Tuesday, December 2, 2014

ரிங் லைட்

8 comments:
 


ணையத்தில் இந்த சுட்டியில்,
http://digital-photography-school.com/ultimate-diy-ring-light-project/  வீட்டில் நாமாகத் தயாரிக்கும் Ring Light பற்றி படித்தது  முதல் இம்மாதிரியான light செய்ய வேண்டுமென மிகவும் ஆசையாக இருந்தது. ஆனால் இது நம்மூரில் சாத்தியமா என சற்று யோசனை. மேலும் இதை செய்ய வேண்டுமெனில் என் கணவரின் உதவியை சற்றும் எதிர்பார்க்க முடியாது. வேலையில் மூச்சு விட மட்டுமே நேரம் அவருக்கு.  2 வாரத்திற்கு முன் முகநூல் நண்பர் "ராகேஷ்"  இம்மாதிரியான light -ஐ செய்திருந்தார். இதன் உதவியினால் அவர் எடுத்திருந்த புகைப்படங்கள் அருமையாக வந்திருந்தன. அவருடைய முயற்சி எனக்கு மிகவும்  நம்பிக்கை அளித்தது. சரி நாமும் செய்து பார்க்கலாம் என 1 வாரத்திற்கு முன்பு plywood கடைக்கு துணிந்து சென்று விசாரித்தேன்.  இது தான் முதல் படி, இதோ 1 வாரத்தில் light தயாராகி படங்கள் எடுத்தும் பார்த்து விட்டேன். மிகவும் அருமையான, மென்மையான light மற்றும் கண்களின் கருவிழியில் தெரியும் அழகான வட்டவடிவமான  பிம்பம். இதை இதை தானே எதிர் பார்த்தேன் நான்.

சரி, இந்த லைட் செய்வதற்கு என்னென்ன தேவை என்பதை சற்று விரிவாக பார்ப்போம்.


1. 10mm plywood 3 அல்லது 4 அடி விட்டத்தில் வெட்டுவதற்கு தேவையான அளவில் (நான் 3 அடி விட்டத்தில் செய்து கொண்டுள்ளேன்) வாங்கிக் கொள்ள வேண்டும்.
2. பின்பு அதை மர வேலை செய்பவர்களிடம் கொடுத்து படத்தில் காட்டியது போல் வெட்டி கொண்டுள்ளேன்.
3. அதை ஓர் Electrician -யிடம் கொடுத்து விளக்குகளை பொருத்திக் கொள்ள வேண்டியது தான்.  நான் உள்  வட்டத்திற்கும் வெளி வட்டத்திற்கும் 12 , 12 பல்புகளாக மொத்தம் 24 பல்புகள் பொருத்தி இருக்கிறேன்.  24 பல்புகள் பொருத்துவதினால், 25W பல்புகளே போதுமானதாக எனக்கு தோன்றியது. மேலும் ஒவ்வொரு வட்டத்திற்கும் தனித்தனியாக Dimmer(நம்ம fan regulator தாங்க) பொருத்திக்  கொண்டேன். இது லைட் -ன் brightness-ஐ கூட்டியோ, குறைத்தோ வைத்துக் கொள்ள உதவும்.

இவை அனைத்தையும் செய்து முடிக்க Rs. 3200 செலவானது.

இதை, வீட்டில் ஊஞ்சல் மாட்டுவதற்காக இருந்த கொக்கியில் மாட்டி, நடுவில் பெரிதாக இருக்கும் வட்டம் வழியாக படங்கள் எடுக்க வேண்டியது தான்.  லைட் தயாரானவுடன் முதலில் தன்னைத் தான் படம் எடுக்க வேண்டும் என்பது என் மூத்த மகன் மதியின் வேண்டுகோள். ஆகவே அவனையே  முதலில் படமெடுத்தேன்.


இந்த மாதிரியான light , Fashion Photographers -க்கு மிகவும் உதவியாக இருக்கும் என  நினைக்கிறேன்.

- வனிலா பாலாஜி

8 comments:

  1. I already seen the article @ digital photography school. why don't you post something new that not in website?

    ReplyDelete
  2. ஐயப்பன் கிருஷ்ணன்December 2, 2014 at 11:23 PM

    பெயரிலி (எ) அனானிமஸ்

    எந்த ஒன்றுமே எதோ ஒருவரால் யாருக்கோ கற்பிக்கப் பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. அதான் ஏற்கனவே ஆங்கிலம் இருக்கே, ஏன் புதிதாக கற்கவேண்டும் என்று யாரும் கேட்பதில்லை. இதன் செய்முறையை நீங்கள் டிஜிடல் ஃபோட்டோகிராஃபியில் பார்த்திருக்கலாம். ஆனால் அதை செயல்படுத்தி வெற்றிகரமாக கையாண்டு அதன் பலனை புகைப்படத்தோடு பகிர எடுக்கும் நேரம், செலவு, ஆர்வம்.. இதை டிஜிடல் போட்டோகிராஃபி தருவதில்லை. தானாய் வருவது. படிக்கும் சிலருக்கேனும் அந்த ஆர்வம் வருமே ஆனால்... அதுவே இந்த தளத்தின் வெற்றி.

    புரிதலுக்கு நன்றி

    ReplyDelete
  3. Digital photography school_ன் சுட்டியுடனேதான் இந்தக் கட்டுரை பகிரப் பட்டுள்ளது. நீங்கள் ஏற்கனவே வாசித்திருப்பது அறிந்து மகிழ்ச்சி. ஆனால் வாசிக்காதவர்களுக்காகவும், ஆங்கிலத்தில் புரிந்து கொள்ள சிரமப்படுகிறவர்களுக்காகவும் தன் அனுபவத்தில் செய்து பயன்படுத்திப் பார்த்ததை அறிமுகம் செய்துள்ளார் கட்டுரை ஆசிரியர், அறியாதவருக்குப் பயன் ஆகட்டுமென. PiT_ன் நோக்கமும் செயல்பாடும் அதுவே. கற்றதைக் கற்பிப்பது. மேலும், வெப்சைட்டில் இருப்பது இல்லாதது எனப் பிரித்துப் பார்த்து இங்கே பதிவுகள் இடப்படுவதில்லை. ஆர்வமுள்ளவர்களுக்குப் பயனாகும் துறைசார்ந்த விஷயங்கள் எதுவானாலும் பகிரப்பட்டு வருகின்றன.

    அத்துடன், சென்ற பதிவில் 3_ஆம் பரிசு பெற்றவர் சொல்லியிருப்பதைக் கவனியுங்கள். ஒரு உதாரணத்திற்கே. இது போலப் பலர் பல பதிவுகளில் தெரிவித்துள்ளார்கள். மனநிறைவுடன் சரியான பாதையிலேயே செல்கிறது PiT.

    நன்றி.

    ReplyDelete
  4. Thank you for this post. This is the first time I am reading about ring light and I am already pumped up in building this myself. A DIY project for the weekend.

    ReplyDelete
  5. please do check for similar design ,, easy to construct

    https://iso.500px.com/diy-lighting-ring-tutorial/?utm_source=500px&utm_medium=facebook&utm_campaign=july23_330PM_diy-lighting-ring-tutorial

    ReplyDelete
  6. நன்றி மொஹைதீன்.. தமிழில் இதை தெளிவாக எழுதித் தந்த வனிலா பாலாஜிக்கு மறுபடியும் நன்றி பகிர்வோம். ஆங்கிலத்தில் பல இருக்கின்றன. ஆனால் தமிழில் இது போன்ற பதிவுகள் வேண்டி ஆரம்பிக்கப் பட்ட இந்த பதிவுகள் என்றும் நமக்கு என்றுமே அவசியமானவை.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff