பொதுவாக RAW வில் படம்பிடிக்கும் புகைப்படக்கலைஞர்கள் தங்களது பிற்சேர்க்கையையும் Camera
RAW எடிட்டரிலேயே செய்துகொள்வார்கள் எனவே Camera RAW எடிடரில் பணிபுரியும் பலரும் போட்டோஷாப்பில் அதிகம் பணிபுரியமாட்டார்கள். ***
** ஆனால் சில கலைஞர்கள் மெமரி கார்டில் இடமில்லையெனில் அவசரத்திற்கு தங்களது கேமராவில் JPG யில் வைத்து படம்பிடித்துக்கொள்வார்கள்.
** ஆனால் சில கலைஞர்கள் மெமரி கார்டில் இடமில்லையெனில் அவசரத்திற்கு தங்களது கேமராவில் JPG யில் வைத்து படம்பிடித்துக்கொள்வார்கள்.
ஆனால் பிற்சேர்க்கை செய்வதற்கு Camera RAW எடிட்டரிலேயே செய்ய விரும்புவார்கள்.சரி Camera RAW எடிட்டர் RAW கோப்புகளுக்குத்தானே JPG கோப்புகளை எப்படி RAW எடிட்டரில் எடிட் செய்துகொள்ளமுடியும் என கேள்வி எழுப்பினால் கண்டிபாக முடியும்.
நீங்கள் Lightroom வைத்திருந்தால் JPG கோப்புகளை கையாள்வதில் சிக்கல் ஒன்றும் இல்லை ஆனால் போட்டோஷாப் பயன்படுத்தும் பலர் Lightroom வைத்திருப்பது கிடையாது.
சரி நான் குறிப்பிடும்படி செய்தால் JPG கோப்புகளை RAW
எடிட்டரில் திறக்கலாம். முதலில் போட்டோஷாப்பை இயக்கவும்.பின்னர் File>Open As என்பதை அழுத்தவும் இப்போது உங்களது புகைப்படத்தை தேர்வு செய்துகொள்ளவும் .
பின்னர் File Format என்பதில் Camera RAW ஆப்ஷனை தேர்வுசெய்து பின்னர் Open என்பதை அழுத்த உங்களது JPG படம் Camera RAW எடிட்டரில் திறக்கும்.
போட்டோஷாப் CC பயனாளர்கள் இதுபற்றி கவலை வேண்டாம், நீங்கள் படத்தை போட்டோஷாப்பில் திறந்துகொண்டு பின்னர் Filter>Camera Raw Filter பில்டரை இயக்கினாலே போதும் படமானது கேமரா ரா எடிட்டரில் திறக்கும்.
நன்றி
அன்புடன் நித்தி ஆனந்த்
No comments:
Post a Comment
பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி