Monday, December 29, 2008

டிசம்பர் போட்டி - வெற்றிப் படங்கள்

வணக்கம்.

உங்க எல்லாருக்கும் பிலேட்டட் க்ருஸ்மஸ் நல் வாழ்த்துக்கள்.
அப்படியே, advanced, புது வருட நல்வாழ்த்துக்களையும் புடிச்சுக்கோங்க ;)

இந்த மாத நிழல்கள் போட்டிக்கு வந்த படங்களை பாத்திருப்பீங்க. வந்திருந்த 49 படங்களிலிருந்து, டாப்10ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களையும் பாத்திருப்பீங்க.

சிறந்த படங்களை தேர்ந்தெடுக்க ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நடுவரும் ஒவ்வொரு முறையை பயன்படுத்துவார்கள்.

என்னைப் பொறுத்தவரை, சிறந்த படமானது,
1) பார்த்தவுடன் ஈர்க்கவேண்டும்
2) போட்டித் தலைப்பை மையமாக கொண்டிருக்க வேண்டும்

இவை ரெண்டையும் கூட்டி பிசைந்து ஆராய்ந்ததில் கிட்டிய டாப்10லிருந்து, மூன்றை பிரித்தெடுப்பது கொஞ்சம் டென்ஷனான வேலைதான்.
இதை எடுத்து அதை விடுத்தா, அதை ஏன் எடுக்கலைன்னு எனக்கே நான் காரணம் கண்டுபிடிக்க சிரமமாயிருந்தது.

மாதாமாதமும் முன்னேறி வரும் நம் போட்டியாளர்களின் திறனை பளிச்னு காட்டுது இது.

Hats off to you all!

நிழலை அழுத்தம் திருத்தமாக, மையப் பொருளாக்கி, என்னை மிகவும் ஈர்த்த படங்கள், இம்மாத வெற்றிப் படங்களாக கீழே தந்துள்ளேன்.

மூன்றாம் இடத்தில்: Truth
மாரதான் ரேஸ்ல பாத்திருப்பீங்க. முதல் பரிசு வாங்கப் போறவர், போட்டி ஆரம்பிச்சதும் நிதானமா ஓடுவாரு. முக்கால் வாசி பேரு வேக வேகமா ஓடி, பாதி ஓட்டத்துலையே மூச்சு வாங்கி, வெளியேறிடுவாங்க. நிதானமா ஓட ஆரம்பிச்சவருக்கு, எவ்ளோ தூரத்துக்கு எப்படி ஓடணும், எப்ப வேகத்தை கூட்டணும்னு எல்லாம் துல்லியமா தெரிஞ்சிருக்கும். அப்படித்தான், Truthன் படம் அமஞ்சிருக்கு. தலைப்புக்கு ஏத்த சப்ஜெக்ட் வடிவமைப்பு செஞ்சதும், அலட்டிக்காம க்ளிக்கியிருக்காரு. அற்புதமா வந்திருக்கு படம்.


இரண்டாம் இடத்தில்: Amal (இவர் ஒக்டோபர் மாத‌ போட்டியில் முதல் பரிசை வென்றவர்)
தரை பார்த்த நடையும், நீண்ட நெடு நிழலும், மணலின் நிறமும், படம் எடுக்கப்பட்ட ஏங்கிளும், படத்துக்கு ஒரு அற்புதமான, 'மூட்' உருவாக்கிக் கொடுத்துள்ளது.


முதல் இடத்தில்: Vennila Meeran
எப்படியெல்லாம் யோசிக்கராங்க நம்ம மக்கள்? அடேங்கப்பா. ஷட்டில் ஃபெதரில் இப்படி ஒரு லைட்டிங் செஞ்சு அம்சமா எடுக்க முடியும்னு இதப் பாத்தப்பரம்தான் தெரிஞ்சுது. நிழல் வெறும் நிழலாய் மட்டும் இல்லாமல், அதுவே ஒரு அழகான ஓவியமாய் மாறியிருந்தது இந்த படத்தில். நிழலால் படம் மெறுகேறியதால், இதற்கே முதலிடம்.


வெற்றி பெற்ற Truth, Amal, Vennila Meeran - வாழ்த்துக்களும் வந்தனங்களும்!

போட்டியில் பங்கு பெற்ற அனைத்து படங்களையும் பார்க்க இங்கே க்ளிக்கவும்.

பி.கு: MQN படமும் ப்ரமாதமாய் வந்திருந்தது. beautiful shot!!! பாப்பா, கண் மூடிக் கொண்டு ப்ரார்த்தனை செஞ்சிருந்தா இன்னும் ஈர்த்திருக்குமோ? கை நிழலை மறைத்ததாலான்னும் தெரியலை. நீங்களே சொல்லுங்க.

Truth, Amal, Vennila Meeran - முடிந்தால், நீங்கள் வெற்றிப் படத்தை எடுத்த விதம் பற்றி தனிப் பாதிவாய் போட்டு எங்களுக்கு தெரியப் படுத்தவும். நன்றி!

Monday, December 22, 2008

டிசம்பர் 2008 போட்டி - முன்னேறிய பத்து நிழல்கள்

வழக்கம் போல் இம்மாதமும், ஆவலுடன் பலர் புகைப்படப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்கள்.

மொத்தம் 49 படங்கள்.

நிழல்கள் என்ற தலைப்புக்கு பொருந்துமாறு பலவிதமா யோசிச்சு கட்டம் கட்டியிருக்காங்க.
ஆனா, ஒரு சில படங்களில், நிழல் எங்கேருக்குன்னு, டார்ச் அடிச்சு பாத்தும் கண்ணுல படலை. :)

போட்டியாளர்களுக்கு உதவும் வகையில் அமைந்த, An&ன் நிழல் பாடமும், Deepaவின் நிழல் படங்களும் இம்மாதப் போட்டியின் போது கிட்டிய போனஸ் பதிவுகள். CVRம் தனது hibernationஐ முடித்துக் கொண்டு, போட்டியில் வெற்றி பெற ஒரு கோனார் நோட்ஸ் பதிவைப் போட்டிருந்தார்.

இந்த மாத போட்டிக்கான அறிவிப்பில் இடம்பெற்ற, உதாரணப் படங்கள் சில, ஏற்படுத்திய குழப்பமான்னு தெரியல, சில படங்கள், silhoutteஆக அமைந்திருந்தன.

நிழல் = shadow
silhoutte = பிம்பம்

ரெண்டுத்துக்கும் வித்யாசம் இருக்கு.

வாரணம் ஆயிரம் படத்தில், கடைசி காட்சியில், 'வாரணம் ஆயிரம்'னு டைட்டில் வச்சதுக்காக, சிம்ரன் அக்கா அதுக்கு ஏதோ ஒரு பெயர் காரணம் சொல்லி ஒப்பேத்துவாங்க.

அந்தளவுக்கு ஒப்பேத்தலன்னாலும், ஒரு பொட்டளவு நிழலாவது படத்துல இருந்திருந்தா, திருப்திகரமா இருந்திருக்கும். சிலர் அதைச் செய்யலை ;)

சிலர், நிழலை படம் பிடித்திருந்தாலும், தேவையான வெயில் படத்தில் இல்லாததால், நிழலின் சிறப்பு படத்தில் புலப்படவில்லை. உ.ம். ஸ்வாமி ஓம்காரின் 'தூங்கும் நாய்' படம்.

தலைப்புக்கு ஏற்றவாரு அருமையா பல படங்கள் வந்துள்ளன.

கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

இனி, இம்மாத, டாப் பத்து பாப்பமா?
(in no particular order)

அ. Rasena


ஆ. Amal


இ. MQN


ஈ. Vennila Meeran


உ. Truth


ஊ. Anand


எ. Pradeep


ஏ. Jayakumar


ஐ. Thiva


ஒ. Surya


எல்லா படங்களையும் பார்த்து, உங்க விமர்சனத்தைச் சொல்லிட்டுப் போங்க. போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு உபயோகமா இருக்கும்.

அனைத்துப் படங்களையும் பாக்க இங்கே செல்லவும்.

Saturday, December 20, 2008

புகைப்பட போட்டியில் வெற்றி பெற..

வணக்கம் மக்களே!!
உங்களை எல்லாம் பாத்து எவ்வளவு நாள் ஆச்சு!! எல்லோரும் சுகமா இருக்கீங்களா?? :-)

நம்ம பதிவுல மாசா மாசம் நடத்தற போட்டிகளில் நிறைய படங்கள் பாக்குறோம். பாக்கும்போது நிறைய விஷயங்கள் சொல்லனும்னு தோணுது..ஆனா இதெல்லாம் ஏற்கெனவே பல்வேறு வேளைகளில் நாங்க இந்த வலைப்பதிவில் சொன்ன கருத்துக்கள் தான். அதுவும் நம்ம போட்டிக்கு நிறைய புதுப்புது வாசகர்களும் வருவதால் போட்டியில் வெற்றி பெறுவதற்கான யோசனைகளோடு நாங்கள் இட்ட சில பதிவுகளை இங்கே தொகுத்து வழங்கலாம் என்று எண்ணம்.நம்ம வலைப்பூவில் நல்ல படம் எடுக்க பல்வேறு
பதிவுகள் இருந்தாலும்,போட்டியில் பங்கு பெறுபவர்களுக்கு குறிப்பாக உபயோகமாக இருக்கக்கூடிய சில பதிவுகளை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன்.
இந்த பதிவை நிரந்தர சுட்டியாக அளித்துவிட்டால் ஒவ்வொரு முறை போட்டி நடத்தும் போது எல்லோரும் பாத்துக்கலாம்!!
என்ன நான் சொலறது சரிதானே?? :-)

சரி..இப்போ பதிவுகளின் பட்டியலை பார்க்கலாம்.


நாம நம்மை சுத்தி பல அழகான விஷயங்களை பார்க்கறோம் ,ஆனா அத்தனையும் அதே அழகோடு படங்களில் பிடிக்க முடிவதில்லை..இந்த விஷயம் சம்பந்த்தமா சர்வேசன் ஒரு பதிவு போட்டிருக்காரு
பாருங்க..
நல்ல படம் எடுக்க ஒரு அட்வைஸு

நம்ம மெகாப்போட்டி முடிவடையும் சமையத்தில்,பல்வேறு தகவல்களோடு நம்ம ஜீவ்ஸ் அண்ணாச்சி போட்ட போஸ்ட் டிப்ஸ் டிப்ஸ் & மெகாப் போட்டி முடிய இன்னும் இரண்டே தினங்கள்...


அடிப்படை தகவல்கள் பலவற்றுடன் ஜீவ்ஸ் அண்ணாச்சியின் இன்னொரு பதிவு இங்கே

போட்டிகளில் வரும் படங்களில் காணப்படும் முக்கியமான குறைபாடுகளும் அதை களைய செய்ய வேண்டிய யோசனைகளும் கூடிய
புகைப்பட போட்டியில் பரிசு பெறுவது எப்படி??

ஜூலை 2007-இல் நாங்கள் நடத்திய முதல் போட்டியின் முடிவில்,முடிவின் கூடவே வெற்றியாளர்களை தேர்வு செய்த விதமும் , தேர்வு செய்யும்போது நடுவர்களின் மனநிலை குறித்தும் விரிவாக அலசி காயப்போட்ட
புகைப்பட போட்டி முடிவுகள் - ஜூலை படம்

படம் எடுக்கும் போது நமக்கு இருக்க வேண்டிய கண்ணோட்டம் பற்றியும், மற்றும் அடிப்படையாக படம் எடுக்கும்போது யோசிக்க வேண்டிய பல விஷயங்களோடு வெளிவந்த,கைப்புள்ள அண்ணாச்சியின்
க்ரூப் ஸ்டடீஸ் பண்ணலாம் வாங்க!


இது தவிர போட்டியின் முடிவில் படங்களுக்கு வரும் விமர்சனங்களை தொடர்ந்து வந்தாலே சில மாதங்களிலேயே உங்கள் படங்களில் பெரிய வித்தியாசத்தை காணலாம். போட்டியில் பங்கேற்று,நண்பர்களிடம் இருந்து பகிர்ந்து/கற்றுக்கொண்டு குருவுக்கு மிஞ்சிய சிஷ்யனாய் வெளுத்து கட்டும் புகைப்பட ஆர்வலர்கள் பலரை இந்த குழுமம் பார்த்துள்ளது.

