Thursday, October 2, 2008

லேயர் மாஸ்க்

7 comments:
 
லேயர் மாஸ்க் பற்றி போன இடுகையில் ஒரு கேள்வி இருந்தது. அதை ஒரு எளிய எடுத்துக்காட்டுடன் இங்கே பார்க்கலாம். பிற்தயாரிப்பு பாடம்,
உதாரணதிற்கு ஒரு சிவப்பு வண்ண லேயர் உங்களிடம் இருக்கிறது.






அதன் மேல் ஒரு நீல வண்ண லேயர் இருக்கிறது.
Mode-> Normal என்று இருந்தால் சிவப்பு வண்ண லேயர் முழுவதும் மறைக்கப் பட்டு நீல வண்ணம் மட்டும் தெரியும்.




நீல வண்ணத்தின் சில பகுதிகள் உங்களுக்கு வேண்டாம் , அந்த இடத்தில் கீழே இருக்கும் சிவப்பு வண்ணம் வேண்டுமெனில் என்ன செய்யலாம் ?

இந்த இடுகையில் பார்த்தவாறு அழிப்பானைக் கொண்டு தேவை இல்லாத இடங்களை அழித்து விடலாம். அதை விட சிறந்த முறை லேயர் மாஸ்க் உபயோகிப்பது.

நீல வண்ண லேயரில் இடத்தில் படத்தில் குறிக்கப்பட்டவாறு வெள்ளை வண்ண லேயர் மாஸ்க் உருவாக்கி கொள்ளுங்கள்.







லேயர் மாஸ்கில் வெள்ளை வண்ணம் அந்த லேயரை காட்டும், கருப்பு வண்ணம் அந்த லேயரை மறைக்கும்.

ஒரு கருப்பு நிற பிரஷ் கொண்டு லேயர மாஸ்கில் தேவையில்லாத இடங்களில் பூசி விடலாம். அந்தப் பகுதிகளில் நீல வண்ணம் மறைந்து கீழே உள்ள சிவப்பு வண்ணம் தெரியும்.




இதில் என்ன வசதி என்கிறீர்களா ?

அழிப்பானை கொண்டு செய்யும் முறையில் திருத்தங்கள் எளிதாக செய்ய முடியாது, உதாரணதிற்கு, வட்டப் பகுதிப் வேண்டாமெனில்,. வெள்ளை வண்ணம் கொண்டு அந்த இடத்தில் பூசி விடலாம். லேயர் மாஸ்கில் வெள்ளை வண்ணம் அந்த லேயரை காட்டும். படத்தை பாருங்கள் .





இந்த இடுகையில் உள்ள Selective Coloring அழிப்பான் இல்லாமல் லேயர் மாஸ்க் கொண்டு செய்வது எப்படி ?

இடுகையில் உள்ளவாறு கீழே வண்ணப் படம், அதன் மேல கருப்பு/வெள்ளைப் படம், கருப்பு/வெள்ளை லேயரில் ஒரு வெள்ளை நிற லேயர் மாஸ்க்.




கீழே உள்ள வண்ணம் தெரிய வேண்டிய இடங்களில் கருப்பு வண்ணம்.




அவ்வளவுதான் !

ஏதேனும் சந்தேகம் இருப்பின் பின்னூட்டத்தில் தெரியப் படுத்துங்கள்.

7 comments:

  1. எளிய விளக்கம். மிக்க நன்றி

    ReplyDelete
  2. எளிய விளக்கம். மிக்க நன்றி

    ReplyDelete
  3. நல்ல விளக்கம் ஆனந்த். நன்றி!

    ReplyDelete
  4. திவா , Anonymous

    நன்றி !

    ReplyDelete
  5. intha blog title paarthavudane.... pugai pada kalaikku mozhi enbathu unda nu ninaichen :D... aana ulla vanthu post padicha pinnadi than athoda unmaiyana artham therinjathu


    itz really a veryyyyyyy good work... Kudos and keep it up :)

    (English la paaratina feel pannuveengalo?? :) english la thodarnthu tamizh ezhutharathu kashtama irunthathala english konjam niraya irukkum)

    ReplyDelete
  6. இந்த layer mask என்ன சமாசாரம் னு நானும் ரொம்ப நாளா தெரிஞ்சிக்கணும்னு இருந்தேன். இப்போ தான் புரியவே செய்யுது. Good work.

    Truth

    ReplyDelete
  7. ஈசியா எப்படி சொல்றதுனு கஷ்டப்பட்டு யோசிப்பீங்களோ?

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff