Monday, March 17, 2008

Selective Blurring ~ புகைப்பட மெருகேற்றல்

15 comments:
 
வணக்கம் நண்பர்களே!

தமிழில் புகைப்படக் கலைன்னு சொல்லிக்கிட்டு அப்பப்ப, இந்த ஆங்கில தலைப்புகள் வைக்கரது தவிற்க முடியாத ஒண்ணா ஆயிடுது. (என் எழுத்துப் பிழைகள் தனிக்கதை, அத இப்பதைக்கு லூஸ்ல விடுங்க).

இன்னிக்கு நம்ம எல்லாரும் கத்துக்கப் போர விஷயம் 'selective blurring' என்னும் டெக்னிக்கு.

ஒரு படத்தை எடுக்கலாம்னு முடிவு பண்ணியாச்சுன்னா, படத்தில் ப்ரதானமா எந்த விஷயம் பளிச்னு தெரியணும்னு முடிவு பண்ணிதான் படத்தை ஆரம்பிப்போம். SLR கேமரா வச்சிருக்கரவங்க, அந்த முக்கிய விஷயத்தை ஃபோக்கஸ் பண்ணி, சரியான mode எல்லாம் உபயோகித்து க்ளிக்குவாங்க.
உதாரணத்துக்கு ஒரு தோட்டத்தில் இருக்கும் பூவை படம் எடுக்கணும்னா, 'பூ' mode தெரிவு செய்துகொண்டு, படத்தை எடுத்தீங்கன்னா, கேமராவே பாதி வேலைய உங்களுக்காக செஞ்சுடும்.
அந்த பூவை எடுக்க தேவையான, aperture, ஷட்டர் வேகம் எல்லாம் நிர்ணயித்து, படத்தில் பூ பளிச் என்றும், பூவுக்கு பின்னாலும் முன்னாலும் இருக்கும் விஷயங்களை கொஞ்சம் out-of-focusல் மங்கலாக்கி எடுத்து விடும்.

உதாரணத்துக்கு நம்ம புகைப்பட வித்தகர் ஒப்பாரி எடுத்த ஒரு செஸ்-போர்ட் படம் பாத்தீங்கன்னா, படத்தில் ப்ரதானமா ராஜாவ எடுத்திருப்பாரு. மத்த வீரர்கள் எல்லாம் கொஞ்சம் மங்கலா தெரிவாங்க. அதனால, படத்தை பாக்கும்போது, உங்க கவனம் சிதராம, ஒப்பாரி என்ன காட்டணும்னு நெனச்சாரோ அங்கதான் உங்க பார்வை விழும்.

SLR இல்லாதவங்க இந்த விஷயத்தை கொண்டுவரது கொஞ்சம் சிரமம்தான். ஆட்டோ போக்கஸ் காமெரால படம் எடுத்தீங்கன்னா, இவ்வளவு கிட்டயிருந்து எடுக்கர படத்துல, எல்லா விஷயமும் போக்கஸ்ல வந்து பளிச்னு தெரியும். இந்த கவித்துவமான ரிசல்ட் கெடைக்கரது கஷ்டம்.
SLR வச்சிருக்கரவங்களும், வெளில எங்கயாவது படம் எடுக்கும்போது, அவசரத்துல சரியான 'mode' உபயோகிக்காமல் எடுத்துட்டா, இந்த DOF (depth of field) அழகு கிட்டாமல் போயிடும்.

அப்பதான் GIMP மாதிரி இணைய மென்பொருள் உதவியை நாடணும்.

உதாரணத்துக்கு நான் சமீபத்தில் 2007ல் எடுத்த ஒரு படத்தைப் பாருங்க. சும்மா அவசரத்துல எடுத்த படம். அழகான நாய் பக்கத்துல ரெண்டு அசிங்கமான கால். நாய் மட்டும் இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும். (படத்தை க்ளிக்கி பெருசா பாருங்க). இப்படி ஒரு படத்தை எடுத்தப்பரம் என்ன பண்ண முடியும்?


இங்கதான் gimp கிட்ட போகணும். இந்த படத்தை gimpல் திறந்துவிட்டு. 'கத்திரிக்கோல்' ஐக்கானை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
இப்ப என்ன பண்ணலாம்னா, நாயை சுத்தி கத்திரிகோலால், கோலம் போடர மாதிரி க்ளிக்கிட்டே வாங்க.
அதாவது, நாயின் சுற்றளவு மட்டும் கட் பண்ற மாதிரி, மார்க் பண்ணிக்கணும்.

முழுசா ஒரு ரவுண்ட் அந்த மாதிரி மார்க் பண்ணியதும், 'enter' அமுக்கி உங்க தெரிவை ஊர்ஜீதம் செய்யுங்கள்.
பக்காவா கட்டம் கட்டலன்னா, escape அடிச்சு, திரும்ப வேலைய ஆரம்பிங்க.

எல்லாம் ஒழுங்கா கட்டம் கட்டியதும், இப்போ ctrl-I அடிங்க.

இப்போ, Filter->Blur->Gaussian Blur தெரிவு செய்து, radiusல் 35/35 என்று அடித்து 'Ok'வை சொடுக்குங்கள்.

இப்ப என்னாகும்னா, நாயை சுத்தியுள்ள காட்சி, கொஞ்சம் out-of-focus ஆகி, blur ஆக காட்சிதரும். இதோ இப்படி. (படத்தை க்ளிக்கி பெருசா பாருங்க). இப்போ, படத்தின் கருப்பொருள் 'நாய்' பளிச்னும், மத்த சமாச்சாரம் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு மங்கலாயிடும்.

(ரெண்டு படத்துக்கும் பெருசா ஒண்ணும் வித்யாசம் இல்லன்னு மனசுல நெனச்சு சிரிக்கரவங்க, க்ளாஸ்லேருந்து கெட்-அவுட்).

இதே அடிப்படையில் தான், wallpaper எல்லாம் செய்யமுடியும். இதோ இப்படி. அத இன்னொரு நாள் சாவகாசமா பாக்கலாம்.


புரிஞ்சுதா? புரியாம தாவு தீருதா?
சரி, மேலே சொன்னதின் சுருக்கம் கீழே.

1) Open your pic in GIMP (or like tools)
2) choose the 'scissors' icon ( Scissors select tool)
3) click on the edge of your main object and start connecting the dots
4) once you complete your selection (1st dot and last dot are connected), press 'enter'
5) your selection will be highlighted with a boundary line
6) click ctrl+i (invert) to make the image outside your boundary as the primary object
7) click Filer->Blur->Gaussian Blur
8) enter 35/35 for the radius value and click OK ( you can choose a different value based on your needs)
9) your pic is ready

முயற்சி செய்து, உங்கள் 'selective blurred' படங்களை வலையேற்றுங்கள். வந்து மார்க் போடறேன். :)

மேலும், சில உதாரணங்கள் கீழே, என் கைவரிசையில்: (படத்தை க்ளிக்கி பெருசா பாத்தீங்கன்னாதான் மேட்டர் புரியும்). tour-guide ஆத்தா, முதல் படத்தில் பளிச்னு தெரிஞ்சாலும், மற்ற தலைகளும் கவனத்தை சிதறிடிப்பதால், ஆத்தாவைத் தவிர மற்றவைகளை ப்ளர் ஆக்கியாச்சு. அதேமாதிரி, விவேகானந்தரும் தடாகமும் 'பளிச்' என்று தெரிய, பின்னாலிருக்கும் சமாச்சாரம் ப்ளர் செய்யப்பட்டுள்ளது.



மீண்டும் சந்திப்போம்,


-சர்வேசன்

15 comments:

  1. சொல்ல மறந்த கதை -- இதே மேட்டர் இன்னும் professionalஆ பண்ண இத முயற்சி செஞ்சு பாருங்க
    Gimp Guru

    ReplyDelete
  2. ஜிம்ப் வைத்திருந்தும் இதெல்லாம் பண்ணிபார்க்கவில்லை,படம் மாட்டட்டும்,ஒரு வழி பண்ணிடமாட்டோம்.
    கெட் அவுட் என்று சொன்னதால் போகிறேன். :-))

    ReplyDelete
  3. மிக அருமையான பதிவு சர்வேசன் :)
    பக்கத்துல இருந்து பாடம் சொல்லித்தர்றது மாதிரியே செய்றீங்க.
    தொடரட்டும் உங்கள் பணி நண்பரே :)

    ReplyDelete
  4. ரொம்ப உபயோகமான பதிவு. GIMP வைத்திருந்தும் இதெல்லாம் பண்ணி பார்க்க நேரம் ஒதுக்குனதில்லை. இந்த மாதிரி அழகா யாராச்சும் சொல்லி கொடுத்தா வேலை ரொம்ப சுலபமாயிடும். நன்றி!

    ReplyDelete
  5. //கெட் அவுட் என்று சொன்னதால் போகிறேன். :-))//

    :) forgot to put the smiley there.

    ReplyDelete
  6. vivegandar onnum avvala pramadama theiryala.. may be background kku konjam importance thanthirukkalam. it looks odd

    ReplyDelete
  7. நன்றி அனைவருக்கும்.

    //vivegandar onnum avvala pramadama theiryala.. may be background kku konjam importance thanthirukkalam. it looks odd//

    pazhani, மிகச் சரி. விவேகானந்தர், அவசரத்தில் கட்டம் கட்டியது. முன்னாலிருக்கும் புல், blur இல்லாமல் இருந்திருக்கணும். அப்ப இன்னும் கொஞ்சம் இயற்கையா இருந்திருக்குமோ என்னமோ.

    ReplyDelete
  8. நல்ல பதிவு சர்வேசன்.

    ஆனா, PP செஞ்ச படங்கள்ல கொஞ்சம் artificial தனம் தெரியுதே... :-(

    ReplyDelete
  9. //pazhani, மிகச் சரி. விவேகானந்தர், அவசரத்தில் கட்டம் கட்டியது. முன்னாலிருக்கும் புல், blur இல்லாமல் இருந்திருக்கணும். அப்ப இன்னும் கொஞ்சம் இயற்கையா இருந்திருக்குமோ என்னமோ.//


    it is not just that alone

    check with original. you have blurred the subject which is in the same focal length.

    ReplyDelete
  10. நல்ல பதிவு.

    7) click Filer->Blur->Gaussian Blur

    இங்க Gaussian Blur பதில Motion Blur - zoom try பன்னா இப்படி கிடைகும்
    http://flickr.com/photos/balamurugan/1274524821/

    மேலே உள்ளது cs3ல பன்னது, GIMPலயும் பன்னலாம்

    ReplyDelete
  11. athi,

    //ஆனா, PP செஞ்ச படங்கள்ல கொஞ்சம் artificial தனம் தெரியுதே... :-(//

    ஹ்ம். ஆமாம். ஓவரா இந்த பிபி உபயோகிச்சா, கொஞ்சம் செயற்கையாதான் தெரியுது.

    தேவைக்கு ஏத்த மாதிரி செஞ்சுக்கணும். :)

    ReplyDelete
  12. photo pazhani,

    //it is not just that alone

    check with original. you have blurred the subject which is in the same focal length.///

    is it? i thought i left viveks alone.

    ReplyDelete
  13. photo pazhani,

    //it is not just that alone

    check with original. you have blurred the subject which is in the same focal length.///

    is it? i thought i left viveks alone.

    ReplyDelete
  14. நன்றி குட்டிபாலு.

    ReplyDelete
  15. இதே அடிப்படையில் தான், wallpaper எல்லாம் செய்யமுடியும். இதோ இப்படி. அத இன்னொரு நாள் சாவகாசமா பாக்கலாம்.

    -- ithu eppadi solli thanga pls --

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff