Friday, October 31, 2008

மாதாந்திர போட்டிகள் பற்றிய அறிவிப்பு

23 comments:
 
வணக்கம் நண்பர்களே. 'விளம்பரம்' போட்டிப் படங்களை பார்த்தபின், பெருமூச்சுடன், பல நாள் பொட்டிய தொடாம இருந்துட்டேன். :)
வெறும், 'படம் பிடித்தல்' என்ற நுட்பம் மட்டும் அல்லாமல், அதையும் தாண்டி, பயங்கரமான creativity (தமிழில்?) நம்மாட்கள் மத்தியில் இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

இப்படி கலக்குற ஆளுங்களுக்கு, அடுத்து என்ன தலைப்பை கொடுப்பது என்று வழக்கம் போல் எங்கள் குழுவில் கலந்தாலோசித்தோம்.
இந்த மாசத்துக்கு முன் வைத்த எல்லா போட்டிகளிலும், பெரும்பான்மையானோர், தலைப்பை பார்த்தவுடன், தலைப்புக்கு ஏத்தமாதிரி, தங்கள் கைவசம் உள்ள ஏதாவது ஒரு படத்தை டக்னு அனுப்பி வைப்பாங்க.

மெகா போட்டியிலும், 'விளம்பரம்' போட்டியிலும், மக்கள் பல பேர், இந்த போட்டிகளை சீரியஸா எடுத்துக்க ஆரம்பிச்சிருக்காங்கன்னு தெரியுது.

ஒவ்வொருத்தரும், ஒவ்வொரு மாதமும், மெருகேறி மெருகேறி, தங்கள் படங்களை, ஒரு லெவலுக்கு கொண்டு போயிட்டாங்க.

இப்படி கலக்குற உங்களுக்கு, இனி வரும் மாதங்களில், மேலும் பல Creativeஆன தலைப்புகளை வைக்கலாம்னு இருக்கோம்.

இதுக்கு தயாராகிக்கொள்ளவும், போட்டிகளை செம்மை படுத்தவும், இனி வரும் மாதங்களில், PiTன் புகைப்படப் போட்டிகள், இரண்டு மாதத்திரற்கு ஒருமுறை நடத்தப்படும்.
அடுத்த போட்டிக்கான அழைப்பு, நவம்பர் மாத இறுதியில் வெளிவரும்.

போட்டிக்கு இடைப்பட்ட நாட்களில், வழக்கம் போல், பாடங்களும், நுட்பங்களும், செய்திகளும், பகிர்வுகளும், கலந்து கொடுக்கப்படும்.

PiTன் போட்டிகளில் இதுவரை வெற்றி பெற்ற நண்பர்கள் அனைவரும், வெற்றிப் படங்களை எப்படி எடுத்தீங்கன்னு, ஒரு behind-the-scenes விளக்கத்தை எழுதி photos.in.tamil at gmail.comக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வரும் விளக்கங்களை, 'இந்தப் படம் எடுப்பது எப்படி?" என்ற தொடர் பதிவுகளாய் தொகுக்கலாம் என்று முடிவு.

இந்த வரிசையில், அமலின், vodka படத்தை பற்றிய விவரங்களை, முதலில் வெளியிடுகிறோம்.

வெற்றியாளர்கள், அனைவரும், இதில் கலந்து கொண்டு சிறப்பித்தால் எல்லோருக்கும் பயனுள்ளதாய் இருக்கும்.

ஓ.கேவா?

இனி வரும் போட்டிகள், creativeஆ இருக்கும்னு சொல்லியாச்சே, அதுக்கு, Creativeஆன தலைப்புகள் தேவை. உங்க ஆலோசனைகளை அள்ளி வீசுங்க.
கீழே உள்ள ஃபாரத்தில், தலைப்பு விவரங்களை தட்டி எங்களுக்கு அனுப்பி வைங்க!


நன்றி! நன்றி! நன்றி!

(belated)தீபாவளி நல்வாழ்த்துக்கள்! (பட உதவி: ஜீவ்ஸ்)

23 comments:

  1. யோசனை நல்லாத்தான் இருக்குறா மாதரி தெரியிது ஆனாலும் மனசுகுள்ளே 'இப்படித்தான் ஆப்பு வைக்கணும்னு இருக்கீங்களா?' அப்படின்னு சொல்லத்தோணுது. இந்த ஆடு களத்தின் தரம் மேலோங்க வாய்ப்பளித்த இந்த வலைப்பூவின் சொந்தக்காரர்களுக்கும் (இரத்தம் சொட்ட சொட்ட குத்துப்பட்டு ) ஆட்டத்தில் கலந்து கொண்டு கலக்கிய வீரர்களுக்கும் ஒரு சல்யூட் அடிக்கணும். GIMP ல் உள்ள வசதிகளை அடிக்கடி வலையேற்றினால் நீங்கள் நினத்த படி நடக்க வாய்ப்பிருக்கிறது. because GIMP is free so far. Of course contestants should try out themselves but little knowledge is always good. நீங்க கோடு போடுங்க வீரர்கள் ரோடு போடுவாங்க.

    ReplyDelete
  2. ரெண்டு மாசத்துக்கு ஒரு தரமா? அக்குறும்பா இல்லே! கடுமையா ஆட்சேபிக்கிறேன்.

    ReplyDelete
  3. இரண்டு மாதத்திற்கு ஒரு போட்டியா ரொம்ப போர் அடிக்கும் சார் தயவு செய்து உங்கள் முடிவுகளை மாற்றிக்கொள்ள முடியாதா இப்படி திடீர்னு கவுத்துட்டிங்களே.

    ReplyDelete
  4. // PiTன் புகைப்படப் போட்டிகள், இரண்டு மாதத்திரற்கு ஒருமுறை நடத்தப்படும்.//

    இதெல்லாம் கொடுமைங்க.மாசா மாசம் வெக்க முயற்சி செய்ங்க.

    ReplyDelete
  5. வண்மையாக கண்டிக்கிறேன். இரண்டு மாதத்திற்க்கு ஒரு தடவையா அப்போ பதிவும் இரண்டு மாதத்திற்க்கு ஒரு பதிவா? நானெல்லாம் போட்டிக்குதான் பதிவே போடுறேன். அதுவும் போச்சா?. மாதத்திற்க்கு ஒரு முறை கேமராவ ஆவலோட தூக்கிட்டு திரியரதும் போச்சு. இருந்தாலும் ஒரு ஸ்மைலி போட்டுக்குறேன் :) நல்லா இருங்க.

    ReplyDelete
  6. வணக்கமுங்க.இப்ப ஒண்ணாந்தேதி காலை நேரம் மணி 2.15.புதுசா தலைப்பு என்னன்னு வந்து பார்த்தா நல்லாத்தேன் தலைப்பு வச்சிருக்கீங்க 2 மாசத்துக்கு ஒருமுறைன்னு.நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லுங்க:)

    ReplyDelete
  7. 2 months is a very long period for any amount of creativity. :-)
    pls dont slow down the pace.

    nithya balaji

    ReplyDelete
  8. ennathu... maasa maasam illaya?? enna koduma surveysan ithu....title ka panjam.... aduchoodanga maasa maasam... veriyoda irukkan... evalavo pandreenga itha panna maateengala??

    -suresh babu

    ReplyDelete
  9. //இரண்டு மாதத்திற்க்கு ஒரு தடவையா அப்போ பதிவும் இரண்டு மாதத்திற்க்கு ஒரு பதிவா? நானெல்லாம் போட்டிக்குதான் பதிவே போடுறேன். அதுவும் போச்சா?. மாதத்திற்க்கு ஒரு முறை கேமராவ ஆவலோட தூக்கிட்டு திரியரதும் போச்சு.//

    முற்றிலும் உண்மை,

    மாத மாதம் நடாத்த முயற்சிக்கவும்.

    நன்றிகளுடன்
    T Jay

    ReplyDelete
  10. //ஒப்பாரி said...

    வண்மையாக கண்டிக்கிறேன். இரண்டு மாதத்திற்க்கு ஒரு தடவையா அப்போ பதிவும் இரண்டு மாதத்திற்க்கு ஒரு பதிவா? நானெல்லாம் போட்டிக்குதான் பதிவே போடுறேன். அதுவும் போச்சா?. மாதத்திற்க்கு ஒரு முறை கேமராவ ஆவலோட தூக்கிட்டு திரியரதும் போச்சு. இருந்தாலும் ஒரு ஸ்மைலி போட்டுக்குறேன் :) நல்லா இருங்க.//

    நானும் அதே ஒப்பாரியைப் பாடுகிறேன்.. :((

    ReplyDelete
  11. //நானும் அதே ஒப்பாரியைப் பாடுகிறேன்.. :((// me 2 :)

    ReplyDelete
  12. நல்லா வாய்ல வருது வார்த்தைல்லாம்...

    நீங்க பாட்டுக்கு சும்மா கிடந்தவனல்லாம் உசுப்பேத்திவிட்ருவீங்க. அவனவன் பைத்தியம் புடிச்சு திரியறான். மாளாத காச கொடுத்து கேமராவும் லென்சுமா வாங்கிகிட்டு...

    நீங்க பாட்டுக்கு ரெண்டு மாசத்துக்கு ஒருதடவைதான் போட்டின்னா? அந்த 15 நாள் மட்டும்தான் அந்த சப்ஜெக்ட் பத்தி யோசிக்கறோம். அதுக்கு முன்னடியோ பின்னாடியோ இல்ல.

    அய்யா உங்க எல்லாருக்கும் இருக்கும் வேலைக்கு மத்தில இது தொல்லைதான் ஒத்துகிறோம். ஆனா வேற வழியில்லைங்க. மாச ஒருதரம் வெச்சுதாங்க ஆவனும்.அதுக்கு என்ன பண்ணனுமோ அத யோசிங்க. நான் கூட பர்சனலா ரெண்டு மூணு யோசனை சொன்னேன்.

    ஆனா அதெல்லாம் முடியாது ரெண்டு மாசத்துக்கொருதபாதான்னு சொன்னா....


    மறுபடியும் சொல்றேன் நல்லா வந்துடும் வாய்ல. நாங்கள்ளாம் மோசமானவய்ங்க

    ReplyDelete
  13. ஐயா சாமி ,.. என்னங்க இது ..சின்ன புள்ளை தனமா இருக்கு ,, நான் எல்லாம் எதுவும் போட்டோ அனுப்பாட்டியும் மாசம் முதல் ஆனா பெரிய photographer கணக்கா கேமராவை எடுத்துக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கேன் , அதிலும் ஆப்பு


    நாட்டமை கொஞ்சம் தீர்ப்பை மாத்தக்கூடாதா ....

    ReplyDelete
  14. என்ன கொடுமடா இதுனு இப்போ தான் சரவணன் கிட்ட கேட்டுட்டு வரேன். மாசத்துக்கு ஒன்னே கம்மினு நெனைச்சிக்கிட்டு இருக்கேன் இதுல ரெண்டு மாசத்துக்கு ஒன்னா?
    யோவ், blog மேல இருந்த இண்ட்ரெஸ்டே இந்த blog பாத்துத்தான்யா வந்திச்சு. இப்படி சொன்னா வேலைக்காகாது. ஆக உங்களுக்கு ரெண்டு ஆப்ஷன்ஸ் சொல்றேன்.
    1) மாசத்துகு ஒரு போட்டி வெய்யிங்க.
    இல்லனே
    2) மாசத்துகு ரெண்டு போட்டி வெய்யிங்க.

    ரெண்டுல ஒன்ன சூஸ் பண்ணின உங்களுக்கு நல்லது. இல்லேன ஆட்டோல ஆளு வரும். சாக்கிறத.

    சரோஜா, சாமான தூக்கி ஆடோல போடு...

    ReplyDelete
  15. @நந்து,

    நாங்களும் ரௌடி தான். என்னையும் ஜீப்புல ஏத்திக்கோங்க... :)

    ReplyDelete
  16. :) என்ன கொடுமைங்க இது? இப்படி வூடு கட்டி அடிக்கறீங்க.

    எல்லோருக்கும், மேலும் உபயோகமா இருக்கும்படி இந்தப் பதிவை மாத்தும் முயற்சியில் எடுத்த ஒரு முடிவு இது.

    குழுவில், இதைப் பத்தி ஆராஞ்சுக்கினுகீறோம். அடுத்த அறிவிப்பு கூடிய விரைவில்.

    உங்க கருத்தும் (ஆட்டோ அனுப்புவதெல்லாம் கருத்ஸ் இல்லீங்கணா :) ), தலைப்பு ஐடியாஸும் அள்ளி வீசுங்க.

    நன்றி! :)

    ReplyDelete
  17. சொல்ல நினைத்ததை, நந்துவும் truth-ம் மிக மிக அழகாக சொல்லிட்டாங்க.
    //
    Truth said...
    யோவ், blog மேல இருந்த இண்ட்ரெஸ்டே இந்த blog பாத்துத்தான்யா வந்திச்சு. இப்படி சொன்னா வேலைக்காகாது. ஆக உங்களுக்கு ரெண்டு ஆப்ஷன்ஸ் சொல்றேன்.
    1) மாசத்துகு ஒரு போட்டி வெய்யிங்க.
    இல்லனே
    2) மாசத்துகு ரெண்டு போட்டி வெய்யிங்க.
    //
    ரொம்ப ரொம்பச் சரி!

    கொஞ்சம் பாத்து செய்யிங்க நண்பர்களே!!

    ReplyDelete
  18. ஆட்டோவா ஸ்டாப் பண்ணியாச்சு. சில பல டாபிக்ஸ் சஜஸ்ட் பண்ணி இருக்கேன், பாத்து பண்ணுங்க பாஸு

    ReplyDelete
  19. தலைப்புகளை அள்ளி வீசியதுக்கு நன்னி! நன்னி! நன்னி!

    ReplyDelete
  20. இந்த மாதமாவது போட்டி இருக்கா? சதி செய்யாதீங்க மக்கா.

    ReplyDelete
  21. ஒப்பாரி, ஸ்டார்டர்ட் மீஜிக்!

    ReplyDelete
  22. // ஒப்பாரி said...

    இந்த மாதமாவது போட்டி இருக்கா? சதி செய்யாதீங்க மக்கா.//

    ஆமங்க இதுக்காவது பதில் சொல்லுங்க.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff