Showing posts with label படங்கள் போட்டி முடிவுகள். Show all posts
Showing posts with label படங்கள் போட்டி முடிவுகள். Show all posts

Tuesday, December 1, 2015

எல்லாருக்கும் வணக்கம்!

இம்மாத போட்டிக்கு படங்கள் அனுப்பிய அனைவருக்கும் நன்றி. நிறைய நல்ல படங்கள் வந்திருந்தது. வந்திருந்த படங்களில் எனக்கு சிறந்தவைகளாக தோன்றிய படங்களை வெற்றி பெற்ற படங்களாக அறிவிக்கிறேன்.

சிறப்புக்கவனம் பெற்ற படங்கள்
ரூபன்:
அழகான படம். இன்னும் கொஞ்சம் காண்ட்ராஸ்ட் கூடுயிருந்தால் நல்லாயிருந்திருக்கும்.

ஹஃபீஸ் இஸ்ஸாதீன்:
நல்ல படம். எல்லா வண்ணத்துப்பூச்சிகளும் ஷார்ப்பா இருந்திருந்தா இன்னும் சிறப்பா இருக்கும்.

கணேஷ் குமார்:
கொஞ்சம் ஃப்ரேமிங் ரூல்-ஆஃப்-தேர்ட்ஸ் முறயில் அமைந்திருந்தால் அழகா வந்திருக்கும்.

வெற்றிபெற்ற படங்கள்
மூன்றாமிடம் - அமல்


இரண்டாமிடம் - செந்தில் குமார்


முதலிடம் - கண்ணதாசன்


வெற்றிபெற்ற, பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்! விரைவில் டிசம்பர் மாத போட்டிக்கான அறிவிப்புடன்  சந்திக்கிறோம். 

Friday, January 31, 2014

வணக்கம் நண்பர்களே!

முதல் சுற்றுக்கு முன்னேறிய படங்களில்  ஓளிப்படத்தின் அடிப்படை அம்சங்ளுடன் கவனத்தினைக் கவர்ந்து சிறப்புக்கவனம் பெற்ற, வெற்றி பெற்ற படங்கள்.

#சிறப்புக் கவனம்: சதிஸ்குமார்

மூன்றாம் இடம்வின்சென்

இரண்டாம் இடம்: ஸ்ருதி

முதலாம் இடம்:ஜெயவேலு

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி! அடுத்த போட்டியில் சிறப்பாக கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்!

Tuesday, January 31, 2012

அன்பான வணக்கங்கள்,

முதல் சுற்றில் வெற்றி பெற்ற டாப் 10 படங்களைப் பாத்திருப்பீங்க. போட்டியிட்டு முதல் சுற்றில் வெளியேறிய படங்களையும் அதற்காக காரணங்களையும் போட்டி ஆல்பத்திலேயே சுருக்கமாகத் தெரிவித்திருந்தேன்.

முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் யார் என்று பார்ப்பதற்கு முன், இறுதி சுற்றில் வெளியேறிய படங்களை பற்றி பார்ப்போம்.(எழுமாற்றாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன)

# Raja
Backgroundஇல் தெரியும் நபர் படத்திற்கு பெரிய பலவீனம். கருப்பொருளிலிருந்து கவனத்தை திசை திருப்புகிறது. கீழ்பாகத்தின் தெரியும் கட்டையை தவிர்த்து க்ராப் (crop) செய்திருக்கலாம்.

# Chikamani
நல்ல முயற்சி. பாவிக்கப்பட்ட கோணம் நன்றாகவுள்ளது. ஆனாலும் பின்னே தெரியும் பொருட்கள்/காட்சிகள் அழகைக் கெடுக்கின்றன. சீரான அல்லது வெறுமையான பின்புற காட்சி இதை அழகுபடுத்தியிருக்கும்.

# Raghavendra
Silhouetteஇல் ஓர் நல்ல முயற்சி. பின்னே தெரியும் மனிதர்கள் பிராதான கருப்பொருளுக்கு பலவீனமாக உள்ளார்கள். பிரதான காட்சி படத்தின் நடுவே வந்திருக்க வேண்டும்.

# Varun
பாதி மங்கலாகவும் பாதி தெளிவாகவும் இருப்பது சிறப்பு. இதைவிட குறிப்பிட்டு சொல்லும்படியான காட்சிகள் இல்லாதது கவனயீர்ப்பின்றி காணப்படுகின்றது.

# தாமோதர் சந்துரு
டைட் க்ராப்பில் கை, கால் பகுதிகள் காணாமல் போனது பலவீனம். பையன் காமிராவைப் பார்ப்பது செயற்கைத் தன்மையான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

# Sudhan
வயதானாலும் ஊஞ்சலாடி கொண்டாடுவது மற்றும் பிரியாத அன்பு, உறவு என்பன படத்தை 10க்குள் கொண்டு வந்துவிட்டது. ஆனாலும் படத்தில் சொல்லும்படியான கவனயீர்ப்பு இல்லை. பின்புறம் மங்கலாக இருந்திருந்தால் நன்றாக வந்திருக்கும்.

# Sathish
படத்தைப் பார்த்ததுமே விளையாட்டில் வெற்றி பெற்ற கொண்டாட்டம் தெரிகிறது. படத்திற்கு புறப்பக்கம் காட்டிய இளைஞர், முற்றிலும் கொண்டாட்டத்தில் ஈடுபடாதவர்கள் என்பன குறைபாடுகள்.



மூன்றாம் இடம்!
# Riyas
கீழ் மற்றும் மேல் பக்கத்தில் இடம் விடப்பட்டிருக்க வேண்டும். டைட் க்ராப் படத்தின் முழு அழகையும் கெடுத்துவிட்டது. கீழ்ப்பக்கம் சமச்சீர்  இன்றி காணப்படுவதும் பலவீனம்.

இரண்டாம் இடம்!!
# Arun

எல்லாமே நன்றாக இருக்கிறது. கொண்டாட்டம் எங்கிருந்து வந்தது என்பதை இப்படம் சொல்லத் தவறுவதால் இரண்டாமிடம்!

முதலிடம்!!!
# Kingsly Xavier

எல்லாமே கொண்டாட்டமாக (நன்றாக) இருக்கிறது. ஆகவே முதலிடம்!


இப்போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி...! வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...!

அடுத்த மாத போட்டிக்குத் தயாராகுங்கள்...!  


பார்த்ததில் + படித்ததில் பிடித்தது, என்னுடைய ரசனையில்:




அன்புடன்
அன்டன்

Friday, December 30, 2011

வெற்றி முத்திரை பெறும் படங்களைப் பற்றிப் பார்க்கும் முன் வெளியேறும் ஒரு சிலபடங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

# ராஜசேகரன்,
பச்சை நீரின் பின்னணியில் தட்டான்களைத் தெளிவாகப் படமாக்கியிருக்கிறீர்கள்.
ஆனால் டைட்டான க்ராபிங். கீழ் நோக்கி நகரும் தட்டானுக்கு இன்னும் சற்று இடம் கொடுத்திருந்தால் பிரமாதமாக வந்திருக்கும்.

# சூர்யா,
பச்சை இலைகளில் பளிச் சிகப்பு வண்டுகள். அருமை.
ஆனால் நீங்கள் கொஞ்சமே கொஞ்சம் சாச்சுரேஷன் கூட்டினீர்களா தெரியவில்லை. எப்போதுமே சிகப்பு இருக்கும் படங்களில் வண்ணங்களில் கைவைக்காமல் இருப்பது நல்லது. சிகப்பு லேசாக அதிகரித்தாலும் அப்பகுதியின் டீடெயில்ஸ் குறைந்து விடும். ஒருவேளை நீங்கள் எந்த அட்ஜஸ்ட்மெண்டும் செய்யவில்லையெனில், மன்னிக்க. என் பார்வைக்கு சிகப்பு அதிகப்படியாகத் தெரிகிறது.

# கடலை மிட்டாய்,
நல்ல முயற்சியாயினும் படத்தில் இரைச்சல் அதிகம்.


ஏனைய பிறரின் படங்களில் பெரிய குறைகள் இல்லையெனினும் அவற்றை விட கீழ்வரும் படங்கள் சிறப்பாக இருந்தபடியால் அவை விலகுகின்றன.

சிறப்புக்கவனம் பெறும் படங்கள்:

# ஜகன்,
அருமையான படம். கதவுக் கம்பிகள் மட்டுமின்றி சொட்டும் மழைத்துளியும் ஒன்றைப் போல் ஒன்றாக.

# கீழைராஸா,
இரட்டையர்களை வைத்துத் தலைப்புக்கு பொருத்தமாக எடுத்திருக்கிறீர்கள். அதையும் யோகாசன போஸில் கருப்பு வெள்ளையில் ப்ரசெண்ட் செய்திருக்கும் விதம் அருமை.


இருவருக்கும் வாழ்த்துகள்!

படங்களுக்குள் உங்கள் பெயர்களைப் போட்டிருப்பது மட்டும் உறுத்தல். எந்தப் போட்டிக்கானாலும் சரி, படங்களைக் கொடுக்கும் போது பெயர்களை ஓரமாகவோ அல்லது பார்டரிலோ இருக்குமாறோ பார்த்துக் கொள்வது நல்லது. இது அனைவருக்குமான ஒரு குறிப்பு.

சிறப்புக் கவனத்துடன் சிறப்புப் பாராட்டையும் பெறுகிற படம்
:

# மெர்வின் ஆன்டோ
ஸ்லோ ஷட்டர் ஸ்பீடில் இரட்டையராகத் தோன்றும் படத்தை நீங்களே எடுத்திருக்கிறீர்கள். ஒரே பிரேமில் குறிப்பிட்ட நொடிகளுக்குள் எடுக்கபட்டதென பிகாஸா ஆல்பத்தில் தெரிவித்தும் இருக்கிறீர்கள். இப்படியும் படங்கள் எடுக்கலாம் எனக் காட்டிய விதத்தில் அசத்தியிருக்கிறீர்கள்.
இருப்பினும் இடப்பக்கமிருக்கும் உங்கள் மேல் வெளிச்சம் மிக அதிகமாகி விட்டதால் முதல் மூன்றுக்குள் செல்லும் வாய்ப்பு தவறுகிறது.

நல்ல முயற்சிக்குப் பாராட்டுகள்!

படத்தை எடுத்த விதத்தை இயலுமானால் கெஸ்ட் போஸ்டாக இங்கு பகிர்ந்து கொள்ளும்படி PiT கேட்டுக் கொள்ளுகிறது.

மூன்றாமிடம்:

# ஒளித்தச்சன்
அருமையான படம். பறக்கும் பறவைகளை நேர்த்தியாக, தெளிவாகப் படமாக்குவது அத்தனை எளிதல்ல. ஒன்றைப் போலவே ஒன்று. அதிலும் ஒன்றின் இறக்கைகள் மேல்நோக்கியும் ஒன்றின் இறக்கைகள் கீழ்நோக்கியுமாக பிரமாதமான டைமிங்கில் அமைந்து போன படம். மூன்றாம் இடத்துக்கான வெற்றி முத்திரையை பெறுகிறது இப்படம்:

இரண்டாம் இடம்:

# குசும்பன்,
அழகான லைட்டிங். காட்சி அமைப்புக்கு எடுத்துக் கொண்ட சிரமங்கள் ஒரு விளம்பரப் படத்தின் நேர்த்தியைப் பலனாகக் கொடுத்திருக்கிறது. வெற்றி முத்திரையை அழுத்தமாகப் பதித்தாயிற்று.


முதலாமிடம்:

# இளங்குமரன்,
சிறப்பான லைட்டிங்கும், இரண்டு முகமூடிகளையும் நிற்க வைத்து எடுத்திருக்கும் விதமும் க்ளாஸ்!!
வெற்றியாளர்களுக்கும், சிறப்புக்கவனம் பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்!

தேர்வு தனிப்பட்ட ரசனையில் அமைந்தவை. முதல் சுற்றுக்குத் தேர்வு செய்யவே சிரமமாக இருக்கும் வகையில் நல்ல நல்ல படங்களைத் தந்திருந்தனர் பலரும். உற்சாகமாகக் கலந்து கொண்ட உங்கள் அத்தனை பேருக்கும் நன்றி. அடுத்த போட்டிக்கான அறிவிப்புடன் 2012-ல் சந்திக்கிறோம்.

வாசக நண்பர்களுக்கு PiT-ன் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

Friday, December 23, 2011

‘இவனைப் போல் இவன், பாருங்கள்’ என எழுபத்தைந்து பேர்கள் உற்சாகமாகப் போட்டியில் கலந்து கொண்டிருந்தீர்கள். பலரும் மிக அருமையான படங்களைத் தந்திருந்தீர்கள். அவற்றில் முதல் சுற்றுக்குப் பத்தாக இல்லாமல் பதினைந்தை அழைத்து வந்துள்ளோம். (படங்கள் வரிசைப்படியானவை அல்ல).

# கீழைராஸா


# ஷ்ரவ்யன்


# ஒளித்தச்சன்


# குசும்பன்


# மெர்வின் ஆன்டோ


# தருமி


# இளங்குமரன்


# ராஜசேகரன்


# R கனிமொழி


# ஸ்வர்ணராஜன்


# கார்த்தி


# கடலை மிட்டாய்


# Chan


# ஜகன்


# R N சூர்யா


பதினைந்து பேருக்கும் வாழ்த்துகள்!

முதன்முறையாகக் கலந்து கொண்ட சிலரது முயற்சிகளும் நன்றாக இருந்தன. தொடர்ந்த பங்கேற்பில் இன்னும் சிறப்பாக எடுக்க ஆரம்பிப்பீர்கள் என்பதில் PiT-க்கு நம்பிக்கை உண்டு. எங்கள் நோக்கமே ‘ஆர்வம் அணையாமல் தொடர்ந்து நண்பர்கள் படங்கள் எடுக்க வேண்டும். நுணுக்கங்கள் கற்று தேர்ச்சி பெற வேண்டும்’ என்பதே. ஒவ்வொரு மாதமும் தேர்வாகும் படங்களிலிருந்து மட்டுமின்றி பங்கு பெறும் படங்களிலிருந்தும் அறிந்து கொள்ளவும் கற்றுக் கொள்ளவும் நிறைய பாடங்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்வோம். தொடர்ந்து எடுத்துப் பழகுவோம்.

இறுதிச் சுற்று முடிவுடன் விரைவில் சந்திக்கிறோம்.

நண்பர்களுக்கு PiT-ன் கிறுஸ்துமஸ் வாழ்த்துகள்!
***

Tuesday, November 29, 2011

வணக்கம் நண்பர்களே..

போட்டியின் முடிவுகளை காண மிக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பீர்கள்.

போட்டிக்கு வந்திருந்த நிறைய படங்கள் நண்பர்களாக இருந்தாலும் பல படங்கள் எளிய குருப் போஸ் போட்டோவாக தான் இருந்தது.. அப்படங்கள் பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும் , போட்டி என்று வரும் போது வெறும் குரூப் போஸ் என்பது உதவாது..

அப்படியே போஸ் ஆக இருந்தாலும் , சொல்லி வைத்து எடுத்தது மாதிரி இல்லாமல் இருந்ததால், ஒரு சில படங்கள் மட்டும் முதல் சுற்றில் முன்னேறின..

அப்படி முதல் சுற்றில் முன்னேறிய படத்தில் இருந்து முதல் மூன்று இடங்களை பிடித்த படங்களை பார்க்கும் முன் இந்த சுற்றில் வெளியேறிய படங்களை பார்ப்போம்..


ariya vardhan மற்றும் mangai mano....

ARIYA VARDHAN



MANGAI MANO


இவர்களது படங்கள் இரண்டுமே போஸ் கொடுக்க வைத்த படங்கள் தான்.. இருந்தாலும் சில உணர்வுகள் இருந்ததால் முதல் சுற்றில் முன்னேறியது.. ஆனால் அது மட்டும் இந்த தலைப்புக்கு பத்தாது.. அதே சமயம் இந்த மாதிரி கொஞ்சம் கம்போஸிசன் செய்திருந்தால் படங்கள் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கும்...



அடுத்தது ramabhadran அவர்களின் படம்...


RAMABHADRAN


பெரியவர்களின் இயல்பான சந்திப்பை படமாக்கியுள்ளார், படமும் பார்ப்பதற்க்கு நன்றாக இருக்கின்றது.. இருந்தாலும் அந்த டோன் கொஞ்சம் ஓவர் saturation ,அதே சமயம் நான்கு பேரும் பேசிக்கொண்டிருந்தால் இந்த தலைப்புக்கு நன்றாக இருந்திருக்கும். மூன்றாவதாக இருப்பவர் எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பது சிறு குறை.. இந்த படத்தை பார்க்கும் போது நட்பு என்பதை விட ஒரு சந்திப்பு போல் தோன்றுவதால் இப்படம் வெளியேறுகின்றது..

# இந்த டோன்... சிறப்பாக இருந்திருக்கும்..






அடுத்தது rohini அவர்களின் படம்...

ROHINI

பார்ப்பதற்க்கு மிக அழகான படம்.. அந்த குழந்தையும் , பொம்மையும் ஒரே மாதிரி உட்கார்ந்து இருப்பது நன்றாக இருக்கின்றது... இதனால் இந்த சுற்றில் முன்னேறியது.. ஆனால் அந்த குழந்தை பொம்மையிடம் விளையாடுவது போல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.. இருவரும் தனித்தனியாக இருப்பது, படத்தின் டோன், இரண்டும் சிறு குறை.. எனவே இந்த சுற்றில் இப்படம் வெளியேறுகின்றது.. கொஞ்சம் இப்படி டோன் மாற்றினால் படம் இன்னும் தெளிவாக இருக்கும்...






அடுத்தது gnans அவர்களின் படம்...

GNANS

படத்தில் நட்பின் உணர்வுகள் மிக அழகாக இருப்பதால் இந்த சுற்றில் முன்னேறியது.. படத்தில் வண்ணங்களும் அருமை.. ஆனால் படத்தில் composition என்று வரும் போது சிறு குறையாக தெரிகின்றது.. முடிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் க்ளோசாக படம் எடுத்திருக்கலாம்.. இப்படத்தை இந்த மாதிரி compose செய்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும்..







அடுத்தது ஆதவன் அவர்களின் படம்..

AADHAVAN

நல்ல composition , நல்ல timing, படமும் B& W ல் நன்றாக இருக்கின்றது.. நண்பர்களின் உணர்வுகளை முன்னாடி படம் பிடித்திருந்தால் இந்த தலைப்பிற்கு இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன்..

அடுத்தது maha tamil prabhakaran அவர்களின் படம்..

MAGA TAMIL PRABHAKARAN


இந்த தலைப்பிற்கு எனக்கு மிகவும் பிடித்த படம் இது.. ஆனால் selective colouring என்ற பெயரில் தேவையில்லாமல் படத்தை சொதப்பிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.. அதை முழுவதுமாக b&wல் இருந்திருந்தாலே நன்றாக இருந்திருக்கும்... அதே சமயம் கொஞ்சம் கீழே உள்ள மாதிரி க்ராப் செய்திருக்கலாம்... இருந்தாலும் இப்படம் ஒரு நல்ல moment ஐ பிடித்ததற்காக வாழ்த்துக்கள்..
அடுத்தது sathiya மற்றும் truth அவர்களின் படங்கள்...



SATHIYA





TRUTH



இது வரை நாம் பார்த்த படங்களில் எல்லாம் எதோ ஒரு சிறு குறை படத்தின் composition ல் இருந்தது... ஆனால் இவர்கள் இருவரின் படங்களிலும் அந்த குறை சுத்தமாக இல்லை.. சரியான colour , distraction இல்லாத background,இவைகள் இப்படங்களுக்கு பலம்..

truth படத்தில் புன்னகை மற்றும் சத்தியா படத்தில் விளையாட்டும் மிக அருமை..

ஆனால் இவர்கள் இரண்டு படங்களையும் பார்க்கும் போது படத்தில் இருப்பவர்கள் நண்பர்கள் என்று சொல்வதை விட சொந்தங்கள் என்று தான் சொல்ல தோன்றுகின்றது..

இந்த படங்களில் குறைகள் என்று ஒன்றும் இல்லை.. தலைப்புக்கு என்று வரும் போது சற்று யோசிக்க வேண்டியதாகின்றது..

சொந்தங்கள் அல்லது தெளிவான படங்கள் என்று தலைப்பு இருந்திருந்தால் இப்படங்கள் கண்டிப்பாக பொருத்தமாக இருந்திருக்கும்...


அடுத்தது மூன்றாம் இடத்திற்கு போட்டி போடும் படங்கள்

kuti paya மற்றும் mervin anto

இவர்கள் இருவரின் படமும் கிட்டதட்ட ஒரே மாதிரி படங்கள்.. கடற்கரை , நண்பர்கள் கூட்டம் , பின்னால் இருந்து எடுக்கப்பட்டது...

இவர்களில்,


KUTIPAYA
kutipaya படத்தில் வரும் கடற்கரை மணல் , நீல வானம் ,கடல் இவை அனைத்தும் தெளிவாக படமாக்கப்பட்டுள்ளது.. அதே சமயம் தோழிகள் ரிலாக்ஸாக உட்கார்ந்திருக்கும் அமைப்பு எல்லாம் அருமை.. இவர்களுக்கு முன்னால் வரும் வலது ஓரத்தில் வருபவர் இல்லாமல் படம் எடுத்திருக்கலாம்.. அதே சமயம் வானத்தில் இவ்வளவு negative space தேவையில்லை. கொஞ்சம் க்ராப் செய்திருக்கலாம்.. கீழே உள்ள மாதிரி கம்போஸ் செய்திருந்தால் நன்றாக இருக்கும்...





அடுத்து mervin anto அவர்களின் படம்,


நண்பர்கள் கூட்டம் , மோதும் அலை , நீல கடல், ஒன்றாக கை பிடித்திருப்பது இவையெல்லாம் இந்த படத்திற்க்கு அழகு சேர்க்கின்றது... படத்தின் composition ம் நன்றாக உள்ளது.. இருந்தாலும் நண்பர்களிடத்தில் இன்னும் கொஞ்சம் உற்சாகம் இருந்திருந்தால் இந்த தலைப்பிற்கு இன்னும் நன்றாக இருந்திருக்கும்..அதே சமயம் படத்தில் கொஞ்சம் over saturation ஆக இருப்பது இது பழைய படம் போல் காட்சியளிக்கின்றது ,shadows ம் கொஞ்சம் அதிகம் என்பது மைனஸ்...

இவர்கள் இருவரின் படங்களில் யார் படம் மூன்றாவது என்று பார்த்தால் தெளிவாக படம் எடுத்ததற்காக

kutipaya அவர்கள் மூன்றாமிடம் பிடிக்கின்றார்..


இரண்டாமிடம்,

viswanathan அவர்களின் படத்தில் வரும் நண்பர்கள் , அவர்களிடம் தெரியும் சந்தோசம், விளையாட்டு அனைத்தும் இந்த தலைப்புக்கு கச்சிதம்.. இந்த படத்தை பார்க்கும் போது நட்பின் பசுமை நிறைந்த நினைவுகள் கண்டிப்பாக வரும்.. இந்த படம் பிடிக்கப்படிருக்கும் moment மிகவும் அருமை.. நானும் இந்த நட்பின் கூட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம் போல் உள்ளது..

VISWANATHAN


ஆனால் சொதப்பல் composition , படத்தில் தெரியும் கேபிள் , கட் செய்யப்பட்ட கைகள்.. இவையெல்லாம் இப்படத்தின் பெரிய மைனஸ்... இந்த படம் மட்டும் சரியாக compose செய்யப்பட்டிருந்தால் கண்டிப்பாக முதலிடம் பிடிக்க வாய்பிருந்திருக்கும்...

என்ன தான் composition குறையாக இருந்தாலும் தலைப்பு என்று வரும் போதும் ,நமது பார்வை சிரிக்கும் நண்பர்கள் கூட்டத்தை விட்டும் நகரவில்லை...

எனவே வந்திருந்த படங்களில்,

viswanathan இரண்டாமிடம் பிடிக்கின்றார்...

இந்த மாதிரி கம்போஸ் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்..






முதலிடம்,
SARAVANAN

சரவணன் படத்தில் இருக்கும் குட்டி நண்பர்கள் கூட்டம் அருமை... ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரியாக்‌ஷன்.. படம் போஸ் கொடுக்க வைத்து எடுத்திருந்தாலும் படத்தில் இயல்பான நட்பின் உணர்வுகள் அருமையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.. படமும் Black and white ல் அருமையாக உள்ளது.. எந்த distraction ம் இல்லை.. compositionலிம் பெரிதாக குறைகள் இல்லை..

கொஞ்சம் crop மற்றும் sharpness குறைத்திருக்கலாம்... அதுவும் படத்தை பெரிதாக பாதிக்கவில்லை..

எனவே
`நண்பர்கள்` போட்டியில் முதலிடம் பிடிப்பது , saravanan அவர்களின் படம்..



வாழ்த்துக்கள் சரவணன்....

இரண்டாமிடம் மூன்றாமிடம் பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்..

மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்...

விரைவில் அடுத்த தலைப்புடன் `நண்பர்கள்` அனைவரையும் சந்திக்கின்றோம்..

அன்புடன்
கருவாயன்.



























 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff