வணக்கம் நண்பர்களே.
வாழ்க்கைச் சக்கரம் எம்புட்டு வேகமா சுழலுதுங்கரது நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணும்னு இல்லை. ஒரு காலத்துல வீட்ல ரேடியோ இருந்தா கெத்தான விஷயம். அப்பாலிக்கா கறுப்பு வெள்ளை டயனோரா டிவி இருந்தா பெரிய விஷயம். கலர் டிவி வந்து, ஃப்ளாட் ஸ்க்ரீன் வந்து, LCD/Plasma எல்லாம் வந்த வேகம் அசாத்யம். இப்ப 3D அது இதுன்னு அடுத்த கட்டத்துக்கு ஆயத்த மாயிட்டோம்.
என்னதான் புதுசு புதுசா தொழில்நுட்ப விஷயங்கள் வந்தாலும், ஞாயிற்றுக் கிழமை பிரியாணி சாப்பிட்டுட்டு, அந்த பழைய மர்ஃபி ரேடியோவில் கிர்ர்ர் சப்தத்தின் ஊடே, ஜானகியின் பழைய ராஜா பாடல்களை கேட்கும் சுகம் எந்த ஐப்-பாட்டிலும் கிடைப்பதில்லை.
விஷயத்துக்கு வாரேன். இந்த மாதப் போட்டிக்கான தலைப்பு, "மறந்து போனவை'.
அதாவது, புழக்கத்திலிருந்து மறைந்து போன, நாமெல்லாம் மறந்து போன விஷயங்க்ளை, தேடிப் பிடித்து போட்டிக்கு அனுப்ப வேண்டும்.
உதாரணத்துக்கு: மர்ஃபி ரேடியோ, சைக்கிள் டயனமோ, ஹால்டா டைப்ரைட்டர், கெரோஸின் அடுப்பு, இங்க் பேனா, வயர் சேரு, ஸ்லேட்டு பல்பம், சாக்பீஸு, ராந்தல் விளக்கு, எவெரெடி டார்ச்சு, மண் சட்டி, இத்யாதி இத்யாதி...
ஜமாய்ங்க.
போட்டி விதிமுறைகள் இங்கே.
படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி 15-10-2011.
source: shameer

source: tmab2003

ஆஹா திண்ணைகள், பழைய இடிந்துபோன வீடுகள்,போஸ்ட்டுபாக்குசு அப்டி இப்டின்னு வந்து மனசை டச்சு பண்ணப்போவுதோ தெரியலயே!
ReplyDeleteSuper... Good Title.
ReplyDeleteசவாலான அருமையான தலைப்பு..
ReplyDeleteஅட...சொல்லிட்டீங்கல்ல.....பழசெல்லாம் ஒரு கை பாத்துரலாம்.....
ReplyDeleteWILL old people be included:)
ReplyDeletevallisimhan.
congrats on a beautiful title.
valli madam,
ReplyDeletesorry, no. we havent forgotten our old people. so, no :)
நல்ல தலைப்பு,நானும் அனுப்பிட்டேன்...
ReplyDeletephotova entha mugavariku send pananum ?
ReplyDelete@ அருண் குமார்,
ReplyDeleteபோட்டி விதிமுறைக்கான லிங்க்கும் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளதே. இருப்பினும் உங்களுக்காக மீண்டும் இங்கே:
படங்களை pitcontests2.submit@picasaweb.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இணைப்பாக அனுப்பவும். Please also CC photos.in.tamil@gmail.com.
மேலும் சில மாதிரிப் படங்களுக்கு..
ReplyDeleteஇசைத் தட்டுக் காலம், மரிக்கொழுந்து வாசம்..-மறந்து போனவை [Oct PiT]
அப்பாடா... நானும் அனுப்பிட்டேன்..
ReplyDeleteதோற்க போகிறோம்னு தெரிஞ்சே தோற்கிறதுலதான் எம்புட்டு சந்தோஷம்.. :)
thanks everyone for participating.
ReplyDeleteTop10 will be announced soon.
result?
ReplyDelete