போட்டியின் தலைப்புக்கு ஏற்றார்போல் சாதாரணத்தை தாண்டி கண்ணோட்டத்தில்,ஒளியோட்டத்தில் என எதிலாவது சிறப்பு இருப்பது போல் ஒரு படத்தை அனுப்ப வேண்டும் என்ற உத்வேகம் இருந்தாலே பாதி கிணறு தாண்டினாற்போலத்தான் :)

அனைவரும் மேன்மேலும் சிறந்த படங்கள் எடுத்து இந்த கலையில் கற்றுத்தேர வாழ்த்துக்கள்..

வரட்டா... ;)


Monday, December 15, 2008

நிழல் தரும் வெளிச்சம்

வழமைப் போலவே இந்த மாதப் போட்டிக்கும் அசத்தலான படங்கள். பங்கேற்கும் அனைவருக்கும் நன்றி மற்றும் வாழ்த்து.நிழல்கள் மூலம் ஓளியின் பல விஷயங்கள் அறிய முடியும், ஓளியின் திசை, அளவு, கருப்பொருளில் இருந்து ஒளியின் தூரம் அனைத்தும்.


முதலில் ஒளியின் திசை.

இதை கணடறிவது மிக எளிது. நிழலில் இருந்து கருப்பொருளை ஒரு நேர்க்கோட்டில் இணைத்து, அதை தொடர்ந்தால், ஒளியின் இருப்பிடத்தை கண்டுபிடித்து விடலாம். உதாரணதிற்கு வாசியின் இந்தப் படம்.



கோப்பையின் நிழலை, கோப்பையோடு இணைத்தால், சூரியன் இருக்கும் திசை அறியலாம். இந்தப் படத்தில் சூரியன் கோப்பையின் இடது மேல் மூலையில் இருக்கிறார்.

சரி, ஒவியாவின் இந்தப் படத்தில் இரண்டு நிழல் இருக்கே ?


அப்படி என்றால், கருப்பொருள் இரண்டு விளக்குகளால் ஒளியூட்டப் பட்டு இருக்கிறது என்று பொருள்.


ஒளியின் தன்மை.
நிழலின் தன்மை, ஒளியின் தன்மையை எடுத்துக்காட்டும். நேரடி விளக்குளால் ஒளியூட்டப்பட்டு இருந்தால், நிழல் தெளிவாக வரையறுக்கப் பட்டு இருக்கும். உதாரணதிற்கு
T Jay வின் இந்தப் படத்தில்,



நிழல்கள் மிகத் தெளிவாக இருப்பதை பார்க்கலாம். இது நேரடி விளக்கு வெளிச்சத்தில் எடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.

ஆனால் இந்தப் படத்தில்



நிழல்கள் தெளிவில்லாமால் இருக்கு. இது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட, சிதறடிக்கபட்ட வெளிச்சத்தின் மூலம் கத்திரிக்கள் ஒளியூட்டப்பட்டு இருக்க வேண்டும்.


ஒளியின் தூரம்.
கருப்பொருளில் இருந்து விளக்கின் தூரத்தை , படத்தில் கருப்பொருளில் இருந்து வெளிச்சம் எவ்வளவு விரைவில் மறைகிறது என்பதின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.வெளிச்சம் விரைவில் மறைந்து விட்டால், விளக்கு , கருப்பொருளின் மிக அருகில் இருக்கு என்றுப் பொருள், இல்லை எனில் தூரத்தில் இருக்கு என்று தெரிந்துக் கொள்ளலாம்.

இந்தப் படத்தை பாருங்கள். என்ன தவறு இதில் ?




நிழல்களை வைத்துப் பார்த்தால், சூரியன் படத்தில் இருப்பதை விட இன்னும் பல மடங்கு மேலே இருக்க வேண்டும். பிற்சேர்க்கையில் சொதப்பிவிட்டார்கள் என்று நன்றாகத் தெரிகிறது.



மற்றவை அடுத்த இடுகையில்.....

Thursday, December 11, 2008

நிழலை பிடிப்போமா !!

