இந்த மாதம் நம்ம பள்ளிக்கூடத்துக்கு என்னை(MQN) லீடரா போட்டதுக்கு நம்ம வாத்தியார்களுக்கு நன்றி.:)
உலகம் முழுவதும் திரைப்படங்களை ரசிப்பவர்களும், திரைப்பட மோகம் கொண்டு அலைபவர்களும் இருந்தாலும்... தமிழர்களாகிய நமக்கும் சினிமாவுக்கும் ஒரு பெரும் பிணைப்பே இருக்கிறது. நாம் நம் ஆட்சியாளர்களை கூட அங்கிருந்துதான் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட திரைப்படத் துறை தொடர்பாகவே இந்த மாத போட்டியையும் தேர்ந்தெடுத்ததில் யாருக்கும் சலிப்பிருக்காதென்றே நினைக்கிறேன். :)
இந்த மாத போட்டி: "திரைப்படத் தலைப்பு" (Movie Title)
போட்டி விதிமுறைகள் இங்கே.
படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி 15-06-2011.
இந்த மாத போட்டிக்காக மட்டும் படத்தின் ஃபைல் நேம் முறையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது... படத்தின் ஃபைல் நேம், அனுப்பும் மடலின் சப்ஜெக்ட் இரண்டிலும் முதலில் படத்தை எடுத்தவர் பெயர், தொடர்ந்து அடைப்புக்குள் திரைப்படப் பெயர் என்றிருக்குமாறு அனுப்புங்கள். எடுத்துக்காட்டாக: Karuvaayan(Thaneer Thaneer).jpg என்றிருக்க வேண்டும்.
இம்மாத போட்டியை பற்றிய சிறு விளக்கம்: அதாவது... நீங்கள் அனுப்பவிருக்கும் படம் ஏதேனும் ஒரு தமிழில் வெளியான திரைப்படத்தின் பெயரை குறிப்பிடுவது போல் இருக்க வேண்டும். திரைப்படத்தின் பெயரை குறிப்பிடுவது போலுள்ள காட்சிகளை அமைத்தோ அல்லது காட்சிகளையோ படமாக்குங்கள். படத்தில் இடம்பெற்ற காட்சியை படமாக்க வேண்டும் என்பதல்ல போட்டி. படத்தின் பெயரை படமாக்க வேண்டுமென்பதே போட்டி.
நேரடியாக ஒரு பொருளை(சப்ஜெக்ட்) குறிக்கும் விதமான திரைப்படத் தலைப்புகளை தவிருங்கள். எ.கா: குருவி, மனிதன், சிறுத்தை என்று தலைப்பிட்டு ஒரு குருவியையோ மனிதனையோ காட்டினால் ரசிக்குமா? பெரும்பாலும் கவித்துவமான திரைப்பட பெயர்களை படமாக்க முயற்சி செய்யுங்கள்.
உங்கள் கற்பனைக் குதிரையை தட்டி விடுங்கள். நமது திறமை வளர வேண்டுமானால், தயவு செய்து பழைய படங்களை அனுப்பாதீர்கள். இந்த பதினைந்து நாட்களில் புதியதாக படம் எடுக்க முயற்சியுங்கள். (உண்மையிலேயே இது திறமையை வளர்க்க மிகவும் உதவும்).
புகைப்படக் கலையின் அடிப்படை விதிகள் பற்றிய பாடங்களை இங்கு தேடிப்பிடித்து படியுங்கள். பிற்தயாரிப்பிலும்(post processing) கவனம் செலுத்துங்கள். அதனால் உங்கள் புகைப்படம் மேலும் மெருகேறும்.
நிச்சயம் இந்த மாதம் போட்டி களைகட்டும் என்பதில் எனக்கு ஐயமில்லை. :)
எனது சில படங்கள் எடுத்துக்காட்டாக:
விண்ணைத்தாண்டி வருவாயா
நீர்க்குமிழி
அலைகள் ஓய்வதில்லை
நிழல் நிஜமாகிறது
இதயம்
வானமே எல்லை
ஜீவ்ஸ் - மூடுபனி
கருவாயன் - தண்ணீர் தண்ணீர்
ராமலக்ஷ்மி - மாட்டுக்கார வேலன்
சர்வேசன் - இரயில் பயணங்களில்
அருமையான தலைப்பூ.
ReplyDeleteகளை கட்டும் என்பதில் சந்தேகமே இல்லை.
அருமையான தலைப்பு !
ReplyDeleteசுவாரஸ்யமான தலைப்பு. நண்பர்கள் பெருமளவில் உற்சாகமாகக் கலந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.
ReplyDelete@ MQN, அந்த முதல் படம்.. ஒரு போட்டியில் பார்த்துவிட்டு ஃப்ளிக்கரில் தேடிப்பிடித்து நான் ஃபேவரைட் ஆக்கிக் கொண்ட ஒன்று:)!
Moodupani, pramaaaaaaaaadham. :)
ReplyDeleteவருக.. வருக... MQN....
ReplyDeleteஅருமையான தலைப்பு...
-கருவாயன்
is it any language movie title ?
ReplyDeleteநன்றி நண்பர்களே.
ReplyDelete@விதூஷ்.. இல்லை... பதிவில் குறிப்பிட்டுள்ளதை போல் தமிழ் படங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். தமிழில் வெளியான ஆங்கில பெயருள்ள படங்கள் பிரச்சனை இல்லை. கண்டிப்பாக அனுமதி உண்டு. நல்ல படத்துடன் கலந்துகொள்ள வாழ்த்துகள்.
நல்ல தலைப்பு!!! எப்படியெல்லாம் யோசிக்கராங்க நம்ம PIT ஆளுங்க ...
ReplyDelete"//உங்கள் கற்பனைக் குதிரையை தட்டி விடுங்கள். நமது திறமை வளர வேண்டுமானால், தயவு செய்து பழைய படங்களை அனுப்பாதீர்கள். இந்த பதினைந்து நாட்களில் புதியதாக படம் எடுக்க முயற்சியுங்கள். (உண்மையிலேயே இது திறமையை வளர்க்க மிகவும் உதவும்).//"
வாஸ்தவம் தான் ஆனா எங்க கடையில இப்போ auditing நேரம் கேமராவ தொட்டு கிட்ட தட்ட 1 மாசம் ஆகுதுங்க.....எனவே இந்த மாத போட்டிக்கு பழைய படத்தையே தலைப்புக்கு ஏற்றவாறு அனுப்ப முயற்சிக்கிறேன்.
இந்த மாசம் போட்டி களை கட்டும்னு நினைக்கிறேன்.....
என்றும் அன்புடன்,
நித்தி கிளிக்ஸ்
நல்ல தலைப்பு.
ReplyDeleteநான் ஒரு படம் அனுப்பியிருக்கிறேன்
ReplyDelete@தமிழினியன்,
ReplyDeleteநீங்கள் அனுப்பிய படம் எது? அது எந்த திரைப்படத் தலைப்பு என்பதை தெரிவிக்கவும்.
நன்றி.
@naufal MQ என்னுடைய படம் picasaவில் சேர்க்கப்பட்டிருக்கிறது நன்றி. ஆடுகளம்
ReplyDeleteI have sent my picture - Azhagai Irukkirai Bayamai Irukkirathu
ReplyDeleteஎன்னுடைய படம் அனுப்பிவிட்டேன் - அது ஒரு கனாகாலம் (ஷ்ராவ்யன்)
ReplyDeleteநண்பரே நான் இயற்கை என்னும் திரைப்படத் தலைப்பில் படம் அனுப்பியுள்ளேன். பாருங்கள்.
ReplyDeleteஎன் படம் பறந்து வந்து இருக்கும் இந்நேரம் :)
ReplyDeletevazhkkaipayanam.blogspot.com
Thanks,
Jeyanthi
This comment has been removed by the author.
ReplyDeleteVery creative title.
ReplyDeleteநான் "நிலவே முகம் காட்டு" என்னும் திரைப்படத் தலைப்பில் படம் அனுப்பியுள்ளேன்
ReplyDeletepasanga.jpg sent. thanks.
ReplyDeleteI had given 2 titles when I sent the pic:
ReplyDelete1. Un kannil neer Vazhildhal
2. Eeram
I will go with Eeram.
‘அழகர்சாமியின் குதிரை’ முதல் அன்றைய ‘பா’ வரிசைப் படம் வரை..-பிட் மல்டிப்ளெக்ஸில்..-ஜூன் போட்டி
ReplyDeleteநான் எடுத்த 23 படங்கள் பார்வைக்கு. இன்னும் படங்களை அனுப்பாதவர்கள் சீக்கிரமா அனுப்புங்க. கவித்துவமா யோசியுங்க. பிட் மல்டிப்ளெக்ஸ் உங்கள் படங்களைத் திரையிட ஆவலுடன் காத்திருக்கிறது:)!
நானும் அனுப்பி உள்ளேன்... (பூ)
ReplyDeleteபோட்டியில் பங்கேற்க பாசப்பறவைகளை அனுப்பியிருக்கிறேன்.
ReplyDeleteஜூன் மாத போட்டிக்கு புகைப்படம் அனுப்பிவிட்டேன்.நன்றி..
ReplyDelete"வானம் வசப்படும் (மலர்விழி ரமேஷ்)"
வானம் வசப்படும் என்ற தலைப்பில் படம் நேற்றே அனுப்பி விட்டேன்.இன்னும் வெளியிடவில்லையே....ஏன்?
ReplyDeleteமலர்விழி ரமேஷ்.
மலர்விழி,
ReplyDeleteஉங்கள் படம் கிடைக்கவில்லை. மீண்டும் அனுப்புங்களேன். (இன்றே கடைசி)
வசந்த மாளிகை என்ற தலைப்பில் அனுப்பி உள்ளேன். (senthilkumar.jpg)
ReplyDeleteநன்றி. செந்தில்
படம் வெளியிட்டதற்கு நன்றி..
ReplyDeleteகடைசியாக நேற்று படம் அனுப்பி, யாருடைய படமாவது வெளியிடாமல் இருந்தால் தெரிவிக்கவும். கடைசியாக ஒரு வாய்ப்பு. ( இடப் பற்றாக் குறையால் இருவரின் படம் இதில் வரவில்லை என்று அறிந்தேன். )
ReplyDelete