வணக்கம் பிட் மக்கா,நலமா?இன்றைய கட்டுரையில் நாம்,
Flickr, 500pix,
போன்ற தளங்களில் உங்களது படங்களை வலையேற்றம்
செய்வதற்க்கு முன்பாக உங்களது படங்களுக்கான
metadataவை போட்டோஷாப்பிலேயே சேர்த்துக்கொள்வது எப்படி என பார்க்கலாம். ***
** Metadata என்பது உங்களது படத்திற்கான காப்பிரைட், தலைப்பு, படத்தைப்பற்றிய குறிப்பு, உங்களது இணையதள முகவரி, உங்களை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி போன்ற தகவல்களை உங்களது படத்திற்குள்ளாகவே இணைப்பதேயாகும்.
( copyright, caption, keywords, URL, etc ).
Watermark என்பது உங்களது படத்தின்
ஒருபகுதியில் பார்வையில் தெரியும் ஆனால் metadata
என்பது உங்களது படத்தினுள்
ஒளிந்திருக்கும். உங்களது படம் இந்த உலகில் எந்த மூலைக்கு சென்றாலும் உங்களது metadataவும்
உடன் பயனிக்கிறது. (பேஸ்புக்
தளத்தை தவிர). சரி இனி கட்டுரைக்கு போகலாம்,
முதலில் உங்களது படத்தை போட்டோஷாப்பில்
திறந்துகொள்ளவும் உங்களது பிற்சேற்கைகளை முடித்துக்கொள்ளவும்.பின்னர் File>FileInfo செல்லவும்.
இதில் நமக்கு தேவையான tabகள்,
ஒன்று Basic மற்றொன்று IPTC,முதலில் basic tab சென்று உங்கள் படத்திற்க்கான
தலைப்பு, படத்தைப்பற்றிய உங்களது கருத்து, படத்திற்கான
copyright தகவல்கள் போன்றவற்றை நிரப்பிக்கொள்ளவும், இத்தகவல்களைப்பற்றி நான் விளக்கவேண்டிய அவசியமில்லை
நீங்களே எளிமையாக நிரப்பிக்கொள்ளலாம்.
இதில் Description
Writer என்னும் ஒன்றைப்பற்றி நான் விளக்க இருக்கிறேன்,அதாவது உங்களது படத்திற்க்கு பொறுத்தமான பிறரது வரிகளையோ அல்லது
கவிதையோ நீங்கள் Descriptionஆக கொடுக்கும்
பட்சத்தில் அவரது பெயரை Description
Writer என்பதில் அளிக்கவேண்டும். உதாரணமாக என்னுடைய படம் ஒன்றிற்கு சக நண்பரான திருமதி.ராமலக்ஷ்மியின் கவிதை
ஒன்றினை அவர்களது இசைவோடு நான் பயன்படுத்திக்கொள்வதாக இருந்தால் நான் இந்த Description Writer ல் கட்டாயம் அவர்களது பெயரை அளிக்கவேண்டும்.
அடுத்ததாக Keywords இதில் உங்களது படத்திற்கு பொறுத்தமான Tagsகளை
அளித்துக்கொள்ளலாம் இதில் ஒரு வார்த்தைக்கும்
அடுத்த வார்த்தைக்கும் Semicolons
அல்லது Commas அளிக்கவேண்டும்,மேலும் இரண்டு வார்த்தைகளை
ஒரே tag ஆக அளிக்க அடைப்பு குறியை பயன்படுத்தவேண்டும்.
உதாரணம் :
"nithi clicks"
அடுத்தது IPTC Tab: (The International Press Telecommunications Council)
இந்த tabல் நீங்கள் உங்களைப்பற்றிய
சொந்த விபரங்களை தெரிவிக்கலாம்,மேலும் இந்தப்படம் யாருக்காவது விலைக்கு தேவையென்றாலோ
அல்லது Editorial தொடர்பாக பதிப்பிற்க விரும்பினாலோ உங்களை எளிதாக தொடர்புகொள்வதற்கு
ஏதுவாக விபரங்கள் அளிக்கப்படவேண்டும்.
அவ்வளவுதாங்க
படத்தை அப்படியே சேமித்துக்கொள்ளுங்கள்.
இனி உங்களது படத்தை நீங்கள் விரும்பியவருக்கோ அல்லது இணையத்திலோ பகிரலாம்.இங்கு என்னுடைய படத்தை
நான் பிளிக்கர் இணையதளத்தில்
வலைஏற்றுகையில் நான் படத்திற்கு கொடுத்திருந்த
title, Description மற்றும் Keywords களை பிளிக்கர் தளம் தானாக எடுத்துக்கொண்டதைப்
பாருங்கள்!
பயன்படுத்திப் பாருங்கள்!
என்றும் அன்புடன்
நித்தி ஆனந்த்
நித்தி ஆனந்த்
Ramalakshmi, How did you get the red, blue, green blurred circles around the flame? *IN reference to the picture posted in Deepangal post*
ReplyDelete@ Anony,
ReplyDeletePl. refer this post: http://photography-in-tamil.blogspot.com/2013/12/bokeh.html
Sir...Could you please explain how to insert a Watermark(I want to insert my name in Tamil) in the photographs with Copyright symbol.....
ReplyDeleteUseful info thanks
ReplyDelete