***வணக்கம் பிட் மக்கா! நலமா...
இன்றைய கட்டுரையில் நாம் போட்டோஷாப்பில் பதிவிறக்கம் செய்யப்பட்ட Action கோப்பினை போட்டோஷாப்பில் எப்படி இயக்குவது என பார்க்கலாம்.**
பொதுவாக நாம் செய்த ஒரு Processஐ மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவோ அல்லது நமக்கே ஒரு குறிப்பிட்ட வகையான Process ஐ திரும்பத்திரும்ப தேவைப்படும் தருவாயில் அதனை நாம் Action கோப்பாக போட்டோஷாப்பில் சேமித்துக்கொண்டு தேவையான போது அதனை இயக்கிக்கொள்வோம்.
Download Here

சரி இந்த கட்டுரையில் நான் உங்களுக்கு இலவச இணைப்பாக நான் உருவாக்கிய Sepia Tone Action ஐ வழங்குகிறேன்.
முதலில் இந்த Sepia Tone Action ஐ உங்களது கணினியில் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.Download Here
இப்போது நீங்கள் போட்டோஷாப்பை இயக்கவும்.ஏதாவது ஒரு படத்தை திறக்கவும். பின்னர் Window மெனு சென்று Action ஐ தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் Actions Properties ஐ கிளிக் செய்து பின்னர் Load Action என்பதை தேர்ந்தெடுங்கள்.
இனி நீங்கள் பதிவிறக்கம் செய்துகொண்ட என்னுடைய Sepia Tone Action ஐ தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.
பின்னர் இந்த Action ஐ ரன் செய்துகொள்ள நொடியில் Sepia Tone தயார்.
குறிப்பு :உங்களது ரசனைக்கேற்ப ஹைலைட்ஸ் மற்றும் ஷேடோஸ் ஐ Adjust செய்துகொள்ள ஏதுவாக Curves Adjustment layer ஐ இணைத்திருக்கிறேன், Final
Touch செய்துகொண்டு உங்களது படத்தினை மெருகேற்றிக்கொள்ளவும்.
அன்புடன்,
நித்தி ஆனந்த்
actoin கோப்புகளை உருவாக்குவது எப்படி?
ReplyDelete