Monday, December 15, 2008

நிழல் தரும் வெளிச்சம்

13 comments:
 
வழமைப் போலவே இந்த மாதப் போட்டிக்கும் அசத்தலான படங்கள். பங்கேற்கும் அனைவருக்கும் நன்றி மற்றும் வாழ்த்து.நிழல்கள் மூலம் ஓளியின் பல விஷயங்கள் அறிய முடியும், ஓளியின் திசை, அளவு, கருப்பொருளில் இருந்து ஒளியின் தூரம் அனைத்தும்.


முதலில் ஒளியின் திசை.

இதை கணடறிவது மிக எளிது. நிழலில் இருந்து கருப்பொருளை ஒரு நேர்க்கோட்டில் இணைத்து, அதை தொடர்ந்தால், ஒளியின் இருப்பிடத்தை கண்டுபிடித்து விடலாம். உதாரணதிற்கு வாசியின் இந்தப் படம்.



கோப்பையின் நிழலை, கோப்பையோடு இணைத்தால், சூரியன் இருக்கும் திசை அறியலாம். இந்தப் படத்தில் சூரியன் கோப்பையின் இடது மேல் மூலையில் இருக்கிறார்.

சரி, ஒவியாவின் இந்தப் படத்தில் இரண்டு நிழல் இருக்கே ?


அப்படி என்றால், கருப்பொருள் இரண்டு விளக்குகளால் ஒளியூட்டப் பட்டு இருக்கிறது என்று பொருள்.


ஒளியின் தன்மை.
நிழலின் தன்மை, ஒளியின் தன்மையை எடுத்துக்காட்டும். நேரடி விளக்குளால் ஒளியூட்டப்பட்டு இருந்தால், நிழல் தெளிவாக வரையறுக்கப் பட்டு இருக்கும். உதாரணதிற்கு
T Jay வின் இந்தப் படத்தில்,



நிழல்கள் மிகத் தெளிவாக இருப்பதை பார்க்கலாம். இது நேரடி விளக்கு வெளிச்சத்தில் எடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.

ஆனால் இந்தப் படத்தில்



நிழல்கள் தெளிவில்லாமால் இருக்கு. இது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட, சிதறடிக்கபட்ட வெளிச்சத்தின் மூலம் கத்திரிக்கள் ஒளியூட்டப்பட்டு இருக்க வேண்டும்.


ஒளியின் தூரம்.
கருப்பொருளில் இருந்து விளக்கின் தூரத்தை , படத்தில் கருப்பொருளில் இருந்து வெளிச்சம் எவ்வளவு விரைவில் மறைகிறது என்பதின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.வெளிச்சம் விரைவில் மறைந்து விட்டால், விளக்கு , கருப்பொருளின் மிக அருகில் இருக்கு என்றுப் பொருள், இல்லை எனில் தூரத்தில் இருக்கு என்று தெரிந்துக் கொள்ளலாம்.

இந்தப் படத்தை பாருங்கள். என்ன தவறு இதில் ?




நிழல்களை வைத்துப் பார்த்தால், சூரியன் படத்தில் இருப்பதை விட இன்னும் பல மடங்கு மேலே இருக்க வேண்டும். பிற்சேர்க்கையில் சொதப்பிவிட்டார்கள் என்று நன்றாகத் தெரிகிறது.



மற்றவை அடுத்த இடுகையில்.....

13 comments:

  1. அருமையான விளக்கங்கள்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  2. good. ivlo matter irukkaa idhula ;)

    ReplyDelete
  3. நன்றி அனானி

    நன்றி சர்வே
    தீர்ப்பை "பார்த்து" சொல்லுங்க :)

    ReplyDelete
  4. நல்ல விளக்கம். மிச்சத்தையும் சொல்லுங்க.

    ReplyDelete
  5. புகைப்படத்திற்கான வெளிச்சங்களின் விளக்கங்கள் அருமை. இதர புகைப்படங்களின் விளக்கங்களையும் விரைவில் எதிர்பார்க்கின்றோம்.
    நன்றி.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  6. வணக்கம்,

    i am new to this blog.
    its great and proud to see a blog dedicated to photography in Tamil, conducting contest. The submissions are not less worthy... importantly the articles about macros, metering mode and night photography are wonderful and presented neatly.

    Actually this blog was referred by my colleague subramanian. i am very much thankful to him. and i feel sad for not able to take part in the contest as the date was closed yesterday itself.

    anyway i am eagerly looking for the next contest.

    All the best to the contestants.

    keep rocking.

    -பிரியதர்சன்

    ReplyDelete
  7. மிகவும் தேவையான பாடங்கள்.
    தொடர வாழ்த்துக்கள்.

    //நிழல்கள் மிகத் தெளிவாக இருப்பதை பார்க்கலாம். இது நேரடி விளக்கு வெளிச்சத்தில் எடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.//

    யன்னலால் வரும் நெரடி சூரிய ஒளியில் எடுக்கப்பட்டது

    நன்றி

    ReplyDelete
  8. ஏதோ புரிஞ்ச மாதிரி இருக்கு....
    ஆனா புரியலை :D

    kidding.

    good explanation. Its never too late to learn to APPRECIATE photography.

    தொடருங்கள். நன்றி.

    ReplyDelete
  9. நல்ல விளக்கம், தொழில் ரீதியான அணுகுமுறை. PP செய்யும்பொழுது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை. அலசலுக்கு நன்றி ஆனந்த்.

    வாசி

    ReplyDelete
  10. ஜீவ்ஸ், வேலன், பிரியதர்ஷன், சக்திபிரபா, T Jay, வாசி

    நன்றி.

    ReplyDelete
  11. நிழலை வெச்சு பாத்தா சரி. வெளிச்சத்தை வெச்சு பாத்தா எல்லாரோட இடது முன் பக்கமும் வெளிச்சம் இருக்கு. ஆனா நிழல காணோம்!

    ReplyDelete
  12. ஜியோமெட்டரி பாடம் படித்தாற்போல் உள்ளது. நல்ல விளக்கம்.

    ReplyDelete
  13. Ayya Supero Super, Padam yeduthavargalin thiramai Nandraha purikirathu. Athai vida neenga sollura kutti kutti visayangal periya alavula thirami velippada udaviya irukku. Vazhga umathju thondu.
    A.S.J.Aloysius

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff