Monday, August 19, 2013

உலகப் புகைப்பட தினம் - புகழ் பெற்றக் கலைஞர்கள் என்ன சொல்றாங்கன்னா..

13 comments:
 
*1
ஒளிப்படம்  என்பது எடுக்கப்படுவதில்லை. உருவாக்கப்படுகிறது” - அன்சல் ஆடம்ஸ்

An Apple a Day..


சிறப்பான புகைப்படங்களைக் கொடுக்க, எப்படி எடுத்தால் நல்ல படமாகும் என விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு பார்வையாளர் ஆர்வத்துடன் நம் படத்தை இரசிக்க வேண்டுமெனில் எதைச் சேர்த்தால் பலம், எதைத் தவிர்த்தல் நலம் என்கிற புரிதல் வேண்டும்.

*2. “நீங்கள் எடுத்த முதல் பத்தாயிரம் படங்களே உங்களது மோசமான படங்கள்” - ஹென்ரி கார்ட்டியர்-ப்ரிசன்

அதிர்ச்சியாகி விட வேண்டாம் எல்லாமே மோசமா என. பத்தாயிரம் என்பது ஒரு பேச்சுக்கு. இதுவரை நாம் எத்தனை முறை கேமராவை ‘க்ளிக்’கியிருப்போம் என்பதற்கு சரியான கணக்கு இருக்க முடியாதுதான். உத்தேசமாகத் தெரிந்திருக்கலாம். ஆனால் ஆயிரக்கணக்கான படங்களை எடுத்த பிறகே.. நமது படங்களை சரியான முறையில் அலசிப் பார்க்கிற திறமை நமக்கு வர ஆரம்பிக்கிறது என்பதாகக் கொள்ள வேண்டும். நாம் எடுத்த படத்தை நமதாக நினைக்காமல் மூன்றாம் நபராக நின்று விமர்சித்துப் பார்த்தால் குறை நிறைகள் தெரிய ஆரம்பிக்கும்.

நமது முதல் படத்தை சமீபத்தில் எடுத்த படத்தோடு ஒப்பிட்டு நோக்குகையில் முன்னேற்றம் தெரிகிறதா? எப்படி நமது முதல் சிலபடங்களை வெகுவாகு நேசித்தோம் என்பது நினைவில் உள்ளதா? இப்போதும் அவற்றை நேசிக்கிறோமா? அல்லது அவற்றை படங்களே அல்ல என இன்று ஒதுக்குகிறோமா? கேட்டுக் கொள்வோம் நம்மை நாமே.

# வர்ணங்கள் இரண்டு


*3
 “எல்லாவற்றிலும் அழகு இருக்கிறது, அதைக் கண்டுகொண்டு ஒரு படைப்பாளியாக அதைச் சிறப்பாகக் கொண்டு வருவதே சாதாரண படத்துக்கும் ஒளிப்படத்துக்குமான வித்தியாசம்” - மட் ஹார்டி

பெரும்பாலானவர்கள் தம்மைச் சுற்றியிருக்கும் அழகான விஷயங்களைப் பார்க்கவோ உணரவோ தவறி விடுகிறார்கள், யாரேனும் அதை காட்டித் தரும் வரை. உங்களைச் சுற்றி வரப் பாருங்கள். உங்கள் கணினியிலிருந்து கூட நகராமல் சன்னல் வழியே பார்க்கலாம். ஒரு தினசரிக் காட்சியையே வித்தியாசமாகப் புதுமையாகக் காட்ட முயன்றிடலாம். ஒரு விஷயம் ஒரு நொடி நம்மைக் கவர்ந்தால் மீண்டும் பார்க்கலாம்...

# ஒரு மழைக்கால மாலை.. என் சன்னலிலிருந்து


*4
“ எதுவுமே நடக்காது வீட்டிலேயே உட்கார்ந்திருந்தால். வெளியில் செல்லும் வேளைகளில் எப்போதும் கேமரா இருக்குமாறு பார்த்துக் கொள்வேன். என்னை சுவாரஸ்யப்படுத்தும் அந்தநேரக் காட்சி எதுவானாலும் படமாக்கிடுவேன்.” - எலியாட் எர்விட்

# பேரம்
உலகமே நாம் தீட்ட வேண்டிய சித்திரம் எனில் அந்தச் சித்திரம் பேசிட, எப்போதும் தூரிகையை, அதாவது கேமராவை கையோடு வைத்திருந்தல் அவசியம். இப்போது மொபைலிலேயே வசதி உள்ளது. எதையும் படமாக்கத் தவறிவிட்டோமே எனும் வருந்தும் நிலை வரக் கூடாது.

*5.
எனது எந்தப் புகைப்படம் என் மனதுக்குப் பிடித்தமானது? நாளை நான் எடுக்கப் போகிற ஒன்றே” - இமோகென் கனிங்ஹாம்

எப்போதுமே திருப்தி அடையக் கூடாது நாம் இதுவரை கடந்த வந்த பாதை மேல், படங்கள் மேல். நமது சிறந்தபடத்தை இனிதான் இந்த உலகுக்கு வழங்க வேண்டுமென்கிற எண்ணத்தோடு நிறுத்தாமல் தொடர்ந்து படமெடுத்தபடியே இருப்போம்......


*6
கடுமையான உழைப்புக்குத் தயாராக வேண்டும். யாராலும் தர முடியாத படங்களைத் தர சுற்றிலும் பார்க்கத் தொடங்க வேண்டும். இருக்கிற கருவிகளின் உதவியோடு சோதனை முயற்சிகளில் ஆழமாக இறங்க வேண்டும்.” - வில்லியம் ஆல்பர்ட் அலார்ட்

ஏன் ஒரு படம் சரியாக வரவில்லை என்பதை விளக்கக் காரணங்களைத் தேடுவதில் பயனில்லை. ஃப்ரெஞ்ச் புகைப்படவல்லுநரான கார்ட்டியர்-பிரிசன் ஃப்லிம் சுருள் கேமராவை வைத்து ஒரே ஒரு லென்சையே உபயோகித்து, ஒரே ஷட்டர் ஸ்பீடில், ஃப்ளாஷ் இல்லாமல் பிரமாதமான படங்களைத் தந்தவர்.

உங்களுக்கு காணக் கிடைப்பவை எல்லோரும் காணும் வாய்ப்பற்றவையாக இருக்கலாம். அதைப் பயன்படுத்துங்கள். மற்றவர் காணக் கொடுங்கள்.

எல்லோருக்கும் காணக் கிடைப்பவையாகவே இருக்கட்டும். அதையும் கொடுங்கள், ஆனால் உங்கள் கேமராப் பார்வையில்.


*7
“ நல்ல படம் ஒரு நகைச்சுவைத் துணுக்கைப் போன்றது. அதை விளக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் சிறப்பானதெனக் கொள்ள முடியாது ” யாரோ சொன்னது.

சிலநேரங்களில் படம் எடுக்கப்பட்ட கதை சுவாரஸ்யம் அளிப்பதோடு புதியதொரு கோணத்தில் மீண்டும் அதை இரசிக்க உதவும் என்பது உண்மைதான். ஆனால் பொதுவாக ஒரு படத்துக்கு எந்தக் கதையும் அவசியமில்லை. படம் அதுவாகவே பேச வேண்டும்.

# Trial

*8
கேமரா வ்யூஃபைண்டர் வழியாக நான் காண்கின்ற ஒன்று வழக்கமானதாகவே இருந்தாலும், ஏதாவது செய்வேன் அதை வித்தியாசப் படுத்த ” - கேரி வினோகிரான்ட்

எத்தனை தடவைகள் நினைத்திருப்போம் இது நல்ல படம்தான், ஆனால் ‘ஏதோவொன்று இதில் குறைகிறதே’ என்று, ‘எதையாவது செய்து இதை வித்தியாசப்படுத்தியிருக்கலாமோ’ என்று. சிலநேரங்களில் சில சிறிய விஷயங்கள் பெரிய வித்தியாசங்களை ஏற்படுத்த வல்லதாக இருக்கும். பரீட்சித்துப் பார்க்கத் தயங்கக் கூடாது.

 *9
“ஒரு வருடத்தில் பனிரெண்டு படங்கள் குறிப்பிடத் தக்கதாக அமைந்து விடுமானால் அதை நல்ல அறுவடை எனக் கொள்ளலாம்.” - ஆன்சல் ஆடம்ஸ்

புகழ்பெற்ற அமெரிக்கப் புகைப்படக் கலைஞரான இவர் எடுத்த கருப்பு வெள்ளைப் படங்கள் பலவும் காலண்டர்கள், போஸ்டர்கள், புத்தகங்களில் வெளியானவை. வருடத்தில் பனிரெண்டு என்பதே அவருக்குத் திருப்தி தரும் இலக்காக இருந்திருக்கிறது. வாங்க, நாமும் கடந்த ஒரு வருடத்தில் எடுத்த படங்களில் தேடிதான் பார்க்கலாமே. ஒரு பனிரெண்டு மற்றவற்றை விட சிறப்பானதாக மிளிராதா என்ன:)? அப்படியானால் நாமும் திருப்தி பட்டுக் கொள்ளலாம் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறோமென.

# நகரமயமாக்கல்

றுதியாக, ஒரு படத்தை மேம்படுத்துதல், எடிட் செய்தல் சற்று சிரமமான அல்லது நேரமெடுக்கும் ஒன்றாக இருப்பினும், பெரும்பாலானவருக்கு மிகுந்த திருப்தி தரக் கூடிய ஒன்றாகவே இருந்து வருகிறது.


சிறந்த படங்களை வழங்கும் நோக்கத்துடன் நம் பயணம் தொடரட்டும்.


புகைப்பட ஆர்வலர்கள், கலைஞர்கள் அனைவருக்கும்
PiT குழுவினரின்
உலகப் புகைப்பட தின நல்வாழ்த்துகள்!
***

13 comments:

  1. நல்வாழ்த்துகள் அனைவருக்கும்.
    "கேமிராக்களால் சிறந்த புகைப்படத்தை உருவாக்க முடியாது , ஆனால் மனிதனால் முடியும்". -போட்டோகிராபி தொடர்பான ஒரு புத்தகத்தில் படித்தேன்.

    ReplyDelete
  2. வணக்கம். தங்களுக்கு எனது உலகப் புகைப்பட தின நல்வாழ்த்துகள். உலகப் புகைப்படத் தினத்தை முன்னிட்டு தாங்கள் வழங்கிய இக் கட்டுரை காமிராவை முதன் முதலாக கையாளுவோருக்கும், இதுவரை பலவிதமாக கையாண்டவா்களுக்கும் மிகவும் பொருந்தியுள்ளது. வாழ்த்துகள். “நவோதயா” செந்தில் - புதுச்சேரி

    ReplyDelete
  3. பகிர்வும் படங்களும் அருமை...

    ReplyDelete
  4. படங்கள் ஒவ்வொன்றும் கலக்கல்...

    ReplyDelete
  5. படங்கள் அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. படங்களும் ஒவ்வொருவரின் பார்வையின் தொகுப்பும் அருமை...

    உலகப் புகைப்பட தின நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  7. கேமரா கையில் வந்தவுடன் , இந்த உலகம் அசிங்கம் என்று
    சொன்னதிலும் என் கண்கள் ஓர் அழகைத் தேடியது.... thanks to pit .....

    ReplyDelete
  8. ipdiyum photo edukkala engira vizhayame indha photos ellam parthu dan theriyudau.... super

    ReplyDelete
  9. Canon EOS 600d and Nikon d5100 in this two which is best for beginner landscape and travel photographer Please help me to find a good one

    ReplyDelete
  10. @joan george.. ரெண்டுமே நல்ல கேமரா தான்.. இதில் எது விலை கம்மியோ அதை வாங்கி சிறிது மிச்சம் செய்யலாம்.. நீங்கள் beginner என்பதால் இதை விட விலை கம்மியான canon 1100d அல்லது nikon d3100/3200 இதில் எதை வாங்கினாலும் நன்றாக இருக்கும்...

    ReplyDelete
  11. உலக புகைப்பட தினம்...............வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  12. உங்களால் பேசப்படுகிறது எனது புகைப்படங்கள்

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff