Saturday, December 20, 2008

புகைப்பட போட்டியில் வெற்றி பெற..

3 comments:
 
வணக்கம் மக்களே!!
உங்களை எல்லாம் பாத்து எவ்வளவு நாள் ஆச்சு!! எல்லோரும் சுகமா இருக்கீங்களா?? :-)

நம்ம பதிவுல மாசா மாசம் நடத்தற போட்டிகளில் நிறைய படங்கள் பாக்குறோம். பாக்கும்போது நிறைய விஷயங்கள் சொல்லனும்னு தோணுது..ஆனா இதெல்லாம் ஏற்கெனவே பல்வேறு வேளைகளில் நாங்க இந்த வலைப்பதிவில் சொன்ன கருத்துக்கள் தான். அதுவும் நம்ம போட்டிக்கு நிறைய புதுப்புது வாசகர்களும் வருவதால் போட்டியில் வெற்றி பெறுவதற்கான யோசனைகளோடு நாங்கள் இட்ட சில பதிவுகளை இங்கே தொகுத்து வழங்கலாம் என்று எண்ணம்.நம்ம வலைப்பூவில் நல்ல படம் எடுக்க பல்வேறு
பதிவுகள் இருந்தாலும்,போட்டியில் பங்கு பெறுபவர்களுக்கு குறிப்பாக உபயோகமாக இருக்கக்கூடிய சில பதிவுகளை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன்.
இந்த பதிவை நிரந்தர சுட்டியாக அளித்துவிட்டால் ஒவ்வொரு முறை போட்டி நடத்தும் போது எல்லோரும் பாத்துக்கலாம்!!
என்ன நான் சொலறது சரிதானே?? :-)

சரி..இப்போ பதிவுகளின் பட்டியலை பார்க்கலாம்.


நாம நம்மை சுத்தி பல அழகான விஷயங்களை பார்க்கறோம் ,ஆனா அத்தனையும் அதே அழகோடு படங்களில் பிடிக்க முடிவதில்லை..இந்த விஷயம் சம்பந்த்தமா சர்வேசன் ஒரு பதிவு போட்டிருக்காரு
பாருங்க..
நல்ல படம் எடுக்க ஒரு அட்வைஸு

நம்ம மெகாப்போட்டி முடிவடையும் சமையத்தில்,பல்வேறு தகவல்களோடு நம்ம ஜீவ்ஸ் அண்ணாச்சி போட்ட போஸ்ட் டிப்ஸ் டிப்ஸ் & மெகாப் போட்டி முடிய இன்னும் இரண்டே தினங்கள்...

அடிப்படை தகவல்கள் பலவற்றுடன் ஜீவ்ஸ் அண்ணாச்சியின் இன்னொரு பதிவு இங்கே

போட்டிகளில் வரும் படங்களில் காணப்படும் முக்கியமான குறைபாடுகளும் அதை களைய செய்ய வேண்டிய யோசனைகளும் கூடிய
புகைப்பட போட்டியில் பரிசு பெறுவது எப்படி??

ஜூலை 2007-இல் நாங்கள் நடத்திய முதல் போட்டியின் முடிவில்,முடிவின் கூடவே வெற்றியாளர்களை தேர்வு செய்த விதமும் , தேர்வு செய்யும்போது நடுவர்களின் மனநிலை குறித்தும் விரிவாக அலசி காயப்போட்ட
புகைப்பட போட்டி முடிவுகள் - ஜூலை படம்

படம் எடுக்கும் போது நமக்கு இருக்க வேண்டிய கண்ணோட்டம் பற்றியும், மற்றும் அடிப்படையாக படம் எடுக்கும்போது யோசிக்க வேண்டிய பல விஷயங்களோடு வெளிவந்த,கைப்புள்ள அண்ணாச்சியின்
க்ரூப் ஸ்டடீஸ் பண்ணலாம் வாங்க!


இது தவிர போட்டியின் முடிவில் படங்களுக்கு வரும் விமர்சனங்களை தொடர்ந்து வந்தாலே சில மாதங்களிலேயே உங்கள் படங்களில் பெரிய வித்தியாசத்தை காணலாம். போட்டியில் பங்கேற்று,நண்பர்களிடம் இருந்து பகிர்ந்து/கற்றுக்கொண்டு குருவுக்கு மிஞ்சிய சிஷ்யனாய் வெளுத்து கட்டும் புகைப்பட ஆர்வலர்கள் பலரை இந்த குழுமம் பார்த்துள்ளது.

போட்டியின் தலைப்புக்கு ஏற்றார்போல் சாதாரணத்தை தாண்டி கண்ணோட்டத்தில்,ஒளியோட்டத்தில் என எதிலாவது சிறப்பு இருப்பது போல் ஒரு படத்தை அனுப்ப வேண்டும் என்ற உத்வேகம் இருந்தாலே பாதி கிணறு தாண்டினாற்போலத்தான் :)

அனைவரும் மேன்மேலும் சிறந்த படங்கள் எடுத்து இந்த கலையில் கற்றுத்தேர வாழ்த்துக்கள்..

வரட்டா... ;)3 comments:

 1. //உங்களை எல்லாம் பாத்து எவ்வளவு நாள் ஆச்சு!! //

  :)

  too many nails?

  ReplyDelete
 2. போட்டியின் தலைப்புக்கு ஏற்றார்போல் சாதாரணத்தை தாண்டி கண்ணோட்டத்தில்,ஒளியோட்டத்தில் என எதிலாவது சிறப்பு இருப்பது போல் ஒரு படத்தை அனுப்ப வேண்டும் என்ற உத்வேகம் இருந்தாலே பாதி கிணறு தாண்டினாற்போலத்தான் :)//

  simple but sure formula of success...

  ReplyDelete
 3. உண்மைதான் சார். இதுதான் எனது முதல் புகைப்படம்(போட்டியில் கலந்து கொள்வது). தாங்கள் தரும் குறிப்புகள் நீங்கள் சொல்வதுபொல் உபயோக மாக இருந்தது. வாழ்த்துக்கள். நன்றி.

  வாழ்க வளமுடன்,
  வேலன்.

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff