Tuesday, March 2, 2010

2010 மார்ச் மாத போட்டி அறிவிப்பு..

49 comments:
 
அன்பு மக்களே, அனைவருக்கும் வணக்கம்.. இந்த மாத போட்டிக்கான அறிவிப்பு சில வேலை பளு காரணமாக தாமதமாக அறிவிக்க வேண்டியதாகிவிட்டது.. அதற்காக வருந்துகிறோம்.. கடந்த மாதங்களில் சில காரணங்களால் வெற்றியை தவறவிட்டவர்கள்,கலந்து கொள்ள முடியாதவர்கள், மற்றும் அனைவரும் ஒரு வெறியோட இந்த மாத போட்டிக்கு ஆவலா இருப்பீங்க.. இந்த மாதம் என்ன போட்டி வைக்கலாம் என்று யோசித்துக கொண்டிருந்த போது இதெல்லாம் மனசுல வந்தது.. சிங்கம் ஸிங்கிலா தான் வரும். ஒன்றே குலம் ஒருவனே தேவன், தனிமையிலே இனிமை கான முடியுமா? ஒன்றே செய், நன்றே செய், அதுவும் இன்றே செய். நாம் இருவர் நமக்கு ஒருவர் சரி விசயத்துக்கு வருவோம், இந்த மாத தலைப்பு.. ஒன்று (SINGLE) இது எந்த சப்ஜெக்டாகவும் இருக்கலாம், portrait, silhoutte, tree, plant, face, bird, insect etc..etc..இந்த மாதிரி எப்படி வேண்டுமானாலும் அனுப்புங்கள்.. ஆனால் நீங்கள் எடுத்து அனுப்ப வேண்டிய படத்தில் சப்ஜெக்ட் என்பது ஒன்றே ஒன்று தான் இருக்க வேண்டும்.. உதாரணமாக,
  • ஒரு கார் படம் அனுப்பினால் கார் மட்டும் தான் இருக்க வேண்டும்,ஓட்டுனர் இருக்க கூடாது..
  • ஒரு பறவை படம் எடுத்தால்,பறவை மட்டும் முக்கிய சப்ஜெக்டாக இருக்க வேண்டும்,மரங்கள் இருக்க கூடாது.
  • அதுக்காக ஒரு முகத்தை எடுத்தால் வாய்,கண்கள் இருக்க கூடாது என்று நினைத்து கொள்ள வேண்டாம்..
அதாவது, ஒரு சப்ஜெக்ட் மற்றும் ஒரு பேக்கிரவுண்ட். அவ்வளவு தான் இருக்க வேண்டும்.. உதாரணமாக, இந்த மாதிரி படங்கள் அனுப்பலாம் இந்த மாதிரி படங்கள் வேண்டாம், (ஏனென்றால் ஒரு நபர் டைவ் அடிப்பது நன்றாக தெரிந்தாலும், இன்னொரு நபர் தெரிவதால்) . ( ஒரே ஒரு சிறுவன் மட்டும் இருந்தாலும், கோவில் மணி உள்ளது) . (இதிலும் இரண்டு நபர்கள் உள்ளதால் வேண்டாம்) . (வண்டு ஒன்று தான் என்றாலும் மலர்கள் அதிகமாக தெரிகிறது) இதை எதற்காக சொல்கிறோம் என்றால், ஒரு சப்ஜெக்டை மட்டும் ப்ரதானமாக வைத்து எடுக்கும் போது ஒரு சிறு இடையூறு தெரிந்தாலும் நமது கண்கள் சிதறும்.. ஒரு பெரிய வெள்ளைக்குள் மிக சிறிய கருப்பு புள்ளி இருந்தாலும் நமக்கு அந்த கருப்பு தான் அதிக கவனம் போகும், வெள்ளை மீது இருக்காது. இதனால் அந்த சப்ஜெக்ட் என்பது கொஞ்சம் அடிபடும்.. அதுவுமில்லாமல் இந்த மாதிரி கவனித்து எடுப்பதால் நமக்கு ஒரு படத்தை நன்றாக எடுக்ககூடிய அனுபவம் எளிதில் கிடைக்கும். இந்த மாதிரி படம் எடுப்பது உங்களுக்கு சிரமம் இருக்காது என்று நினைக்கின்றேன்.. மாதாந்திர போட்டிக்கான விதிமுறைகள்,தகவல்கள்.. போட்டிக்கான படங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி : 20-3-2010. சிங்கம் ஸிங்கிலா தான் வரும்.. எனவே, புகைப்பட சிங்கங்களே, வாருங்கள் ஸிங்கில் சப்ஜெக்ட் படத்துடன்.. -கருவாயன்.

49 comments:

  1. சேவல் படம் சூப்பர். ஜனவரி இரண்டாம் வார ஆனந்தவிகடனில் கவிதைகள் பக்கத்தில் இது போன்ற சேவல் படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். அதைப் பார்த்ததில் ஆவலாகி ஆர்வமாகி நானும் எடுத்து வைத்திருக்கிறேன் ஒரு சேவல் படம். போட்டிக்கு எதைக் கொடுப்பேனோ தெரியாது. பதிவில் போட்டு விடுகிறேன்:)!

    //வாருங்கள் ஸிங்கில் சப்ஜெக்ட் படத்துடன்..//

    ரைட்டு:)!

    ReplyDelete
  2. நல்ல தலைப்பு. படத்துடன் வருகிறேன்...

    கோழிப் படம் அருமையோ அருமை...

    ReplyDelete
  3. நான் போட்டிக்கான புகைப்படத்தை அனுப்பிவிட்டேன்...

    ReplyDelete
  4. I sent my photo..in the name of Gowtham.jpg

    ReplyDelete
  5. நல்லதொரு தலைப்பு!
    "தமிழில் புகைப்படக்கலை" வலைப்பூவில் ஒன்று (single ) எனும் தலைப்பில் சென்ற மாத போட்டிக்கு வந்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றைக் கொஞ்சம் மாற்றலாமே?

    ReplyDelete
  6. kamalakannan,kapilan..உங்கள் படங்கள் வந்துவிட்டது.. நன்றி..

    @விஜய்...சுட்டிக்காட்டியதற்கு நன்றி ..விரைவில் சரிபடுத்தப்படும்..

    ReplyDelete
  7. PIT குழுவிற்க்கு வணக்கம், நான் சமீபத்தில் தான் உங்கள் இணைய தளத்தை பார்த்தேன்....மிக்க நன்றாக உள்ளது...இம்மாத தலைபிற்கான "ஒன்று" புகைப்படத்தை மின்னஞ்சலில் அனுப்பிவிட்டேன். நன்றி!!!

    ReplyDelete
  8. நன்றி நித்தி கிளிக்ஸ்.. உங்கள் படம் எதுவென்று தெரிந்து கொள்ளலாமா? பெயர் விட்டு போய் உள்ளது.. கீழே உள்ள பிக்காஸா அல்பத்தில் க்ளிக் செய்து உங்கள் பெயர் விட்டுப்போயிருந்தால் தகவல் தெரிவிக்கவும் அல்லது சரி செய்யவும்

    -கருவாயன்

    ReplyDelete
  9. PIT குழுமத்திற்க்கு வணக்கம் என்னுடைய புகைப்படம் உங்களின் பிக்காஸா ஆல்பத்தில் வருகின்றது ஒரு சிறுவன் சாப்பிடிக்கொண்டிருக்கும் போது அங்கும் இங்குமாக ஓடியதை கிளிக் செய்தது.
    உங்களின் பிக்காஸ ஆல்பத்தில் என்னுடைய புகைப்படத்தின் லிங்க்:
    http://picasaweb.google.com/pitcontests/SingleMarchContest#5445004511747652178

    File name: Nithi
    Camera Used : Kodak CX7330 3.0 mega pixel

    ReplyDelete
  10. எனதுப படம் அனுப்பினேன். இம்மாதப் போட்டிப் படங்களில் அது சேர்க்கப் பட்டதையும் இப்போ பார்த்தேன். நன்றி.

    ReplyDelete
  11. எனது படமும் அனுப்பினேன். இம்மாதப் போட்டிப் படங்களில் அது சேர்க்கப் பட்டதையும் இப்போ பார்த்தேன். நன்றி. நன்றி....

    ReplyDelete
  12. I have sent my photo, senthilathiban.jpg

    ReplyDelete
  13. என்னுடைய படத்தையும் அனுப்பியுள்ளேன்...

    PiT ன் 2010 மார்ச் மாத புகைப்படபோட்டிக்காக ..

    அன்புடன்
    ஆ.ஞானசேகரன்

    ReplyDelete
  14. ஐயா, நான் பட்டாம்பூச்சி போட்டோ ஒன்னு அனுப்பிருக்கேன். அந்த பனித்துளி தலைப்போட பொருந்தலனு சொல்லிடாதீங்க.
    மனசொடிஞ்சி போய்டுவேன்.
    அவ்ளோதான் நான் சொல்ல வேண்டியது.
    .நன்றி. வணக்கம்...

    ReplyDelete
  15. வணக்கம்,

    நான் எனது மகள் "இலக்கியா" வின் புகைப்படத்தை ஒன்று (single ) எனும் தலைப்பிற்கான மார்ச் மாத போட்டிக்கு அனுப்பியுள்ளேன் Gokulakrishnan.jpg,
    அது இன்னும் பிகாசாவில் வலையேற்றம் செய்யப்படவில்லை, தங்கள் போட்டிக்கான விதிமுறைகள் ஏதாவது மீறப்பட்டிருந்தால் தயவு செய்து தெரிவிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.

    Camera details:
    Model: SONY H50
    MP: 9.1 MP

    நன்றி,
    கோகுலகிருட்டிணன்

    ReplyDelete
  16. Gokul
    We have your pic. Will be updated soon.

    An&

    ReplyDelete
  17. போட்டியில் கலந்து கொண்டேன்

    ReplyDelete
  18. http://www.flickr.com/photos/mail2vsenthil/3494170862/

    ஆட்டத்தில என்னையும் சேத்துக்குங்க boss.. :)

    ReplyDelete
  19. நானும் இந்த வாரம் களத்துல இறங்கி இருக்கேன் :).. Santhosh.jpg

    ReplyDelete
  20. என்னையும் ஆட்டைல சேர்த்துகோங்க! படம் அனுப்பிவிட்டேன்.
    Meenatchisundaram.jpg

    ReplyDelete
  21. நாங்களும் இந்த தடவ கோதாவுல இறங்கிட்டோம்ல ... படத்த அனுப்பியிருக்கேன் (Jenova.jpg) , வந்துருச்சானு பாத்து சொல்லுங்கப்பு!

    நன்றி!.

    ReplyDelete
  22. வணக்கம்,
    நான் அனுப்பிய புகைப்படம் இம்மாத போட்டிப் படவரசையில் சேர்க்கப்பட்டுவிட்டது !!!!!!!!!!!!
    நன்றி

    ReplyDelete
  23. இம்மாத புகைப்பட போட்டிக்கு எனது படத்தை முதல் முறையாக அனுப்பியுள்ளேன்.. நன்றி..

    ராஜசேகர்

    ReplyDelete
  24. ரொம்ப நாளைக்குப் பிறகு ஆட்டைக்கு வந்திருக்கேன், பார்த்துப் போட்டுக் கொடுங்கப்பு. படம்: KVR.jpg

    ReplyDelete
  25. மார்ச் மாத போட்டிக்கு படம் அனுப்பிஉள்ளேன்
    http://picasaweb.google.com/pitcontests/SingleMarchContest#5448912144493231138

    ReplyDelete
  26. நானும் ஆட்டத்தில் சேர்ந்துவிட்டேன். பதிவும் போடணுமா?
    புகைப்படம் வந்ததற்கு சேதி சொல்லுங்க:)

    ReplyDelete
  27. valli madam, added it now.

    pls check now.

    ReplyDelete
  28. ஒட்டிக் கொள்கிறேன் ஒரு போஸ்டர்:

    ஒற்றை-மார்ச் PiT போட்டிக்கு-பறக்கும் படங்கள்

    http://tamilamudam.blogspot.com/2010/03/pit.html

    பதிவு:)! நன்றி!

    ReplyDelete
  29. இம்மாத தலைபிற்கான "ஒன்று" புகைப்படத்தை மின்னஞ்சலில் அனுப்பிவிட்டேன். நன்றி!!!

    ragumuthukumar.jpg

    ragu.

    ReplyDelete
  30. இம்மாத புகைப்பட போட்டிக்கு புகைப்படத்தை அனுப்பியுள்ளேன்.

    நன்றி.

    ReplyDelete
  31. வணக்கம் ,
    புதிதாக போட்டியில் சேர்ந்துள்ளேன் . படமும் அனுப்பி விட்டேன் . வந்து சேர்ந்ததும் தகவல் அனுப்பவும். நன்றி.

    malarvizhi.jpg

    ReplyDelete
  32. நான் போட்டிக்கான புகைப்படத்தை அனுப்பிவிட்டேன்

    ReplyDelete
  33. இந்த படம்தான் போட்டிக்கு.

    ReplyDelete
  34. நானும் படம் அனுப்பிவிட்டேன்.
    kggouthaman.jpg

    ReplyDelete
  35. முதல் முறையைக் நானும் போட்டியில் கலந்து கொண்டுள்ளேன். மிக்க நன்றி . மேர்வின்

    ReplyDelete
  36. அப்ரூவல் வேறயா?நாந்தான் போய் சொல்லணும் போல இருக்குது.

    ReplyDelete
  37. துளசி டீச்சருக்கு கொஞ்சம் சொல்லி அனுப்புங்களேன்.சிங்கிளா ஒரு படத்தை வச்சுட்டு வடை போச்சேன்னு புலம்பிட்டுருக்காங்க.

    ReplyDelete
  38. //(ஏனென்றால் ஒரு நபர் டைவ் அடிப்பது நன்றாக தெரிந்தாலும், இன்னொரு நபர் தெரிவதால்)// ஏனுங்க, ஒரு சந்தேகம். ஒருத்தரு நேரா இருந்தாத்தானுங்களே இன்னொருத்தரு தலைகீழா இருக்காருன்னு தெரியிம்?

    ReplyDelete
  39. நன்பர்களே...இத்துடன் போட்டிப்படங்கள் அனுப்புவதற்கான நேரம் முடிந்து விட்டது.. இனிமேல் வரும் படங்கள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படாது.. நீங்கள் அனுப்பிய படங்கள் ஏதும் விட்டுப்போயிருந்தால் தகவல் தெரிவிக்கவும்.. ஒரு சிலர் பெயர் குறிப்பிடவில்லை... அவர்கள் அதை சரி செய்யவும்..

    நன்றி
    கருவாயன்

    ReplyDelete
  40. @அக்னிசித்தன்.. நீங்கள் சொல்வது சரிதான்.. ஆனால் இந்த போட்டிக்கு அது சரி வராது..

    -கருவாயன்

    ReplyDelete
  41. இம்முறை நிறையப் போட்டியாளர்கள் களத்தில் குதித்திருப்பதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாகவிருக்கிறது.
    ஆனாலும் ஒரு சின்னக் கவலை... நண்பர்களின் புகைப்படங்கள் எல்லாவற்றிற்கும் பின்னூட்டம் இடவேண்டும் என்று நினைத்திருந்தேன், இத்தனை போட்டியாளர்களையும் பார்த்தவுடன் அப்படியே ஸ்தம்பித்துப் போய்விட்டேன் :-( . எல்லோரது முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துக்கள் :-).

    ReplyDelete
  42. when is the result date? pls tell me.

    ReplyDelete
  43. மாசத்துக்கு ஒரு போட்டிங்கறது எங்க ஆர்வத்துக்கு தடைபோடர மாதிரி இருக்குங்க... ஒரு தொழில்நுட்பத்த சொல்லிகொடுத்துட்டு அது சார்ந்த தலைப்பு கொடுத்தா நாங்க பயிற்ச்சி பண்ணியமாதிரியும் ஆச்சு போட்டில கலந்துகொண்டமாதிரியும் ஆச்சு... என்னுடைய இந்த தாழ்மையான கருத்தை பரிசிலனை பண்னுன்மாறு நடுவர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  44. @merk.. விரைவில் ரிசல்ட் வரும்... இந்த முறை 91 படங்கள் வந்துள்ளன.. கொஞ்சம் பெரிய வேலை தான்...

    @win..மாதம் ஒன்று தான் சரியாக இருக்கும்.. இதற்கே சில சமயம் வேலை பளு காரணமாக சிரமமாக இருக்கும்..

    அது பத்தவில்லை என்றால் இருக்கவே இருக்கு இந்த வாரா க்ளிக்.. flickrல் போட்டோவை அனுப்புங்க,வாரா வாரம் win பன்னுங்க.

    நீங்கள் கூறியிருக்கும் கருத்தை பரிசீலனை செய்கின்றோம்..ஒத்து வந்தால் கண்டிப்பாக அதன்படி போட்டிகளை நடத்தலாம்..

    -கருவாயன்

    ReplyDelete
  45. dear Friends How can i type to tamil comment in the page

    ReplyDelete
  46. @k.ramesh..

    இந்த softwareஐ install பன்னிக்கோங்க..

    http://software.nhm.in/products/writer

    alt+2 press பன்னினால் தமிழில் டைப் ஆகும்..மீண்டும் அதையே(alt+2)press செய்தால் englishல் டைப் ஆகும்...

    -கருவாயன்

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff