Friday, October 24, 2008

கருப்பு சினேகா, கலரான காதை !!

27 comments:
 
இப்படி இருந்த சினேகாவை


இப்படி மாத்தப் போறோம்.




வண்ணப் படத்தில் இருந்து கருப்பு/வெள்ளைக்கு மாற்றுவது பற்றி ஏற்கனவே அறிந்து இருப்பீர்கள். இங்கே கருப்பு/வெள்ளை படத்தை வண்ணத்துக்கு மாற்றுவது பற்றி.


படத்தை கிம்பில் திறவுங்கள்.



முதலில் முகத்தின் வண்ணத்தை தேர்ந்துஎடுக்க வேண்டும். உதாரணத்திற்கு நான் இந்த அளவை எடுத்துக் கொண்டேன்.


ஒரு புதிய லேயரை உருவாக்கி அதை இந்த வண்ணத்தால் நிரப்புங்கள்.




இனி ஒரு கருப்பு லேயர் மாஸ்க் உருவாக்கிக் கொள்ளுங்கள்.




(இந்த இடுகையில் பார்த்தவாறு, கருப்பு லேயர் மாஸ்க் மறைக்கும், வெள்ளை காட்டும். )





ஒரு வெள்ளை பிரஷ் கொண்டு, முகத்தில் தீட்ட ஆரம்பியுங்கள். கண், உதடு, முடி ஆகியவற்றில் படாதவாறு, தேவைக்கு ஏற்ப, பிரஷ்ஷின் அளவை மாற்றி கொள்ளுங்கள்.



அடுத்து Mode Color மாற்றிக் கொண்டு,


உங்களின் இரசனைக்கு ஏற்ப Opacity மாற்றிக் கொள்ளுங்கள்.


வண்ணப் முகப் பூச்சுடன் சினேகா தயார்.

அடுத்து, உடைக்கு, நான் நீல வண்ணத்தை தேர்ந்து எடுத்துக்கொண்டேன்




பிண்ணனி மரங்களுக்கு கரும்பச்சை, உதட்டுக்கு கரும் சிவப்பு.






மேற்கூறிய அதே முறையில் வண்ணம் தீட்டி விட வேண்டியதுதான்.
முடிவில் எனது லேயர்கள் இப்படி இருந்தன.



கருப்பு வெள்ளை சினேகா, கலாராகி விட்டார் !






உங்கள் வீட்டில் இருக்கும் பழைய கருப்பு வெள்ளை படங்களுக்கு, கலரடித்துக் காட்டி, அசரவைய்யுங்கள்.

சர்வேசன் அண்ணாச்சிக்காக. இன்னொரு எடுத்துக்காட்டு !





பயிற்சிக்கு வேண்டுமானல் , மின்னஞ்சல் அனுப்புங்கள். கிம்பின் லேயர்களுடன் கூடிய சினேகா படத்தை அனுப்பி வைக்கிறேன்.

27 comments:

  1. Savithri Super! ;)

    விவேக் பாணியில் படிக்கவும் :)

    "மேக்-அப் மேனா பொறக்க வேண்டியவன்"

    ReplyDelete
  2. சர்வே,
    //மேக்-அப் மேனா பொறக்க வேண்டியவன்"

    :)

    ReplyDelete
  3. கலக்கறீங்க An&. PIT posts-ல டாப் 10 posts பட்டியல் போட்ட, இது கண்டிப்பா டாப் தான்.

    ~உண்மை

    ReplyDelete
  4. அடடா, இத்தனை நாட்களாக இந்த இந்தப் பற்றி தெரிந்துக் கொள்ளாமல் இருந்துவிட்டேனே. அருமையான முயற்சி. வாழ்த்துகள். பாராட்டுகள். (இரண்டும் ஒன்று தானோ?)

    மோகன்

    ReplyDelete
  5. //கருப்பு சினேகா, கலரான காதை !!"//

    இப்படிச் சொல்லிட்டு முழு உருவத்துக்கும் கலர் குடுத்தா எப்படி? :)

    ReplyDelete
  6. மீ டூ டிரையிங்க் :)))))))))))))

    ReplyDelete
  7. பார்த்துடுவோம்!!!!

    இனியாராச்சும் நம்ம புரொபைல் படத்தை பார்த்தா அப்படியே அசந்து போகணும்

    :))

    ReplyDelete
  8. அருமை

    இங்கேயும் fw பண்ணவும்

    alif007@gmail.com

    ReplyDelete
  9. எனக்கும் பார்வேர்டு பண்ணுங்க!

    (ஆக்சுவலா நான் என் போட்டோவை அனுப்பி வைக்கலாம்ன்னு முடிவு பண்ணுனேன் பிறகு எதாச்சும் ஏடாகூடமாகி நீங்க பதிவு விட்டுட்டே போய்டுவீங்களோன்னு பயந்துட்டேன்! நீங்களே அனுப்புங்க kadagam80அட் ஜிமெயில்க்கு

    ReplyDelete
  10. ஆனந்த் எனக்கும்.....

    ReplyDelete
  11. Super!!!

    சினேகாவோட தலை முடிக்கும் கலர் பண்ணியிருக்கலாமே? பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  12. Truth, பதிவு,
    நன்றி !

    ReplyDelete
  13. கொதஸ்
    ஏன் கடிக்கிறீர் இப்படி காதை !

    ReplyDelete
  14. மின்னல், ஆயில்யன், திவா,

    மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறேன். சரிப்பார்த்துக் கொள்ளுங்கள் !

    ReplyDelete
  15. நன்றி ஆனந்த்.
    இறக்கிட்டேன். விளையாடி பாக்கிறேன்.
    :-))

    ReplyDelete
  16. இந்த இணைப்பில் நான் கலர் மாத்திய படம் இருக்கு. பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள். நன்றி An&amp

    http://ooviya.blogspot.com/2008/10/blog-post.html

    ReplyDelete
  17. நீங்க gimp எந்த version use பண்றீங்க? opacity எனக்கு வரலையே.

    ReplyDelete
  18. Truth
    I use Windows/Gimp 2.6
    But Layer Opacity should work in any build.
    Its a very very basic layer property.

    could you please send me a snapshot of your layer window ?

    ReplyDelete
  19. நேரமே கிடைக்க மாட்டேங்குது. கலர் படத்தை கருப்பு வெள்ளையா மாத்தி பாக்கலாமா?
    :-))

    ReplyDelete
  20. நல்ல தெளிவான பாடம்.!

    ReplyDelete
  21. சார் கிம்பில் திறக்கவும் என்கிறீர்கள் கிம்ப் எங்கே உள்ளது?

    ReplyDelete
  22. //கிம்ப் எங்கே உள்ளது?

    www.gimp.org

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff