கருப்பு இரஜினி, ஒரு கூடை சன்லைட் பாட்டில், ஒரு வெள்ளைப் பெண்ணின் வண்ணம் வாங்கி கலராகி இருப்பார், அது மாதிரி வேற ஒரு படத்தில் இருந்து உங்களின் படத்துக்கு வண்ணத்தை மாற்ற முடியுமா ?

(வெள்ளைக்காரிய பார்க்காம, ரஜினியின் கண்ணாடியில் தெரியும் ரிப்பெள்டர் எவ்வளவு பெரிசு, கேமராவுக்கு எந்த கோணத்தில் அதை வைத்து இருக்கிறார்கள் என்று துல்லியமா பார்த்தீங்கன்னா, நீங்கதான்யா போட்டோகிராப்பிக்கு சரியான ஆளு ! )
வண்ணமயாமான ஒரு காட்சியை பார்த்து இரசித்து, அதை படமெடுத்து வீட்டுக்கு வந்து பெரிதாக்கி பார்த்தால், பல சமயங்களில், வண்ணங்கள் நீர்த்து.வெளிறிப்போய் , நாம் பார்த்த காட்சிதானா இது என்று பயந்துப்போகும் அளவிற்கு பேஸ்து அடித்து இருக்கும்.
பிறரின் சில படங்களைப் பார்க்கும் போது, "இவள் புடவை என்னதை விட வெளுப்பா?"
என ரின் அம்மிணிப் போல கடுப்பேறுவதும் நடக்கும். இதே மாதிரி வண்ணக்கலவை நமது படத்திலும் இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணத் தோன்றும். எண்ணுவதோடு இல்லாமல். அந்த வண்ணங்களை நமது படத்துக்கு கடத்தும் ஒரு எளிய வழி இங்கே.
இந்த முறை கிம்பில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். இதை போட்டோஷாபிலும் எளிதாகச் செய்யலாம்.
இலவசமாய் கிம்ப் கனி கிடைக்கும் போது காசு கொடுத்து வாங்கும் போட்டோஷாப் காய் எதற்கு ?
பல முறை சலவைக்குப் போட்டது போன்ற வெளுத்துப் போன எனதுப் ஒரு கடற்கரை படம்.

இராமராஜன் அளவிற்கு கலர் காட்டும் பரணியின் ஒரு கடற்கரை காட்சி இங்கே. பரணியின் வண்ணங்களை கடத்தலாம் இந்த உதாரணதிற்கு.

இந்த இரண்டுப் படங்களையும் கிம்பில் திறக்கவும்.

நமது வெளுத்துப்போன படத்தை தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். தேர்வு செய்யப் பட்ட படத்தின் மேல் பட்டை நீல நிறத்தில் இருக்கும் ( இது கூட எனக்கு தெரியாதா என்கிறீர்களா ? )
பிறகு Colors->Map->Sample Colorize தேர்வுச் செய்யுங்கள்

Destination இடத்தில் நமது படமும் , Sample இடத்தில் திருடப் போகும் படமும் இருக்கும்.

Get Sample Colors பொத்தானை அமுக்கினால, வண்ணங்கள் இடம் மாறும்.

அப்புறம் Apply , Close தான்.

கஷ்டப்பட்டு வண்ணங்களை காப்பி அடித்தப்பின் நமது சாயம் போனப் படம் "ஒரு கூடை சன்லைட்", தலைவர் மாறி கலர் மாறிப் போச்சு

இதே முறையில் வண்ணம் மாற்றிய வேறு ஒரு எடுத்துக்காட்டு. !

பின்(நவீனத்துவ) குறிப்பு 1:
அழகே, அழுக்கியே,
என் எண்ணத்தை எடுத்துக் கொண்ட எருமையே
என் வண்ணத்தை வழித்துக் கொண்ட வறுமையே
ன்னு வைரமுத்து அடுத்தப் படத்துக்கு பாட்டு படிக்கறாரேமே ?
பின்(நவீனத்துவ) குறிப்பு 2:
ஒரு கூடை சன்லைட் பாட்டுக்கு பயன்படுத்திய முறைக்கும், இந்த பதிவில் கூறப்பட்டுள்ள முறைக்கும் நேரடியாக எந்தத் தொடர்ப்பும் இல்லை. அது ஒரு எடுத்துக்காட்டாகவும். விளம்பரத்துக்காவும் மட்டுமே !

Good one!
ReplyDeleteExcellent,Let me try it.......
ReplyDeleteபேசாம படமே எடுக்காம புகைப்படம் 'செய்வது' எப்படின்னு போடுங்க. என்ன அக்குறும்புய்யா செய்யறீங்க....
ReplyDelete//(வெள்ளைக்காரிய பார்க்காம, ரஜினியின் கண்ணாடியில் தெரியும் ரிப்பெள்டர் எவ்வளவு பெரிசு, கேமராவுக்கு எந்த கோணத்தில் அதை வைத்து இருக்கிறார்கள் என்று துல்லியமா பார்த்தீங்கன்னா, நீங்கதான்யா போட்டோகிராப்பிக்கு சரியான ஆளு ! )/
அது என்னான்னு தெரியாம உத்து உத்து பாத்துக்கிட்டு இருந்தேன். இதான் மேட்டரா? :))
கொதஸ்
ReplyDeleteஎன்னதான் நம்ம ஐஸீ ( அதாம்பா, ஐஸ்வர்யா பச்சன்) அழகா இருந்தாலும், மேக்கப் போட்டுக்கிட்டுத்தானே வெளிய வராங்க. அதுமாதிரிதான்!
ஹிஹி.
ஏதோ எடுக்கிற ஒப்புக்கு சப்பான் படத்தை எல்லாம் இந்த மாதிரி மாத்திதான் வலையேத்த முடியுது.
ஒஹ், Gimp அவ்வளவு பெரிய தில்லாலங்கடியா?
ReplyDelete:)
ReplyDeleteinteresting. கலர் கடத்தல் லீகலா? :)
அருமையான பதிவு
ReplyDeleteஇங்கெ இன்னும் நிறைய உதாரண்த்தோட photoshop லே எப்படி செய்யரதுன்னும் சொல்லியிருக்காங்க்க
Wow... Gimp'ல இவ்வளவு matter பண்ண முடியுமா...!! கலக்கலான பதிவு!
ReplyDeleteP.S: அந்த பின்(நவீனத்துவ) கவிதையை படிச்சுட்டு கொஞ்ச நேரம் சிரிச்சுட்டு இருந்தேன்... :-)
Super. very detailed and useful infos.
ReplyDeletekudo's anand
கலக்கிப்புட்டீங்க. சூப்பரப்பூ ....
ReplyDeleteமிகவும் பயனுள்ளதாக இருக்கும் நம் அனைவருக்கும்.
தகவலுக்கும், விரிவான பதிவுக்கும் மிக்க நன்றி.