அனைவருக்கும் வணக்கம்,
இம்மாதப் போட்டித் தலைப்பு: மார்கழி
மார்கழி மாதம் என்பதை எடுத்துக்காட்டக்கூடிய படங்களை போட்டிக்கு அனுப்பலாம். மார்கழி என்றதும் மழைதான் பொதுவாக நினைவுக்கு வரும். வெள்ளமும் வரலாம். மேலும், பண்டிகைகள் பலவும் இம்மாதத்தில் முக்கிய இடம் பெறுகின்றன. கிறிஸ்தவர்களாயிருந்தால் நத்தார், பௌத்தராயிருந்தால் போதி தினம், இந்துவாயிருந்தால் பஞ்ச கணபதி, கோலங்கள், பஜனை, இசை நிகழ்ச்சிகள், யூதாயிருந்தால் ஒளித்திருவிழா என பல விழாக்கள் மார்கழியில் இடம் பெறுகின்றன. எனவே, படத்தைப் பார்த்ததும் மார்கழியை நினைவுபடுத்தக்கூடிய படங்களை அனுப்பி வையுங்கள்.
எடுத்துக்காட்டுக்கு சில படங்கள் இங்கே:
#1
#2
#3
வழமையான போட்டி விதிமுறைகள் இங்கே.
போட்டி அறிவிப்பு தாமதமாகியதால், இம்முறை படங்கள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி 25 டிசம்பர் 2015

போட்டியில் பங்கு பெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete*மார்கழி என்றதும் மழைதான் பொதுவாக நினைவுக்கு வரும்*
ReplyDeleteமார்கழி மாதம் என்றால் பொதுவாக பனி தானே நினைவுக்கு வரும் ?? என்றாலும் கூட வெள்ளம் வரும் அளவுக்கு மழை வருமா ??
மார்கழியில் தென்னாசிய பருவப் பெயர்ச்சிக் காற்று (Monsoon of South Asia) மூலம் மழைதான் வரும், அதனால் வெள்ளமும் வரும், பனியல்ல.
Deleteபுரட்டாசியில் நாற்றுப் பரவினால் ஐப்பசி, கார்த்திகை மாத மழையால் யார் நன்றாக நீர் பாய்ந்து செழிந்து வளரும். மார்கழி மாதப் பனியில் கதிர் தலை காய்ந்து விளையும். தை மாதம் கதிர் அறுத்துப் பொங்கலிடுவார்கள்.
Deleteஐப்பசி மாதம் அடை மழை பெய்யும்; அடைச்ச கதவு திறக்காதபடி அடை மழை பெய்யும்.; கார்த்திகை மாதம் கன மழை பெய்யும் என்று பழமொழிகள் கூறுகின்றன.
மார்கழி பனியில்
மயங்கிய நிலவில்
ஊர்வசி வந்தாள்
எனைத் தேடி...
மற்றும்
"மாமர இலை மேலே..
மார்கழி பனி போலே..
பூமகள் மடி மீது நான் தூங்கவோ!"
ஆடியில காத்தடிச்சா ஐப்பசியில் மழையடிக்கும், ஆறுகொளம் ஊத்தெடுக்கும் அன்பு மகனே..
என்ற பாடல் வரிகளை நினைவு கூறுங்கள்...
ready..........
ReplyDeleteமார்கழி என்றால் முன்பனி
ReplyDeleteகார்த்திகை மாதம் போனால் கடும் மழை இல்லையே என்ற பாடல் வரி நினைவு கூறுங்கள்
sure sir
ReplyDelete