முதல் முறையா "நிழல்" Shadow அப்படீங்கிர சொல்லை எங்க கேட்டீங்கன்னு உங்களுக்கு நினைவிருக்கா.. அனேகமா நாலாவதோ - அஞ்சாவதோ படிக்கும்போது இருக்கலாம். கடிகாரங்கள் கண்டுபிடிக்கிரதுக்கு முன்னால் மனிதன் நிழலை வச்சுத்தான் நேரத்தை தெரிஞ்சுகிட்டான்னு ஸையன்ஸ் டீச்சர் சொன்னது ஞாபகம் வருதா..? அந்த கட்டத்துக்கப்புறம் நாம நிழலுக்கு முக்கியத்துவம் குடுக்கிரதுக்கு மறந்தது மட்டும்மில்லாமல் நிழலை ஒதுக்கவே ஆரம்பிச்சுட்டோம். அதுவும் முக்கியமா சொல்லணும்னா.. புகைப்படங்கள் எடுக்கும்போது "நிழல் வராம ஜாக்கிரதையா " படம் எடுக்கிரதிலேயே இருப்போம்.இதுக்காக குனிஞ்சு வளைஞ்சு ஸ்டூல் மேறே ஏறின்னு பல சர்க்கஸ் பண்ணியிருக்கோம். ஒரு கட்டத்துக்கப்புறம் நிழலின் தனித்தன்மைய்யை நாம் கவனிக்க விட்டுவிட்டோம்.

சின்னப்பிள்ளையிலே பெட்ரோமாஸ் வெளிச்சத்திலே விரலால் வித்தை காட்டி காக்கய் - நாய் - மான் - பறவை அப்படீன்னு விளையாடினது நினைவிருக்கா? ( இப்போ யாரு இந்த மாதிரி விளையாடராங்க.. அதான் எல்லாருடைய வீட்டிலேயும் UPS இருக்கே !) இந்த மாத போட்டி உங்களுக்கு மறந்துபோன அந்த க்ஷணங்களை மறுபடி enjoy பண்ணரது ஒரு opportunity தருவது மட்டுல்லாமல் அதை document பண்ணவும் ஒரு வாய்ப்பு தந்திருக்கு. ஆக நிழலை எப்படி நிஜமாக சித்தரிக்கலாம்ன்னு பார்க்கலாமா ?

பகலில் நிழலை படம் எடுக்கணும்னா சூரியனை விட ஒரு பிரமாதமான light source கிடையாது. காலை & மாலையிலே விழும் நிழல் கொஞ்சம் நீளமா இருக்கும். அந்த மாதிரி நேரத்திலே எடுக்கபட்ட படம் இது மாதிரி இருக்கும்.. (Dil Chahtaa hai -- படத்திலே கூட இது மாதிரி வரும்)


கொஞ்சம் வித்தியாசமா சிந்திச்சீங்கன்னா இப்படி கூட வித்தை காட்டலாம்


கொஞ்சம் உங்களை சுத்தி பாருங்க.. நாம இருப்பது காண்ட்ரீட்- காடு ன்னு எல்லாரும் தொண்டை கிழிய கத்தறாங்க.. அட இந்த காண்ட்ரீட் காட்டிலே கூட நிழல் என்னமா கவிதை எழுதியிருக்கு பாருங்க.



எங்களுக்கெல்லாம் பள்ளிக்கூடத்திலே "Arts & Crafts" ன்னு ஒரு வகுப்பு நடத்துவாங்க. காகிதத்தை டீச்சர் சொல்லராமாதிரி மடிச்சு ஒரு ஓரமா மட்டும் வெட்டினா.. விதவிதமா Pattern கிடைக்கும். முக்கியமா இது க்ரிஸ்துமஸ் / நவராத்தி நாட்களிலே சொல்லித்தருவாங்க. தோரணம் தோரணமா தொங்க விடுவோம். ஆனா இவர் கொஞ்ச வித்தியாசமா இந்த மனிதச்சங்கிலியோட நிழலை எப்படி பின்னியிருக்கார்ன்னு பாருங்க. ஒருவேளே cardboard லே பண்ணினா.. இப்படி தான் இருக்குமோ !!


எல்லாரும் Morning Walk போவீங்க… இல்லைனா.. Evening Walk போவீங்க.. இன்னைக்கி கொஞ்சம் வித்தியாசமா Afternoon walk போயிட்டுவாங்க. அப்படி நடக்கும்போது செடி, கொடி, மாடு, மனுஷன் நிழல் "சுவர் (wall) மேல்" எப்படி இருக்கு ன்னு கூர்ந்து கவனிக்கணும். ஏன்னா.. மத்தியான நேரத்தில் விழும் நிழல் Shap மட்டுமல்லாது.. ரொமப்வே துல்லியமா இருக்கும். உதாரணத்துக்கு கீழே இருக்கும் படத்தை பாருங்க. இலையின் வடிவம் மட்டுமில்லை.. நடு நடுவிலே இருக்கும் strands கூட என்ன துல்லியமா இருக்கு. ரெண்டு அடி தள்ளி நின்னு பார்த்தா.. இந்த படத்துக்கு ஒரு Post Card லுக் இருக்குன்னு நான் நினைக்கறேன்


அட, நிழல்னா கறுப்பாத்தான் இருக்கும்ன்னு யாருங்க சொன்னது. இங்க பாருங்க.. நிழலுக்குள் வெளிச்சம்


இன்னொண்ணும் சொல்லறேன்.. நல்ல கும்மிருட்டில்லே வெறும் ஒரு அகல் விளக்கு மட்டுமே வச்சு கூட நிழலை படம் எடுக்கலாம். அப்படி எடுத்த படம் தான் இது. எங்க விளக்கை வைக்கறீங்க.. எப்படி உருண்டு புரண்டு படம் எடுக்கப் போறீங்கங்கிரது உங்க சாமர்த்தியம்


இன்னும் சொல்லணும்ன்னா.. இன்னிக்கி கார்த்திகை தீபம். இன்னைக்கி இரவு இருளும் ஒளியிம் கச்சிதமா இருக்கும். நிழலை படம் எடுக்க இதை விட ரம்யமான ஒரு set up கிடைக்குமா ன்னு எனக்கு சந்தேகம தான். நான் பாருங்க விளக்கெல்லாம் கூட ரெடி பண்ணிட்டேன். சூர்யாஸ்தமனம் ஆகணும், விளக்கை ஏத்தணும் , நிழலை படம் எடுக்கணும்.



முயர்ச்சி பண்ணுங்க... You will surprise yourself.

Saturday, December 6, 2008

மேக்கப்மேனாய் பொறக்க வேண்டியவன்.

முகத்தில் இருக்கும், பரு, தழும்பு, கீறல், தேமல், அனைத்தும் நீக்க, Clearasil, Fair & Lovely ன்னு செலவு செய்யாம, கிம்பில் சரி செய்வது பற்றி இங்கே.




மேக்கப் என்றால் உடனே பெண்கள்தானா என்கிற ஆணாதிக்க போக்கை மாற்ற , எடுத்துக்காட்டாய் வருபவர் அண்ணன் பசுபதி அவர்கள்.


படத்தை கிம்பில் திறந்து, லேயரை நகலெடுத்துக் கொள்ளுங்கள்.



Filters->Blur-> Gaussian Blur தேர்ந்து எடுங்கள்.




கிட்டத்தட்ட கண்கள் மறையும் அளவிற்கு, தேவையான Blur Radius தேர்ந்து எடுங்கள்




பசுபதி மங்கலாகி இருப்பார். இனி தேவை இல்லாத இடங்களில் இருந்து மேக்கபை அழிக்க வேண்டும். எப்படி என்று லேயர் மாஸ்க் பற்றி இந்த இடுகையில் இருக்கிறது.


ஒரு கருப்பு நிற லேயர் மாஸ்க் உருவாக்கிக் கொண்டு,


மேக்கப் தேவையான இடங்களில் ( கண், காது, முடி, உடை தவிர்த்த இடங்களில் ) வெள்ளை வண்ணம் அடிக்க வேண்டியதுதான்.




மேக்கப் அதிகமாய் இருப்பது போன்று தோன்றினால், லேயர் Opacity குறைத்துக் கொள்ளுங்கள்.

மாசு மருவற்ற சருமத்துடன் பசுபதி தயார்.













Monday, December 1, 2008

PiT டிசம்பர் 2008 புகைப்படப் போட்டி - அறிவிப்பு

வணக்கம் நண்பர்களே/நண்பிகளே,

ஒரு மாசம் போட்டிக்கு லீவு விட்டதுக்கு, கன்னா பின்னான்னு, எல்லாரும், எங்களை பிச்சு மேஞ்சுட்டீங்க. PiTஐ அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல, சில மாற்றங்கள் செய்யலாம் என்ற யோசனையின் அடிப்படையில் வந்த அறிவிப்பு அது. உங்களில் பலரின் கருத்தை அறியத் தந்தது அந்த அறிவிப்பு.
இனி, வரும் மாதங்களில் என்ன செய்யலாம், எப்படி செய்யலாம் என்று, புதிதாய், உபயோகமாய், உற்சாகமாய் PiTஐ எப்படி நகர்த்தலாம்னு, எல்லாரும் சேந்து அப்பாலிக்கா, பொறுமையா அலசலாம்.

இப்பாலிக்கா, இந்த மாத போட்டி என்னன்னு பாக்கலாமா?

போட்டிக்கு தலைப்புகள் என்ன வெக்கலாம்னு, உங்க கிட்ட ஐடியா கேட்டிருந்தோம். ஜாலியான பல தலைப்புகள் கிடைத்தன. ( நந்துவின், 'ஆமை' தலைப்பைத் தவிர, மத்ததெல்லாம் சூப்பர் என்று, இவ்விடத்தில், சூட்டிக்காட்டுவது, எனது தலையாய கடமை ஆகிறது ;) ). வாசி, வல்லிசிம்ஹன், உண்மை, Pmt, வென்னிலா மீரான், இலங்கேஸ்வரன், உங்கள் அனைவருக்கும் நன்னி.

வந்திருந்த தலைப்புகளை, அலசி ஆராஞ்சு, கலந்து யோசிச்சு, இந்த மாசப் போட்டிக்கான தலைப்பு 'உருவாக்கப்பட்டுள்ளது' :)

டிசம்பர் மாத போட்டித் தலைப்பு: நிழல்கள் ( shadows )

நிழல் தேட கெளம்பிட்டீங்களா?

பொறுங்க. போட்டிக்கான முக்கியத் தேதிகள், விதிமுறைகள் எல்லாம் பாத்துட்டு, பொட்டியத் தூக்கப் போங்க.

கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியவை:

* புகைப்படம் உங்களுடையதாக இருக்க வேண்டும. மற்றவரால் பிடிக்கப்பட்ட, உங்களை கவர்ந்த படம் போட்டிக்கு எடுத்துக்கப்படாது.

* டிசம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் உங்கள் புகைப்படத்தை pitcontests.submit@picasaweb.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும். மின்னஞ்சலில், தவறாமல், photos.in.tamil@gmail.com என்ற முகவரியை CC செய்யவும். (You must send the pic as an attachment. pls dont just send the URL. pls use your name as the file name. Example cvr.jpg, surveysan.jpg.. மடல் அனுப்பியதும், பின்னூட்டத்திலும் தெரிவிக்கவும். சரிபார்க்க உதவும்.)

* ஒரே ஒரு படம் தான் போட்டிக்கு அனுப்ப வேண்டும்.

* நன்கு முடிவு செய்தபின் படத்தினை அனுப்பவும். ஏனென்றால் படத்தை போட்டிக்கு அனுப்பிய பின், உங்கள் படத்தினை மாற்ற முடியாது.

* முக்கியமா, 15ஆம் தேதி வரைக்கும் காத்திருக்காமல், கூடிய விரைவில், படத்தை எடுத்து அனுப்பவும். அப்பதான், மத்தவங்களுக்கு அதை காட்சிக்கு வைத்து, அதன் நிறை குறைகளை எல்லோரும் அலசி ஆராய நேரம் கிட்டும்.

சரிதானே?
-------- -------- ---------- -------- -------- ----------
போட்டிப் படங்கள் இதுவரை

Click here for a thumbnail view.
தயவு செய்து, ஒவ்வொரு படங்களுக்கும், உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்! நன்றி!
-------- -------- ---------- -------- -------- ----------

மாதிரி படங்கள்...

source: danheller.com