்கு முக்கியதுவம் இல்லை.. வீடியோ தான் முக்கியம் என்றால் அதற்கு நல்ல வீடியோ கேமராக்கள் பல உள்ளன.. எனவே இந்த கேமராவில் தயவு செய்து போட்டோ எடுப்பதை நன்றாக செயல்படுத்தவும்..

    -கருவாயன்

    ReplyDelete
  165. PIT குழுமத்திற்கு வணக்கம் சார்...FZ-38 கேமரா பற்றிய‌ விமர்சனத்திற்கு மிக்க நன்றி சார்....எங்கள் வீட்டில் இந்த கேமராவை நான் மட்டும் பயன்படுத்துவதில்லை. அனைவரும் பயன்படுத்தவேண்டும் என்பதால் வீட்டில் "prosumer" வகையை விரும்புகிறார்கள். இதில் கொஞ்சம் பழகிவிட்டு இன்னும் ஓரிரு வருடத்திற்குள் தாங்கள் குறிப்பிட்டது போல "Nikon Dslr" இல் நல்ல ரேஞ்சாக வாங்கிவிடலாம் என இருக்கின்றேன். கண்டிப்பாக "ISO 400" குள்ளாகவே வைத்து எடுக்க பழகிக்கொள்கிறேன் சார். Auto Intelligent இல் தான் தற்சமயம் எடுத்துக்கொண்டிருக்கிறேன். வீடியோவிற்கு நான் Canon MD 101 ஐ பயன்படுத்துகிறேன் சார்.. ஆத்திர அவசரத்திற்கு HD இல் எடுக்க மட்டுமே இதனை பயன்படுத்துவேன். நான் விமான பய‌ணம் அடிக்கடி மேற்கொள்வதால் "Take-off" மற்றும் "landing"களை HD யில் தரமானதாக எடுக்க இது உதவும் என நம்புகிறேன்.

    நன்றி சார்...

    ReplyDelete
  166. நன்பர் கருவயன் தங்களின் கவனத்திற்க்கு

    கடந்த ஒரு வருடமாக என் புகைப்ட ஆர்வத்தை மெருகேற்றிய PiT க்கு நன்றி. இதுவரை Canon Powershot உபயோகித்த நான் புதிய DSLR வாங்க இருக்கிறேன் கேனான் டி3000 மற்றும் கேனான் டி5000 இரண்டில் எதை வாங்கலாம் அதன் சிறப்புகள் என்ன நான் தங்களின் PiT மூலமாக சில விஷயங்கள் அறிவேன் ஆனாலும் எனக்கு DSLR உலகம் புதிது நான் என்னை மேலும் வளர்த்துகொள்ள தங்களின் ஆலோசனை தேவை

    _ ரமேஷ்

    ReplyDelete
  167. @ரமேஷ்.. அது கேனான் டி3000,டி5000 இல்லை.. நிக்கான்... உங்களுக்கு பட்ஜெட் பிரச்சினை இல்லையென்றால் டி5000 (நிக்கான்) வாங்கவும்.. இப்போதைக்கு இந்த கேமரா நல்ல கேமராவாகும்..

    மொதல்ல கேமரா வாங்குங்க,அப்புறம் சந்தேகங்கள் வரும்,அதற்கப்புறம் படம் நிறைய எடுங்கள்..பி்றகு கேளுங்கள்... தானாக வளர்வீர்கள்..

    -கருவாயன்

    ReplyDelete
  168. This comment has been removed by the author.

    ReplyDelete
  169. நன்றி கருவாயன்

    பட்ஜெட் சிறிது இடிப்பதால் நிக்கான் டி5000 விரைவில் வாங்கிவிடுவேன் தங்களின் ஆலோசனைக்கு மிகவும் நன்றி

    - ரமேஷ்

    ReplyDelete
  170. நன்றி கருவாயன்

    பட்ஜெட் சிறிது இடிப்பதால் விரைவில் வாங்கிவிடுவேன் தங்களின் ஆலோசனைக்கு மிகவும் நன்றி

    நிக்கான் டி3000 (ரூபாய் 20000 with kit lens: 18-55)(6 month old - second hand)
    நிக்கான் டி5000 (ரூபாய் 27000 with kit lens: 18-55) இது சரியான விலையா?

    - ரமேஷ்

    ReplyDelete
  171. @ரமேஷ் .. நிக்கான் டி5000 kit lens உடன் rs.27000 என்றால் மிகவும் நல்ல விலை என்று தோன்றுகின்றது..

    எதற்கும் மீண்டும் நன்றாக விசாரிக்கவும்..body மட்டும் அந்த விலையா அல்லது lens உடன் சேர்த்தா என்று..

    எங்கே இந்த விலைக்கு தருகிறார்கள் என்பதை முடிந்தால் தெரிவிக்கவும்..

    சென்னையிலா அல்லது வெளிநாட்டிலா?

    -கருவாயன்

    ReplyDelete
  172. @கருவாயன்

    நிக்கான் டி5000 kit lens உடன் rs.27000 என்றால் மிகவும் நல்ல விலை என்று தோன்றுகின்றது..

    இங்கு சென்னையில் போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் நன்பர் அவர் வாங்கும் இடத்தில் இந்த விலை சொல்கிறார்கள்.
    நான் நன்றாக விசாரித்துவிட்டு இருதினங்களில் தெரியபடுத்துகிறேன்

    நன்றி
    -ரமேஷ்

    ReplyDelete
  173. PIT குழுமத்திற்கு வணக்கம்...சார் என்னுடைய கேமராவில் (Panasonic FZ-38) நான் Auto intelligence இல் வைத்து எடுத்த படம் இது...நன்றாக இருக்கிறதா? குறைகள் இருப்பின் தயவுசெய்து விமர்சனம் செய்யுங்கள் திருத்திக்கொள்கிறேன். இதே படத்தை மேனுவல் இல் எடுக்க என்ன என்ன செட்டிங்குகள் செய்ய வேண்டும் (ISO,Shutter,Aperture etc) என்பதை தங்கள் அறிவுரையாக அறிந்துகொள்ளலாமா?

    http://farm5.static.flickr.com/4055/4623448753_0255270e9e_b.jpg

    ReplyDelete
  174. நித்தி கிளிக்ஸ், அருமையான படம். சான்ஸே இல்லை.
    ஒரே குறை 'Nithi Clicks' என்பதை இன்னும் ஸ்டைலிஷ்ஷாய் மாற்றி ஒரு water park மாதிரி கீழே சேர்க்கலாம்.
    இதை manualல் எடுக்க, panasonic auto intelligenceல் என்ன உபயோகித்ததோ, அதை exifல் பார்த்து, அதையே உபயோகிக்கலாம் ;)

    ReplyDelete
  175. Flash உபயோகிப்பது எப்படி என்று பதிவிடுங்கள் சார்.....

    ReplyDelete
  176. @கருவாயன்

    நிக்கான் டி5000 kit lens உடன் rs.27000 என்றால் மிகவும் நல்ல விலை என்று தோன்றுகின்றது..

    இங்கு சென்னையில் போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் நன்பர் அவர் வாங்கும் இடத்தில் இந்த விலை சொல்கிறார்கள்.
    (SUN PHOTO-Mobile No : 98414 59949=Rs.27500)

    நன்றி
    -ரமேஷ்

    ReplyDelete
  177. தகவலுக்கு நன்றி ரமேஷ்..

    ReplyDelete
  178. PIT குழுமத்திற்கு வணக்கம்...சார் என்னிடம் நான் முன்பு பயன்படுத்திய பிலிம் ரோல் கேமராவின் 2 லென்ஸ்கள் உள்ளது. அது DSLR கேமராவிற்கு பொருந்துமா?

    Camera Details:
    Nikon F65
    Autofocus 28-70
    Autofocus 70-300

    இதேபோலவே என்னிடம் பென்டாக்ஸ் Z-11இன் autofocus lens உம் உள்ளது இதுவும் பென்டாக்ஸ் DSLR camera க்கு பொருந்துமா?

    Autofocus 35-70
    Autofocus 70-300

    Thanks in advance...

    ReplyDelete
  179. மன்னிக்கவும் pentax mz-30

    ReplyDelete
  180. Hi there,

    I use Opteka 500 – 1000 mm lens for my Canon EOS 450D, but the quality is poor as per price. Do you have any technical suggestion for improving?

