முதற் சுற்றுக்கு முன்னேறிய படங்கள் சில குறைகளுடன் இருந்ததால் முதல் மூன்றுக்குள் இடம்பெற முடியாமற் போய்விட்டன. பிரதானமான குறைகளாக குறித்த விடயத்தை (இலை) திசை திருப்பும் விடயங்கள், ஒளி அதிகம்/குறைவு, தெளிவு போதாமை என்பன காணப்பட்டன. சற்று முயன்றிருந்தால் இன்னும் அழகுபடுத்தியிருக்கலாம்.
குறுக்கேயிருக்கும் கொடி அழகைக் குறைக்கிறது. ஆயினும் பச்சை பின்புலத்தில் பச்சையற்ற இலையும் அதில் நீர்த்துளிகளும் அழகு. அதனால் சிறப்புக் கவனம் பெறுகின்றது.
சிறப்புக் கவனம் பெற்ற படம்: சத்யா
தெளிவு, வர்ணம் என்பன சிறப்பு. ஆயினும் முப்பிரிவுகள் விதியை (Rule of thirds) இன்னும் மேம்படுத்தியிருகக்லாம்.
தெளிவு, வடிவம் என்பன சிறப்பு. முப்பிரிவுகள் விதியை (Rule of thirds) இன்னும் மேம்படுத்தியிருகக்லாம்.
இரண்டாம் இடம்: செந்தில் குமார்
தெளிவு, ஒளி பயன்படுத்தப்பட்ட முறை என்பன சிறப்பு. அதலால் முதலாமிடம்!
முதலிடம் : விஸ்வநாத்
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்! அடுத்த போட்டிக்கு இன்னும் சிறப்பான படங்களை எதிர்பார்ப்போம்!!
வென்றவர்க்கு என் வாழ்த்துகள்..! :)
ReplyDeletecongrats to winners
ReplyDeletesuperb.
ReplyDeleteபோட்டோகிராஃபி குழுவினருக்கு, வணக்கம், இப்போது P&S வைத்திருக்கிறேன். நான் ஒரு எஸ்.எல்.ஆர் வாங்கலாம் என்றிருக்கிறேன். இப்போதைக்கு 55 எம் எம் லென்ஸ் இருந்தாலே போதும், எனது பட்ஜெட் 20000 , உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் செகண்ட் ஹேண்ட் கிடைத்தால் மகிழ்வுறுவேன். அல்லது சென்னையில் கேமராஸ்பாட் எனும் கடையில் புதிய கேனான் 1100டி லென்ஸுடன் 20000 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால் எனக்கு சந்தேகமாக இருக்கிறது. தெரிந்தவர்கள், சென்னையில் உள்ளவர்கள் விபரம் தரமுடியுமா? உங்களைத்தான் நம்பி எடுக்கப் போகிறேன். முகவரி, http://chennai.olx.in/canon-eos-1100d-with-18-55-lens-iid-529891220
ReplyDeleteஅந்த கடையின் செல்:
09840878518
தயவு செய்து பதில் சொல்லுங்கள்!!
அன்புடன்
ஆதவா.
9942183683
@anonymous.. அந்த கேமராவின் விலை(புதிது) அவர்கள் சொல்லும் விலைக்குள் தான் வரும்.. ஆனால் நீங்கள் கடைகளை பற்றி எங்களால் கூற இயலாது..எதுக்கும் போய் பாருங்க , பாக்கெட் உடைக்காம புதுசா இருந்தா வாங்குங்க..
ReplyDelete