    If I want to take a close-up shot of a 6 inch object from 200 feet, what will ideal lens to Canon EOS 450D?

    Regards,
    Anton

    ReplyDelete
  181. @anton..

    opteka 500-1000mm லென்ஸ் ரொம்பவும் பெரிய telephoto zoom..

    அதுவுமில்லாமல் F/8 என்பதால் கண்டிப்பாக வெளிச்சம் நிறைய வேண்டும், இல்லையென்றால் கண்டிப்பாக blur இல்லாமல் தெளிவாக எடுக்க முடியாது..

    கண்டிப்பாக tripod இல்லாமல் இந்த லென்ஸை வைத்து படம் எடுப்பது மிகவும் சிரமம்..இதனால் தான் படம் சுமாராக வந்திருக்கும் என்று நினைக்கின்றேன்..

    close up shot என்றால் கண்டிப்பாக macro lens தான் சிறந்தது..

    இதற்கு sigma 150mm f2.8 அல்லது sigma 180mm f3.5 லென்ஸ் மிகவும் சிறந்தது ஆகும்..(இந்த focal length போதும் என்றால்).

    மேலே சொன்ன இரண்டு லென்ஸும் மிகவும் அருமையான ஷார்ப் லென்ஸ் ஆகும்.. விலை கிட்டதட்ட 40000 ரூபாய் வரும் என்று நினைக்கின்றேன்..

    பட்ஜெட் என்றால் tamron 90mm f2.8(rs.20,000) அல்லது canon 100mm f2.8(rs.25,000)விலை சரியாக ஞாபகம் இல்லை..எதற்க்கும் netல் search செய்து பார்க்கவும்

    -கருவாயன்

    ReplyDelete
  182. @நித்தி க்ளிக்ஸ்..

    நீங்கள் வைத்திருக்கும்
    1.28-70mm
    2.70-300mm
    இரண்டு nikon லென்ஸும் DSLR ல் பயன்படுத்தலாம்..ஆனால் basic DSLR வகைகளான(d40,d40x,d3000,d5000,d60)கேமராக்களில் இந்த லென்ஸ் பயன்படுத்தும் போது AUTOFOCUS ஆகாது..manual focus பயன்படுத்தி தான் படம் எடுக்க முடியும்..

    ஆனால் D50,D90,D300,போன்ற கொஞ்சம் advanced DSLR கேமராக்களில் perfect ஆக படம் எடுக்கலாம்..auto focusம் சரியாக work ஆகும்..ஒரு பிரச்சனையும் இருக்காது..

    ஆனால் DSLR ல் இந்த லென்ஸை பயன்படுத்தும் போது focal length என்பது மாறிவிடும்..

    அதாவது,28-70mm என்பது 42-105mm என்றும் , 70-300mm என்பது 105-450mm என்றும் இந்த அளவு focal lengthல் எடுக்க வேண்டியதை தான் எடுக்க முடியும்..

    இதில் உங்களுக்கு wide angle கிடைக்காது,அதிக telezoom கிடைக்கும்..

    pentax இதுவரையில் நான் பயன்படுத்தியது இல்லை.. மன்னிக்கவும்..

    -கருவாயன்

    ReplyDelete
  183. நன்றி கருவாயன்

    I like wildlife photography. What are the lenses you recommend for wildlife photography? Is Canon EF 75-300mm enough for Canon 450D?

    ReplyDelete
  184. Look at this front page photo of this website http://www.threethreephotography.com/ Also you can view low colour photos at http://www.johnnabrynn.com/

    I like to take shots with these colours. Do they touch the photo by using ‘selective colouring’ or is there any pre-setting in camera?

    ReplyDelete
  185. @anton..

    wildlife photography என்றால் பல வகைகள் உண்டு.. காட்டு மிருகங்களை எடுக்க (ஓரளவிற்கு அருகில்) மேலே சொன்ன canon 75-300mm லென்ஸே போதும்..

    சிறிய பறவைகள் என்றால் இந்த zoom range கொஞ்சம் பத்தாது..உங்களால் அருகில் செல்லமுடியும் என்றால் இந்த zoom range போதும்... இல்லையென்றால் இது பத்தாது..இதற்கு பதில் sigma 150-500mm லென்ஸ் ஒத்து வரும்..இதன் விலை கிட்டதட்ட rs.40-45000 வரும்..

    என்னை பொருத்த வரையில் canon 75-300mm போதும் என்று நினைக்கின்றேன்..முதலில் இதை பயன்படுத்தி பார்க்கவும்,பின்பு பத்தவில்லையென்றால் வேறு லென்ஸ் வாங்கலாம்..

    இதில் நீங்கள் எவ்வளவு தூரம் wildlife photographyல் ஈடுபாடு கொண்டுள்ளீர்கள் என்பதும் முக்கியம்.. சும்மா ஆசைக்கு எடுக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக முடியாது..wildlife படம் எடுப்பதற்க்கு மிக்க ஆர்வமும்,விடாபிடியான பொறுமையும் வேண்டும்..அப்படியிருந்தால் மட்டுமே சிறப்பாக படம் எடுக்க முடியும்.. இல்லையென்றால் costly லென்ஸ் வாங்குவதில் எல்லாம் waste தான்..

    -கருவாயன்

    ReplyDelete
  186. @anton..

    நீங்கள் அனுப்பிய front page படத்தை பார்த்தேன்..இந்த மாதிரி படங்களை kitlens மற்றும் 75-300mm லென்ஸிலேயே எடுக்கலாம்.. கொஞ்சம் colour processing செய்யப்பட்டுள்ளது.. இது பெரிய கஷ்டம் இல்லை..camera presetting இல்லை..

    -கருவாயன்

    ReplyDelete
  187. நன்றி கருவாயன்! You have spent time to reply my questions in correct way and typed in Tamil Unicode too!

    I would buy Canon EF 75-300mm. I do photography as my hobby, but i have lots of enthusiasm. Because,it's an Art and ஆத்மார்த்த திருப்தி for me!

    ReplyDelete
  188. மிக்க நன்றி கருவாயன் சார்....தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  189. குழுமத்திற்கு வணக்கம்......சார், சமீபத்தில் நான் கேமரா கடைக்கு சென்றபோது (பிரான்ஸ் நாட்டில் Pix Mania என்ற கடை)Nikon D40 மாடல் ஒன்று சலுகை விலைக்கு விற்பனை செய்தார்கள்....ஆனால் கேமராவின் body மட்டுமே D40... லென்ஸ் 35-70 Sigma உம், 80-300 Tamron உம் உடன் தருவதாக சொன்னார்கள்...Nikkorலென்ஸுக்கும் இந்த லென்ஸுக்கும் என்ன வேறுபாடு சார்?



    அடிக்கடி கேள்வி கேட்கிறேன் என தவறாக நினைக்கவேண்டாம் சார்....
    நன்றி

    ReplyDelete
  190. @நித்தி கிளிக்ஸ்,

    அடிக்கடி கேள்வி கேட்கவில்லையென்றால் தான் தவறாக நினைப்போம் நண்பரே..

    sigma 35-70mm மற்றும் tamron 70-300mm(80-300mm கிடையாது)இரண்டும் nikon d40ல் autofocus ஆகாது..எங்காவது இந்த லென்ஸை வாங்கிடாதீங்க..

    ஆனால் nikon d40 கேமரா மிகவும் அருமையான கேமரா..இதன் body மட்டும் கிடைத்தால் தாராளமாக வாங்கலாம்.. என்ன விலை சொல்கிறார்கள்??

    ஒரே zoom range உள்ள nikon lensகளுக்கும் sigma,tamron போன்ற third party லென்ஸ்களுக்கும்,

    1.over all picture quality,
    2.sharpness
    3.autofocus speed
    4.build quality

    போன்ற முக்கியமான அம்சங்கள் கண்டிப்பாக சிறிது வித்தியாசப்படும்..

    ஆனால் விலை குறைவாக தான் இருக்கும்..

    அதே சமயம் third party லென்ஸ் எல்லாம் மோசம் என்று அர்த்தம் கிடையாது.. கண்டிப்பாக விலைக்கு ஏற்றதாக இருக்கும்.. ஒரு சில விதிவிலக்கு லென்ஸும் உண்டு.

    குவாலிட்டி வேண்டும் என்றால் கண்டிப்பாக own brand லென்ஸ் தான் சிறந்தது.. விலை குறைவு என்றால் thrid party லென்ஸ் OK..

    -கருவாயன்

    ReplyDelete
  191. வணக்கம் திரு.கருவாயன் சார் தங்களின் விளக்கமான பதிலுக்கு நன்றிகள் பல... D40x body மட்டும் 487 euros சொன்னார்கள்....நானும் தற்போது இந்தியா வந்துவிட்டேன் சார்.. ஆகையால் வாங்கவில்லை...தங்களின் ஆலோசனைபடி வாங்கினால் Nikon தான் வாங்குவேன்....

    நன்றி

    ReplyDelete
  192. This comment has been removed by the author.

    ReplyDelete
  193. மாதாந்தப் போட்டியை மாதம் 1ம் திகதியே அறிவிக்கலாமே.பங்குபற்றுபவர்களுக்கு இலகுவாக இருக்கும்.

    ReplyDelete
  194. "வணக்கம்"
    நான் எனது சொந்த உபயோகத்திற்கு டிஜிடல் கேமரா வாங்க இருக்கிறேன்.என்ன கம்பெனி கேமரா வாங்குவது,அதை பற்றியும்,விலையும் குறிபிடவேண்டுகிறேன்.
    "நன்றி"
    -குமார்.

    ReplyDelete
  195. @moku...

    உங்க பட்ஜெட்,எந்த மாதிரி படம் எடுக்க விருப்பம்,என்பதை தெளிவாக கூறினால் தங்களுக்கு உதவுவதில் எளிதாக இருக்கும்..

    -கருவாயன்

    ReplyDelete
  196. வணக்கம்"
    நான் எனது சொந்த உபயோகத்திற்கு டிஜிடல் கேமரா வாங்க இருக்கிறேன்.என்ன கம்பெனி கேமரா வாங்குவது,ரூ10,000/-க்குள் என் (Budget),இதை வைத்து Photography கற்றுக்கொள்ளவுள்ளேன்....
    அரவிந்த்

    ReplyDelete
  197. @aravind..

    rs.10000 க்குள் என்றால் கண்டிப்பாக basic point and shoot கேமரா தான் வாங்க முடியும்..

    இப்போதைக்கு

    canon,
    panasonic,
    fuji

    இந்த மூன்றில் எந்த கம்பெனி கேமரா வாங்கினாலும் பிரச்சனையில்லை... இந்த மூன்று கம்பெனிகளும் சிறிய கேமரா தயாரிப்பில் சிறந்தவர்கள்..

    கேமரா வாங்கும் முன் கவனிக்க வேண்டியது,

    1. zoom range 28mm அல்லது அதற்கும் கீழ்(26,24mm)தொடங்கும் படி இருந்தால் மிகவும் நல்லது..

    2.எத்தனை X என்பதை பற்றி அதிகம் கவலைபட வேண்டாம்..நமது பயன்பாட்டிற்கு 3-4X zoom என்பதே போதும்..எனவே அதிக X ற்காக அதிக செலவு செய்ய வேண்டாம்.

    3.உங்கள் கைக்கு அடக்கமாக இருக்கின்றதா என்பதை நன்றாக பயன்படுத்தி பார்க்கவும்..

    4.அதிக pixelகள் என்பதை பற்றி கவலைப்பட வேண்டாம்.. நமது பயன்பாட்டிற்கு 6-8 pixels என்பதே போதும்.. முடிந்த அளவு 8-10 pixels ற்குள் வரும் கேமராவையே வாங்கி மிச்சப்படுத்துங்கள்.. ஏனென்றால் சின்ன சென்சார் கேமராவில் பிக்ஸல்ஸ் அதிகம் என்பது வேண்டாம்..

    -கருவாயன்

    ReplyDelete
  198. இந்த வார படங்கள் இந்த மாதம் இல்லையா?

    ReplyDelete
  199. //இந்த வார படங்கள் இந்த மாதம் இல்லையா?//

    ரமேஷ் PIT Flickr Groupஇல் மிக சில படங்களே இந்த மாதம் வந்துள்ளன. அதனால் இந்த வார படம் வெளியிட வில்லை.

    ReplyDelete
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff